• Home
  • About us
  • Contact us
  • Login
Friday, January 27, 2023
Aalonmagari
Subscribe
  • Login
  • Register
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • Category
    • மகரியின் பார்வையில்
    • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
No Result
View All Result
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • Category
    • மகரியின் பார்வையில்
    • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
No Result
View All Result
Aalonmagari
Register
No Result
View All Result

12 – அகரநதி

by aalonmagarii
June 11, 2022 - Updated On June 16, 2022
in கதை, நாவல்
0
3 – அகரநதி

12 – அகரநதி

 


மீனாட்சி பாட்டியிடம் சொல்லிக்கொண்டு நதியும் அகரனும் முன்னே செல்ல நதிக்கு குடிக்க தண்ணீர் பாட்டில் எடுத்துக் கொண்டு பின்னே நடந்தான் சரண்.

“டேய் மச்சான்….”, அகரனை பின்னால் இழுத்து அழைத்தான்.

“என்னடா?”, அகரன்.

“என்ன இப்படி தண்ணி பாட்டில் தூக்க விட்டுட்டியே உனக்கே நியாயமா ?”, சரண்.

“நீ பேசின பேச்சுக்கு இதோட போச்சேன்னு சந்தோஷப்படு”, அகரன்.

“என்னடா நீயே இப்படி சொல்ற? நான் உண்மைய தான்டா சொன்னேன். அவள உள்ள விட்ட நம்ம வண்டவாலம் எல்லாம் தண்டவாளம் ஏறிடும் டா”, சரண்.

“ஏன்டா நான் என்ன கள்ளக்கடத்தலா பண்றேன் இப்படி சொல்ற?”, எனச் சரணின் தலையில் கொட்டினான் அகரன்.

“அடேய் நீயும் என்னை படுத்தாத டா. ஆபீஸ்ல விட்டா என்ன ஆகும்னு கொஞ்சம் யோசிச்சி பாரு. என் டவுசர கழட்டிடுவா டா அவ. என் அப்பாக்கு லைவ் ரிலே பண்ணுவா நான் எந்த பொண்ணுகிட்டயாவது பேசினாலோ, சைட் அடிச்சாலோ”, சரண்.

“அப்ப ரிஸ்வானாவ கழட்டி விட போறியா?”, அகரன்.

“நான் எப்படா அவள கரெக்ட் பண்ணேன்?”, சரண் கண்ணை உருட்டி முழித்தான்.

“அவள கரெக்ட் பண்ணணுமா இல்லையா உனக்கு?”, அகரன்.

“பண்ணணும் தான். ஆனா இந்த இராட்சசியும் கூடவே இருப்பாளே டா”, சரண்.

“நான் சொல்றத கேளு. இவள விட்டா அப்பறம் அந்த பொண்ண நீ பாக்கக் கூட முடியாது. அப்பறம் நீ எப்படி கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணுவ?”, அகரன்.

“என்னடா கல்யாணத்த பத்தி இப்பவே பேசற?”, சரண் குழப்பமாக கேட்டான்.

“பின்ன வேற எதுக்கு நீ கரெக்ட் பண்ணணும்னு சொல்ற? மவனே வேற எதாவது நினைப்பு வச்சிட்டு இருந்த உன்ன நானே கொன்னுடுவேன். நீ அவள லவ் பண்ணு பண்ணாம போ. என்னை டிஸ்டர்ப் பண்ணாத”, எனக் கூறி அகரன் நதியைப் பிடிக்க முயன்றான்.

“நான் எப்படா வேற நினைப்பு வச்சேன்? இன்னும் அந்த பொண்ணுகிட்ட ஒரு வார்த்தைகூட பேசல நானு. அதுக்குள்ள இவன் இப்படி திட்டிட்டு போறான். இந்த ராட்சசிய இவன் கரெக்ட் பண்ண என்னை பலிகுடுக்க பாக்கறானே”, எனப் புலம்பியபடி பின்னே நடந்தான் சரண்.

“டேய் சரணா….அங்க என்னடா பொலம்புற?”, நதியாள்.

“என் நிலைமைய நினைச்சி தான்”, எனக் கடுப்பாக பதில் கொடுத்தான்.

“அதுக்கு என்ன குறைச்சல்? இங்க இருந்தா விவசாயம் செய்யணும், பெரியப்பா கண்ணு முன்னாடியே இருக்கணும், எந்த டகால்டி வேலையும் பண்ணமுடியாதுன்னு அகன் கூட ஒட்டிகிட்ட. சிட்டில நல்லாத்தானே இருக்க. அகன விட்டா வேற யாரு உனக்கு வேலை குடுப்பா? இன்னும் நீ வச்ச அரியர்ஸ் முடிச்சியோ இல்லையோ? எப்படி அகன் இவன வேலைக்கு வச்சிகிட்டு இருக்க?”, நதியாள் வரப்புகளில் நடந்துக் கொண்டே பேசினாள்.

“நீ வாய மூடு. நான் எல்லாம் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்”, சரண்.

“மண்ணாங்கட்டி….. முதல்ல உள்ளூர்காரனா இருந்து வேலைய ஒழுங்கா செய். வெள்ளைகாரனா இருந்தா கோர்ட் மாட்டிகிட்டு நாலு ஆர்டர் போட்டுட்டா பெரிய கலெக்டர் ஆகிடுவியா?”, நதியாளும் பொறிந்துத் தள்ளினாள்.

சரண் பேச வாயெடுக்கும் முன் அகரன்,”நதிமா..அவன விடு. நீ நம்ம கம்பெனில எப்ப வந்து ஜாயின் பண்ற?”, என கேட்டான்.

