- 2022 Aalonmagari. All Rights Reserved.
இருதுருவங்களின் தோள்களில் ….
கயிற்றைக் கட்டி….
நீட்டி இழுத்து முறுக்கியிருக்கும் இருமுனையில்….
ஆலமரத்தின் விழுது படர்ந்த…
அகன்ற தேக்கு மரக்கிளையில் ….
இருதுருவங்களையும் ஒன்றிணைத்து….
தனியே கிளையில் ஏற கனத்து நின்ற நொடி….
பாதம் தொட வந்த அலை நுரைகளில்….
தாயுமானவனின் முகம் கண்டு…
மகிழ்ச்சியை முகத்தில் செலுத்த மறந்து…..
அவன் முகம் காண முயல்கையில்- என்
இடைத்தூக்கி அம்மரக்கொடியில் அமரவைத்தான்…..
தோழனவன் மடி சாய்ந்து…
முன்னும் பின்னும் ஆடும் ஊஞ்சலில் கண்ணயர்ந்த நேரம் தான்…
அவன் தூரிகையை கையில் பிடித்து….
எங்களில் அவனைப் பிரித்து…
“ஊஞ்சலாடும் காரிகை இவள்” என
தனியே சாயம் பூசித் தட்டி எழுப்பினான்….
அவன் முகம் கண்டு….
எனையும் கண்டு….
தூரிகையைக் கண்டேன்….. – உன்
தூரிகையின் உயிராகி இருந்தும்…..
தனியாகவே இரத்தமும் சதையுமாக நிற்கிறேன் ….
இறந்தும் ஜீவித்திருக்கிறேன்….
ஜீவனில்லாமல் காற்றை கடத்தியபடி…… – அவன்
தூரிகையில் ‘எங்களை’ காண….
– ஆலோன் மகரி
© 2022 By - Aalonmagari.