Tag: kavithai

யாவரும் கடக்கும் நொடிகள்…

உள்ளம் இறுக்கி...கண்கள் சுருக்கி....எண்ணங்கள் ஒதுக்கி....சுவாசம் அடைபட....தொண்டுகிழ வயது தேவையில்லை....அன்பில்லா  நாட்களை வாழ்தலே போதும்...இப்புவியில்‌.....அன்பை யாசிக்கும் யாவரும் கடக்கும் நொடிகள் இவை....முன்னே சென்றவர் வலி புரிந்தேன்... - என்பின்னே வருபவர் ரணம் உணர்கிறேன்.... - ஆலோன் மகரி

அந்தர பயணம்

செயற்கையான இயற்கை வேண்டாம்....நூதனமான தடங்கள் வேண்டாம்.....அறை அடைக்கும் காகிதங்கள் வேண்டாம்...பழைய நான் வேண்டவே வேண்டாம்.....புதிய நான் முற்றிலும் வேண்டாம்....நிஜமான "நான்" யார்?நிஜத்தை உணரும் நுட்பமின்றிய வாழ்விது....இறுதியில் அந்தகாரம் நோக்கிய அந்தர பயணத்தில்..... ஆங்கோர் ஒளிக்கீற்று ஒளிர்வதால்....!!!- ஆலோன் மகரி

உணர்வேனா?

இத்தனை காலமாக மனதில் இருந்த குழப்பம்...குழப்பமே எதுவென அறியாமல் தான் இருந்தது...மொத்தமாக பனி மூடிய கானல் நீர் போலான பிம்பம்....இருதுருவ உணர்வுகள்....சட்டென உணர்வில்லா வெறுமைகள்....இதுவா? அதுவா? எதுவோ? நானும் பெரிதாய் கவலைகொள்ளவில்லை... காரணம்...இழக்க என்னிடம் ஒன்றும் இல்லை....ஒன்றுமே இல்லை.....இன்று ஏதோ விலக்கி காட்டுகிறது....என்ன குழப்பம் என புரிய தொடங்கியதோ?விரைவில் புரிந்துணர்ந்து தான் விடுவேனா? என்ற கேள்வி எழுந்துள்ளது...உணர்வேனா???- ஆலோன் மகரி

விழித்திடு மனமே…

ஏதோவொன்று முடியும் போது மற்றொன்றின் தொடக்கம் இயல்பே....இயல்பின் குணங்கள் அறிய விழைகிறேன்....இத்தனை நாள் நம்பிய நிஜங்கள் பொய்யென உணரும் தருணம்‌.... அவ்வியல்பு எத்தகையது?ஏதோவொன்றை அறிய நேரும் தேடலில் முடிந்தவைகள் தொடரப்படுகிறது....எதிர்காலத்தின் புதைகுழிகள் இறந்தகாலத்தில் அறியப்படலாம்...நிகழ்வில் நடப்பவை அனைத்தும் முற்றிலும் வேறொன்றே.... நீ நினைப்பதும் அல்ல...நான் நினைப்பதும் அல்ல....ஓர் கனவின் முடிச்சுகள் அவிழும் தருணம்....இறந்தகாலத்தின் துரோகமாக....எதிர்காலத்தின் முக்கிய திருப்பமாகவும் இருக்கலாம்......விழித்திடு மனமே.... இயல்பை உணர்ந்திடு....- ஆலோன் மகரி

வஞ்சப்புகழ்ச்சி

வழக்கமாக அவள் அமரும் இடத்தில் நான் முந்திக்கொண்டு அமர்ந்து விட்டேன்....முறைத்தாள்.... - பின்மெல்லிய கீற்றாக மென்னகை ஒளிர்ந்தது...அவள் என்னை நகர கூறும் முன்....பக்கவாட்டு இடத்தை காட்டிவிட்டு 'டீ'யில் மூழ்க தொடங்கிவிட்டேன்....ஐநூறு ஊருக்கு அரசாங்கம் செய்யும் இடமோ அது? - எனக் கேட்டு வக்கணைத்தாள்.....எனது பதில் என்னவாக இருக்கும்??வஞ்சப்புகழ்ச்சி என்றான பின் கஞ்சத்தனம் எதற்கு? பிரபஞ்சமே என்னுடையது தான் என்றுவிட்டேன்....சரி தானே நான் கூறியது...?!இப்பிரபஞ்சம் என்னுடையது அல்லவா ?! - ஆலோன் ...

