நம் நாகார்ஜுனும் , நந்தனும், நரேன் வீட்டில் அவன் குழந்தை தாரிகாவுடன் விளையாடிக் கொண்டு இருந்தனர். நரேனின் மனைவி அனு அவர்களுக்காகச் சுவையான விருந்து தயாரித்துக் கொண்டு இருந்தாள்.
தாரிகாவிற்கு 2 ½ வயது ஆகிறது.
அவள் பேசும் மழலை மொழியும் ,சிரிக்கும் ஓசையும் அனைவரையும் கவர்ந்திழுக்கும். அர்ஜுன் தாரிகாவிற்கு அவன் பெயரை கூறச் சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தான். அவள் அர்ஜுனின் பிற்பாதி பெயரையே கூறிக்கொண்டு இருந்தாள்.
அவளுக்கு இளஞ்செழியனில் இளா மனதில் பதிந்து விட அதையே உச்சரித்தாள். இருவரும் ஒரே பருவமென மாறி சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
தாரிகா , “இஆ……. இங்ங் ஆ…” என கைக்காட்டி அழைக்க.
அர்ஜுன், ” நான் வரமாட்டேன். நீ நான் சொல்றத சொல்லு”.
தாரிகா ,” முயீ….. நீ இஆ… வா இங்ங்”.
அர்ஜுன் வரமாட்டேன் என முரண்டு பிடிக்க.
தாரிகா, “அந்து கீ சொச்ஞ்”.
அர்ஜுன் ,”யார்கிட்ட வேணா சொல்லிக்கோ”.
தாரிகா, “அப்பி கீ சொஞ் அடீ”.
அர்ஜுன், “அஜ்ஜு சொல்லு வறேன்”.
தாரிகா,” அப்பி அடி இஆ “என கைக்காட்டி கொண்டு நரேனிடம் சென்றாள்.
நரேன்,” டேய் ஏன்டா அவள இம்சை பண்ற ? உன்ன இளானு கூப்டா என்ன?”.
தாரிகா ,” அப்பி நோ திட்டி” என அழகாக தலையாட்டி அர்ஜுனிடம் தாவி கொண்டாள்.
நரேன், ” இவ சொன்னானு அவன கேட்டா கடைசில எனக்கு பல்பு குடுத்துட்டாளே. என் பொண்ணையும் மயக்கிட்டான். டேய் நந்து என்னடா இது?”.
நந்து,” விடுங்க பாஸ், இது எதிர்பார்த்தது தானே?! அண்ணி சூப்பரா சமைச்சு இருக்காங்க வாசனை மூக்கு வழியா வயிறுக்கு போய் கேட் ஓபன் ஆகியாச்சி. நல்ல சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு கம்முனு வாங்க ஒரு பிடி பிடிக்கலாம்,” என டைனிங் டேபிளுக்குச் சென்றுக் கொண்டே கூறினான்.
அர்ஜுன்,”அண்ணி , எனக்கும் தருக்கும் பர்ஸ்ட் குடுங்க பசிக்கிது.”
அனு, “5 நிமிஷம் அஜ்ஜூ எல்லாம் ரெடி.”
நந்து முதலில் அமர , அவன் அருகில் நரேன் அமர, அவர்களுக்கு எதிர்பக்கமாய் அர்ஜுன் தரு அமர்ந்தனர்.
அனு முதலில் அர்ஜுனுக்கு அனைத்தையும் பரிமாறிச் சாப்பிடச் சொன்னாள். அவன் தரு விற்கு ஊட்டிவிட்டுக் கொண்டே அனுவிடம் சமையலின் ருசியைப் புகழ்ந்து கொண்டு இருந்தான்.
“இந்த பக்கமும் ரெண்டு பேர் இருக்கோம் அனு எங்களுக்கும் பரிமாறினா நாங்களும் சாப்டுவோம்,” நரேன்.
“என்ன அவசரம் உங்களுக்கு? தம்பிக்கு பரிமாறிட்டு வரதுக்குள்ள கூப்டுகிட்டு” ,அனு.
“அண்ணி நானும் தான் வந்து இருக்கேன்”, என நந்து கூற அனு முறைத்தாள்.
நந்து, “அய்யய்யோ ஏன் மொறைக்கறாங்கனு தெரியலையே ?”
அனு ,” நீ எப்ப வரேன்னு சொன்ன ,எப்ப வந்து இருக்க?”.
நந்து,” கரெக்ட் டைம்க்கு வந்துட்டேன் அண்ணி.”
