அவளின் குரல் ஓசை எழுப்பவில்லை…
அவளின் மனம் பெரும் ஓசையுடன் ஒலிக்கிறது…..
யாரும் இல்லா தனிமையில்….
நிச்சயம் வெறுமை இல்லை…
மனதில் பல நூறு அல்ல..
ஒரே எண்ணம் தான்…
வாழ்வின் பாதை எதை நோக்கி?
கூறும் அளவு சந்தோஷம் இல்லை…
சொல்ல முடியா அளவு வேதனை உள்ளது….
பேசும் அளவு வரிகள் இல்லை…
பேசாத பல கனவுகள் உண்டு…
மாறாத ஆசைகள் உண்டு….
மாறிய தடங்களும் உண்டு…
இயலாத செய்கைகள் இல்லை….
முயற்சியை தடுக்கும் பெருஞ்சுவர் உண்டு….
காணுதற்கரிய காட்சிகள் பல கண்டும்….
சராசரி நிகழ்வுகள் இயற்றப்படவில்லை….
வாய் மூடாமல் வாயடித்தவள்…
இன்று மௌனியாகிட ஆசைபடுகிறாள்….
“பேசினால் தீராதது ஏதும் இல்லை” – வழக்குமொழி….
“பேசினாலும் புரியாத ஜடங்களே சுற்றிலும் உண்டு” – இவள் மொழி…
பாஷை வேண்டாம்…..
ஓசை வேண்டாம்…..
அமைதி போதும்….
கடலின் பேரிரைச்சலில் ஒளிந்துள்ள பேரமைதி போதும்….
மொத்த வாழ்க்கையிலும்…..
மிச்ச நாட்களிலும்….
தூற்றும் எச்சமாய் இல்லாது…..
எவரின் கால் படா கடல்நுரையாக வாழ்தலே பேரின்பம்…..
ஆழ மூச்செடுத்து…..
ஆழ் கடலில் மூழ்கி கரைகிறேன்…
வாயாடாமல் பேசப்போகிறேன்….
மௌனத்தின் வழி….
மகரியின் பேரிரைச்சலாக…..
– ஆலோன் மகரி