Tag: கவிதை

பிணம்….

மரத்து விட்டது மரணமும்…..இனி குத்த இடமில்லை தான்…ஆனாலும் கூர்முனை கத்திகள் குத்திக் கிழிக்கிறது மனதை…..தாயோ தந்தையோ உடன்பிறந்தோரோ….இம்மாய பூமியில் அனைவரும் ஒன்று தான்….வலி மட்டும் முக்கிய பொதுச் சொத்து….வேண்டாத போதும் மலையென குவிந்து வந்துவிடும்….சுமக்க முடியாமல் சுமந்து…மூச்சு நிற்கும் கணத்தில் சிறிது ஆசுவாசத்தோடு…..எலிக்கு வைக்கும் தேங்காய் துண்டு போல….மகிழ்ச்சியும் வந்துபோகும்….பித்துப் பிடித்த மனம்….அதன் பின்னால் செல்லும்போதே….பெரிதாக நம் பின்னால் வாளேந்தி நிற்கும்….ஒவ்வொரு முறையும் இதே இனிப்புத் துண்டு‌….அதே கத்திகுத்து….ஹாஹாஹா…..பைத்தியமென கூறு ...

நாளைய தலைமுறை….

விடியல் வரும் காத்திரு.....இதே வார்த்தை தான் பல முறை பல செவிகளையடைகிறது....‌முதல்முறை.....யாரோ என் அருகிருந்தவருக்கு கூறினார்....அடுத்தமுறை ....எனக்கு பிடித்தவருக்கு கூறினார்.....பலமுறைகள் கடந்தும்....என் வீட்டில் இருப்பவர்களுக்கு கூறினார்....நேற்று....எனக்கும் கூறினார்.....அன்றெனது காதில் விழுந்த முதல்முறையை நினைக்கையில்....செயலன்றி ஏதும் மாறாது....ஏதுவான சிந்தனையன்றி நாமும் மாறுவதில்லை....நிச்சயமாக நாளை அடுத்த தலைமுறைக்கும் இதே வார்த்தைகள் சென்றடையத்தான் போகிறது....அதற்குமுன்.....இன்று நம் விடியலைப் பற்றி நாம் ஆழச் சிந்திப்போம்.....பிடித்தமோ பிடித்தமல்லதோ....நல்லதோ நன்றல்லதோ....ஒன்றுமோ ஒன்றாதோ.....நடக்குமோ நடக்காதோ.....யாவையும் மீண்டுமொருமறை சிந்தித்து செயல்படலாம்.....கடந்துவிடபோகும் வார்த்தையில் ...

ஒற்றையாய்….‌

சற்று நேரம் முன்பு தான்....உன் மார்சாயும் ஏக்கம் கொண்டு ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தேன்....கடந்து போன காலத்தை நினைத்து....அப்படி நடந்திருந்தால் ....இன்று நீயும் நானும்....ஒன்றாய் அமர்ந்து பேசியிருக்கலாம்.....ஓர் மழை மாலை வேளையில்....எனது தேநீரில் உன் இதழும் சுவைத்திருக்கலாம்.....எனக்கு பிடித்த புத்தகத்தின் வரிகளை....உன்னுடன் கலந்துரையாடி ஊடல் கொண்டிருக்கலாம்....நீயோ நானோ....கோபமாய் அருகில் அமர்ந்து முகம் திருப்பும் போதெல்லாம்.....'இச்'சென்ற சத்தமில்லா சமாதானங்களை செய்திருக்கலாம்.....இருக்கலாம்....இருக்கலாம்...இப்படி பலதை நினைத்து பொய்யாய் மனதை சமாதானம் செய்த வேளையில்.....நீயும் உன் துணையும் ...