அனு ,” உன்ன மத்தியானம் பாப்பாக்கு ஊசிப்போட போகணும்னு வர சொன்னேன் நியாபகம் இருக்கா?”.
நந்து தலையில் கை வைத்துக் கொண்டு,” சாரி அண்ணி, அண்ணன் ஒரு முக்கியமான வேலை குடுத்து இருந்தாரு அதுல மறந்துட்டேன்”.
அனு, “நீ மட்டும் தான் அந்த வேலைய பாத்தியா?”
நந்து, “இல்ல எங்க டீம் மொத்தமா தான் பாத்தோம்”.
அனு, “நான் உன்கிட்ட சொன்னத நீ மறந்துட்ட உன் கடமையுணர்ச்சில அப்படி தானே?”.
நந்து, “ஆமா அண்ணி , நான் வேலை முடிஞ்சு கிளம்பறப்ப அண்ணன் வந்துட்டாங்க”.
அனு,” பேசாத, உங்க ரெண்டு பேருக்கும் எங்க நினைப்பே இல்ல. அர்ஜுன் கிட்ட வரமுடியுமானு மெஸேஜ் தான் பண்ணேன் உடனே வந்துட்டான். உங்க ரெண்டு பேருக்கும் இன்னிக்கு டின்னர் இல்ல பட்டினி இருங்க”.
நரேன்,” அடியேய் நான் தான் வேலை இருக்குனு முன்னயே சொல்லிட்டேன்ல எனக்கு ஏன் பட்டினி போட்ற?”.
அர்ஜுன், “என்ன வேலை இருந்தாலும் அண்ணிய பாப்பாவ பாத்துக்கனும் அண்ணா. இன்னிக்கு மட்டும் ஊசி போடலன்னா பாப்பாக்கு தான் கஷ்டம். நான் வந்து கூட்டிட்டு போனப்ப அல்மோஸ்ட் க்ளோஸ் பண்ணிட்டாங்க . அப்பறம் பேசி போட்டுட்டு வந்தோம். இனிமே இப்படி பண்ணாதீங்க அண்ணா”, தரு அர்ஜுனைக் கட்டி முத்தம் கொடுத்து தன் அப்பாவை மிரட்டி கைக் காட்டியது.
நந்து அர்ஜுனை முறைத்து கொண்டே எழுந்து வந்தான் .நரேன் இன்னொரு பக்கம் எழுந்து வந்தான்.
அர்ஜுன் எழுந்து ஓட , நந்து ஒரு பக்கமும் நரேன் ஒரு பக்கமும் துறத்த இருவர் கைகளிலும் சிக்காமல் ஓடினான்.
“நில்லுடா…….. “
“மாட்டேன்……. “
“ஒழுங்கா என்கிட்ட அடி வாங்கிடு… “
“முடியாது போடா….. “
“ஹீரோவ இருப்பனு பாத்தா எங்களுக்கு வில்லனே நீ தான் டா.. மரியாதையா அடி வாங்கிக்க ….”
“முடிஞ்சா பிடிங்க ரெண்டு பேரும்…. “,சொல்லிக் கொண்டே ஓடினான் இளா.
வீடு முழுக்கச் சுற்றிச் சுற்றித் துறத்தினர் ஆனாலும் அவனைப் பிடிக்க முடியவில்லை.
நடுவில் தருவும் ஓட , ஒரு கட்டத்தில் நந்து இளாவை பிடிக்கும் சமயம் தரு உள்ளே புகுந்து நந்துவின் காலைப் பிடிக்க அர்ஜுன் தப்பிவிட்டான்.
நந்து தருவை முறைக்க, தரு அர்ஜுனை தப்பி ஓடு என செய்கைக் காட்டினாள். பின் நந்து அருகில் வந்து தன்னை தூக்கச் சொல்ல, அவன் தூக்கியதும் கன்னத்தில் முத்தமிட்டாள்.
நரேன் மூச்சிறைக்க வந்து உட்கார்ந்தான். இளா அனுவின் அருகில் அமர்ந்தான். நந்து தருவைத் தூக்கி கொண்டு நரேன் அருகில் அமர்ந்தான்.
நந்து தருவிடம் ,”ஏன் ரிகா செல்லம் அந்துவ தடுத்தீங்க ? இளா என்ன பண்ணாணு தெரியுமா? உன் அந்து இன்னிக்கி அப்பாகிட்ட எவ்ளோ திட்டுவாங்கினேன்னு” .
தரு ,”தெயாது. அப்பி திட்டி அப்பி அடி, இஆ அடி கூடாஆத்”.