பிரதிபலிப்பு

உன் எண்ணங்களின் பிரதிபலிப்பு.... உன் ஆசைகளின் பிரதிபலிப்பு.... உனது பிரதிபலிப்பு.... நள்ளிரவில் உலகம் உறங்கும் சமயத்தில்.... உன் எழுத்து என்பது..... நீ தான்..... நீ மட்டும் தான்..... - ஆலோன் மகரி

நடனம்

நடனம்....எத்தனை அற்புதமான கலை....மனதின் லயத்திற்கு ஜதி மாறாமல் ஆடிவிடும்....கோபமோ....அழுகையோ....வேண்டலோ....ஒதுக்கமோ...இணக்கமோ....ஆனந்தமோ....எல்லாம் அதன் வெளிப்பாட்டில் கோபுர உயரம் தான்.....மெல்ல மெல்ல அஸ்திவாரத்தை பலமாக்கி...உயர்ந்தோங்கி நின்று தனது நடனத்தை அரங்கேற்றம் செய்துவிடும்....அப்படித்தான் .... மாமாங்கமாக மறந்து போயிருந்த உற்சாகம்...சட்டென மேலெழும்பி வந்துவிட்டது.... - என்அஸ்திவாரத்தை கருவியாக இயக்கி ஆடவைத்தது..‌சிறிது நேரம் தான்.... இன்னும் கூட கொஞ்சம் நீண்டிருக்கலாம்...மறந்துவிட்ட உற்சாகத்தை....தொலைத்துவிட்ட சுயத்தை.....கட்டப்பட்டிருந்த மனதை.... எதுவோ.... என்னவோ.... மீண்டும் கிடைத்த உணர்வு.....இன்றோர் நாள் மட்டுமா? இனி எப்போதும் ...

அன்பு கொண்டாயா ?

மாட்டிக்கொண்ட மனமும்.... மீளாதிருக்கும் நினைவும்.... வெட்டிப் பேச்சு பொழுதும்....என்பதாய் சென்ற நாட்களில் தான்....நீ எனக்காய் ஒன்றும் செய்யவில்லை...இந்த விசறு பிடித்த மனது அனைத்துமே நீயென காட்டுகிறது.... தெளிய வைத்து பைத்தியமாக்கும் அன்பு... ஒன்றுமே நீ எனக்காய் செய்யவில்லை தான்....ஆனாலும் அன்பை வெறுப்பாக மாற்றவும் முடியவில்லை....களங்கிய சகதி குளத்தில்.... மெல்ல மெல்ல சேறு நீரடியில் தங்குவது போல... - உனது நினைவும் தெளிவாகிறது.... இப்போதும் சொல்கிறேன்.... - நீ எனக்காய் ஒன்றுமே ...

மனம்

கருவிழியில் தோன்றியது காதல்.....!இன்னதென்று அறியாமலே வளர்கிறது.....!நட்பும் காதலும் ஓர் வழியில் செல்லும் இருதுருவங்கள்.....இரண்டும் வேறல்ல – ஆனால்இரண்டும் ஒன்றல்ல......இதன் பிரிவினை தெரியாமல்...திண்டாடுகிறது மனம்.....மனம் கொடுத்தது மணம் செய்யத்தானா ?நட்பை பெற்றது காதலில் ஜெயிக்கத்தானா ?குழம்பி நிற்கிறது எண்ணற்ற மன(ண)ங்கள்........... - ஆலோன் மகரி

கனவு

கண்ட கனவெல்லாம் கனவாகவே வளர்கிறது…எந்நொடி அதை நிஜமாகச் செய்வாய்???ஆயிரம் கனவல்ல நான் காண்பது….கை எண்ணில் அடங்குபவை தான்…ஆனால்,காணும் கனவை கனவாக விடமாட்டேன்…திமில் கொண்ட காளையாக ….திமிரோடும், திறமையோடும் போராடுவேன்…காணும் கனவில் சுயநலம் அதிகம் தான்….என் சுயநலத்தால் பொதுநலம் பெருகுமென்றால்இன்னும் அதிகம் சுயநலம் கொள்வேன்….தோழனோ, தோழியோ யார் துணை கொடுத்தாலும்,மறுத்தாலும்…..கண்ட கனவை நிஜமாக்காது பிரியாது என் ஆத்மா…. - ஆலோன் மகரி

Page 2 of 3 1 2 3

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!