வாசகருடன் சில நிமிடங்கள் ..
1. பெயர் – சித்ரா கணேசன்
2. படிப்பு -B.com.,
3. தொழில்/வேலை – இல்லத்தரசி
4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது?
4th படிக்கும் போதிருந்து.. காமிக்ஸ்ல ஆரம்பித்து, அப்படியே news paper தொடர்ந்து, வார இதழ்களில் ஐக்கியம் ஆகி (எங்க வீட்டுல குங்குமம், குமுதம், ஜூனியர் விகடன், ஜூனியர் போஸ்ட், ஆனந்த விகடன், சாவி இப்படி எல்லா வார இதழ்களும் வாங்குவாங்க.. அட்டை to அட்டை படிப்பேன்).10thலீவில் இருக்கும் போது நாவலில் முழ்கி விட்டேன். ரமணிச்சந்திரனின் மானே … மானே.. மானே தான் முதலில் படிச்சேன். அவங்க பேரை பார்த்தாலே மெர்சல் ஆகிடுவேன்😁. அவங்க முதல்ல எழுதிய கதைகள் அவ்வளவு பிடிக்கும். RC மட்டும் 152 புக்ஸ் வச்சு இருக்கேன்😍. மல்லி, சஷி முரளி, பிரேமா, ஹமீதா, ரம்யா ராஜன், ரம்யா சுவாமி, மனோ ரம்யா, முத்துலட்சுமி, ஜெய்சக்தி, தமிழ் மதுரா, லாவண்யா, சரயு, பிரவீனா, ஸ்ரீகலா இவங்க புக்ஸ் எல்லாம் வச்சு இருக்கேன்.
5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பை நாடுவீர்கள்?
எனக்கு புத்தகம் படிக்க ரொம்ப பிடிக்கும். அதுக்கு நேரம், சூழ்நிலை எல்லாம் கிடையாது. வேலை முடிஞ்சவுடன் மீதி இருக்கும் நேரம் எல்லாம் படிப்பு… படிப்பு… தான். இதுவே பாட புத்தகம் படித்து இருந்தால் இன்னும் இரண்டு டிகிரி வாங்கி இருக்கலாம் என்று கிண்டல் பண்ணுவாங்க😂.
6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? கணினி வழியிலா?
புத்தகம் தான் முதல் சாய்ஸ். ஆனா காலத்துக்கு தகுந்த மாறி நானும் கொஞ்சம் மாறிட்டேன். so கணணி வழியிலும் தொடருகிறேன்.
7. ஒரு வருடத்தில் எத்தனை புத்தகங்கள் வாங்குவீர்கள்? எத்தனை புத்தகங்களை படிப்பீர்கள் ?
அமேசான்ல சேர்ந்த பிறகு புக் வாங்குவது இல்லை. எத்தனை புத்தகம் படிப்பேன் என்று கணக்கு எல்லாம் கிடையாது. நெறைய படிப்பேன்.
8. Ebook / Paperback புத்தகம் எதில் உங்களின் வாசிப்பு முழுமை பெறுவதாக உணர்கிறீர்கள்?
paperbook தான். அதும் புது புக் வாங்கி படிக்கும் போது அதன் ஸ்மெல்…. ஆஹா தான்….🥰
9. வாசிப்பினால் உங்களுக்கு ஏற்பட்ட முதல் தாக்கம் என்ன?
முதல் தாக்கம் .. ம்ம்ம்.. புத்தகம் வழியாக நம் கற்பனையில் புது உலகம். அது ஒரு good feel. வார்த்தையில் சொல்ல வரல.
10. வாசிப்பினால் கிடைத்த அனுபவத்தினால் உங்களது செயல்பாடு / குணாதிசயங்கள் மாற்றிக் கொண்டது உண்டா? அது என்ன?
ஒன்றா..இரண்டா.. எல்லாம் சொல்லவே ஒரு நாள் போதுமா… அப்படிங்கற மாறி நெறைய இருக்கு….🤣
11. புதிய புத்தகங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்? (அட்டை படம், தலைப்பு, ஆசிரியர், பதிப்பகம், முன்னுரை.. )
ஆசிரியர் தான்.
