போதுமென்றளவு தனிமையில் கழித்துவிட்டேன்….
இவ்வாழ்வில்….
பெற்றவரும் சில காலம் தான்….
உடன்பிறந்தவரும் சில காலம் தான்….
ஒன்றாயிருக்கும் போதே தனிமை தேடுகிறது…
தனித்திருத்தல் பல நேரங்களில் ஏகாந்தம் தான்……
ஏகாந்தம்….
இச்சொல்லின் மெய்ப்பொருள் விளங்கினேன்….
பெற்றவரோ….
உற்றவரோ….
உடன்பிறந்த இரத்தமோ….
இதில் ஒன்றோ அல்லது அனைத்துமோ…..
அனைத்து பாத்திரத்திலும் அன்பு பெற்று நிறைந்தால் அன்றி….
ஏகாந்தமென்ன …..
வாழ்தலே சாபம் தான்….
இவை ஏதுமின்றியோ….
காலத்தின் தேவையானதின்றியோ வாழ்ந்தால்….
அது வாழ்தலல்ல….
அத்தனிமை ஏகாந்தமுமல்ல….
-ஆலோன் மகரி
Click to rate this post!
[Total: 0 Average: 0]