- 2022 Aalonmagari. All Rights Reserved.
தொலைந்து கொண்டிருக்கின்றன நொடிகள் …
தொலைகிறதென எப்படி உணர்ந்தாய் ?
எனக்காய் கழியவில்லை ….
அது தான் காரணமா ?
என் பிடித்தங்களிலும் கழியவில்லை …
அவ்வளவு தானா ?
கழியும் நொடிகளில் என்னை காணவில்லை …
உன்னையா ?
ஆம் ….
தொலையும் நொடிகளில் எள்ளளவும் என் மனம் லயிக்கவில்லை ….
பிறகு….. ? !
என்னையும் காணவில்லை …
எனக்கான க(ன)ணங்களும் காணவில்லை ….
– ஆலோன் மகரி
© 2022 By - Aalonmagari.