மாட்டிக்கொண்ட மனமும்….
மீளாதிருக்கும் நினைவும்….
வெட்டிப் பேச்சு பொழுதும்….
என்பதாய் சென்ற நாட்களில் தான்….
நீ எனக்காய் ஒன்றும் செய்யவில்லை…
இந்த விசறு பிடித்த மனது அனைத்துமே நீயென காட்டுகிறது….
தெளிய வைத்து பைத்தியமாக்கும் அன்பு…
ஒன்றுமே நீ எனக்காய் செய்யவில்லை தான்….
ஆனாலும் அன்பை வெறுப்பாக மாற்றவும் முடியவில்லை….
களங்கிய சகதி குளத்தில்….
மெல்ல மெல்ல சேறு நீரடியில் தங்குவது போல… – உனது
நினைவும் தெளிவாகிறது….
இப்போதும் சொல்கிறேன்…. – நீ
எனக்காய் ஒன்றுமே செய்யவில்லை …
உன்மீதான அன்பு….
உனக்கு எட்டாத தூரத்தில் வைத்துவிட்டேன்…
ஒன்று மட்டும் சொல்….
என் மேல் நிஜமாய் அன்பு கொண்டாயா ??
_ ஆலோன் மகரி
Click to rate this post!
[Total: 0 Average: 0]