Tag: poem

ஆசுவாசம்

கடந்து செல்லும் நிமிடங்களில்...ஏதேனும் சிறு ஆசுவாசம் கிடைத்தால் அனுபவித்துக்கொள்....நீ நினைக்கும் பொழுது அது ஆசுவாசமாக இருக்காது...வேறேதோ ஒன்றின்....உருமாற்றமோ, நிலைமாற்றமாகவோ மாறியிருக்கலாம்....இறுதிவரை ஆசுவாசமென்பது என்னவென்றே அறியமுடியாமல் போகலாம் ... - உன்னைஉணரத் தவறிய வாழ்வில்... - ஆலோன் மகரி

விழித்திருத்தல்….

விழித்திருக்கும் பொழுதுகள் ....கண் திறந்து....நாசி திறந்து.....வாய் திறந்து....உடல் விழித்திருந்தால்....அது விழிப்பாகுமா?அகம் திறத்தலே விழித்திருத்தல் என்றனர்...அகம் என்றால்....?புத்தி...மனம்... இரண்டும் விழித்தநிலையில் இணைந்திருந்தால்....ஆன்மா விழித்தெழும்.... ஆத்மாவின் விழித்திருத்தளுடன் கூடிய இணைதலில்....‌பிரபஞ்சத்தின் பெருங்கதவு திறக்கிறது....எத்தனை வியப்பான நிகழ்வுகள்....விழித்திருத்தல் என்பது...மெய்யான விழிப்பாக ....மெய்யை உணர்ந்த விழிப்பாக இருத்தலே உயிர்களின் உச்ச லட்சியம்..... - ஆலோன் மகரி

வினை

வினையெல்லாம் வினைதானா?நீங்காத கறையாக....குறையாத‌ மணமாக.....விதைத்தவை அனைத்தும்....நம் கண் முன்னே முளைத்திடுமா?முளைத்ததெல்லாம் நீ வினையாற்றி வளர்த்தாயா?எவ்வினையும் உன்வினைதான்‌...ஆனால்...நிகழ்பவையனைத்தும் உன் வினையால் மட்டுமே அல்ல.....ஆற்றும் வினைதான்...‌ஆற்றல் மிக்கதாக ஆற்றிவிடு....எதிர்வினையோ...உள் வினையோ.....நேர்மறையோ...எதிர்மறையோ....ஆற்றும் வினையின் ஆரம்ப புள்ளியில்....அதற்கான எதிர்வினையை ஏற்றுக்கொள்ள தயாராகிவிடு.... - ஆலோன் மகரி

திடம்

பலதையும் கொட்ட நினைக்கிறேன்.... உள்ளத்தின் பாரம் தீர அல்ல.... வார்த்தையே வேண்டாம்.... சாய ஓர் தோள் போதும்...ஏதோ நினைத்த மனதின் வெளிப்பாடாகஎன்னுதட்டில் ஏளனச்சிரிப்பு...... கிறுக்கி..... இதையும் தாங்குவாள் (மன) திடம் கொண்டு.... - ஆலோன் மகரி

சமூகப் பிரச்சினை

எண்ணிலடங்கா பிரச்சினைகள் வரிசைக் கட்டி நின்றாலும்…..ஒரு ரூபாயும் பெறாத பிரச்சினைக்குத்தான் ஊர் ஒன்று கூடும்…….காற்றை விலைப்பேசும் வல்லூறுக்கூட்டம்……. - ஆலோன் மகரி

செயற்கையின் கை…

பகுதிகள் பல பற்றி அறியும் ஆவல்….அதில் வாழும் உயிர்களும் பலவகையே….அவற்றின் உண்ணல், உறங்கல்,.....மனிதரும் அதுபோல் தான்…..பூமி உருண்டையில் தொற்றி நிற்கிறோம்…இயற்கை அல்லா செயற்கையை நாடி செல்கையில்…..பூமியும் ஓர் வலியோ , கூச்சமோ உணர்ந்து…உதறினால் காக்குமோ - நம்செயற்கையின் கை……. - ஆலோன் மகரி

இயல்புகள்

இயல்புகள்

காயமெல்லாம் காய்ந்து போகத்தான் முயல்கிறது...காலமும் கடந்து போகத்தான் நினைக்கிறது.... எவ்வினையும் நல்வினையாகத்தான் தெரிகிறது....எதிர்வரும் இன்னலுக்கு எவ்வினை ஆற்றுவது??காத்திருந்த காலமும் தான் வந்து சேருமா?காத்திருத்தலே இக்காற்றினிலில் கலந்திருத்கிறதா ?மாற்றம் தேடும் பாதையில் இருந்தும்.....மாற்றமில்லாத நிகழ்வுகளாகத் தான் நடக்கிறது.... எந்த மனிதரும் நிரந்தரமில்லை....எந்த இலக்கும் மொத்த வாழ்வில்லை....இலக்குகளை எட்டாமல் தோற்கலாம்....வாழ்விலும் வாழாமல் தோற்கலாம்....தோற்றல் பொதுவானது....எழுவது தான் எனது இயல்பானது....மீண்டும் விழுந்து கிடக்கிறேன்....எனது இயல்புடனே வாழவும் முயற்சிக்கிறேன்....போட்டியில் தோற்கலாம்....இயல்புகள் தோற்பதில்லை..... - ஆலோன் மகரி

Page 9 of 9 1 8 9

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!