• Home
  • About us
  • Contact us
  • Login
Monday, October 2, 2023
Aalonmagari
Subscribe
  • Login
  • Register
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • Category
    • மகரியின் பார்வையில்
    • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
No Result
View All Result
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • Category
    • மகரியின் பார்வையில்
    • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
No Result
View All Result
Aalonmagari
Register
No Result
View All Result

நந்தினி சுகுமாரன்

by aalonmagarii
June 13, 2022
in எழுத்தாளர் நேர்காணல், நேர்காணல்
0
இயல்புகள்

 வணக்கம் நட் பூஸ் அண்ட் சகோஸ் .. 

இன்னிக்கி நம்ம பாக்க போற எழுத்தாளர் ஒரு அற்புதமான எழுத்த தன் வசம் வச்சி இருக்கறவங்க .. 

இவங்களோட எழுத்துல நல்ல கருத்தும் , உணர்வுகள கடத்துற விதமும் ரொம்பவே அருமையா இருக்கும் .. 

ரொம்பவே தன்னடக்கம் உள்ளவங்க .. அசால்ட்ட எல்லாத்தையும் செஞ்சிட்டு அமைதியா நின்னுப்பாங்க .. 

யாருன்னு உள்ள போய் பாக்கலாம் வாங்க .. 

 

எழுத்துப்பயணத்தில் நம்முடன் இன்று….

 

1. புனைபெயர் – நந்தினி சுகுமாரன்

 https://www.facebook.com/nandhini.sugumaran.58

 

2. இயற்பெயர் – துர்காதேவி

 

3. படிப்பு – Diploma ECE

 

4. தொழில் – இல்லத்தரசி

 

5. பிடித்த வழக்கங்கள் –

வாசிப்பு, எழுத்து, தூக்கம், என் குழந்தைகளுடனான நேரம்..

 

6. கனவு –

எழுத்துலகில் பெயர் சொல்லும் அளவிற்கு என் எழுத்துகள் சிலவற்றையேனும் பதித்துவிட வேண்டும்.

 

7. உங்களுக்கு ஏற்பட்ட எழுத்தின் மீதான தாக்கம் என்ன?

முழு முதல் காரணம் வாசிப்புதான். அது என்னை அறியாமலேயே எழுத்தின் பக்கம் இழுத்துவந்துவிட்டது.

 

8. உங்களின் வாசிப்பு அனுபவம் பற்றி –

 கண்களில் படுபவை அனைத்தையும் வாசிப்பவள் நான். பதினாறு வயதில் நாவல் அறிமுகமானது. முதல் நாவலே, காதல் கதைதான் . பெயர் நினைவில்லை. இரண்டாம் நாவல் பிராமணன் எங்கே? எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் ஏராளம். என் கதையின் நாயகர்கள், அதன் நாயகன் செல்வத்தின் குணநலத்தை ஒத்தே இருப்பார்கள். குடும்பம், காதல், காதல் தோல்வி, ஏமாற்றம், சமூகத்தின் மீதான பார்வை, கோபம், பிற்போக்குத்தனங்களை மாற்ற நினைக்கும் உறுதி, தமிழின் மீதான ஈடுபாடு.. என அனைத்தையும் உள்ளடக்கியது. எனது கண்ணோட்டத்தை மாற்றி, கற்பனைகளுக்கு வித்திட்ட கதை. அதன்பின் நிறைய  வாசித்துவிட்டேன். ஆனால் நினைவுகளில் பதிந்து போன வெகுசில நாவல்களில் அதற்குத்தான் முதலிடம்.

 

9. உங்களை எழுத தூண்டியது எது?

 தெரியவில்லை. வாசிப்பின் நீட்சியாக இருக்கலாம்.

 

10. எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்?

 செப்டம்பர் 2018

 

11. உங்களது எழுத்தை படித்தவரிடம் அதன் தாக்கத்தை உணர்ந்தது உண்டா?

 நிச்சயமாக.. பல வாசகர்கள் தனிப்பட்ட முறையில் உரைத்துள்ளனர். மிக அதிகமாக கேட்ட வாசகம் ~ எங்கள் வீட்டில் நடப்பது போல் உள்ளது என்பதுதான்.

