- 2022 Aalonmagari. All Rights Reserved.
கரைகளில் நின்று இரசிக்க வரவில்லை உன்னை…..
காணாத காட்சிகள் காண விழைகிறேன்
கணை கொண்டு துளைத்தாலும்….
அலைக்கொண்டு தடுத்தாலும்… – என்
அடி வைக்கும் முத்திரைகளை மறைக்க
முடியாது…. மறுக்கவும் முடியாது…
உன்னோடான என் போராட்டம் ….
அஸ்தமனத்திலும் தொடரும்….
எப்போராட்டமானாலும் தாக்கவும்
வெற்றியோடு உன்னை அணைக்கவும்…… !!!
– ஆலோன் மகரி
© 2022 By - Aalonmagari.