My Profile

Email
nandystoryin@gmail.com
This is the default user group. All existing users are automatically included in this group. Groups can be modified or deleted by the admin.
1 day ago no Comment

உள்ளம் இறுக்கி…கண்கள் சுருக்கி….எண்ணங்கள் ஒதுக்கி….சுவாசம் அடைபட….தொண்டுகிழ வயது தேவையில்லை….அன்பில்லா  நாட்களை வாழ்தலே போதும்…இப்புவியில்‌…..அன்பை யாசிக்கும் யாவரும் கடக்கும் நொடிகள் இவை….முன்னே சென்றவர் வலி புரிந்தேன்… – என்பின்னே வருபவர் ரணம் உணர்கிறேன்…. – ஆலோன் மகரி

5 days ago no Comment

25 – மீள்நுழை நெஞ்சே   “குட் ஈவினிங் சார்லஸ்…‌ “, என புன்னகையுடன் அவரெதிரில் இருந்த இருக்கை நோக்கி கைக்காட்டியதும் அமர்ந்தாள். “குட் ஈவினிங் துவா… சோ… கிஸித்துமஸ் லீவ் என்ன ப்ளான் செஞ்சிருக்கீங்க?”, என உற்சாகத்துடன் கேட்டார். “நத்திங் யெட்….”, தோளை குலுக்கிய படி கூறினாள். “என் ஃபேமிலி கூட டின்னர் ஒரு நாள் ஜாயின் பண்ண முடியுமா?” “கண்டிப்பா… வித் ப்ளஷர்… “ “ஓக்கே… 25ம் தேதி என் வீட்ல தான் டின்னர் […]

6 days ago no Comment

வாசகருடன் சில நிமிடங்கள் .. 1. பெயர் – வம்பு வேண்டாத அன்பு வாசகர் -1    2. படிப்பு – இளங்கலை கணிதம்   3. தொழில்/வேலை – சினிமா   4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? 2012-ல் இருந்து   5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பை நாடுவீர்கள்? சூழ்நிலை அமைத்துக் கொண்டெல்லாம் வாசிக்கத் தொடங்கவில்லை. வாசிக்க நேரம் காலாமெல்லம் கிடையாது.   6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் […]

7 days ago no Comment

8 – வலுசாறு இடையினில்   “டேய் வட்டி .. மாப்ள .. “, வர்மன் கத்தியபடி சூப்பர் மார்க்கெட் உள்ளே வந்தான். “என்ன மச்சான் ? இங்க தான் ரேக்குல ஜாமான அடுக்கிட்டு இருக்கேன்.. “, என மேல் பலகையில் இருந்து பதில் கொடுத்தான். “கீழ வாடா “, என அடங்காத ஆத்திரத்துடன் நின்று இருந்தான் வர்மன். “என்னாச்சி மச்சான் ? ஏன் மொகம் இப்டி செவந்து இருக்கு ?” “அந்த இரத்தினம் பையன் எங்க […]

1 week ago no Comment

செயற்கையான இயற்கை வேண்டாம்….நூதனமான தடங்கள் வேண்டாம்…..அறை அடைக்கும் காகிதங்கள் வேண்டாம்…பழைய நான் வேண்டவே வேண்டாம்…..புதிய நான் முற்றிலும் வேண்டாம்….நிஜமான “நான்” யார்?நிஜத்தை உணரும் நுட்பமின்றிய வாழ்விது….இறுதியில் அந்தகாரம் நோக்கிய அந்தர பயணத்தில்….. ஆங்கோர் ஒளிக்கீற்று ஒளிர்வதால்….!!! – ஆலோன் மகரி