12. உங்களுக்கு எந்த வகையான புத்தகங்கள் / கதைகள் மிகவும் பிடிக்கும்?
(சுயசரிதம், மர்மம், திகில், சாகசம், காதல், குடும்பம், ஆன்மீகம், ரொமான்டிக், வரலாறு, புராண கதைகள், இலக்கியம் , சரித்திரம் , etc….)
மேலே சொல்லி இருக்கும் அனைத்து வகைகளும் படிப்பேன். சொல்லும் விதம் interesting ஆக இருந்தால் போதும்.
13. “எழுத்தாளர்” என்பவர் உங்களுக்கு எப்படிபட்ட உறவாக தெரிகிறார்கள்?
ஒரு புது உலகை உருவாக்கும் பிரம்மா. நான் அவர்களை மிகவும் மதிக்கிறேன். சிலர் நண்பர்கள். பல எழுத்தாளர்களுக்கு என் பெயர் தெரியும் அளவுக்கு இருப்பேன் என்று நம்புகிறேன்.❤️
14. உங்கள் வாழ்வில் முக்கிய திருப்பம் ஏற்படுத்திய புத்தகம்/கதை என்ன?
குறிப்பிட்டு சொல்ல தெரியல. ஆனா ஒரு பிரச்சனை வந்தால் நான் நினைப்பது மட்டுமே சரி என்று நினைக்காமல் எதிரில் இருப்பவர்களின் நியாயத்தையும் புரிந்து கொள்கிறேன். இது ஒரு கதையில் தோன்றிய மாற்றம் இல்லை.
15. அன்றைய எழுத்தாளர்களுக்கும், இன்றைய எழுத்தாளர்களுக்கும் உங்களுக்கு தோன்றும் வித்தியாசங்கள் என்னென்ன?
அன்றைய எழுத்தாளர்கள் ஒரு பொறுப்பு உணர்வுடன் எழுதினார்கள். சொல்ல வந்த விஷயத்தை நச்சுன்னு சொல்வாங்க. உறவுச்சிக்கல் உள்ள கதைகள் கூட இருக்கும். இந்துமதியின் கதைகள் ஒரு சிலது பொங்கல் வைக்கும்படி கூட இருக்கும்.
இன்றைய எழுத்தாளர்களும் பலர் ரொம்ப அருமையா எழுதறாங்க. ஆனா ஒரு சிலருக்கு காதலுக்கும், காமத்துக்கும் வித்தியாசம் தெரியமாட்டேங்குதா இல்லை அப்படி எழுதுவது தான் trend என்று நினைக்கிறாங்களான்னு தெரியல. அதே போல நெகடிவ் கமெண்ட்ஸ் வந்துட்டா அதை எழுதியவர்களை விட அவருக்கு என்று இருக்கும் friends கமெண்ட்ஸ் போட்டவரை போட்டு தாக்குவது எல்லாம் அதிகம் நடக்குது. ஆன்டி ஹீரோ கதை ரமணிச்சந்திரன் கூட எழுதி இருக்காங்க.(பால் நிலா,வெண்மையில் எத்தனை நிறங்கள்,மயங்குகிறாள் ஒரு மாது). ஆனா இப்போ ஆன்டி ஹீரோ என்று எழுதுபவர்கள் ஒரு சிலர் சைக்கோத்தனமான ஹீரோவை தான் காட்டுகிறார்கள்.🙄
16. இன்றைய எழுத்தினால் மொழி வளர்ந்து வருவதாக நினைக்கிறீர்களா?
yes…நெறைய பேரு எழுதறாங்க. எழுத்து பிழைகளும் இருக்கு தான். சரி பண்ணிக்கிட்டா மொழி வளரும்.😊
17. “வழக்குமொழி, பேச்சுமொழி, வட்டார மொழி, செந்தமிழ் மொழி”
இதில் எது வாசிக்கும் போது உங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது? எந்த வகையை அதிகமாக வாசிப்பீர்கள்?
கதைக்கு தகுந்த மாறி மொழி இருந்தால் ok.. காதல் கதைன்னா பேச்சுமொழி நல்லா இருக்கும்😍. அங்கே செந்தமிழ் இருந்தா… படிக்க க்ரிஞ்சா இருக்கும்ல….😬
18. வரலாற்று நாவல்கள் வாசிப்பீர்களா? எந்த நாவல் மிகவும் பிடிக்கும்?
