- 2022 Aalonmagari. All Rights Reserved.
கண்ட கனவெல்லாம் கனவாகவே வளர்கிறது…
எந்நொடி அதை நிஜமாகச் செய்வாய்???
ஆயிரம் கனவல்ல நான் காண்பது….
கை எண்ணில் அடங்குபவை தான்…
ஆனால்,
காணும் கனவை கனவாக விடமாட்டேன்…
திமில் கொண்ட காளையாக ….
திமிரோடும், திறமையோடும் போராடுவேன்…
காணும் கனவில் சுயநலம் அதிகம் தான்….
என் சுயநலத்தால் பொதுநலம் பெருகுமென்றால்
இன்னும் அதிகம் சுயநலம் கொள்வேன்….
தோழனோ, தோழியோ யார் துணை கொடுத்தாலும்,
மறுத்தாலும்…..
கண்ட கனவை நிஜமாக்காது பிரியாது என் ஆத்மா….
– ஆலோன் மகரி
© 2022 By - Aalonmagari.