- 2022 Aalonmagari. All Rights Reserved.
காயமெல்லாம் காய்ந்து போகத்தான் முயல்கிறது…
காலமும் கடந்து போகத்தான் நினைக்கிறது….
எவ்வினையும் நல்வினையாகத்தான் தெரிகிறது….
எதிர்வரும் இன்னலுக்கு எவ்வினை ஆற்றுவது??
காத்திருந்த காலமும் தான் வந்து சேருமா?
காத்திருத்தலே இக்காற்றினிலில் கலந்திருத்கிறதா ?
மாற்றம் தேடும் பாதையில் இருந்தும்…..
மாற்றமில்லாத நிகழ்வுகளாகத் தான் நடக்கிறது….
எந்த மனிதரும் நிரந்தரமில்லை….
எந்த இலக்கும் மொத்த வாழ்வில்லை….
இலக்குகளை எட்டாமல் தோற்கலாம்….
வாழ்விலும் வாழாமல் தோற்கலாம்….
தோற்றல் பொதுவானது….
எழுவது தான் எனது இயல்பானது….
மீண்டும் விழுந்து கிடக்கிறேன்….
எனது இயல்புடனே வாழவும் முயற்சிக்கிறேன்….
போட்டியில் தோற்கலாம்….
இயல்புகள் தோற்பதில்லை…..
– ஆலோன் மகரி
© 2022 By - Aalonmagari.