வாசிப்பேன். பொன்னியின் செல்வன் ரொம்ப ரொம்ப பிடிக்கும். யவன ராணி, விஜயமகாதேவி, கடல் புறா, பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் இப்படி நெறைய படிச்சு இருக்கேன். மதனின் வந்தார்கள் வென்றார்கள் பிடிக்கும்.
19. இன்றைய காதல்/குடும்ப நாவல்கள் பற்றிய தங்களின் கருத்து என்ன?
யாரும் சொல்லாத கதை என்று ஒன்றும் இல்லை. சொல்லும் விதம் மட்டுமே மாறுகிறது. சிலர் மிக அழகா சொல்ல வந்ததை சொல்வதில் ஜெயிக்கிறார்கள். ஒரு சிலருக்கு அது வசப்படுவதில் கொஞ்சம் லேட் ஆகுதுன்னு நினைக்கிறேன்.
20. வித்தியாசமான கரு கொண்ட கதைகளை பிடிக்குமா? அறிவியல் சார்ந்த புத்தகங்கள்/ கதைகள் வாசிப்பீர்களா?
பிடிக்கும். சுஜாதா கதைகள் எல்லாம் படிச்சு இருக்கேன்.
21. வாசிப்பதற்கு தினமும் நேரம் ஒதுக்குவீர்களா? எத்தனை நேரம்?
அது மட்டுமே என் பொழுது போக்கு. வேலை முடிஞ்சவுடன் இருக்கும் நேரம் முழுதும் படிக்கிறது மட்டும் தான்.
22. வாசித்த புத்தகம் / கதை பற்றி விமர்சனம் கொடுப்பீர்களா ? எழுத்தாளரின் தவறுகளை எந்த விதத்தில் சுட்டிக்காட்டுவீர்கள்?
நிச்சயம் கமெண்ட்ஸ் கொடுப்பேன். ஒரு சில கதைகளுக்கு முழு விமர்சனம் கொடுத்து உள்ளேன். (முழு விமர்சனம் செய்ய அவ்வளவா தெரியாது. அதான் அதிகம் கொடுப்பதில்லை).. எழுத்தாளரின் தவறுன்னு எதுவும் சொல்ல மாட்டேன். அவர்கள் எழுதி இருப்பதில் எனக்கு சில கருத்து வேற்றுமை இருந்தால் ஒரு சிலரிடம் தனிப்பட்ட முறையில் இன்போக்சில் சொல்லி இருக்கேன்.
23. உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் / கதைகள் (5)
அப்படி 5 மட்டும் சொல்ல முடியாதே.. நெறைய இருக்கு.. ம்ம்ம். 35வருஷத்துக்கும் மேலே படிச்சுகிட்டு இருக்கேன். எப்படிப்பா 5 மட்டும் சொல்றது….🙄
24. நீங்கள் வாசித்ததில் மறக்கமுடியாத / மனதை மிகவும் தொட்ட விஷயங்கள் / தகவல்கள் என்ன?
நிதனி பிரபுவின் தனிமை துயர் தீராதோ, ஹமீதாவின் உயிரோவியமே உனக்காகத்தான், ஹேமா ஜெயின் பட்டாம்பூச்சி பற பற இந்த கதைகளில் உள்ள கரு மனதை ரொம்ப பாதித்தது. சோபா குமரனின் செம்புலம் சேர்ந்த நீர்த்துளி 8 பதிவுகள் படிக்கவே இல்லை. அப்படி ஒரு அழுத்தம்.. அம்மாடி… ஒரு மகாநதியே இன்னும் மறக்க முடியல. இந்த கதைக்கு நான் போட்ட கமெண்ட்ஸ் புத்தகத்திலும் வந்தது. சித்ரா ஹாப்பி அண்ணாச்சி….😁
25. இன்றைய எழுத்து உலகம் பற்றிய உங்களின் கருத்து என்ன?
