aalonmagari

ஏதோவொரு வலியின் தாக்கம்..

காணாத கண்களும் தான்... - உன்குரல் கேட்டு உயிர்க்கிறது....வேண்டாத வார்த்தைகளை தான் - நீகொட்டிய பின்னும் எண்ணுகிறது....உன்மீது கொண்ட காதல் மடியாது..ஆனால்...வீசிய வார்த்தையில் உதிர்ந்து போனது...பரவாயில்லை....நான் மடியமாட்டேன்...மீண்டும்..... -  உன்குரலுக்கு திரும்பவும் மாட்டேன்...சுகமாய் வாழ்ந்திரு... - என்சுகத்தினை உறிஞ்சிடாத தூரத்தில்... - ஆலோன் மகரி

மெய் மறந்தேன்

நிறைய சொல்ல ஆசை... - நிறையவே .....!!!!கொஞ்சம் கெஞ்ச ஆசை.... - கொஞ்சமாகவே ...!!உன்னை நிறையவே ரசிக்க ஆசை ...ஆனாலும் ... மெய்மறந்து எனையே மறந்தேன் உன் விழிகளில்..... - ஆலோன் மகரி

பொக்கிஷம்

வானவில் வளைவில்குழுமிய நிறங்களாய்ஜொலிக்கும் வைரங்களை கண்டெடுத்தேன்..உரமேறிய வைரங்களுள் …..உரமேறும் வைரமாய் மாறினேன்….. - என்பொக்கிஷ பெண்களின் பொக்கிஷத்தில் ... - ஆலோன் மகரி

உன்னுடன்

இரவும் பகலும்.....காடும் நாடும்....ஒளியும் இருளும்....காலையும் மாலையும்....நிலவும் சூரியனும்....பாட்டும் இசையும்...அழகும் அறிவும் - என்னிடம்இருப்பதை உன்னுடன் உணர்கிறேன்..... - ஆலோன் மகரி

கண்டுகொண்டான்

காற்றாட கைவீசி…. - உன்கைகளுக்குள் சிறைப்பட்டு…உன் தோள் சாய்ந்து….காது மடல்கள் சூடேற்றி….கன்னங்களில் உதடுகள் உரசி…அலைகளில் கால் நனைத்து….ஆடைகளில் நீர் அடித்து….அங்கங்களை தெளிந்தும் தெளியாது காட்டி…காதலில் காமம் தலைதூக்க…..என்னிலோ நாணம் கூர்பார்க்க ….உன் விழி போகும் வழி கண்டு…என் இதயம் படபடக்க…கலவையாய் பல உணர்வுகள்…. - ஆனால்உன் பார்வை உணர்ச்சியை தூண்ட…..நகர்ந்து நடந்தேன்… -...

மலர்

தேனூறும்  மலராய்  நான் இல்லை......தேன் தேடும் வண்டாக நீ வரவில்லை.....உன் கூடு தேடி வந்தாயா?உன் கூ(வீ)டாய் எனை மாற்ற வந்தாயா?கருவண்டாய் நீ திரிந்து.... - என்கருவிழியில் நீ சிக்கி கொண்டாய்.....முதல் அழைப்பு யார் விடுக்க ?முதல் முத்தம் எப்போது சுவைக்க... ?தேனோடு காத்திருக்கும் மலராக நான்..... ♥ - ஆலோன் மகரி

இதயம்

உடைந்த இதயத்தை சேர்க்க ... உன் இதயத்தை இடையில் வைத்து.. என் இதயத்தை தைக்கிறாய்.... ஊசியுடன் நூலாய் உன் உதிரம்... என் உதிரத்துடன் ஊற்றாய் ஊற... உன்னில் நான் என்னில் நீயாக... - ஆலோன் மகரி

நங்கை

பாண்டியன் முத்தாய் உனது வரிகள்….ஜடாவர்மன் உனை அறியாமல் இருந்தானோ?முத்தை களவாடியது நீ … - அதை அறியாதுசேரனுடன் போர் புரிந்தானோ…வீரபாண்டியனாய் நீ வந்தால்….. - உனைதிருடும் நங்கையென நான் வரவாே?? - ஆலோன் மகரி

காதல் கைக்கோர்க்க…

இராஜவீதி மாடத்திலே.....மாளிகையின் ஓரத்திலே....ஓடி வந்து நீ ஏற...பதுங்கி வந்து நான் பார்க்க !அரண்மனை ஓடத்திலே...நீயும் நானும் கவிபாட !காட்டாறும் வந்ததம்மா....உனை அடித்து சென்றதம்மா...!!உன்னைத் தேடி நான் வாட....எந்தன் உள்ளம் நொந்ததடி.... !!!என் உயிர் பிரியும் முன் - நீவந்து கைகொடுத்தால்.....தர்மனின் கை உதறிவிட்டு - உந்தன்கைப்பிடிக்க வருவேன்.....மீண்டும் கவிபாட..... !!!!!!!! - ஆலோன் மகரி

சங்கமம்

கணநேர சங்கமத்தில் ஆயிரமாயிரம் பரிமாற்றங்கள்.......கோடி வார்த்தைகள் கோர்த்தாலும்....பரிமாற்றத்தை முழுதாய் கோர்க்க முடியாது வார்த்தைகளில்...... - ஆலோன் மகரி

Page 32 of 41 1 31 32 33 41

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!