• Home
  • About us
  • Contact us
  • Login
Friday, January 27, 2023
Aalonmagari
Subscribe
  • Login
  • Register
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • Category
    • மகரியின் பார்வையில்
    • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
No Result
View All Result
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • Category
    • மகரியின் பார்வையில்
    • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
No Result
View All Result
Aalonmagari
Register
No Result
View All Result

ராஜேஸ்வரி கருப்பையா 

by aalonmagarii
June 13, 2022
in எழுத்தாளர் நேர்காணல், நேர்காணல்
0
இயல்புகள்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் .. 

 

இன்னிக்கி நம்ம பாக்க போற அந்த அருமையான எழுத்தாளர் .. அப்டியே கொஞ்சம் வெயிட் பண்ணுங்க நான் க்ளூ தரேன் .. 

இவங்க எனக்கு பழக்கம் இல்லாத எழுத்தாளர் தான் . ஆனா இவங்க எழுத்து எனக்கு முன்னயே பழக்கம் ஆகிரிச்சி.. 

நான் ரொம்ப நாளா முயற்சி பண்ற கலப்படம் இல்லாத தமிழ் இவங்க கதைல பாக்கறப்போ இருக்கற இனிப்பும், சந்தோஷமும்  இவங்க கதை படிச்சி முடிச்சி ரொம்ப நேரம் ஆனாலும் நம்ம மனசுல இதமும் , முகத்துல சிரிப்பும் நிலைக்க வைக்கும் .. 

இவங்களோட எதார்த்தமான கதை களமும் , இவங்க அதை கொண்டு போற விதமும் தாங்க அவ்ளோ அருமையா இருக்கும் .. 

யாருன்னு உள்ள போய் பாக்கலாம் வாங்க .. 

 

எழுத்துப்பயணத்தில் நம்முடன் இன்று…. 

 

1. புனைபெயர் – ராஜேஸ்வரி கருப்பையா 

 

2. இயற்பெயர் – ராஜேஸ்வரி

 

3. படிப்பு – M. Com(ca)

 

4. தொழில் –

Home Management (இல்லத்தரசியை இப்படியும் சொல்லிக்கொள்ளலாம் )

 

5. பிடித்த வழக்கங்கள் –

கதைப் புத்தகம் படிப்பது 

 

6. கனவு – 

நான் எழுதின புத்தகத்தை லைப்ரரில பார்க்கணும். முகம் தெரியாத மூன்றாம் நபர் திடிர்னு என்கிட்ட வந்து நீங்க தான அந்த கதையை எழுதினதுன்னு கேக்கணும்.

 

7 .உங்களுக்கு ஏற்பட்ட எழுத்தின் மீதான் தாக்கம் என்ன?

மற்றவர்கள் கோணத்தில் இருந்தும் அவர்களை புரிந்து கொள்ளும் திறனை தந்திருக்குன்னு நினைக்கிறேன்..

 

8. உங்களின் வாசிப்பு அனுபவம் பற்றி –

நான் ஒரு கதை பைத்தியம்ப்பா. Note this point. கதைகள் மட்டும் தான். மற்றபடி மத்த புத்தகங்கள் படிக்குற அளவு எனக்கு பொறுமை இல்லை.

 

9. உங்களை எழுத தூண்டியது எது?

எனக்குன்னு எப்பவும் தனி உலகம் இருக்கு. நிறைய கற்பனை செய்வேன். அது தான் வாசிக்கவும் வச்சுருக்கு. எழுதவும் வச்சுருக்கு. சின்ன சின்னதா எழுத ஆரம்பிச்ச பிறகு தான் எழுத்தாளர்ங்கற கனவு வந்துச்சு. எப்பவும் படுத்ததும் தூக்கம் வர gap  la தான் கதைகள் உருவாகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு எபிசொட். எழுத ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே அந்த மாதிரி நாலைஞ்சு கதைகள் முடிச்சுருக்கேன்.

 

10. எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்?

முன்னாடி சொன்ன மாதிரி நிறைய கதைகள் யோசிச்சு வச்சிருந்தாலும் பேசிக்கலி நான் ரொம்ப சோம்பேறி புள்ள. அதனால எழுதறதெல்லாம் செய்ய மாட்டேன். அப்படி இருந்தவள எழுத வச்சது என் ஹஸ்பண்ட் தான். அது கொஞ்சம் பெரிய கதை. கொஞ்ச நாள் முன்னாடி கூட ஷேர் செஞ்சிருந்தேன். அதுல mind ரொம்ப டிஸ்டர்ப்பா இருக்கவும் தான் ஒரு change க்காக note ல எழுதினேன். After மேரேஜ் 2019 feb பிரதிலிபில எழுத ஆரம்பிச்சேன்.