நெறைய எழுத்தாளர்கள் வந்து இருக்காங்க. புதுசா வரவங்க முதல் கதையிலே அருமையா ஸ்கோர் பண்ணுறவங்களும் இருக்காங்க முதல் கதையிலே சென்டம் அடிச்சவங்க பலர். பேரு சொன்னா அப்படியே அனுமார் வால் போல நீண்டுகிட்டே போகும்… எழுத்து உலகம் ஆரோக்கியமாவே இருக்கு. அதே போல முதலில் இருந்தே இருப்பவர்களும் கதைக்கு கதை ரொம்ப அருமையா முன்னேற்றம் ஆகி எழுதறாங்க.(ரைட்டர் பேரு சொல்லலை என்று நினைப்பீங்க… நான் தொடர்ந்து படிக்கிறவங்க நேம் நெறைய இருக்கு. அதை எல்லாம் சொன்னால் இன்னும் லென்தா போகும். என்னை தெரிந்தவர்களுக்கு என்னை புரியும்..🥰
26. அன்று முதல் இன்று வரை வெகு சில ஆசிரியர்களின் புத்தகங்கள் / கதைகள் மட்டுமே அதிகமாக வாசகர்களை அடைகிறது. பல நல்ல விஷயங்களை கூறும் புத்தகங்கள் அதிக வரவேற்பு பெறுவதில்லை. நீங்கள் அந்த எழுத்தாளர்களைகொண்டாட மறுக்கும் காரணம் என்ன ?
fb-ல சில கதைகளின் விமர்சனம் ஆஹா.. ஓஹோன்னு இருக்கும் .அதை நம்பி படிக்க போய் கதை நல்லா இல்லாமல் ஏமாந்து படிக்காமல் வந்து இருக்கேன். அதே போல நமக்கு பிடித்த கதை மத்தவங்களுக்கு பிடிக்காம போகும். ரசனைகள் மாறுபடும். கதை நன்றாக இருந்தால் என்னை போல நல்ல கதைகளை தேடித் தேடி படிப்பவர்களும் இருக்க தான் செய்கிறார்கள். எனக்கு பிடித்த கதைகள் என்று நான் பரிந்துரைத்த நாவல்கள் என் friendsக்கும் பிடிச்சு இருக்கு…😊
27. உங்களுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் (அன்றைய 5வர் & இன்றைய 5வர்) ஏன் அவர்கள் எழுத்து பிடிக்கும்? அவர்களின் சிறப்பாக நீங்கள் கருதுவது என்ன?
அன்றைய எழுத்தாளர்கள் ஐவர் கூட இன்னும் ஒருத்தரை சேர்த்து சொல்றேன்.
RC காதல் கதைகளின் ராணி. இவங்க எழுத்து நம்மை மயக்கிடும். இந்துமதி மணல்வீடு சஸி, கிருபா மறக்கவே முடியாது. சிவசங்கரியின் கருணைகொலை இன்னுமே மனதில் அழுத்தமாய் இருக்கும் கதை. பட்டுகோட்டை பிரபாகர், சுபா அண்ட் பாலகுமாரன்
இன்றைய எழுத்தாளர்கள் ஐவர் எல்லாம் சொல்ல முடியாதே.. ஐம்பதுக்கு மேலே வந்துருமே…
ஒவ்வொருவரும் ஒரு விதம். ongoingலே நான் நெறைய writers படிக்கிறேன்.
28. ஒரு புத்தகத்தில் / கதையில் நீங்கள் எதிர்பார்க்கும் முக்கியமான விஷயங்கள் என்னென்ன?
நகைச்சுவை, தென்றலை போல அழகான ரொமான்ஸ், interesting ஆன எழுத்து, வித்தியாசமான கதை களம்.
29. எழுத்தில் ஆண் / பெண் பேதம் இல்லை. ஆனால் மொழி ஆளுமை உள்ள எழுத்து ஆண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா அல்லது பெண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா? உங்களின் தனிப்பட்ட கருத்து என்ன?
