- 2022 Aalonmagari. All Rights Reserved.
நீண்ட நெடிய காலம் தான் …
உன்னை நினையாமல் கழித்தேன் …
நீளும் நாட்களும் நினையாமலே கடந்துச் செல்ல விட்டுவிடு …
எனை கை விட்டது போல …
என் மனதை நொறுக்கியது போல …
என் நினைவுகளையும் தொலைத்து போ …
காற்றிலே மிதக்கும் நிகழ்வுகளை …
மறந்தும் சுவாசித்திடாதே …
பாவம் ..
நான் தான் ..
அது என்னைக் காட்டிவிட்டால் … – மீண்டும்
நான் நொறுங்கிப் போகக் கூடும் … !!!
– ஆலோன் மகரி
© 2022 By - Aalonmagari.