 

11. உங்களது எழுத்தை படித்தவரிடம் அதன் தாக்கத்தை உணர்ந்தது உண்டா?

அதை அவங்க கிட்ட தான் கேட்கணும். என்னை பொறுத்த வரைக்கும் மனசு வருத்தத்தில் இருக்கறவங்க என் கதையை படிச்சா ஒரு good feel வரணும். அப்படி வரவச்சாலே போதும்னு நினைக்குறேன்.

 

12 . எழுத்தால்  எதையும் மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா ?

மாற்ற முடிந்தால் நல்லாருக்கும்.

 

13 . மின்னூல் , பதிப்பு புத்தகம் . இவற்றினைப்  பற்றி  உங்கள் கருத்து என்ன ?

மின்னூல் எழுத்தின் பரிமாண வளர்ச்சி. பதிப்பு புத்தகம் எழுத்துக்களின் மணம் கமழும் தொண்மை.

 

14. நீங்கள் பதிபித்த பதிப்பு  புத்தகங்கள் எத்தனை ?

ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு.

SMS அழகிய சங்கமம் வெற்றி பெற்ற கதை.

 

தித்திக்கும் தேனமுதே -அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

தொடர்பு கொள்ள – sms online shopping (pre order only) – 9790122588    பிரியா நிலையம்

 

15. ஆடியோ புத்தகங்கள் மீதான உங்கள் பார்வை என்ன ?

கதைகளை நேசிப்பவர்களுக்கு இதுவும் ஒரு வரம் தான்.

 

16 . எழுத்தாளரின் வெற்றி என்பது எதன் அடிப்படையில் இருக்கிறது ?

நல்ல படைப்பை தந்திருக்கிறோம் என்ற மன நிறைவில் இருக்கு.

 

17 . உங்கள் படைப்பில் எதையாவது  எழுதி இருக்க வேண்டாம் என்று எண்ணியதுண்டா ? 

அப்பிடி இது வரைக்கும் எதுவும் எழுதினது இல்ல. 

 

18 . உங்களின் படைப்புகளில் எது உங்களுக்கான அங்கீகாரத்தை பெற்று கொடுத்ததாக நினைக்கிறீர்கள் ?

எல்லாமே எதாவது ஒரு வகையில் முன்னேற்றத்தை தான் குடுத்துருக்கு. முதல் கதை எழுத்தாளராக அறிமுகம் செய்தது. இரண்டாவது அமேசானில் நல்ல ராங்கில் வந்து வீட்டினரின் முன் என்னை ஒரு படி மேல கொண்டு போச்சு. அடுத்த கதைகள் புதிய வாசகர்களை அறிமுகம் செய்தது. கடைசியா இப்போ புத்தகம் வரை கொண்டு வந்த எல்லா கதைகளும் எதாவது ஒரு விஷயத்தை எனக்கு தந்திட்டே தான் இருக்கு.

 

19 . கதை கரு மற்றும் கதா பத்திரங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள் ? அதற்கான மெனக்கெடல் எந்த அளவிற்கு கொடுப்பீர்கள் ?

எல்லாமே இரவு நேர தூக்கத்திற்கு முன்பான நேரங்கள் தான். முதல்ல oneline தான் யோசிப்பேன். அடுத்து தொடக்கம் முடிவு. அடுத்து முக்கிய கதாபாத்திரம். பிறகு எல்லாம் சீன் by சீன் on the ஸ்பாட் தான்.

 

20  . நீங்கள் பெற்ற போட்டி பரிசுகள் –

ஒன்று. SMS அழகிய சங்கமம் போட்டியில் புத்தகம் போட தேர்வானது.

 

21.   எதிர்வினை கருத்துக்களை எப்படி கையாள்கிறீர்கள்?

பெரும்பாலும் அப்பிடி எதும் வந்ததில்லை. சில நேரம் வந்தா கூட நல்லாருக்குமேன்னு தோணும் 😄.

