• Home
  • About us
  • Contact us
  • Login
Saturday, February 4, 2023
Aalonmagari
Subscribe
  • Login
  • Register
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • Category
    • மகரியின் பார்வையில்
    • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
No Result
View All Result
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • Category
    • மகரியின் பார்வையில்
    • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
No Result
View All Result
Aalonmagari
Register
No Result
View All Result

8 – அகரநதி

by aalonmagarii
June 11, 2022 - Updated On June 16, 2022
in கதை, நாவல்
0
3 – அகரநதி

8 – அகரநதி

 

கைக்குழுக்கிய இருவரும் சிறிது நேரத்தில் தன்னிலை திரும்பினர்.

“சார் நான் உங்க கிட்ட சாரி சொல்லிட்டேன். ஆனா இந்த ஆள் ஓவரா பேசறாரு”, நதியாள்.

“சாரி மேடம். அவனுக்காக நான் சாரி கேட்டுக்கறேன். பை த வே நீங்க எந்த காலேஜ் ?”, அகரன் அவளின் விவரங்கள் அறியும் நோக்கில் கேட்டான்.

“நாங்க ********* காலேஜ் ல படிக்கறோம் சார், ஆர்கிடெட் அண்ட் இன்டீரியர் டிசைன் டிபார்மெண்ட். அண்ட் ஐ ம் சஞ்சய்”, என சஞ்சய் கைநீட்டினான்.

“ஹாய்”, என கைகுழுக்கிய அகரன் மற்றவர்களையும் சஞ்சய் அறிமுகபடுத்தினான்.

“ஓகே…. ஹேட் எ நைஸ் டைம் வித் யூ. இது என் கார்ட். வில் மீட் சம்டைம்”, என அகரன் தன் விசிட்டிங் கார்டை தந்தான்.

“ஓகே சார் பாய்”, என அனைவரும் கூறினர்.

“பாய் ரீனா”, என சரண் அவளிடம் தனியாக கூறினான், அதை கண்களில் சற்று மிரட்சியுடன் பார்த்தாள் ரிஸ்வானா. 

நதியாள் அதைக் கவனித்து அவனை முறைத்தாள்.

“ஓகே மிஸ் நதி. பாய்”, அகரன்.

“நதியாள் கால் மீ பை புல் நேம் இட்செல்ப். உங்க பிரண்ட் ஆர் கொலீக் இவரை ஜாக்கிரதையா இருக்க சொல்லுங்க. இப்படி பேசினா எல்லாரும் கம்முன்னு இருக்கமாட்டாங்க. பர்ஸ்ட் எப்படி பேசணும்னு சொல்லிகுடுங்க. பாய்”, நதியாள் கூறித் திரும்பி நடக்கத் தொடங்கினாள்.

அவள் தன் சட்டையின் கையை இறக்கியபடி ஒருமுறை அகரனை திரும்பிப் பார்த்துவிட்டு நடந்தாள்.

அவளை தொடர்ந்து மற்றவர்களும் ஓடினர் அவள் பின்னே.

“ஹேய் யாள்…. நில்லு… நில்லுன்னு சொல்றேன்ல”, மீரா இழுத்து அவளை நிறுத்தினாள்.

“ஏன் இப்படி ஹார்ஸ்ஆ பேசிட்டு வந்த? அவர் எவ்வளவு பொலைட்ஆ பேசினார். அந்த இடத்துல வேற யாராவது இருந்தா இன்னேரம் எவ்வளவு பிரச்சினை ஆகி இருக்கும் தெரியுமா? அவர்கிட்டயே அவர் பிரண்ட்க்கு பேச சொல்லி குடுங்கன்னு சொல்லிட்டு வர”,மீரா.

“மீரா இப்ப ஏன் நீ யாள் அ திட்ற?”, மைக்கேல்.

“நீ கம்முன்னு இரு மைக். எத்தனை தடவை சொல்றது இப்படி பிஹேவ் பண்ணாதன்னு. இவ கேக்கறாளா? கொஞ்சம் பொறுமையா போனா என்ன?”, மீரா.

“அப்படியெல்லாம் என்னால பொறுமையா இருக்கமுடியாது. எதுக்கு முதல்ல நான் பொறுமையா இருக்கணும்? ஓவரா பேசினது அவன் தான். அதுக்கு பதில் தான் சொன்னேன்”,நதியாள்.