 

12 . எழுத்தால்  எதையும் மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா ?

 கண்டிப்பாக. பெண்களின் மாதவிலக்கை மையப்படுத்தி எழுதிய சிறுகதையை வாசித்துவிட்டு.. ஒரு தம்பி, அக்கா இவ்வளவு கஷ்டமா இருக்குமா? எனக்கு இதைபத்தி எல்லாம் தெரியாது. கொஞ்சம் டீட்டெயிலா சொல்லுறீங்களா.? அந்த டைம்ல என்ன சாப்பிட கொடுக்கணும், எப்படிப் பார்த்துக்கணும்னு.? வினவினார் தன்வருங்கால துணைக்காக.

 எழுத்து ஒரு வித்து. மெல்ல மெல்ல துளிர்விட்டு ஒருநாள் முளைத்துவிடும். பெரும் மாற்றங்களை நிகழ்த்த வல்லது. ஆனால் அதிக காலம் ஆகும்.

 

13 . மின்னூல் , பதிப்பு புத்தகம் . இவற்றினைப்  பற்றி  உங்கள் கருத்து என்ன ?

 அனைத்து எழுத்துகளும் அச்சில் ஏறுவதில்லை. அதனால் மின்புத்தகம் வரமென்றே நினைக்கிறேன்.

 ஆனால் புத்தகத்தை கையில் ஏந்தி  வாசிப்பதற்கு ஈடாகாது, கைப்பேசித் திரையில் மின்னும் எழுத்துகள்.

14. நீங்கள் பதிபித்த பதிப்பு  புத்தகங்கள் எத்தனை ? (அவற்றை பெற தொடர்பு கொள்ள ) –

 

காத்திருக்கிறேன் மான்விழியே

கை சேர்ந்த கவிதை

கனிந்தமனம் – முதல்பாகம்

தேனும் தமிழும் (கனிந்தமனம் – 2ம் பாகம்)

வானவில் பூக்கள் (கனிந்தமனம் – 3ம் பாகம்)

மயங்குவதேனோ மதுரவனே..

 

ஆறு புத்தகங்களுமே நோஷன் பிரஸ்ஸின் மூலமாக வெளிவந்தவை..

 https://notionpress.com/author/289207

15. ஆடியோ புத்தகங்கள் மீதான உங்கள் பார்வை என்ன ?

 வாசிக்க நேரம் கிடைக்காதவர்களுக்கு  சிறந்த மாற்று வழிமுறை. ஆனால் எனக்கு அதில் ஈடுபாடில்லை.

 

16. எழுத்தாளரின் வெற்றி என்பது எதன் அடிப்படையில் இருக்கிறது ?

 வாசகனின் சிரிப்பிலும், கண்ணீரிலும்.

 

17 . உங்கள் படைப்பில் எதையாவது  எழுதி இருக்க வேண்டாம் என்று எண்ணியதுண்டா ? 

 இதுவரை இல்லை.

 

18 . உங்களின் படைப்புகளில் எது உங்களுக்கான அங்கீகாரத்தை பெற்று கொடுத்ததாக நினைக்கிறீர்கள் ?

 கனிந்தமனம்

 

19 . கதை கரு மற்றும் கதா பத்திரங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள் ? அதற்கான மெனக்கெடல் எந்த அளவிற்கு கொடுப்பீர்கள் ?

 அன்றாடம் நாம் கடந்து செல்லும் ஏதோ ஒரு நிகழ்வே கதைக்கான கருவை என்னுள் உருவாக்கும். அதை விரிவாக்கம் செய்யும் பொழுதே கதாபாத்திரங்கள் தானாக அமைந்துவிடும். மெனக்கெடல்கள் என்று நான் செய்வது.. ஒவ்வொரு காட்சியையும் லாஜிக்குடன் எழுத நினைப்பேன். ரயில் வரும் நேரம், அலுவலகப் பணி, உட்கொள்ளும் உணவு, உடல் உபாதை, நோய்கள் பற்றிய விரிவாக்கம். வயது கணக்கீடு, காலநிலை என ஒவ்வொன்றுக்கும் நான் அமைக்கும் காட்சி சரியாகப் பொருந்திப் போகவதற்கான தேடல்களே எனது மெனக்கெடல்கள்.