 

22  – நீங்கள் அதிகம் எழுத விரும்புவது எது ? (கதை , கவிதை, தொடர்கதை, நாவல் , சிறுகதை)  ஏன் ?

குறிப்பிட்டு சொல்ல முடியாது.மனநிலை பொறுத்து அப்பப்போ மாறுபடும்.

 

23 – ஏன் மாறுபட்ட கதைக்கரு கொண்ட கதைகள் வாசகர்களை அதிகமாக சென்றடைவதில்லை?

அப்படின்னு இல்லை. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விருப்பம். எனக்கு திரில்லர், நகைச்சுவை, லவ் ஸ்டோரீஸ் பிடிக்கும். அழுத்தமான கதைகள் பக்கம் போகவே மாட்டேன். பெரும்பாலும் வாசகர்கள் அவங்க mind ரிலாக்ஸ் பண்ண படிக்குறாங்க. சிலர் ஆன்மிகம் படிக்கலாம் சிலர் காதல் கதைகள் படிக்கலாம்.

எல்லாவிதமான கதைகளுக்கும் குறிப்பிட்ட வாசகர்கள் நிச்சயம் இருப்பாங்க.

 

24 .  குடும்பம் காதல் சாராத கதைகளை நீங்கள் எழுதியது உண்டா? (படைப்பின் தலைப்பு)

குடும்பம் சாராம எழுதினது இல்லை தான். 1) அப்பா வந்தாச்சு 2) உயிர்தொழில் பழகு இரண்டும் கொஞ்சம் மாறுபட்டு இருக்கும்.

 

25 .  அனைவரும் படிக்க வேண்டிய புத்தகங்களாக நீங்கள் கருதுவது என்ன என்ன?

நேர்மறை எண்ணங்கள் தர்ற எல்லா புத்தகமும் படிக்கலாம்.

 

26 .  ஓர் படைப்பின் வார்த்தை அளவுகள் பற்றி உங்களது கருத்து என்ன?

வார்த்தைகள் அளவை வரையறைக்குள் வைக்க முடியாது. ஆனால் சீரியல் மாதிரி இழுக்காம முடிச்சுடனும்.

 

27  . எழுதுபவர்கள் பெறும்பாலும் பயன் அடைவதில்லை. அவர்கள் பயன்பெற  நீங்கள் கூறும் சில யோசனைகள் என்ன?

இங்க பயன்ங்கற விஷயம் பணமா இருந்தா அமேசான்ல போடலாம். அதிலும் இப்ப ரீட்ஸ் கம்மியா வருது. ஆடியோ ஸ்டோரி கூட try பண்ணலாம்.

பணம்ங்கற விஷயம் பெருசில்லங்கறவங்களுக்கு அவங்களுக்கான அங்கீகாரம் தான் ஆகச்சிறந்த பயன். அதுக்கு நல்ல தரமான படைப்புகளை தரணும். எல்லோரும் எழுதராங்க நானும் எழுதறேன்னு இல்லாம நம் எழுத்தில் ஒரு தனித்தன்மை இருந்தா இன்னும் நல்லாருக்கும்.

(எனக்குமே இந்த அறிவுரை பொருந்தும் 😊)

 

28  . உங்கள் தனி தன்மை என்று தாங்கள் கருதுவது என்ன ?

எனக்கு தெரியல. வாசகர்கள் கிட்ட கேட்ட போது எதார்த்தமா இருக்கு. புரிஞ்சுக்க எளிமையான வார்த்தைகள்ன்னு சொன்னாங்க. வேற இருந்தா சொல்லிட்டு போங்க ப்ளீஜ் 🤗

 

29 .  உங்களது கவிதை , பிடித்த வாக்கியம் , பழமொழி (பைனல் பஞ்ச்).