“அப்படி இல்ல யாள். இவ்வளவு ஹார்ஸ்ஆ பேசாத. அது நல்லது இல்ல”, மீரா.

“அம்மா தாயே கிளம்புங்க எல்லாரும் காலேஜ் போய் சண்டைய கன்டினியூ பண்ணிக்கலாம்”, திலீப்.

“எல்லாம் இவளால வந்தது கம்முன்னு இருந்தவள இழுத்துட்டு போய் பிரச்சினைய இழுத்துட்டு வந்துட்டா”, என ரிஸ்வானா ஸ்டெல்லாவைத் திட்டினாள்.

“சரி சரி கிளம்புங்க”, என நதியாள் சஞ்சயின் பைக்கில் உட்கார்ந்தாள்.

“ஏய்… எதுக்கு இப்ப பைக்ல ஏறுற? இறங்கு ஸ்கூட்டில போலாம்”, மீரா.

“நான் பைக்ல தான் வருவேன். ரொம்ப நாள் ஆச்சி மீரா . வா ஜாலியா ஒரு லாங் டிரைவ் போலாம்”, என நதியாள் சிறுபிள்ளையாய் கெஞ்சினாள்.

“உன்கூட பைக்ல …. லாங் டிரைவ்….. அதுவும் நானு…. உன்ன நம்பி?”,மீரா இடுப்பில் கை வைத்து அவளைப் பார்த்துக் கேட்டாள்.

“சரி வரலன்னா போ… யாரு வரீங்க என்கூட பைக்ல? கைய தூக்குங்க”, நதியாள் மற்றவர்களைப் பார்த்துக் கேட்டாள்.

“நானு…. நானு…”, என ஸ்டெல்லா, சஞ்சய், மைக், திலீப் நால்வரும் கத்தினர்.

நதியாள் மீராவை பார்த்துக் கண்ணடித்துவிட்டு, “உங்க நாலு பேர்ல யாருன்னு டிசைட் பண்ணிட்டு 2 நிமிஷத்துல வண்டில ஏறுங்க”, எனக் கூறியபடி கண்களில் கூலர்ஸைப் போட்டாள் நதியாள்.

“போன டைம் நீ தான் போன அதனால நான் போறேன்”, என திலீப் கூற,” இல்ல நான் தான்”, என ஸ்டெல்லா கூறினாள்.

“டேய் பர்த்டே எனக்கு சோ நான் தான் போவேன்”, மைக்கேல்.

“டேய் பர்த்டே வ டெத்டே ஆகிறபோது பாத்து”, கேசவன் மைக்கேலை ஓட்டினான்.

“வாய மூடு எரும. என்ன பேச்சு பேசற நீ? இன்னிக்கு நீ தான் வா”, என நதியாள் அவனை அழைத்தாள்.

“அய்யய்யோ… நான் மாட்டேன். என் அம்மாக்கு நான் ஒரே பையன்”, என பின்னால் நகர்ந்தான் கேசவன்.

“உனக்கு தான் ஒரு அண்ணணும் தம்பியும் இருக்காங்களே மச்சி”, என அமுதன் கோர்த்துவிட்டான்.

“அப்பறம் என்ன உனக்காக சொத்து சேக்கற வேலை மிச்சம் அவங்களுக்கு. உன் பங்கையும் அவங்க வச்சிக்கட்டும். நிம்மதியா இருப்பாங்க”,மைக்கேல்.

“கொலகாரப்பாவி…. ட்ரீட் னு சொல்லி கூட்டிட்டு வந்து இந்த ராட்சசி கிட்ட மாட்டிவிடறியே …நீயெல்லாம் ஒரு பிரண்டா டா?”, கேசவன்.

“நாங்க உயிர் நண்பன் மச்சி. அதான் உயிர எடுக்க பிளான் போடுறோம்”,என அமுதன் கூறினான்.

“போடாங்ங்ஙங்……”,கேசவன். 

“டைம் ஆச்சி ஏறு கேஷ்”,நதியாள்.

“என்னை விட்று தெரியாம சொல்லிட்டேன்”, எனக் கேசவன் கைக்கூப்பினான்.

“அதுல்லாம் முடியாது. வண்டில ஏறு உயிருக்கு சேதாரம் ஆகாம உன்ன காலேஜ்ல விட்டுடறேன்”, நதியாள் அவனை இழுத்து வந்து வண்டியில் ஏற்றினாள்.