“இரண்டு வாரத்துல செம் அகன். அது முடிஞ்சி டிபார்மெண்ட்ல சொன்னப்பறம் தான் உன் கம்பெனிக்கு லெட்டர் அனுப்பி நீ அப்ரூப் பண்ற லெட்டர என் டிபார்மெண்ட் ல குடுத்து அந்த பெருச்சாளி கிட்ட இருந்து போன்னு ஒரு வார்த்தை வந்தப்பறம் தான் வருவேன்”, நதி ஏற்ற இறக்கமாகச் சொல்லவும் சுந்தரம் தாத்தாவிடம் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

“அப்ப இந்த ஜென்மத்துல நீ செம் முடிச்சி கம்பெனிக்கு வரமாட்ட”, சரண்.

“ஓய்… நான்லாம் எப்பவும் டிபார்மெண்ட் டாப்பர். உன்ன மாதிரி இல்லடா சரணா. இன்னும் நீ சி லாங்குவேஜ் புரியாமத்தானே சுத்திகிட்டு இருக்க?”, நதியாள் சிரித்துக் கொண்டே கேட்டாள்.

“அது எப்படி உனக்கு தெரியும்?”, சரண்.

“அதுல்லாம் மொத்த ஸ்கூலுக்கும் தெரியும். நான் வேணா சொல்லி குடுக்கட்டா சரணா?”, நதியாள் கிண்டலாகக்  கேட்டாள்.

சரண் திரும்பி அகரனை முறைக்க, அவன் சுந்தரம் தாத்தாவிடம் திரும்பி மரத்தைக்  காட்டி ஏதோ பேசினான்.

“அங்க என்ன முறைப்பு?”, நதியாள்.

“ஒன்னும் இல்ல. இந்தா பாட்டில் நான் வீட்டுக்கு போயிட்டு வரேன்”, சரண்.

“ஏன்டா வீட்டுக்கு போற? வீட்ல விருந்து ரெடி ஆகிட்டு இருக்கு. சாப்புட்டு போவியாம்”, சுந்தரம்.

“கிடாவிருந்தா தாத்தா?”, சரண் பக்கத்தில் வந்து நின்றுக் கேட்டான்.

“அது திருவிழா முடிஞ்சி இருக்கு. இன்னிக்கு நதிக்காக சைவத்துல விருந்து. விதம் விதமா உன் பாட்டி சொல்லிட்டு இருந்தா டா”, சுந்தரம்.

“அப்படியா? வீட்ல என் அம்மா பருப்பு கொழம்பு தான் வச்சிட்டு இருந்தாங்க. நான் இங்கயே சாப்பிட்டுட்டு அகர் கூட திருவிழா வேலைய பாத்துக்கறேன் இன்னிக்கு. நாளன்னைக்கு தானே தாத்தா விஷேசம் ஆரம்பம்?”, சரண்.

“ஆமாடா பேராண்டி. நாளன்னைக்கு எல்லாரும் வெள்ளன்னமே எந்திரிச்சி ஆத்துல குளிச்சிட்டு ஈரத்துணியோட தீர்த்தம் எடுத்துட்டு வந்து ஆத்தாளுக்கும் அப்பனுக்கும் அபிஷேகம் செய்ய குடுக்கணும். முதல் தீர்த்தம் நம்ம நாலு குடும்ப தீர்த்தம் தான் எடுத்துட்டு போய் குடுக்கணும். அப்பறம் வீட்ல இருக்கிற இளவட்டம் சின்ன பொண்ணுங்க எல்லாரும் குடத்துல எடுத்துட்டு போய் கோவில்ல குடுப்பாங்க”, சுந்தரம்.

“அந்த இன்னொரு குடும்பம் யாரு தாத்தா? திருவிழா பத்தி விளக்கமா சொல்லு சுந்தா”, நதியாள்.

“வாடி என் இளவரசி. இங்க உக்காரு”, எனப் பக்கத்தில் அமர்த்திக் கொண்டார் சுந்தரம் தாத்தா.

“நம்ம ஊருக்கு ஏன் மரகதவெளின்னு பேர் வச்சாங்க தெரியுமா?”, சுந்தரம்.

“அது எனக்கு தெரியாது ஆனா நம்ம ஊர் எல்லையில இருந்து ஊர சுத்தியும் பச்சை பசேல்னு வயல் தான் இருக்கு. அதுக்காகவே இந்த பேர் பொருத்தம் தான்”,நதியாள்.

“ஹாஹா… சரியா சொன்ன தங்கம். நம்ம கோவில்ல இருக்கிற சாமி பேர் என்ன?”, சுந்தரம்.

“மரகதீஸ்வரர் மரகதவல்லி தான் மூலவர். அப்பறம் கற்பரட்சாம்பிகை, பெருமாள் பூதேவி ஶ்ரீதேவியோட , கல்யாண கோலத்துல முருகன் வள்ளி தெய்வானையோட இருக்காங்க. அப்பறம் பெருமாளுக்கு எதிர்ல பெரிய ஆஞ்சநேயர், அவருக்கு முன்ன கருடாழ்வார். பிரகாரத்துல 63 நாயன்மார்கள். நம்ம கோவிலுக்கு இரண்டு தல விருட்சம் ஒன்னு நாகலிங்க மரம் இன்னொன்னு நாவல் மரம். கோவில் காவலுக்கு கருப்பசாமி ஐயனார் எல்லாம் கொஞ்சம் தள்ளி பக்கவாட்ல இருக்காங்க. கோவிலுக்கு இரண்டு பக்கமும் வாசல்ல விநாயகரும் முருகரும் இருக்காங்க. ராஜகோபுரம் ஒன்னு அப்பறம் சின்ன சின்ன கோபுரமா நிறைய இருக்கு. பெரிய குளம் இரண்டு இருக்கு கோவிலுக்கு இரண்டு பக்கமும். சரியா சுந்தா?”, நதியாள் கேட்டாள்.

