இத்தனை காலமாக மனதில் இருந்த குழப்பம்…
குழப்பமே எதுவென அறியாமல் தான் இருந்தது…
மொத்தமாக பனி மூடிய கானல் நீர் போலான பிம்பம்….
இருதுருவ உணர்வுகள்….
சட்டென உணர்வில்லா வெறுமைகள்….
இதுவா? அதுவா?
எதுவோ?
நானும் பெரிதாய் கவலைகொள்ளவில்லை…
காரணம்…
இழக்க என்னிடம் ஒன்றும் இல்லை….
ஒன்றுமே இல்லை…..
இன்று ஏதோ விலக்கி காட்டுகிறது….
என்ன குழப்பம் என புரிய தொடங்கியதோ?
விரைவில் புரிந்துணர்ந்து தான் விடுவேனா? என்ற கேள்வி எழுந்துள்ளது…
உணர்வேனா???
– ஆலோன் மகரி
Click to rate this post!
[Total: 0 Average: 0]