1 week ago no Comment

இத்தனை காலமாக மனதில் இருந்த குழப்பம்…குழப்பமே எதுவென அறியாமல் தான் இருந்தது…மொத்தமாக பனி மூடிய கானல் நீர் போலான பிம்பம்….இருதுருவ உணர்வுகள்….சட்டென உணர்வில்லா வெறுமைகள்….இதுவா? அதுவா? எதுவோ? நானும் பெரிதாய் கவலைகொள்ளவில்லை… காரணம்…இழக்க என்னிடம் ஒன்றும் இல்லை….ஒன்றுமே இல்லை…..இன்று ஏதோ விலக்கி காட்டுகிறது….என்ன குழப்பம் என புரிய தொடங்கியதோ?விரைவில் புரிந்துணர்ந்து தான் விடுவேனா? என்ற கேள்வி எழுந்துள்ளது…உணர்வேனா??? – ஆலோன் மகரி

1 week ago no Comment

ஏதோவொன்று முடியும் போது மற்றொன்றின் தொடக்கம் இயல்பே….இயல்பின் குணங்கள் அறிய விழைகிறேன்….இத்தனை நாள் நம்பிய நிஜங்கள் பொய்யென உணரும் தருணம்‌…. அவ்வியல்பு எத்தகையது?ஏதோவொன்றை அறிய நேரும் தேடலில் முடிந்தவைகள் தொடரப்படுகிறது….எதிர்காலத்தின் புதைகுழிகள் இறந்தகாலத்தில் அறியப்படலாம்…நிகழ்வில் நடப்பவை அனைத்தும் முற்றிலும் வேறொன்றே…. நீ நினைப்பதும் அல்ல…நான் நினைப்பதும் அல்ல….ஓர் கனவின் முடிச்சுகள் அவிழும் தருணம்….இறந்தகாலத்தின் துரோகமாக….எதிர்காலத்தின் முக்கிய திருப்பமாகவும் இருக்கலாம்……விழித்திடு மனமே…. இயல்பை உணர்ந்திடு…. – ஆலோன் மகரி

2 weeks ago no Comment

வழக்கமாக அவள் அமரும் இடத்தில் நான் முந்திக்கொண்டு அமர்ந்து விட்டேன்….முறைத்தாள்…. – பின்மெல்லிய கீற்றாக மென்னகை ஒளிர்ந்தது…அவள் என்னை நகர கூறும் முன்….பக்கவாட்டு இடத்தை காட்டிவிட்டு ‘டீ’யில் மூழ்க தொடங்கிவிட்டேன்….ஐநூறு ஊருக்கு அரசாங்கம் செய்யும் இடமோ அது? – எனக் கேட்டு வக்கணைத்தாள்…..எனது பதில் என்னவாக இருக்கும்??வஞ்சப்புகழ்ச்சி என்றான பின் கஞ்சத்தனம் எதற்கு? பிரபஞ்சமே என்னுடையது தான் என்றுவிட்டேன்….சரி தானே நான் கூறியது…?!இப்பிரபஞ்சம் என்னுடையது அல்லவா ?! – ஆலோன் மகரி

2 weeks ago 2 Comments

வாசகருடன் சில நிமிடங்கள் ..   1. பெயர் – சித்ரா கணேசன்   2. படிப்பு -B.com.,   3. தொழில்/வேலை – இல்லத்தரசி   4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? 4th படிக்கும் போதிருந்து.. காமிக்ஸ்ல ஆரம்பித்து, அப்படியே news paper தொடர்ந்து, வார இதழ்களில் ஐக்கியம் ஆகி (எங்க வீட்டுல  குங்குமம், குமுதம், ஜூனியர் விகடன், ஜூனியர் போஸ்ட், ஆனந்த விகடன், சாவி இப்படி எல்லா வார இதழ்களும் வாங்குவாங்க.. அட்டை […]

2 weeks ago no Comment

உன் எண்ணங்களின் பிரதிபலிப்பு…. உன் ஆசைகளின் பிரதிபலிப்பு…. உனது பிரதிபலிப்பு…. நள்ளிரவில் உலகம் உறங்கும் சமயத்தில்…. உன் எழுத்து என்பது….. நீ தான்….. நீ மட்டும் தான்….. – ஆலோன் மகரி

aalonmagari does not have any friends yet.

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!