“டேய் மச்சான் காப்பாத்துடா”, என மைக்கேலைப் பார்த்துக் கெஞ்சினான் கேசவன்.

“முடியாது. என்ஜாய் மச்சான்”, என மைக்கேல் டாடா காட்டினான்.

“பாய் காய்ஸ்…. காலேஜ்ல மீட் பண்ணலாம்”, எனக் கூறி நதியாள் பைக்கை ஸ்டார்ட் செய்தாள்.

அங்கிருந்து கிளம்பிய நதியாள் மெயின்ரோட்டில் பல்சரின் அதிகபட்ச வேகத்தைத் தொட முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

அவளின் பின்னால் அமர்ந்திருந்த கேசவன் தன் குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு இருந்தான்,” அய்யா கருப்பசாமி என்னை பத்திரமா கொண்டு போய் சேர்த்துடுபா உனக்கு கெடா வெட்டி பொங்கல் வைக்கிறேன்”, எனச் சத்தமாகக் கூறினான்.

“எத்தனை கெடா மச்சி வெட்டுவ? அடுத்த மாசம் செம் ஸ்டடி லீவ் வருது அப்ப வெட்டு நானும் வரேன்”, நதியாள் கேசவனைக் கேட்டாள்.

“நீ என்ன பத்திரமா கொண்டு போய் விட்று நீ என்ன கேட்டாலும் செஞ்சி தரேன் யாள்”, கேசவன்.

“சரி இன்னும் பத்து கீ.மீ தான் .உன் உடம்புல கீறல் கூட விழாது . நான் கியாரண்டி”, எனக் கூறி வண்டியை வளைத்து வளைத்து ஓட்டினாள். 

சிறிது நேரத்தில் அவளின் வேகத்துடன் கூடிய நிதானம் கண்டு கேசவன் சற்று ஆசுவாசமுச்சை விட்டான். அவள் பைக் ஓட்டும் அழகு நிச்சயம் யாரையும் திரும்பிப் பார்க்க வைக்கும். அத்தனை லாவகமாக அனுபவித்து பைக் ஓட்டிக்கொண்டு இருந்தாள் அவள். 

டிராபிக் ஏரியாவை தாண்டி சென்ற நதியாள் ஊரின் எல்லை வரை சென்று காலேஜை நோக்கி வண்டியைத் திருப்பினாள்.

அங்கே அகரனை அப்படியே விட்டுவிட்டு வந்துட்டோம் ஒரு எட்டு பாத்துட்டு வரலாம்…  

“டேய்….. டேய் அகர்…..”, என சரண் அவனை உலுக்கினான்.

“என்னடா?”, அகரன்.

“போதும் பாத்தது .அவங்க கிளம்பிட்டாங்க. வா போலாம்”, சரண்.

பெருமூச்சு விட்டுபடி காரின் கதவைத் திறந்து அமர்ந்துக் காரை கிளப்பினான் அகரன்.

“என்ன சாருக்கு பெருமூச்சு பலமா இருக்கு?”, சரண்.

“நீ அந்த ரிஸ்வானா பொண்ண பாத்து விட்டத விடவா?”, அகரன் ஒரு புருவத்தை உயர்த்திக் கேட்டான் அகரன்.

“அய்யய்யோ பாத்துட்டான் போலவே…. அது ஒன்னும் இல்ல மச்சான். பொண்ணு அழகா இருந்தது. அதான்…”, சரண் வழிந்தான்.

“போதும் தொடச்சிக்க. நீ விட்ட ஜொல்லுக்கு அந்த நதியாள் இன்னொரு சண்டை இழுத்து இருந்தா இன்னேரம் நீ ஹாஸ்பிடல்ல தான் இருப்ப காயத்தோட”, அகரன் சிரித்துக்கொண்டே கூறினான்.

“அவ அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? வரசொல்லு ஒரு கை பாத்துடறேன்”, சரண்.

“உனக்கு ஒரு கை காணாம போயிடும் ஜாக்கிரதை மச்சி”,அகரன்.

“அவளுக்கு அவ்வளவு சீன் இல்ல மச்சி”, எனக் கூறியபடி எதிரில் பார்த்தவன் நதியாள் பைக்கில் பறந்ததைப் பார்த்து அகரனுக்கு காட்டும்முன் அவர்களைக் கடந்துப் பறந்துவிட்டாள்.

