- 2022 Aalonmagari. All Rights Reserved.
கனவினை துறத்திட துணிந்தேன்…. – அது
எனை விலகிட நினைத்தது…..
காலங்கள் உருண்டோட … – நானும்
அதனோடு நாட்களைக் கடந்தோட…..
எண்ணிய காரியங்கள் ஈடேறவில்லை…. – நீ
நினைத்த யாவும் நடந்தேறியபின்….
மீண்டும்……
முதலில் இருந்து ஓடச் சொல்கிறாய்….
ஈசா….
உனை என்னுள் நிறைத்துள்ளேன்….
உனையே திட்டித் தீர்க்கிறேன்….
எனைத் தேடி வந்துவிடு…. – உன் உயிரை
உன்னோடு கொண்டு சென்றுவிடு…….
இருவரும் தொடங்கலாம் மீண்டுமோர் அத்தியாத்தை…..
– ஆலோன் மகரி
© 2022 By - Aalonmagari.