உழைப்பு

உழைப்பின் மீதிருக்கும் காதல் - இப்போதுஉழைப்பை காதலிப்பவர்கள் மீதும் வருகிறது...இறுக்கியணைத்து தோளில் தூக்கி வைக்க வேண்டும்....ஒவ்வொரு குடும்பத்தின் முதுகெலும்பாய் மறைந்திருப்பவர்களை எல்லாம்....தோள் கொடுத்து கொண்டாடவேண்டும்.... உழைப்பின் மீதான காதலை அருகிருந்து....வியர்வையின் வாசம் நுகர்ந்து.... கடினமென்றதெல்லாம் சுக்குநூறாக்கும் லாவகத்தைக் கண்டு....உழைக்க உழைக்க உணரும் நுணுக்கங்களைக் கண்டு.... எப்படியெல்லாம் காதல் வருகிறது பாருங்கள்.... உழைப்பை காதல் செய்கிறேன்.... உழைக்க நினைக்கும் மனதையும்....உழைக்க துவங்கும் உடலையும் விட....எதுவும் கவர்ச்சி இல்லை.... - ஆலோன் மகரி

நீர் வழிகிறது…

கருவுறாத முட்டை .....உதரத்தில் நில்லாது....உதிரமாய் வழிகிறது...மற்றொரு மாதமும் கழிந்தது....அவள்(ன்) ஆசையும் உதிர்ந்தது.....வலி பொறுத்தும்.....மனம் பொறுக்காததால்.....மற்றிரண்டு துவாரத்தில்....(கண்)நீர் வழிகிறது.....-ஆலோன் மகரி

ஆவதும்…. அழிவதும்…

விநாடி நேர பார்வை தான்.... - மனம்இணைவதும்...உடைவதும்...முன்னதில் தோன்றிய நம்பிக்கை ...பின்னதில் நொறுங்கியிருக்கலாம்...இடைவிடாது ஏமாந்த மனது...சட்டென விழித்திருக்கலாம்...ஆவதும் ....அழிவதும்....அன்பினால் மட்டுமே.... - ஆலோன் மகரி

யாவரும் கடக்கும் நொடிகள்…

உள்ளம் இறுக்கி...கண்கள் சுருக்கி....எண்ணங்கள் ஒதுக்கி....சுவாசம் அடைபட....தொண்டுகிழ வயது தேவையில்லை....அன்பில்லா  நாட்களை வாழ்தலே போதும்...இப்புவியில்‌.....அன்பை யாசிக்கும் யாவரும் கடக்கும் நொடிகள் இவை....முன்னே சென்றவர் வலி புரிந்தேன்... - என்பின்னே வருபவர் ரணம் உணர்கிறேன்.... - ஆலோன் மகரி

உணர்வேனா?

இத்தனை காலமாக மனதில் இருந்த குழப்பம்...குழப்பமே எதுவென அறியாமல் தான் இருந்தது...மொத்தமாக பனி மூடிய கானல் நீர் போலான பிம்பம்....இருதுருவ உணர்வுகள்....சட்டென உணர்வில்லா வெறுமைகள்....இதுவா? அதுவா? எதுவோ? நானும் பெரிதாய் கவலைகொள்ளவில்லை... காரணம்...இழக்க என்னிடம் ஒன்றும் இல்லை....ஒன்றுமே இல்லை.....இன்று ஏதோ விலக்கி காட்டுகிறது....என்ன குழப்பம் என புரிய தொடங்கியதோ?விரைவில் புரிந்துணர்ந்து தான் விடுவேனா? என்ற கேள்வி எழுந்துள்ளது...உணர்வேனா???- ஆலோன் மகரி

வஞ்சப்புகழ்ச்சி

வழக்கமாக அவள் அமரும் இடத்தில் நான் முந்திக்கொண்டு அமர்ந்து விட்டேன்....முறைத்தாள்.... - பின்மெல்லிய கீற்றாக மென்னகை ஒளிர்ந்தது...அவள் என்னை நகர கூறும் முன்....பக்கவாட்டு இடத்தை காட்டிவிட்டு 'டீ'யில் மூழ்க தொடங்கிவிட்டேன்....ஐநூறு ஊருக்கு அரசாங்கம் செய்யும் இடமோ அது? - எனக் கேட்டு வக்கணைத்தாள்.....எனது பதில் என்னவாக இருக்கும்??வஞ்சப்புகழ்ச்சி என்றான பின் கஞ்சத்தனம் எதற்கு? பிரபஞ்சமே என்னுடையது தான் என்றுவிட்டேன்....சரி தானே நான் கூறியது...?!இப்பிரபஞ்சம் என்னுடையது அல்லவா ?! - ஆலோன் ...

மழை

போதாது இந்த வருகை..நித்தம் வரவேண்டும் ...என்னைக் காண...பூமியும் அழைக்கிறாள்....மழை இளவரசியை... - ஆலோன் மகரி 

Page 1 of 4 1 2 4

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.