சரண் வாயை பொளந்துக் கொண்டுப்  பார்த்துக்கொண்டு இருந்தான். அகரனும் ஸ்தம்பித்து இருந்தான் அவள் கூறியதைக் கண்டு. இத்தனை ஆண்டுகளில் இருவரும் வீட்டில் இருப்பவர்களின் கட்டாயத்திற்காக தான் கோவில் சென்றார்களே ஒழிய தானாக சென்றது இல்லை, இதனை கவனித்தததும் இல்லை.

“சபாஷ்… என் பேத்தின்னா சும்மாவா? சரிதான் கண்ணு. எல்லாமே நியாபகம் வச்சிட்டு இருக்க பரவால்லையே”, சுந்தரம் அவளைத்  தழுவிக்கொண்டுப்  பாராட்டினார்.

“சரி நீங்க மேல சொல்லுங்க”,நதியாள்.

“நம்ம கோவில் பல நூறு வருஷம் பழமையானது. ஒரு சில வெளிநாட்டுத்காரங்களாள சுற்று சுவர்லாம் உடைஞ்சி சில இடமும் ஆக்கிரமிச்சிட்டாங்க. இந்த கோவில் பல ஏக்கர் இருந்ததாம். இப்ப இவ்வளவு தான் இருக்கு. உடஞ்சி இருந்தத சரி பண்ணி இந்த அளவுக்கு இருக்கு. அத சரி பண்ணது நம்ம நாலு குடும்பத்தோட பெரிய தலைங்க தான். அதனால பூசாரி மேல சாமி வந்து சாமி மனசு குளிந்துட்டதாகவும், இனிமே இந்த நாலு குடும்பத்துக்கும் முறையா முதல் மரியாதை செஞ்சி அபிஷேகத்துக்கு முதல் தீர்த்தம் ஆத்துல இருந்து நாம தான் எடுக்கணும்னு சொல்லிச்சாம். அப்ப இருந்து இதுதான் நடைமுறையா இருந்துட்டு வருது. நம்ம நாலு குடும்பத்துக்கும் அதே மாதிரி ஒத்த ஆம்பள புள்ள தான் பொறக்கும்னும் அடுத்து பொறந்தா பொட்ட புள்ள தான் அதுவும் ஒன்னு தான் பொறக்கும்னு சொல்லிட்டாங்களாம். அது படி தான் கடந்த ஆறு தலைமுறையா இப்படி தான் நடந்துட்டும் இருக்கு”, சுந்தரம் சற்று இரும்பவும் நதி தண்ணீரைக் கொடுத்தாள்.

“குடிச்சிட்டு சொல்லுங்க தாத்தா”, நதியாள்.

“சரிடா. போதும். என் அப்பா காலம் வரைக்கும் நாலு குடும்பமும் இங்கயே தான் இருந்தாங்க. அதுக்கப்பறம் நாலாவது குடும்பத்துல பொறந்த பையன் புது தொழில் ஆரம்பிக்கவும் கொஞ்ச நாள்ல வெளியூருக்கு குடி போயிட்டாங்க ஆனா வருசா வருசம் திருவிழாக்கு சரியா வந்துடுவாங்க. நம்ம நாலு குடும்பம் தான் முன்ன நின்னு எல்லா பூஜைக்கும் முன்ன நிக்கணும், எல்லா ஏற்பாடும் செய்யணும். நீங்க மூனு பேரும் நல்லா ஞாபகம் வச்சிக்கணும் எங்களுக்கு அடுத்து நீங்க தான் எல்லாத்தையும் எடுத்து கட்டி செய்யணும்”, சுந்தரம்.

“ஏன் தாத்தா பரிவட்டம் கட்டுவாங்களா?”, சரண்.

“இல்ல கண்ணு நம்ம கோவில்ல அந்த வழக்கத்த நாம வச்சிக்கல. எல்லாருக்கும் சாமிக்கு போடற மாலைய குடுப்பாங்க அர்ச்சனை செய்யறவங்களுக்கும் சேர்த்து. முதல் தீர்த்தம் எடுத்து குடுக்கறதும் பூக்குழில முதல்ல இறங்கிறதும் நாம தான். அதுவும் பொண்ணுங்கள தான் முதல்ல எல்லாத்துக்கும் நிறுத்தி செய்ய சொல்வோம். இப்படி சாமி மனச குளிர்விக்கறதால தான் எத்தனையோ பஞ்சத்துலயும் நம்ம ஊருல வெள்ளாமை வெளஞ்சி இருக்கு. இன்னிக்கு வரை ஆத்துலையும் தண்ணி கொறையல நம்ம ஊர் நிலத்துலையும் தண்ணி பஞ்சம் வரல”, சுந்தரம்.

“ஏன் தாத்தா எல்லாத்துலையும் பொண்ணுங்களுக்கு முதல் மரியாதை குடுக்கறோம்?”, அகரன்.

“ஏன்னா வேணும்னு அவங்க சண்டை போட்டு ரகளை பண்ணி இருப்பாங்க”, சரண்.

“அப்படி இல்ல ராசா. குடும்பத்துக்கும் சரி இந்த உலகத்துக்கும் சரி அஸ்திவாரமும் ஆணிவேரும் பொண்ணுங்க தான்யா. அவங்களோட பங்கு இல்லாம எதுவுமே இங்க உருபெறாது, நடக்காது. ஆம்பள வெளியே சுத்தி பணம் சேத்தா மட்டும் போதுமா? குணம் வேணும் ,நாலு பேருக்கு நல்லது செய்யனும், சமூகத்துல நல்ல நிலையை அடையணும், குழந்தைகள பெத்து வளர்த்து, நல்லது கெட்டது சொல்லிகுடுத்து, அவங்கள மனுசனா உருவாக்கி தான் வீட்டு ஆம்பள கைல அடுத்த தலைமுறைய குடுக்கறாங்க. அவங்க இல்லாம எதுவும் இல்ல. அவங்க மனசு குளிர சந்தோஷமா இருந்தா தான் வீடு சுபிக்க்ஷமா இருக்கும். வீடு நல்லா இருந்தா தான் ஊரும் நல்லா இருக்கும். இப்படி ஒரு வழக்கத்த வச்சி நாம முக்கியமான விஷயத்தை எல்லாருக்கும் நியாபகம் படுத்தறோம்யா. அதனால தான் எந்த சூழ்நிலையிலும் நம்ம ஊருல வெள்ளாமை வெளையுது, விவசாயமும் தழைச்சிட்டு இருக்கு”, சுந்தரம்.