“என்னடா?”, அகரன்.

“அந்த ரௌடி பைக்ல போனா டா”, சரண் திரும்பிப் பார்த்துக் கொண்டு கூறினான். 

“எங்க டா? அதுக்குள்ள போயிட்டாலா? அவ்வளவு ஸ்பீடாவா?”, அகரன் வண்டியை நிறுத்தி திரும்பிப் பார்த்துக் கேட்டான். 

“ஆமான்டா… பயங்கரமான ஆளா இருப்பா போல”,சரண் எச்சிலை விழுங்கியபடி கூறினான்.

“அந்த பயம் இருந்தா சரி. அவள தாண்டி தான் நீ ரீனா வ நெருங்க முடியும்”, எனக் கூறியபடி ஆபீஸ் வந்தடைந்தான் அகரன்.

“ஙேஙே….”, என முழித்தான் சரண்.

“இறங்கு ஆபீஸ் வந்துடிச்சி”, அகரன் சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.

ஸ்பவ்னா எதிரில் வந்தாள்,”ஒரு ஹேப்பி நியூஸ் சார். இப்பதான் மெயில் வந்தது. காலைல நடந்த மீட்டிங் சக்சஸ்”, என சிரித்தபடி கூறினாள்.

“வாவ்… அந்த மெயில் பாக்கணும் முதல்ல”, என தன் ரூமை நோக்கி விரைந்தான் அகரன்.

மெயிலை படித்த அகரனும் சரணும் கட்டிக்கொண்டு சந்தோஷத்தை வெளிப்படுத்திக் கொண்டனர்.

“ஸ்வப்னா… ஆபீஸ்ல எல்லாருக்கும் ஸ்வீட் டிஸ்டிரிபூட் பண்ணுங்க”,அகரன்.

“ஓகே சார். டிசைன்ஸ் எல்லாம் ஒன் மன்த்ல பைனலைஸ் பண்ண சொல்லி இருக்காங்க சார்”, ஸ்வப்னா.

“ஓகே ஓகே. பண்ணிடலாம். இன்னிக்கு என்ஜாய் பண்ணலாம்”, அகரன்.

“அகர்…உன் ட்ரீம்ல ஒரு பார்ட் நடந்துடிச்சி டா. இந்த 3 ஸ்டார் ஹோட்டல நாம சக்சஸ்புல்லா முடிச்சிட்டா நம்ம ரேன்ஞ் இன்டஸ்ட்ரில செம ஹைக் ஆகும்”, சரண்.

“ஆமா மச்சி… பர்ஸ்ட் இத பாட்டி கிட்ட சொல்லணும்”, என போன் எடுத்து டயல் செய்தான் அகரன்.

“ஆமாமா… நீ சொன்னா அது முதல்ல என்னை துரத்த தான் ஐடியா குடுக்கும் உனக்கு. நானும் அப்பா கிட்ட சொல்லிட்டு ஸ்வீட் எடுத்துட்டு வரேன். நீ கொஞ்சி முடிச்சிட்டு கூப்பிடு”, எனக் கூறிச் சரண் வெளியேறினான்.

“ஹலோ…. ஆரு பேசறது?”, மீனாட்சி.

“மீனு நான் தான் அகரன்…. எப்படி இருக்கீங்க? மிஸ்டர் சுந்தர் எப்படி இருக்காரு?”, அகரன்.

“யாருடா அது என் பொண்டாட்டிய பேர் சொல்லி கூப்பிடறது?”, என மீசைய நீவியபடி மீனாட்சியிடம் இருந்துப் போனை வாங்கினார் சுந்தரம் தாத்தா.

“என் மீனுவ நான் கூப்பிடுவேன் உங்களுக்கு என்ன மிஸ்டர் சுந்தரம்?”, அகரனும் வம்பிலுத்தான்.

“எலேய்…என் பொண்டாட்டிய பேர் சொல்லி கூப்டா நான் தான் கேட்பேன்”, சுந்தரம். 

“ஸ்பீக்கர்ல ஏன் போட்ட மீனு?  இப்ப பாரு உன்ன கொஞ்ச விடாம சுந்தர் டிஸ்டர்ப் பண்றாரு”, அகரன் செல்லம் கொஞ்சினான்.

