- 2022 Aalonmagari. All Rights Reserved.
காணாத கண்களும் தான்… – உன்
குரல் கேட்டு உயிர்க்கிறது….
வேண்டாத வார்த்தைகளை தான் – நீ
கொட்டிய பின்னும் எண்ணுகிறது….
உன்மீது கொண்ட காதல் மடியாது..
ஆனால்…
வீசிய வார்த்தையில் உதிர்ந்து போனது…
பரவாயில்லை….
நான் மடியமாட்டேன்…
மீண்டும்….. – உன்
குரலுக்கு திரும்பவும் மாட்டேன்…
சுகமாய் வாழ்ந்திரு… – என்
சுகத்தினை உறிஞ்சிடாத தூரத்தில்…
– ஆலோன் மகரி
© 2022 By - Aalonmagari.