“அதுலாம் சரி தாத்தா…. என்ன இருந்தாலும் அடுத்த வீட்டுக்கு போகப்போற பொண்ணு தானே தாத்தா”, சரண்.

“அடுத்த வீட்டுக்கு போய் அந்த வீட்ட சொர்க்கமாக்கறவங்க பொண்ணுங்க தான். நீயும் நானும் சிட்டில இருக்கோம் எத்தனை நாள் வீட்ல தூங்கறதுக்கும், அம்மா கையால சாப்பிடறதுக்கும் ஏங்கி இருக்கோம்? அவங்கள சந்தோஷமா வச்சிகறதுல என்ன கஷ்டம் நமக்கு வந்துட போகுது?”, அகரன்.

“சரியா சொன்ன அகரா. அவங்க சந்தோஷமா இருந்தா தான் நாமலும் சந்தோஷமா இருக்க முடியும். வெளிய போய் வேலை செய்ய முடியும். அவங்க இல்லாம நமக்கு ஒரு வாய் தண்ணி கூட உள்ள இறங்காது”, எனக் கூறிச் சிரித்தார் சுந்தரம் தாத்தா.

“ம்ம்…என்னமோ சொல்றீங்க”, என சரண் இன்னொரு கட்டிலில் அமர்ந்தான்.

அவர் பேசியதை கேட்டு நதியாள் யோசனையில் ஆழ்ந்து இருந்தாள்.

அகரன் அவள் தோளை தட்டி,” என்ன நதிமா? தீவிர யோசனைல இருக்க?”,என கேட்டான்.

“அது தீர்த்தம் எடுக்க சீக்கிரம் எந்திரிக்கணும் பூமிதிக்கணும்னு சொன்னதும் எப்படி எஸ்கேப் ஆகலாம்னு யோசிக்கறா. அப்படிதானே யாள் குட்டி”, சரண் கிண்டலடித்தான்.

நதியாள் சைகையாள் அவன் வாயை மூடச் சொல்லிவிட்டு,”ஏன் சுந்தா இவ்வளவு பேசறீங்க அப்பறம் ஏன் கல்யாணம் பண்ணி பொண்ணுங்கள மட்டும் வேற வீட்டுக்கு அனுப்பறீங்க? எங்களுக்குன்னு நிரந்தரமா எந்த இடமும் கிடையாதா?”,நதியாள்.

“அது ஏன்னு எனக்கும் தெரியாது கண்ணு. உன் பாட்டிகிட்ட கேளு”,சுந்தரம்.

“இவ்வளவு சொன்னீங்கள்ல இதையும் சொல்லுங்க”,நதியாள். 

“எனக்கு அந்த விஷயம் இன்னுமே புரியல கண்ணு. அதான் மீனா கிட்ட கேளு. நானும் இப்பவாது தெரிஞ்சிக்கறேன்”, சுந்தரம்.

“ஏன் நீங்க கேட்டும் சொல்லலியா?”, அகரன்.

“இல்ல அகரா”, சுந்தரம்.

“சரி வாங்க நேரமாச்சி வீட்டுக்கு போய் மத்த கதைய கேட்டுக்கலாம்”, சரண் கூறியவுடன், “ஏன்டா பசிக்க ஆரம்பிச்சிரிச்சா?”, நதியாள்.

“இல்ல நேரமாச்சி”, சரண்.

“வந்து அரை மணிநேரம் கூட ஆகல அதுக்குள்ள நேரம் ஆச்சின்னு பொய் சொல்லாத டா சரணா”, நதியாள்.

“சரண் அங்க இருக்கற தேங்காய் கணக்கு பாத்து அந்த லாரில அனுப்பிவிடு. அகரா நீ என்ன பண்ற?”, சுந்தரம்.

“நானும் அகனும் மாந்தோப்பு தாத்தாவ பாத்துட்டு வரோம் சுந்தா”,நதியாள்.

“சரி போயிட்டு சீக்கிரம் வாங்க. கொஞ்சம் வயத்த காலியா வச்சிகோங்க. எப்படியும் சரோஜா சாப்ட எதாவது குடுக்காம உங்கள அனுப்பமாட்டா. நானும் கேட்டதா சொல்லு. சாயங்காலம் பெரியவர வீட்டுக்கு வர சொல்லிடுங்க, ஏற்பாடு பத்தி பேசணும்”, சுந்தரம். 

“சரி தாத்தா”, எனக் கூறி நதியாள் மாந்தோப்பை நோக்கி ஓடினாள்.

“ஹேய் நதி மெல்ல போ”, என அகரன் அவளின் பின்னே எட்ட நடை போட்டான்.

“ஏன் தாத்தா ரெண்டையும் விளையாட அனுப்பிட்டு என்னை மட்டும் வேல வாங்குறீங்க?”,எனக் கேட்டபடி சரண் அவரின் அருகில் அமர்ந்தான்.

“இரண்டும் ஒன்னாகனும்னு தான்”, என முணுமுணுத்தவர்,” ஒன்னும் இல்லடா. உன்கூட அவ சண்டை போட்டுகிட்டே இருப்பா அதான் அவன அனுப்பி வச்சேன். உனக்கு மதியம் சிறப்பா கவனிக்க சொல்றேன் மீனாகிட்ட. நுங்கு பாயாசம் செய்றாளாம் டா. நமக்கு இரண்டு டம்ளர் எக்ஸ்ட்ரா கிடைக்க வழி பண்ணணும் டா பேராண்டி”, சுந்தரம் தாத்தா அவனைக் கொஞ்சியபடிக் கூறினார். 