நந்து ,”ஏன் இளாவ அடிக்கக் கூடாது?”.
தரு ,”இஆ மை சீட்ஆட் . ஏ டாவிங் ஆரும் அடி கூடாஆஉ. அப்றம் தரு அடி அந்து “.
நரேன் ,” இளா உன் டார்லிங்னா யாரும் அடிக்கக் கூடாதா ரிகா பேபி? “.
ஆமாம் என அழகாய் தலையாட்டினாள் குழந்தை.
அர்ஜுன் ,” பாத்தீங்களா என்னைக் காப்பாத்த என் தரு டார்லிங் இருக்கா”, எனக் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு சொன்னான்.
அனு , “ஏன் அவன அடிக்கனும்? “.
நந்து, “நான் வரமுடியாம பண்ணதே அவன் தான். அவன தான் நல்லவன்னு சொல்றீங்க”.
” அவன் என்ன பண்ணான் ?” ,அனு.
“என்னை அண்ணாகிட்ட மாட்டி விட்டுட்டு எஸ்கேப் ஆகிட்டான். இப்ப உங்க ரெண்டு பேர் கிட்டயும் மொத்தமா நான் தான் திட்டுவாங்கிட்டு நிக்கறேன்”. நந்து.
“உனக்கு திறமை பத்தல நந்து, வாட் கேன் ஐ டூ” ,அர்ஜுன்.
” வாய மூடிட்டு இரு .அண்ணி ரிகால இருக்காங்கனு பாக்கறேன்” ,நந்து கோபமாக கூறினான்.
இளா நந்துவின் அருகில் அமர்ந்து சமாதானம் செய்ய ஆரம்பித்தான்.
இது வழக்கமா நடக்கற விஷயம் தான் மக்களே. இவனுங்க இப்படி தான் அடிச்சிப்பாங்க அப்பறம் கொஞ்சிப்பாங்க.
எல்லாரும் ஒரு வழியா சாப்பிட்டு முடிச்சிட்டாங்க.
தரு உறங்கி விட அவளைத் தூக்கி கொண்டு அனு அறைக்குச் சென்று விட்டாள்.
நரேன், நந்து, இளா மூவரும் அலுவலக அறையில் இன்று காலையில் பிடித்த மும்பைகாரனை பற்றிப் பேசத் தொடங்கினர்.
நரேன், “இன்னிக்கு நம்ம கைல மாட்டினவன் ஒரு டாப் மர்டரர் . இவன் முகம் இத்தனை நாள் யாருக்கும் தெரியாம இருந்தது. இவன் மேல 32 கொலை கேஸ் இருக்கு. ரொம்ப பெரிய இடத்துக்காக மட்டும் தான் இவன் வேலை செய்வான் . இவனே நேரடியா வரது ரொம்ப கம்மி . இப்ப வந்திருக்கான்னா பெரிய ஆளு யாருக்காகவோ தான். அதுவும் பெரிய வேலையா தான் இருக்கும்றது என் கெஸ்”.
நந்து,” அப்ப அவன தொங்கவிட்டதுல தப்பு இல்ல. அவன்கிட்ட இருந்து நமக்கு கிடைச்சத வச்சி, அந்த போட்டோல இருக்கற பொண்ண மொதல்ல விசாரிக்கனும்.”
நரேன், “இளா என்ன கம்முனு இருக்க ?”
அர்ஜுன், ” இவன் வேணும்னே தான் நம்மகிட்ட மாட்டினான் பாஸ். தப்பிக்க வழி இருந்தும் போகல. நம்மள குழப்பி விட்றதுக்காக இவன நம்மகிட்ட மாட்டிக்கச் சொல்லி இருக்காங்க”.
நரேன்,” என்ன சொல்ற ? நம்ம இந்த கேஸ் எடுத்து இருக்கோம்னு யாருக்கும் தெரியாது. நம்ம டிபார்ட்மெண்ட்ல கூட யாருக்கும் தெரியக்கூடாதுனு சொல்லி தான் கேஸ் நமக்கு குடுத்தாங்க.”
நந்து, “அர்ஜுன் சொல்றது உண்மை தான் நம்ம எப்பவும் விட்டு பிடிப்போம் அதனால பசங்க கிட்ட அவன் தப்பிக்க டிரை பண்ணா விடச் சொல்லி தான் சொல்லி இருந்தேன். அவன் ஓட டிரை பண்ணவே இல்ல. “
நரேன்,” நமக்கு இது ரொம்ப சீக்ரெட் கேஸ் டா. நம்ம சீஃப் க்கு வந்த ஆர்டர். அத அவர் நம்மகிட்ட குடுத்தாரு. எப்படி வெளியே தெரியும்?”.
