- 2022 Aalonmagari. All Rights Reserved.
இராஜவீதி மாடத்திலே…..
மாளிகையின் ஓரத்திலே….
ஓடி வந்து நீ ஏற…
பதுங்கி வந்து நான் பார்க்க !
அரண்மனை ஓடத்திலே…
நீயும் நானும் கவிபாட !
காட்டாறும் வந்ததம்மா….
உனை அடித்து சென்றதம்மா…!!
உன்னைத் தேடி நான் வாட….
எந்தன் உள்ளம் நொந்ததடி…. !!!
என் உயிர் பிரியும் முன் – நீ
வந்து கைகொடுத்தால்…..
தர்மனின் கை உதறிவிட்டு – உந்தன்
கைப்பிடிக்க வருவேன்…..
மீண்டும் கவிபாட….. !!!!!!!!
– ஆலோன் மகரி
© 2022 By - Aalonmagari.