நடனம்….
எத்தனை அற்புதமான கலை….
மனதின் லயத்திற்கு ஜதி மாறாமல் ஆடிவிடும்….
கோபமோ….
அழுகையோ….
வேண்டலோ….
ஒதுக்கமோ…
இணக்கமோ….
ஆனந்தமோ….
எல்லாம் அதன் வெளிப்பாட்டில் கோபுர உயரம் தான்…..
மெல்ல மெல்ல அஸ்திவாரத்தை பலமாக்கி…
உயர்ந்தோங்கி நின்று தனது நடனத்தை அரங்கேற்றம் செய்துவிடும்….
அப்படித்தான் ….
மாமாங்கமாக மறந்து போயிருந்த உற்சாகம்…
சட்டென மேலெழும்பி வந்துவிட்டது…. – என்
அஸ்திவாரத்தை கருவியாக இயக்கி ஆடவைத்தது..
சிறிது நேரம் தான்….
இன்னும் கூட கொஞ்சம் நீண்டிருக்கலாம்…
மறந்துவிட்ட உற்சாகத்தை….
தொலைத்துவிட்ட சுயத்தை…..
கட்டப்பட்டிருந்த மனதை….
எதுவோ…. என்னவோ….
மீண்டும் கிடைத்த உணர்வு…..
இன்றோர் நாள் மட்டுமா?
இனி எப்போதும் நீளுமா ???
அஃதறியேன்…..
சுழன்றாடிய நொடிகளில் …..
இழந்த அனைத்தும் மீட்டுவிட்ட சந்தோஷத்தை நுகர்ந்தது……
உண்மை தான்….
துளி போதும் தானே?
வெள்ளமாய் ஊற்றெடுக்க……!!!
– ஆலோன் மகரி
- 2022 Aalonmagari. All Rights Reserved.