நல்லதையே நினைப்போம்

நல்லதையே எழுதுவோம்

நல்லதையே பகிர்வோம் 

 

30 . உங்கள் படைப்புகள் (லிங்க்குகளுடன்)   (Youtube also ): 

 

என் நெஞ்சு நேர்பவளே :

https://www.amazon.in/dp/B093TLJ29M/ref=cm_sw_r_cp_apa_glt_3S58FBJ86FF7S8கிசமஸ்ம்க்

 

காதல் துளிரே

https://www.amazon.in/dp/B0952961D9/ref=cm_sw_r_cp_apa_glt_2GW286CDP501F9SHS30Y

 

எனை மீட்டும் இயலிசையே

https://www.amazon.in/dp/B08B4SJ1CN/ref=cm_sw_r_cp_apa_glt_6QRSFAW054R3C1JZAA66

 

வசந்தமென வந்தாய்

https://www.amazon.in/dp/B08686DBJ1/ref=cm_sw_r_cp_apa_glt_HE8GP1AASW5D5XJF8HSA

 

சிறுகதைகள் :

 

அப்பா வந்தாச்சு

https://www.amazon.in/dp/B08TVYV2BD/ref=cm_sw_r_cp_apa_glt_C37AJ1FA6H9J3VTMXR69

 

மன்றல்

https://www.amazon.in/dp/B08Y7YF7DX/ref=cm_sw_r_cp_apa_glt_KVP28166BBWTFY2DVK0A

 

கொலைகாரக் காதல்

https://www.amazon.in/dp/B08HL5LPZ9/ref=cm_sw_r_cp_apa_glt_2EFGZNQCFYGJV2656HPP

 

You tube :

https://youtube.com/channel/UC2jwhoES6uHi6q05sZsf0Fw

 

பாத்திங்களா நட்பூஸ் இவங்களுக்கு யாராவது பொங்கல் வச்சா பரவால்லயாம்..  விருப்பம் இருக்கறவங்க வைக்கலாம்.. 

 

நான் முன்ன சொன்ன மாதிரி இவங்க கதைகள் மட்டும் இல்ல இவங்க நேர்காணல் கூட எவ்ளோ சிம்பிள் அண்ட் கியூட் ஆக போச்சி பாத்திங்களா ?

 

இவங்க கதைல உணர்வுகள் பேசும் . “மன்றல் “ இருந்த எதார்த்தம், வலி, தைரியம், மென்மையான காதல்-னு எல்லாம் அவ்ளோ அருமையா சொல்லி இருக்காங்க.. 

 

அவங்க எழுத்துல எது அவங்க சொன்னாலும் அதை நம்மல உணர வைக்கற வலு இவங்க எழுத்துக்கு இருக்குங்க .. 

 

நானும் smsல கலந்துகிட்டேன் ஆனா உங்க கதை படிக்க முடியல.. இனிமே கண்டிப்பா படிக்க முயற்சி பண்றேன் சிஸ்டர்.. 

 

மொத்ததுல இவங்க கை போற பக்கம் எல்லாம் நம்மளையும் ஆட்டி வைக்கற வித்தை தெரிஞ்சவங்க பா.. 

 

நீங்க இன்னும் பெரிய பெரிய உயரங்களை எட்டனும் சிஸ்டர்.. உங்களோட எல்லா முயற்சிகளுக்கும் எங்களோட மனமார்ந்த நல்வாழ்த்துகள்..

 

நம்மளோட இவங்க பயணம் சூப்பரா போச்சி .. 

 

அடுத்து சீக்கிரமே இன்னொரு அழகான எழுத்தாளரோட வரேன் .. 

 

Click to rate this post!
[Total: 0 Average: 0]
Post Views: 609
Tags: writers interview
Previous Post

நித்யா மாரியப்பன்

Next Post

நந்தினி சுகுமாரன்

Next Post
இயல்புகள்

நந்தினி சுகுமாரன்

Please login to join discussion
இயல்புகள்

நர்மதா சுப்ரமணியம்

January 26, 2023
0
1 – வலுசாறு இடையினில் 

16 – வலுசாறு இடையினில் 

January 25, 2023
0

33 – மீள்நுழை நெஞ்சே

January 20, 2023
0

Subscribe to our newsletter

Please wait...
Want to be notified when our article is published? Enter your email address and name below to be the first to know.
I agree to Terms of Service and Privacy Policy

        Terms & Conditions

            Privacy Policy

  • aalonmagari@gmail.com
  • 2022 Aalonmagari. All Rights Reserved.
Facebook Twitter Instagram
No Result
View All Result
  • Login
  • Sign Up
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
  • Category
    • மகரியின் பார்வையில்
    • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
  • புத்தகம் வாங்க
  • Login

© 2022 By - Aalonmagari.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Please wait...

Subscribe to our newsletter

Want to be notified when our article is published? Enter your email address and name below to be the first to know.
SIGN UP FOR NEWSLETTER NOW
error: Content is protected !!