“நீங்க என்னை கொஞ்சி கொஞ்சி உங்க வேலைய வாங்கிக்கறீங்க. உங்களுக்கு சுருட்டு வாங்கி குடுத்ததுக்காக என்னை வீட்ல உருட்டி விளையாடறாங்க”,, என முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கூறினான் சரண்.

“அடடா….. விட்றா உன் தாத்தாகாக தானே. கொஞ்சம் பொறுத்துக்க கண்ணு. உனக்கு ஊரே மெச்சுற மாதிரி ஒரு பொண்ண பாத்து கட்டி வைக்கறேன்”, சுந்தரம்.

“பொண்ணுலாம் நானே பாத்துக்கறேன் நீங்க முன்ன நின்னு கல்யாணத்த நடத்துங்க போதும்”, சரண்.

“ஏன்டா பேராண்டி பட்டனத்துல பொண்ணு பாத்துட்டியா?”,சுந்தரம்.

“மெல்ல மெல்ல பேசுங்க தாத்தா. எவனாவது என் அப்பன் கிட்ட வத்தி வச்சிட போறான். அது ஒரு பொண்ண பாத்தேன் ஆனா இன்னும் பேசினது இல்ல. அந்த பொண்ணுக்கு முன்ன பெரிய கண்டம் ஒன்னு இருக்கு. அந்த கண்டத்த தாண்டி தான் அந்த பொண்ணுகிட்ட போகவே முடியும் தாத்தா”,சரண் நதியாளை கண்டமென சொல்லாமல் சொன்னான்.

“அப்படி என்னடா கண்டம்? காளைய அடக்கனுமா இளவட்டகல்ல தூக்கனுமா?”, சுந்தரம்.

“அதுல்லாம் இல்ல. இது அணுகுண்ட விட மோசமான கண்டம். நான் அப்பறம் சொல்றேன். அங்க லோட் ஏத்திட்டு இருக்காங்க அங்க பாத்துட்டு வரேன்”, சரண் எழுந்து லாரிக்கு அருகில் சென்றான்.

மாந்தோப்புக்கு சென்ற நம் காதல் பறவைகள் என்ன செய்யுதுன்னு நாமலும் பறந்து போய் பாத்துட்டு வரலாம் வாங்க சகோஸ்…..

“நதி … நதிமா”,அகரன் குரலில் புதுவித தொனி ஒலிக்க அழைத்தான்.

“என்ன அகன்? உன் வாய்ஸ் ரொம்ப மாறிபோச்சி. எனக்கு சில சமயம் இது உன் குரலான்னு சந்தேகமா இருக்கு”, நதியாள்.

“அய்யய்யோ…அப்பட்டமா நம்ம குரல் போட்டு குடுக்குதே”, என மனதிற்குள் பேசியவன் சற்று குரலை செறுமி சரி செய்து கொண்டு,”அது கொஞ்சம் தொண்டை சரியில்ல நதி”. 

“சரி. என்ன விஷயம் அகன்?”, நதியாள். 

“நாம ஸ்கூல்ல எவ்ளோ க்ளோஸா இருந்தோம்?”, அகரன்.

“உன்னவிட்டு நான் இருந்ததே இல்ல. உன்கூடவே படிச்சி உன்கூடவே சாப்டு. ஏன் உனக்கு இதுல்லாம் நியாபகம் இல்லையா?”, நதியாள்.

“இல்ல …. ஓரளவு இருக்கு ஆனா….”, எனத் தலையைச் சொறிந்தான் அகரன்.

“நியாபகம் இல்லைன்னு மட்டும் சொல்லு, இப்ப உன்ன என்ன பண்றேன்னு”, நதியாள் உஷ்ணத்துடன் அவனை நோக்கி கூறினாள்.

“என்ன பண்ணுவ நதிமா?”, அகரன் சிரிப்புடன் கேட்டான்.

“சொல்லமாட்டேன் செய்வேன்”, எனக் கூறி அருகில் இருந்த மூங்கில் கிளையை உடைத்து அவனைத் துரத்த ஆரம்பித்தாள்.

“வேணாம் நதிமா….உன் அகன் பாவம்..வலிக்கும் டா…..அடிக்க கூடாது டா”, என அகரன் அவள் கைகளில் சிக்கியும் சிக்காமல் ஓடினான்.

“என் அகனுக்கு என்னை மறந்துபோனா அடிச்சி தான் நியாபகம் படுத்தணும்”, எனக் கூறி அவனைத் துரத்தினாள் அடித்தபடி.

“உன் அகனுக்கு நியாபகம் படுத்த அடிக்க தேவையில்லை நதிமா. வேற வழி நிறைய இருக்கு”, அகரன் சிரித்தபடிச்  சொல்லிக்கொண்டு ஓடினான்.

“எனக்கு இதுதான் தெரியும்”, நதியாள். 

“ஏலேய்….யாருப்பா அது தோப்புக்குள்ள பொட்டபுள்ளகூட  ஓடி புடிச்சி விளையாடறது?”,மாந்தோப்பு தாத்தா சத்தம் போட்டார்.

“தாத்தா…..”, என அகரன் ஓடிச்சென்று அவரின் பின்னால் ஒளிந்து கொண்டான்.

“யாருப்பா நீ? அது யாரு?”, மாந்தோப்பு தாத்தா.

“உங்களுக்கும் என்னை மறந்துபோச்சா தாத்தா”,எனக் கேட்டபடி நதியாள் அவர் அருகில் நின்றாள்.

“அடடே….நதியாள்….உன்ன எப்படி கண்ணு மறக்க முடியும். எங்க இளவரசில்ல நீ…. இது யாரு ஊட்டு பையன் கண்ணு?”, மாந்தோப்பு தாத்தா.