 

 20  . நீங்கள் பெற்ற போட்டி பரிசுகள் –

 தீண்டாதே – பிரதிலிபி, கதைத்திருவிழாவில் இரண்டாம்பரிசு.

ஈன்றகடன் – பிரதிலிபி,

மகாநதிப்போட்டியில் முதல்பரிசு.

இரண்டாமாவாழ்வு – வைகைத்தளம், சிறுகதைப்போட்டி முதல்பரிசு.

உயிர்க்கிறேனடா உந்தன் காதலில் – சங்கமம்தளம், கதைசங்கமம் 2021 ஆறுதல்பரிசு.

21. எதிர்வினை கருத்துக்களை எப்படி கையாள்கிறீர்கள்?

 நேர்மறையைப் போன்று அதுவும் ஒரு கருத்துப்பகிர்வே. எனது எழுத்துகளில் தவறிருந்தால் நிச்சயம் திருத்திக் கொள்வேன், நன்றியும் உரைப்பேன்.

 

22. நீங்கள் அதிகம் எழுத விரும்புவது எது ? (கதை , கவிதை, தொடர்கதை, நாவல் , சிறுகதை)  ஏன் ?

 சிறுகதைகள்.

 

23. ஏன் மாறுபட்ட கதைக்கரு கொண்ட கதைகள் வாசகர்களை அதிகமாக சென்றடைவதில்லை?

 அது அவரவர் ரசனையைப் பொறுத்தது. காதல் மற்றும் குடும்பக் கதைகளை தங்களது உணர்வுகளுடன் இயல்பாய் இணைத்துக் கொள்பவர்களுக்கு, மற்ற கதைக்களங்களுடன் அதுபோல் ஒன்ற முடியாமல் போவதால் இருக்கலாம்.

 

24 .  குடும்பம் காதல் சாராத கதைகளை நீங்கள் எழுதியது உண்டா? (படைப்பின் தலைப்பு)

 இல்லை. இனி எழுத நினைத்திருக்கிறேன்.

 

25 .  அனைவரும் படிக்க வேண்டிய புத்தகங்களாக நீங்கள் கருதுவது என்ன என்ன?

 அது அவரவர் விருப்பம். எனது ரசனை மற்றவர்களுக்குப் பொருந்தாமல் போகலாம்.

 

26 .  ஓர் படைப்பின் வார்த்தை அளவுகள் பற்றி உங்களது கருத்து என்ன?

 வார்த்தை அளவீடு, எழுத்தாளரின் கற்பனையை சுருக்கிவிடும் என்பது என் எண்ணம் . தேவையான வார்த்தைகளை அந்த படைப்பே எடுத்துக் கொள்ளும். சுருக்கமாய், ஆழமாய் கதைச் சொல்வதே சிறந்தது என்பது தற்போது நான் கற்றுக் கொண்ட பாடம்.

 

27. எழுதுபவர்கள் பெறும்பாலும் பயன் அடைவதில்லை. அவர்கள் பயன்பெற  நீங்கள் கூறும் சில யோசனைகள் என்ன?

 பயன்பெறுவதில்லை என சொல்வதற்கில்லை. மின்புத்தகம் மூலமாக ஓரளவிற்கு வருவாய் வருகிறது.

 உண்மையில் எனக்கும் இதைத்தவிர்த்து வருவாய் ஈட்டுவதற்கான வழிமுறைகள் தெரியவில்லை.

 

28. உங்கள் தனி தன்மை என்று தாங்கள் கருதுவது என்ன ?

 மிகைப்படுத்தப்படாத கதாபாத்திரங்கள்.

 

29 .  உங்களது கவிதை, பிடித்த வாக்கியம், பழமொழி (பைனல் பஞ்ச்).

 

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்!

இதுவும் கடந்து போகும்!

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு!

சுயம் நேசி!