“நான் எடுத்ததும் ஏதோ அலுத்திட்டேன் போல அகரா அதான் சத்தம் வெளியே கேக்குது”, மீனு.

“சொல்லுடா பேராண்டி …. எப்படி இருக்க? தினமும் இராத்திரி தானே போன் பண்ணி என் பொண்டாட்டி கிட்ட என்னைய பேச விடாம இம்சை பண்ணுவ. என்ன இந்த நேரத்துல செஞ்சிருக்க?”, சுந்தரம்.

“நான் என் மீனுக்கு எப்ப வேணா போன் பண்ணி பேசுவேன் உங்களுக்கு என்ன குடையுது மிஸ்டர் சுந்தரம்?”, அகரன்.

“எனக்கு தானு டா கொடச்சல் தாற…. சரி சொல்லு என்ன சேதி? குரல்ல இம்புட்டு சந்தோஷம் தெரியுது”, சுந்தரம் சிரித்துக்கொண்டே கேட்டார்.

“எனக்கு புது ப்ராஜெக்ட் கிடச்சி இருக்கு. 3 ஸ்டார் ஹோட்டல் கட்டப்போறேன் தாத்தா”, என சந்தேஷமாகக் கூறினான்.

“அட்ரா சக்க… சுந்தரம் பேரனா கொக்கா…. சந்தோஷம்யா…. நல்ல படியா இந்த கட்டிடத்த கட்டி முடிச்சி இன்னும் ஒசருவ அகரா”, என ஆசிர்வதித்தார்.

“குடுங்க போன…. புது கட்டிடமா? நீ சொல்லிட்டு இருந்தியே அதுவா? ரொம்ப சந்தோஷம் கண்ணு. நான் தான் சொன்னேன்ல என் பேரனுக்கு குடுக்காம எங்க போயிறுவானுங்க அவனுங்க? குடுக்காம விட்டா நானும் உன்ற தாத்தனும் வந்து வகுந்துடமாட்டோம் அவனுங்கள”, எனக் கூறினார்.

“ஆமாமா… உங்கள விட்டா அவ்வளவு தான். அப்பா அம்மா எங்க பாட்டி?”, அகரன்.

“இரு ராசா… தாரேன்…. திலகா…. அம்மாடி திலகா….. இந்தா அகரன் பேசறான்”, எனத் திலகவதியிடம் போனைக் கொடுத்தார் மீனாட்சி.

“சொல்லு அகரா…. என்ன இந்த நேரத்துல போன் பண்ணி இருக்க? சாப்டியா ?”, திலகவதி. 

“சாப்டேன்மா. எனக்கு அந்த 3 ஸ்டார் ஹோட்டல் ப்ராஜெக்ட் கிடச்சிடிச்சி மா… அதான் போன் பண்ணேன்”,அகரன்.

“அப்படியா பா. ரொம்ப சந்தோஷம். இரு அப்பா வந்துட்டாரு அவர்கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிடு சந்தோஸம் படுவாங்க”, என உள்ளே வந்துக் கொண்டு இருந்த சிதம்பரத்திடம் போனைக் கொடுத்தார் திலகவதி.

“என்னப்பா சொல்லு? என்ன உன் அம்மா முகம் வழக்கத்துக்கு மாறா பிரகாசமா இருக்கு. அப்படி என்ன சொன்ன?”, எனச் சிரித்துக்கொண்டே கேட்டார் சிதம்பரம்.

“அப்பா… எனக்கு 3 ஸ்டார் ஹோட்டல் ப்ராஜெக்ட் கெடச்சி இருக்குப்பா”, அகரன்.

“ரொம்ப சந்தோஷம் அகரா. உன் காலடிய தொழில்ல அழுத்தமா பதிக்க ஆரம்பிச்சிட்ட ஜாக்கிரதையா எல்லாத்தையும் கண்ணும் கருத்துமா பண்ணு. உன் கம்பெனி இன்னும் உசரத்துக்கு போகணும்”, சிதம்பரம் பொறுப்பான அப்பாவாகப் பேசினார்.

“சரிங்கப்பா…. “, அகரன்.

“அகரா… இன்னும் இரண்டு வாரத்துல நம்ம ஊருல திருவிழா வருது. வந்து நம்ம கோவில்ல ஒரு அபிஷேகம் பூஜை பண்ணிட்டு போவியாம்”, சிதம்பரம்.