“யாருன்னு தெரியல தாத்தா. வம்பு பண்ணான் அதான் அடிச்சேன்”, நதியாள் கோபமாகக் கூறினாள்.

“யாருடா நீ எங்க பொண்ணுகிட்ட வம்பு இழுக்கறவன்?”, என மாந்தோப்பு தாத்தா இடுப்பில் இருந்து கதிர் அறுக்கும் அரிவாளை எடுத்தார்.

அதை கண்டவள்,”தாத்தா….இவன் அகன்… அச்சோ…அகரன்… சுந்தரம் தாத்தா பேரன்”, நதியாள் அகரனின் முன்னால் வந்து நின்றுக்  கூறினாள்.

“சுந்தரம் பேரனா…. பாத்து ரொம்ப வருஷம் ஆச்சி அதான் அடையாளம் தெரியல கண்ணு. எப்படி இருக்க? தொழில் செய்யறதா சொன்னான் சுந்தரம் எப்படி போகுது கண்ணு?”, அகரனை அன்புடன் விசாரித்தார்.

“நல்லா இருக்கேன். தொழிலும் நல்லா போகுது தாத்தா. ஏன் தாத்தா இவகிட்ட யாராவது வம்பு இழுத்துட்டு உயிரோட இருக்க முடியுமா? இவ சொன்னத நம்பி என்கிட்ட அருவாள தூக்கறீங்களே”, என முகத்தைச்  சுருக்கிப்  பேசினான் அகரன்.

“பொம்பள புள்ள இல்லையா அதான் கண்ணு. சரி வீட்டுக்கு வாங்க . சரோஜா பாத்தா சந்தோஷப்படுவா”, என இருவரையும் வீட்டிற்கு அழைத்துச்  சென்றார் மாந்தோப்பு தாத்தா.

“தேவி….. சரோஜா…தேவி..…”, என நதிராள் கத்தியபடி முன்னே ஓடினாள்.

“வாலு… பெரியவங்கள பேர் சொல்லி கூப்பிடாத”, அகரன் பின்னிருந்துக்  கத்தினான்.

“விடு கண்ணு. அவ அப்படி கூப்டா தான் நல்லா இருக்கு. ஊருல இருந்து எப்ப கண்ணு வந்த?அப்பப்ப இந்த தாத்தனையும் வந்து பாத்துட்டு போகலாம்ல”, மாந்தோப்பு தாத்தா.

“இனிமே ஊருக்கு வரப்ப எல்லாம் வந்துட்டு போறேன். சரியா தாத்தா?”, அகரன் அவரின் தோள்களை பற்றியபடிக்  கூறினான். 

“தேவி….எங்க இருக்க?”, நதியாள் கத்திக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள்.

“யாருடி அவ என் வீட்டுக்குள்ள வந்து என்னை அதிகாரம் பண்றவ?”,என கேட்டுக்கொண்டே பின்பக்கம் இருந்து சத்தம் போட்டுக்கொண்டே வந்தார் சரோஜா தேவி பாட்டி.

“நான் தான். எப்படி இருக்க தேவி சரோஜா?”, நதியாள்.

“எடு வெளக்கமாறா…. யாரு யார பேர் சொல்லி கூப்பிடறது? யாருடி நீ?”, சரோஜாதேவி.

“ஏன் வீட்ட இன்னும் பெருக்கலியா தேவி? வெளக்கமாற கேக்கற”, நதியாள் கேலியாக வினவினாள்.

“ஏங்க யாரு இந்த குட்டி? நம்ம வீட்ல நின்னுட்டு அதிகாரம் பண்றா?”, சரோஜா பாட்டி மாந்தோப்பு தாத்தாவை பார்த்துக் கேட்டார்.

“நீயே கண்டுபிடி சரோ”,மாந்தோப்பு தாத்தா.

“என்னையும் அடையாளம் தெரியலியா பாட்டி?”, எனக் கேட்டபடி அகரனும் நதியின் அருகில் நின்றான்.

அகரனையும் நதியையும் கண்டவர்,” யாருப்பா இரண்டு பேரும் ? எங்கயோ பாத்தமாதிரி இருக்கு முகஜாடையெல்லாம். ஆனா பிடிபடலயே”, சரோஜா தேவி.

“ஹாஹாஹா…..…. நான் தான் உன் தோப்ப எழுதி வாங்கப்போறேன். எப்ப இந்த நதியாள் பேருக்கு எழுதி தர தேவி?”, என ஒரு புருவம் உயர்த்தி, முகத்தில் புன்னகை அரும்ப தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

“அடியாத்தி…என் ராசாத்தி…. நீயா இது? எம்புட்டு வளந்துட்ட…..என் கண்ணே பட்டுறும் போலவே…. தக தகன்னு இருக்க என் தங்கம். எப்படி இருக்கவ? எத்தனை வருஷம் ஆச்சி உன்னைய பாத்து? நல்லா இருக்கியா கண்ணு ?”, என அவளை அழைத்து தன்னருகில் அமர்த்திக் கொண்டார் சரோஜா தேவி பாட்டி.

“நான் சூப்பரா இருக்கேன் சரோ. நீ தான் இன்னும் அப்படியே இளமையா தாத்தாவ மயக்கினப்ப இருந்தமாதிரியே இருக்க”, எனக் கண்ணடித்துக்  கிண்டல் செய்தாள் நதி.

“இன்னும் உனக்கு இந்த குசும்பு விட்டு போகல. நீ சொன்னா சரிதான் கண்ணு. படிப்பு எல்லாம் முடிஞ்சதா? இனிமே இங்க தானே இருப்ப?”, சரோஜா பாட்டி வாஞ்சையுடன் கேட்டார்.

