- 2022 Aalonmagari. All Rights Reserved.
என் மனதோடு சில வரிகள் ..
மனதின் பல மொழிகளோடு ..
பல மௌனங்களின் பதில்கள் ..
மௌனமான கேள்விகள் ..
ஏதும் அறியா கன்னியாக நான் !
பலதும் கற்ற பேதையாக வாழ்கிறேன் ..
முகமறியா நட்பும் ..
முகமறிந்த மோதலும் ..
காதலில் தோல்வியும் ..
மர்மத்தின் மையத்தில் குடி கொண்டு விட்டேன் ..
விடையறியா கேள்விகள் ..
கேள்விகள் இல்லா விடைகள் ..
எனக்கும் உனக்கும் இடையே ..
தடுமாறும் மனிதர்கள் !!
சொல்வது தத்துவமல்ல ..
சொல்லாதிருந்தால் தவறும் அல்ல ..
ஆயினும்,
சிறு சிறு மௌனங்கள் ..
சில பல கேள்விகள் ..
ஞான மார்க்கத்தை தேடவில்லை ..
அங்குள்ள அன்பு மார்க்கத்தை உணர்கிறேன் ..
உணர்ந்த அன்பானது ..
பரமாத்மாவின் தாயன்பு ..
அதை என்றும் தக்கவைத்துக்கொள்ள .. – என்
தனி மார்க்கத்தை உருவாக்குகிறேன் ..
அவ்வழி நான் நடக்க ..
என் வழி யார் நடப்பார் ???!!!
– ஆலோன் மகரி
© 2022 By - Aalonmagari.