வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..
இன்னிக்கி நம்ம பாக்க போறது .. தக்காளி சாப்ஸ் ..
தக்காளி சாப்ஸ்
தேவையான பொருட்கள்:
- தக்காளி – 1 கிலோ
- சின்ன வெங்காயம் – 200 கிராம்
- தேங்காய் – சின்ன மூடி துருவல்
- சோம்பு – 1 டீ ஸ்பூன்
- கசகசா – 1 டீ ஸ்பூன்
- கொத்தமல்லி – 25 – 30 கிராம்
- மிளகு – 2 டீ ஸ்பூன்
- பட்டை – 1 இன்ச் 2 துண்டு
- கிராம்பு – 8
- இஞ்சி – 1 இன்ச்
- எண்ணை – 25 டீ ஸ்பூன்
- கறிவேப்பிலை – 2 கொத்து
*(தக்காளி மற்றும் வெங்காயத்தை சிறிது சிறிதாக வெட்டி கொள்ளவும்)
மசாலா தயாரித்தல்:
தேங்காய் துருவல், சோம்பு, கசகசா, கொத்தமல்லி, மிளகு, பட்டை, கிராம்பு, இஞ்சி எல்லாவற்றையும் மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்.
செய்முறை:
வாணலியை அடுப்பில் வைத்து நன்றாக சூடாதும், எண்ணை ஊற்றவும். எண்ணை நன்றாக காய்ந்தவுடன், கடுகு போட்டு பொறிந்ததும், வெட்டி வைத்துள்ள சிறிய வெங்காயத்தை எண்ணையில் போட்டு வதக்கவும். உடன் கறிவேப்பிலை சேர்த்து, நன்றாக வெங்காயம் வெந்ததும், சிறிது சிறிதாக வெட்டி வைத்துள்ள தக்காளியை போடவும்.
அதில் மஞ்சள் 1/2 ஸ்பூன், மிளகாய் தூள் – 2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு சேர்த்து கொள்ளவும். தக்காளியை நன்றாக வதக்க வேண்டும்.
கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும். நன்றாக தக்காளி வெந்த பிறகு அரைத்து வைத்த மசலாவை ஊற்றி, சிறிதளவு தண்ணீர் சேர்ந்து மீண்டும் வேக விடவும்.
கிரேவி அளவிற்கு அது கெட்டியானதும், எண்ணை வெளியே வரும். அப்போது சிம்மில் வைத்துகொண்டு நன்றாக எண்ணை வெளியே வரும் வரை விடவேண்டும். அடுப்பில் இருந்து இறக்கும் போது சிறிது கொத்தமல்லி தளையை தூவி விட்டு இறக்கவும்.
இது சப்பாத்திக்கு மிகவும் நன்றாக இருக்கும். சாப்பாட்டிற்கும் நன்றாக இருக்கும்.
மீண்டும் ஒரு சுவையான சமையல் குறிப்புடன் மீண்டும் வருகிறேன் ..