- 2022 Aalonmagari. All Rights Reserved.
தேனூறும் மலராய் நான் இல்லை……
தேன் தேடும் வண்டாக நீ வரவில்லை…..
உன் கூடு தேடி வந்தாயா?
உன் கூ(வீ)டாய் எனை மாற்ற வந்தாயா?
கருவண்டாய் நீ திரிந்து…. – என்
கருவிழியில் நீ சிக்கி கொண்டாய்…..
முதல் அழைப்பு யார் விடுக்க ?
முதல் முத்தம் எப்போது சுவைக்க… ?
தேனோடு காத்திருக்கும் மலராக நான்….. ♥
– ஆலோன் மகரி
© 2022 By - Aalonmagari.