 

30 . உங்கள் படைப்புகள் (லிங்க்குகளுடன்)   (Youtube also ): 

 பிரதிலிபி –

https://tamil.pratilipi.com/user/607o6v4648?utm_source=android&utm_campaign=myprofile_share

 

eread –

https://eread.club/members/nandhinisugumaran/snax_posts

 

வைகைதளம் –

https://vaigaitamilnovels.com/forum/categories/nandhini-sugumaran.206

 

 சிவரஞ்சனி தளம் –

https://sivaranjhani.com/index.php?threads/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF.396

 

நந்தவனம் தளம் –

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D.175

 

அமேசான் லிங்க் –

 https://www.amazon.in/s?k=nandhini+sugumaran&i=stripbooks&rh=n%3A4506103031&crid=39WKSFE7G03Z2&qid=1632363896&sprefix=nandhini+sug&ref=is_pp_2

 

Thank you so much magari ma for giving me this opportunity.

நம்ம நந்தினி சிஸ்டர் கதை மட்டும் இல்லைங்க இவங்க பேச்சும் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு தான் .. 

சொல்ல வேண்டிய விஷயத்த அழகா அதிகம் வார்த்தைகள் செலவு பண்ணாம சொல்றது தான் இவங்க சிறப்புனு நான் நினைக்கறேன் . 

சிறுகதை எழுத கத்துகிட்டு இருக்கறதா சொல்றாங்க  ஆனா படிச்சா உங்களுக்கு புரியும். 

இவங்க மனசுல இருக்கற குமுறல் எல்லாம் எழுத்து வடிவுல அற்புதமா குடுத்துட்டு வராங்க. 

நிச்சயம் இவங்க எழுத்துக்கள் பெரிய உயரங்களை தொடும் அதுல சந்தேகமே இல்லை. சமீபமா கூட ஒரு சில இணைய தளங்கள் ல நடந்த போட்டிகள்ல வெற்றி பெற்று இருக்காங்க. அதுக்கு எங்க வாழ்த்துகள் சிஸ்டர்.. 

உங்க எழுத்து நிச்சயம் ஒரு பெரிய விஷயத்தை இந்த உலகத்துக்கு எடுத்து காட்டும். நீங்க தொடர்ந்து எழுதிட்டே இருங்க. எப்பவும் உங்க பேனாமுனை இயங்கிட்டே இருக்கட்டும். 

உங்களோட எல்லா முயற்சிகளுக்கும் எங்களோட மனமார்ந்த வாழ்த்துகள்..   

இவங்களோட நம்ம பயணம் உங்களுக்கு பிடிச்சி இருக்கும் .. மறக்காம இவங்க சிறுகதைகள் படிச்சி பாருங்க.. 

சீக்கிரமே ஒரு அழகு தமிழ் உபயோகிக்கற எழுத்தாளரோட வரேன் .. 

Click to rate this post!
[Total: 2 Average: 4.5]
Post Views: 1,598
Tags: writers interview
Previous Post

ராஜேஸ்வரி கருப்பையா 

Next Post

மது கிருஷ்ணா

Next Post
இயல்புகள்

மது கிருஷ்ணா

Please login to join discussion
1 – ருத்ராதித்யன்

18 – ருத்ராதித்யன்

August 18, 2023
0
1 – ருத்ராதித்யன்

17 – ருத்ராதித்யன்

August 13, 2023 - Updated On August 18, 2023
0
1 – ருத்ராதித்யன்

16 – ருத்ராதித்யன்

July 14, 2023 - Updated On August 13, 2023
0

Subscribe to our newsletter

Please wait...
Want to be notified when our article is published? Enter your email address and name below to be the first to know.
I agree to Terms of Service and Privacy Policy

        Terms & Conditions

            Privacy Policy

  • aalonmagari@gmail.com
  • 2022 Aalonmagari. All Rights Reserved.
Facebook Twitter Instagram
No Result
View All Result
  • Login
  • Sign Up
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
  • Category
    • மகரியின் பார்வையில்
    • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
  • புத்தகம் வாங்க
  • Login

© 2022 By - Aalonmagari.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Please wait...

Subscribe to our newsletter

Want to be notified when our article is published? Enter your email address and name below to be the first to know.
SIGN UP FOR NEWSLETTER NOW
error: Content is protected !!