அறியா பருவம் முதல் என் மனதின் முதல் அன்பனானவன்….
உன்னருகில் இருந்த தருணங்கள் குறைவே – அதில் நான் நிறைவாய் இருந்ததும் நிஜமே…
என்னவென்று அறியும் முன்னே உண்டான அன்பு….
இடையில் சிலகாலம் காணாத போதும் மனதின் ஆழத்தில் வேரூன்றி நின்றுவிட்ட அன்பு….
ஏழு வருடங்கள்…..
உன்னை காணவில்லை…
உன் குரல் கேட்கவில்லை…
உன் அன்பான கண்டிப்பும் சந்திக்கவில்லை…
ஆழியின் ஆழத்தில் மூழ்கிய முத்தாய் இருந்த உன் எண்ணம் …
திடீரென மேலெழுந்து வந்த சமயம்….
யாதென்று அறிமாலே உன்னை தேடினேன்…
மீண்டும் உன் அன்பு வலையில் என்னை பின்னிக் கொண்டேன்…
உன் பிறந்தநாளன்று மீண்டும் உன்னை கண்டேன்… – அத்தருணம் என்னை
தாயை தேடிய கன்றாய் உணரவைத்தது….
உண்மை தான்…
ஆணில் தாய்மை உண்டு…
நான் நானாக இருப்பதையும்…
உன்னருகில் உணர்ந்தேன் ….
பிரமிப்பே அடைகிறேன் உன் மனதில் எனக்கான இடத்தை கண்டு….
அறியா பருவம் முதல் விடலை பருவம் கண்டு இன்று ஓர் பெண்ணாய் நிற்கிறேன்….
நான் அறிந்த நல்லவைகளுக்கு நீயே முதல் கைக்காட்டி…
தாய் தந்தை தமயன் தோழன் என அனைத்தும் உன்னில் காண்கிறேன்…
இறுதியாக ஆத்ம அன்பும் உன்னிடத்தில் …
என் உணர்வுகளுக்கு நான் உருவம் கொடுத்து வெளிக்காட்டி அதை கண்ட முதல் மனிதன் நீ…. – என்
இறுதி மூச்சு உள்ளவரை உன் இருதய அறையின் ஓரத்தில் வாழ விழைகிறேன்….
உன் அன்பை இரசித்து ருசிக்கும் சக்கரான்னமாக….
என் அன்பான அன்பனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உன் சேயிடமிருந்து….
– ஆலோன் மகரி