” நம்ம சீஃப் க்கு யார் ஆர்டர் குடுத்தாங்களோ அங்க இருந்து தான் விஷயம் வெளியே போய் இருக்கு. அது நீங்க விசாரிச்சி சொல்லுங்க, அடுத்த நடவடிக்கை பத்தி அப்போ தான் யோசிக்க முடியும்”, அர்ஜுன்.
நரேன் போன் செய்து விசாரிக்க, பதில் ஆளுமைத் தலைமை என வந்தது. ” பிரதம மந்திரி பர்சனல்-ஆ சொல்லி அண்டர்கவர்ல இந்த கேஸ் டீல் பண்ணச் சொல்லி இருக்காங்க”.
நந்து, “சரியா போச்சு அண்டர்கவர்ல செஞ்சா எங்களுக்கு எப்படி வேணும்கிறது கிடைக்கும்? எதுவா இருந்தாலும் நாங்களே தான் தூக்கனும்”.
அர்ஜுன் ,”பாஸ் விஷயத்த முழுசா சொல்லுங்க”.
நரேன்,” நம்ம நாட்டோட முக்கியமான வளம், சில இரகசியம் எல்லாம் திருடப்படுறதாகவும், அத வெளிநாட்டுக்கு விற்க போறதாவும் தகவல் வந்து இருக்கு. அதை தடுக்க இந்த மிஷன். இதுல ஆளுங்கட்சி, எதிர்கட்சி, சில பணமுதலைகள் சம்பந்தப்பட்டு இருக்காங்க. சோ, இந்த மிஷன் மக்களோட மக்களா இருந்து தான் செய்யனும்”.
அர்ஜுன்,”அப்படின்னா ஏற்கனவே நாமதான் இந்த மிஷன் பண்ணுவோம்னு தெரிஞ்சி இருக்கா? “.
நந்து,” அந்த மும்பைகாரனை விசாரிக்கலாம் அசோக் கிட்ட சொல்லி உண்மைய வாங்கிறலாம்”.
நரேனிடம் அந்த மும்பைகாரனைப் பற்றிய தகவல் கொடுத்தது யார் என விசாரிக்க ஒரு பெண் என வந்த பதில் திகைக்கச் செய்தது.
நந்து,” யாருக்கும் தெரியாதுனு சொன்னீங்க ஒரு பொண்ணு எப்படி அவன பத்தி சொல்றா? இப்பவே கண்ண கட்டுதே”.
நரேன்,” அந்த பொண்ணு நான் நம்ம சீஃப் பாத்துட்டு வெளிய வந்தப்போ ஒரு கவர் குடுத்துட்டு சீக்கிரம் ஸ்டெப் எடுக்க சொல்லிட்டு ஓடிட்டா”.
“அந்த பொண்ணு எப்படி இருந்தா?” அர்ஜுன்.
“தமிழ் பொண்ணு மாதிரி தான் இருந்தா” நரேன்.
“இவளா?”, மும்பைகாரனிடம் கிடைத்தப் போட்டோ காட்டிக் கேட்டான் அர்ஜுன்.
“இல்லை” நரேன்.
நந்து, ” இந்த கேஸ்ல இன்னொரு பொண்ணு இருக்கும் போலவே !?”
அர்ஜுன்,” அடையாளம் சொல்லுங்க நீங்க அந்த பொண்ண பாத்த எடத்துல கேமரா எதாவது இருந்ததா ?”.
நரேன்,” இல்ல டா “.
அர்ஜுன் சிறிது யோசித்து விட்டு ,” அண்ணிய கூப்பிடுங்க”.
நரேன், “இந்த நேரத்துல எதுக்குடா ?”
அர்ஜுன், ” அந்த பொண்ண வரைய சொல்லதான். இப்ப வரையனும்”.
நந்து சென்று அனுவை அழைத்துக் கொண்டு அவள் வரைவதற்குத் தேவையான பொருட்களையும் எடுத்து வந்தான்.
நரேன் கூறக் கூற, அனு அந்தப் பெண்ணை வரைந்தாள்.
ஒரு மணிநேரத்தில் வரைந்து முடிக்க, அர்ஜுனை அழைத்துக் காட்டினர்.
அர்ஜுனும் ,நந்துவும் உறைந்து நின்றனர் அந்தப் படத்தில் இருந்தப் பெண்ணைப் பார்த்து.