எழுத்தாளர்கள் அவ்வளவு தான். அதில் ஆண் என்ன??? பெண் என்ன??? சிறந்த எழுத்தாளரை தேர்ந்து எடுக்கும் போது அவர் ஆண் என்றோ பெண் என்றோ பார்ப்பதில்லை. நல்லா எழுதி இருக்காங்களா என்று தான் பார்க்கிறார்கள். அது போல தான் நானும். நல்லா இருந்தால் யார் எழுதி இருந்தாலும் ok தான். இப்போ தான் சிலர் பெண் எழுத்தாளர்களை மட்டம் தட்டுவது போல பேசுகிறார்கள். அவர்கள் படைக்கும் எழுத்தை விட நம் பெண் எழுத்தாளர்கள் மிக அருமையாக எழுதுகிறார்கள்.👌
30. யாருடைய ஆட்டோகிராப் இருக்கிறது அல்லது வாங்க வேண்டும் என்று ஆசை?
அப்படி எல்லாம் ஆசை இல்லை..
31. கதைகளில் எதிர்மறை முடிவுகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அதன் தாக்கம் உங்களுக்கு எப்படிபட்ட மனநிலையை கொடுக்கிறது?
எப்போவும் ஹாப்பி எண்டிங் கதை பிடிக்கும். எதிர்மறை கருத்துக்கள் கொண்ட கதை படிச்சா அதில் இருந்து மீண்டு வர ரொம்ப நாள் ஆகும்… ஆனா கதைக்கு அந்த முடிவு தான் என்று ஆசிரியர் நினைத்தால் அதை குற்றம் சொல்ல முடியாதே.. அப்படி பட்ட கதைக்கு நான் மனசுக்குள் ஹாப்பி எண்டிங் கொடுத்துக்குவேன்.
32. ஆடியோ கதைகள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ? நீங்கள் விரும்பிய ஏதேனும் ஒரு ஆடியோ கதையை கூறுங்கள்.
நான் ஆடியோ கதை கேட்டது இல்லை.(சொல்றதை கேக்காதவன்னு கெட்டபேரு வருமோ)🤔நானே படிச்சா தான் எனக்கு திருப்தி.
33. ஒரு கதையில் இருந்து மற்றொரு கதையின் தொடக்கம் இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன ?
சமகாலத்தில் இருந்தால் ok தான்.ஒரு சில கதைக்கு பொருத்தமா இருக்கும். ரம்யா ராஜனின் தர்மாவை ரசிக்க முடிந்தது. ஏன்னா செகண்ட் பார்டிலும் தர்மா தான் ஹீரோ.
34. மேற்கண்ட விஷயங்கள் தவிர நீங்கள் எழுத்தாளர்களிடம் வேறு என்ன கூற ஆசைப்படுகிறீர்கள் ?
நல்ல எழுத்துக்களை தொடர்ந்து கொடுங்கள். நீங்கள் எழுதும் எழுத்துக்களை உங்கள் வீட்டில் இருப்பவர்களும் படிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் எழுதுங்கள். நல்ல விஷயங்கள் என்றுமே வெற்றியை தேடி தரும். நிரந்தர புகழையும் தரும்.
நன்றி..வணக்கம்.
🙏
ரொம்பவே அருமையான நேர்காணல் சிஸ்டர். உங்க வாசிப்பின் மீதான காதல நீங்க சொல்றப்போ அவ்ளோ இதமா உணர முடியுது. உங்கள போல வாசகர் தான் எழுத்தாளர்களுக்கு ரொம்ப பெரிய பூஸ்டர். நீங்க சொன்ன எழுத்தாளர் வரிசை எல்லாம் அவ்ளோ வெரைட்டி ஆக இருக்கு.
நானும் அந்த லிஸ்ட் ல வர நிறைய உழைக்கணும். ஒரு நாள் சொல்வீங்க ன்னு நம்பறேன். உங்களோட வாசிப்பு அனுபவமும், மாற்றங்களை சொல்ல நீங்க பாடின பாட்டும் எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்தது சிஸ்டர்.
புத்தகத்தை சுவாசிக்கும் ஒரு உயிர் நீங்க .. எப்பவும் இதே காதளோட இருங்க. இந்த நேர்காணலுக்கு உங்க நேரத்தை கொடுத்தது ரொம்ப சந்தோஷம் சிஸ்டர். நன்றி.
வாசிப்பை நேசிப்போம் ..