“சரிங்கப்பா… நான் வேலைய பாத்துட்டு சொல்றேன்”, அகரன்.

“இங்க போன குடுப்பா… அகரா வந்து நாலு நாளாவது இருக்கணும் அப்படி வாயா. ரொம்ப நாள் ஆச்சி நீ வந்து”, மீனாட்சி.

“சரி பாட்டி நான் வரேன்”, என கூறி போனை வைத்தான்.

“புள்ள கட்ற கட்டடம் எந்த குறையும் தடையும் இல்லாம நல்லபடியா கட்டி முடிக்கணும் ஆத்தா”, என மீனாட்சி கடவுளை வேண்டினார்.

“அதுல்லாம் என் பேரன் நல்லா ஜோரா பண்ணிடுவான்”,சுந்தரம் தன் மீசையைத் தடவியபடிக் கூறினார்.

எல்லாரும் சிரித்தமுகமாக அங்கிருந்து நகர்ந்தனர்.

காலேஜிற்கு திருப்பிய நதி பைக்கை கேசவனிடம் கொடுத்து சஞ்சய்யிடம் தரச்சொல்லிவிட்டு லேடீஸ் ஹாஸ்டல் நோக்கி நடந்தாள்.

“ஹேய் நதி நில்லு….” ,ஸ்டெல்லா.

“என்ன ஸ்டெல்லா இன்னும் க்ரவுண்ட்ல இருக்க? ரூம்ல யாரும் இல்லையா?”, நதியாள்.

“மீராவும் ரிஸ்ம் ரூம்ல தான் இருக்காங்க. நான் தான் டிபார்மெண்ட் ஹெட் கூப்டதா சொன்னாங்கன்னு பாக்க போனேன்”, ஸ்டெல்லா.

“என்ன திடீர்ன்னு எதாவது பஞ்சாயத்தா?”, நதியாள்.

“இல்ல. அடுத்த வாரம் இருந்து ஸ்டடி லீவாம். அடுத்த செம் எதாவது கம்பெனில இன்டர்ன்ஷிப் செஞ்சே ஆகணுமாம். அப்பதான் பைனல் செம் எழுத விடுவாங்களாம்”, ஸ்டெல்லா.

“இப்படி சொன்னா எப்படி? லாஸ்ட் இயர்லாம் ஜாலியா இருந்தாங்க”, நதியாள் யோசித்தபடிக் கூறினாள்.

“ஆமா. வா ஸ்ட்ரைக் பண்ணலாமா?”, ஸ்டெல்லா.

“எதுக்கு ? வர சான்ஸையும் கெடுத்துக்கவா?”, நதியாள்.

“என்ன?”, ஸ்டெல்லா.

“இப்பவே நாம கம்பெனில வர்க் பண்ண ஆபர்சுனிட்டி கிடைச்சி இருக்கு. நிறைய கத்துக்கலாம். டிகிரி முடிக்கறப்ப அதே கம்பனிலயோ இல்ல வேற கம்பனில ஜாயின் பண்ணவும் ஜாப் எக்ஸ்பீரியன்ஸோட வெளியே வருவோம். இத கெடுத்துக்கணுமா?”, நதியாள்.

“ஆமாதான். ஆனா ஆறுமாசம் ஜாலியா இருக்காலம்னு இருந்தேன். இப்படி மண்ணள்ளி போட்டுட்டாங்களே”, ஸ்டெல்லா முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டுக் கூறினாள்.

“விடு எங்க போறமோ அங்கயும் ஜாலியா இருக்கலாம். எப்ப மீட்டிங் போட்டு சொல்வாங்க?”, நதியாள் கேட்க இருவரும் நடக்கத்தொடங்கினர்.

“நாளைக்கு மார்னிங்”, ஸ்டெல்லா. 

“அப்ப நாளைக்கு மதியம் சினிமா போலாமா?”, நதியாள்.

“நேத்து தானே போனோம். என்ன படம் வந்து இருக்கு இப்ப?”, ஸ்டெல்லா.

“வா எதாவது இருக்கும் பாக்கலாம். மதியம் அந்த ஜிஞ்சர் மூஞ்சி கிளாஸ் தான்”, நதியாள்.