“சரோ முதல்ல புள்ளைங்களுக்கு குடிக்க எதாவது குடு. பாரு அகரன நிக்கவச்சே பேசிகிட்டு இருக்க. உன் அண்ணன் பேரன் வந்து இருக்கான் அவன் உன் கண்ணுக்கு தெரியலியா?”, மாந்தோப்பு தாத்தா நன்கு பழுத்த கிளிமூக்கு மாம்பழத்துடன் வந்தார்.

“சுந்தரண்ண பேரனா? அடியாத்தி எனக்கு அடையாளம் தெரியலியே. வா ராசா. இந்த கிழவிக்கு கண்ணு மங்கிபோச்சி. இம்புட்டு நேரம் உன்னைய நிக்க வச்சிட்டேன். உக்காருயா இங்க”, என பாய் விரித்தார் சரோஜா பாட்டி.

“எப்படி இருக்கீங்க பாட்டி? நீங்க ரெண்டு பேரும் கொஞ்சிகிட்டு இருந்தீங்க, அதான் நானும் கம்முன்னு வேடிக்கை பாத்துட்டு இருந்தேன். உங்க பேத்தி பக்கத்துல இருந்தா மத்தவங்க கண்ணுக்கு தெரியறதே இல்ல போல”, அகரன் நதியாளை வம்பிலுக்கும் நோக்கத்துடன் வினவினான். 

“அப்படி இல்ல ராசா. உன்ன பாத்து ரொம்ப நாளாச்சி அதான் பட்டுன்னு அடையாளம் தெரியல. அதுக்குள்ள இவ வம்பிழுக்கவும் அவபக்கம் பாத்துட்டு உன்ன கவனிக்கல”, சரோஜா பாட்டி.

“இந்தா புள்ளைங்களுக்கு மாம்பழத்த அறுத்து குடு நான் போய் செவ்வெளநி கொண்டாறேன்”, மாந்தோப்பு தாத்தா.

“தாத்தா இப்பதான் நுங்கு சாப்டு வந்தோம். இதுவே போதும் இங்க உக்காருங்க. நதி வந்து இருக்கறதால வீட்லயும் பாட்டி தடபுடலா விருந்து ரெடி பண்ணிட்டு இருக்காங்க. நம்ம தோப்பு இளநீர் தானே எப்ப வேணா குடிச்சிக்கலாம்”,அகரன் அவரை தன்னருகில் அமர்த்திக் கொண்டான்.

“என்னப்பா…..எத்தனை வருஷம் கழிச்சி வந்து இருக்கீங்க இது போதுமா? சாப்பாடு சாப்டணும்ல”, சரோஜா பாட்டி வருத்தத்துடன் கேட்டார்.

“தேவி…. திருவிழா முடிஞ்சி வரேன் எனக்கு உன் கையால இறால் குழம்பு, மீன் வறுவல், நாட்டுக்கோழி குழம்பு எல்லாம் செஞ்சி குடு அப்ப வந்து சாப்பிடறேன். அப்படியே கருவாட்டு குழம்பு நீ வைப்பியே இந்த தோப்பே மணக்கும், அதுவும் நான் ஊருக்கு போறப்ப வந்து வாங்கிட்டு போறேன் கொஞ்சம் நிறைய செஞ்சி குடு என் பிரண்ட்ஸ் கேட்டாங்க”, நதியாள்.

“அம்புட்டு தானே. விடு அத்தனையும் சமைச்சி தரேன் கொண்டு போய் குடு..  நீயும் நல்லா சாப்டணும். பாரு உடம்பே இல்ல”,சரோஜா பாட்டி.

“ஏற்கனவே நான் குண்டா தான் இருக்கேன்..  இங்க வந்து இரண்டு நாள்ல ஒரு சுத்து பெருத்துட்டேன். ஊருக்கு போறதுக்குள்ள ரோட்ரோலர் மாதிரி ஆகிட்டா நான் அங்க போய் ஜிம்ல காச குடுத்து உடம்ப குறைக்கணும்”, நதியாள் மாம்பழத்தை சாப்பிட்டுக்  கொண்டே பேசினாள்.

“இந்த வயசுல நல்லா சாப்டா தான் கண்ணு உடம்புல ஒட்டும். உடம்பு ஏறுனா நம்ம ஊரு வயல ஒரு சுத்து வா குறையப்போகுது அதுக்கு ஏன் சிம்முக்கு காச தார”, சரோஜா பாட்டி.

“ஹாஹாஹா… சரிதான்”, நதியாள்.

“நீ சொல்லு ராசா. அப்படியா குண்டா இருக்கா என் பேத்தி?”, சரோஜா பாட்டி அகரனை தன் பக்கம் பேச அழைத்தார்.

அவள் வீட்டிற்கு வந்ததிலிருந்து அவளிடம்  இருந்து கண்ணை அகற்றாமல் கூடவே சுற்றிக்கொண்டு இருக்கிறான். இப்படி கேட்டால் என்ன சொல்வான்?அவளை இப்பொழுது மீண்டும் தலைமுதல் கால் வரை அளந்தான். சராசரியான உயரம், இளமஞ்சள் நிறம், கருகருவென்று அடர்ந்து இடுப்பிற்கு கீழ் தொங்கும் சுருட்டை கூந்தல், இன்று போனிடைல் போட்டிருப்பதில் அழகாக இருந்தது. போட்டிருந்த புளூ ஜீன்ஸ் உடன் இளஞ்சிவப்பு நிறத்துடன் தக்காளி கலந்த நிறத்தில் குர்தே, கண்களில் லேசான மை, திருத்தப்பட்ட புருவங்கள், சற்றே சிவந்த இதழ்கள், கழுத்தில் மெல்லிய சையின் இரண்டு அண்ணப்பறவை இணைந்தது போல நடுவில் வெள்ளை கற்கள் வைத்து, கைகளில் ஒரு பக்கம் பிரேஸ்லட் , இன்னொரு கையில் வாட்ச், இரண்டு கைகளிலும் இரண்டு மோதிரம் என மிக சாதாரண அலங்காரத்தில் அழகோவியம் என ஜொலித்தாள் நதியாள்.

