- 2022 Aalonmagari. All Rights Reserved.
காற்றாட கைவீசி…. – உன்
கைகளுக்குள் சிறைப்பட்டு…
உன் தோள் சாய்ந்து….
காது மடல்கள் சூடேற்றி….
கன்னங்களில் உதடுகள் உரசி…
அலைகளில் கால் நனைத்து….
ஆடைகளில் நீர் அடித்து….
அங்கங்களை தெளிந்தும் தெளியாது காட்டி…
காதலில் காமம் தலைதூக்க…..
என்னிலோ நாணம் கூர்பார்க்க ….
உன் விழி போகும் வழி கண்டு…
என் இதயம் படபடக்க…
கலவையாய் பல உணர்வுகள்…. – ஆனால்
உன் பார்வை உணர்ச்சியை தூண்ட…..
நகர்ந்து நடந்தேன்… – என்
இடை பற்றி நெருங்கி வந்தாய்….
சுற்றிலும் பார்வை நான் பார்க்க…
நீ என்னையே ஆழமாய் பார்த்தாய்….
அடிவாரம் தொட்டு கண்டு விட்டாய்….
என்னில் நீ இருப்பதை….
– ஆலோன் மகரி
© 2022 By - Aalonmagari.