- 2022 Aalonmagari. All Rights Reserved.
வெட்டவெளியில் தான் திசை தெரியாது நிற்கிறேன் ….
இருட்டென்பது தனியே பிரித்து காண அவசியமில்லாத நாட்கள் …
வடகயிறு கொண்டு மனதை எதுவோ இறுக்குகிறது …
மூச்சு நிற்கும் நொடியில் சற்று ஆசுவாசமெடுக்க வைக்கிறது …
அனுமதி கேளாமல் மீண்டும் மீண்டும் இதுவே நிகழ்வுகளாக தொடர்கிறது ….
பெருங்குரலெடுத்து கத்த நினைக்கிறேன் …
அடிகுரல் கூட வெளி வர மறுக்கிறது …
இந்நிலை தொடர்வதன் காரணம் அறியேன் ….
எதுவோ …
எதுவாகவோ ….
மனமோ … நானோ ….
பரிணாமம் கொள்ள போகிறது ….
– ஆலோன் மகரி
© 2022 By - Aalonmagari.