“சொல்லு கண்ணு”, என அகரனை உலுக்கினார் சரோஜா பாட்டி.

“ஹான். அவளுக்கு என்ன தேவதை பாட்டி”, என ஒருவாறு சமாளித்தான்.

அகரனின் பார்வை வந்ததில் இருந்து நதியாளை விட்டு நகராததை மாந்தோப்பு தாத்தா கவனித்துக் கொண்டு தான் இருந்தார். இப்பொழுது அவனின் பார்வையையும் , கவனித்தவர் இதழில் புன்முறுவல் பூத்தது.

“சரி தேவி. நான் அப்பறமா வரேன். மாம்பழம் பறிக்க”, என கைகழுவ பின்பக்கம் போனாள்.

அகரனும் கைகழுவிக்கொண்டு அவர்களிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினர்.

“புள்ளைங்க நல்லா வளந்துட்டாங்கள்ளைங்க”, சரோஜா பாட்டி.

“ஆமா சரோ. இரண்டும் சேர்ந்தா கூட நல்லாதான் இருக்கும்”, மாந்தோப்பு தாத்தா.

“என்ன இப்படி சொல்றீக? இதுக்கு அந்த வீட்டுகாரங்க ஒத்துகோணும்ல? இந்த வருஷம் நாலாவது ஊட்டுகாரங்க பசங்களும் வாராங்களாம். யாரு முதல்ல கண்ணன் ராதாகிட்ட பேசுவாங்கன்னு பாக்கலாம். அந்த பையனுக்கும் பொண்ணு தேடறாங்களாம். ராதாகிட்ட பேசலாமான்னு பேச்சு வந்துச்சி”, சரோஜா பாட்டி.

“அப்படியா? சரி அந்த சாமி யாருக்கு முடிச்சு போட்டு இருக்குன்னு பாக்கலாம்”, மாந்தோப்பு தாத்தா.

“தாத்தா…உங்கள தாத்தா சாயந்திரம் திருவிழா ஏற்பாடு பத்தி பேச வீட்டுக்கு வரச்சொன்னாங்க. வந்துடுங்க. நான் வரேன்”, என அகரன் மீண்டும் வந்து கூறிச்சென்றான்.

அகரனின் வீட்டிற்கு வந்ததும் நதி திலகவதியிடம் பேச உட்காந்து விட அகரன் சரணை இழுத்துக் கொண்டு மேலே சென்றான்.

“டேய் யாருடா அந்த நாலாவது குடும்பம்? நதிய பொண்ணு கேக்க போறாங்கலாம்?”, அகரன் கோபத்துடன் கேட்டான்.

“எனக்கும் தெரியாது மச்சான். இது யாருடா உனக்கு சொன்னா? இன்னும் அவ படிப்பே முடிக்கல. அவ சொல்றத பாத்தா இன்னும் ஹையர்ஸ், ஜாப்னு தான் போவா டா”, சரண்.

“இல்ல மச்சான். நதிய நான் யாருக்கும் விட்டு குடுக்கமாட்டேன். அவ என் கூட தான் இருக்கணும்”, அகரனின் கண்களில் பிடிவாதம் தெரிந்தது. 

“டேய். அவ உன்கூடவே எப்படி இருப்பா? நீ கல்யாணம் பண்ணிகிட்டா தான் அது நடக்கும்”, சரண்.

“பண்ணிக்கறேன் டா. ஏன் நான் செஞ்சிக்க கூடாதா?”, அகரன்.

“டேய்…. மச்சான்….”, சரண் திகைத்து அப்படியே நின்றான்.

“என்ன மச்சான்?”, அகரன்.

“நீ அந்த ராட்சசிய லவ் பண்றியா?”, சரண்.

சரணின் கேள்வியில் அகரனின் கண்களிலும் முகத்திலும் தேஜஸ் கூடியது, “தெர்ல டா. ஆனா அவகூடவே நான் இருக்கணும் எப்பவும்”, அந்த வார்த்தை உதிர்த்த குரலில் தான் எத்தனை சந்தோஷம், எத்தனை இதம்….. 

அகரனின் பதிலில் சரண் திகைத்து குழம்பி, அவனைப்  பார்த்துவிட்டுத்  தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான்.

என்னடா இப்படி சொல்ற? நாமலும் அடுத்த பதிவுல என்ன நடக்குதுன்னு பாக்கலாம் நட்பூஸ்….

 

முந்தின அத்தியாயம் படிக்க .. 

அடுத்த அத்தியாயம் படிக்க .. 

Click to rate this post!
[Total: 0 Average: 0]
Post Views: 2,503
Tags: அகரநதிகாதல்நகைச்சுவை
Previous Post

11 – அகரநதி

Next Post

13 – அகரநதி

Next Post
3 – அகரநதி

13 - அகரநதி

Please login to join discussion
இயல்புகள்

நர்மதா சுப்ரமணியம்

January 26, 2023
0
1 – வலுசாறு இடையினில் 

16 – வலுசாறு இடையினில் 

January 25, 2023
0

33 – மீள்நுழை நெஞ்சே

January 20, 2023
0

Subscribe to our newsletter

Please wait...
Want to be notified when our article is published? Enter your email address and name below to be the first to know.
I agree to Terms of Service and Privacy Policy

        Terms & Conditions

            Privacy Policy

  • aalonmagari@gmail.com
  • 2022 Aalonmagari. All Rights Reserved.
Facebook Twitter Instagram
No Result
View All Result
  • Login
  • Sign Up
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
  • Category
    • மகரியின் பார்வையில்
    • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
  • புத்தகம் வாங்க
  • Login

© 2022 By - Aalonmagari.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Please wait...

Subscribe to our newsletter

Want to be notified when our article is published? Enter your email address and name below to be the first to know.
SIGN UP FOR NEWSLETTER NOW
error: Content is protected !!