“அய்யய்யோ… அப்படின்னா காலைல மீட்டிங் முடிஞ்சதும் கிளம்பிடலாம்”, ஸ்டெல்லா பல்லைக் காட்டியபடிக் கூறினாள். 

அதற்குள் நதியாளின் போன் அலற,” நீ முன்ன போ… வரேன்”, எனக் கூறி ஸ்டெல்லாவை அனுப்பி வைத்தாள்.

“ஹாய் அப்பா….எப்படி இருக்கீங்க?”, நதியாள்.

“நல்லா இருக்கேன் மா. நீ எப்படி இருக்க?”, கண்ணன்.

“சூப்பரா இருக்கேன். அம்மா எப்படி இருக்காங்க?”, நதியாள்.

“அவளும் நல்லா இருக்கா. உன்ன திட்டாம தான் சாப்பிடற சாப்பாடு உள்ள எறங்கலன்னு சொல்லிட்டு இருக்கா”, எனச் சிரித்தப்படிக் கூறினார் கண்ணன்.

“எனக்குமே அம்மா திட்டறத கேக்காம சாப்பிட கஷ்டமா தான் இருக்குப்பா”, நதியாள்.

“அப்ப கிளம்பி வா”,கண்ணன்.

“லீவ் இல்லப்ப”, நதியாள்.

“இந்த வாரம் திருவிழாக்கு கம்பம் நடறாங்க. அடுத்த இரண்டாவது வாரம் திருவிழா மா. லீவ் போட்டுட்டு வா. நாலு நாளாவது வீட்ல இருக்கறமாதிரி”,கண்ணன்.

“சரிப்பா நான் பாத்துட்டு சொல்றேன்”, நதியாள்.

“சரிமா. நான் வச்சிடறேன்”, கண்ணன்.

“சரிப்பா. அம்மாவ கேட்டதா சொல்லுங்க”, நதியாள்.

“திருவிழா……ம்ம்ம்… நாமலும் பாத்து ரொம்ப வருஷமாச்சி. சரி போகலாம். அப்பறம் கம்பெனில ஜாயின் பண்ணிட்டா கஷ்டம். ஊருக்குள்ள எல்லாரையும் பாத்தும் நாளாச்சு”, நதியாள் மனதில் நினைத்தாள்.

திருவிழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன் நதியாள் ஊருக்குச் சென்றாள். அகரன் அவள் கிளம்பி இரண்டு தினங்களுக்குப் பின் ஊருக்குச் சென்றான்.

தங்களது பெயரைச் சொல்லி அறிமுகம்படுத்திக் கொண்ட இருவரும் இதுவரை சிந்திக்க நேரம் இல்லாமல் அடுத்தடுத்த செயலில் ஆழ்ந்துவிட இருவரும் தங்களை அறியாமலே இருந்தனர். 

திருவிழாவில் தங்களை அறிந்துகொள்வரா?

 

முந்தின அத்தியாயம் படிக்க .. 

அடுத்த அத்தியாயம் படிக்க ..  

Click to rate this post!
[Total: 1 Average: 5]
Post Views: 1,590
Tags: அகரநதிகாதல்நகைச்சுவை
Previous Post

7 – அகரநதி

Next Post

9 – அகரநதி

Next Post
3 – அகரநதி

9 – அகரநதி

Please login to join discussion

35 – மீள்நுழை நெஞ்சே

February 3, 2023
0
இயல்புகள்

பார்கவி

February 2, 2023
0
1 – வலுசாறு இடையினில் 

17 – வலுசாறு இடையினில்

February 1, 2023
0

Subscribe to our newsletter

Please wait...
Want to be notified when our article is published? Enter your email address and name below to be the first to know.
I agree to Terms of Service and Privacy Policy

        Terms & Conditions

            Privacy Policy

  • aalonmagari@gmail.com
  • 2022 Aalonmagari. All Rights Reserved.
Facebook Twitter Instagram
No Result
View All Result
  • Login
  • Sign Up
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
  • Category
    • மகரியின் பார்வையில்
    • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
  • புத்தகம் வாங்க
  • Login

© 2022 By - Aalonmagari.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Please wait...

Subscribe to our newsletter

Want to be notified when our article is published? Enter your email address and name below to be the first to know.
SIGN UP FOR NEWSLETTER NOW
error: Content is protected !!