2- அர்ஜுன நந்தன்
2 - அர்ஜுன நந்தன் நந்தன், பாலாஜி, முகில், கதிர், சரண் இவர்கள் ஐவரும் தான் அர்ஜுனின் முக்கியப் படை நபர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தனித் திறமை பெற்றவர்கள். பாலாஜியும், சரணும் புது கம்ப்யூட்டர் தொழில் நுட்பங்கள் அனைத்தும் எப்போதும் விரல் நுனியில் வைத்திருப்பவர்கள். முகிலும், கதிரும் மனிதர்களைக் கண்காணிப்பது மட்டுமின்றி தகவல் சேகரிப்பதில் வல்லவர்கள். அர்ஜுனும், நந்தனும் சிறுவயது முதல் நெருங்கிய நண்பர்கள். சமபலம் பெற்றவர்கள் புத்தியிலும் உடலிலும். அவர்கள் என்ன நினைக்கிறார்கள், என்ன செய்வார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். "சரண் அந்த பாக்கெட்ல என்ன இருக்குனு பாருங்க," முகில். சரண் கையுரை அணிந்து கொண்டு...



