11 – அகரநதி
இனி லைப் லாங் அகரன் கூடவே இருக்கப்போவதாக நதியாள் சொன்னதால் அகரனும், சரணும் ஸ்தம்பித்து நின்றனர்.
உறைந்து நின்றவர்களை உலுக்கி நினைவிற்கு கொண்டுவந்த நதி, ” என்னாச்சி இரண்டு பேருக்கும் ஏன் இவ்வளவு ஷாக்?”,எனக் கேட்டாள்.
“ஏன் இப்படி இப்ப சொன்ன நீ?”, சரண் படபடப்புடன் கேட்டான்.
“கண்டுபிடி”, எனக் கூறிச் சிரித்தாள் நதி.
“டென்சன் ஏத்தாம சொல்லுடி ராட்சசி”, சரண்.
“ராட்சசி னு திட்றதுக்கு பின்னாடி ரொம்பவே வருத்தப்படுவ டா சரணா”, நதியாள் தன் நகங்களை ஆராய்ந்துக் கொண்டு கூறினாள்.
“அத அப்ப பாத்துக்கலாம் இப்ப சொல்லு”,சரண்.
“அகன் உனக்குமா தெரியல?”, நதியாள்.
அகரனுக்கு என்னவென்று சொல்வது? ஏற்கனவே முன்பொருமுறை நதியாளைக் கண்டு தன் மனதில் ஏற்பட்ட தடுமாற்றம் உணர்ந்தே இருந்தான். இப்பொழுது இவள் சிறுவயதில் தன்கூடவே சுற்றிய சுட்டிப்பெண் எனத் தெரிந்தததும் ஒரு பக்கம் சந்தோஷமும், மறுபக்கம் குழப்பமும் தான் ஏற்பட்டு இருந்தது.
நதியாள் இவன் மேல் பொழிவதோ அதே பத்துவயது குழந்தை நிலை அன்பு. அகரனுக்கு அவள் மேல் ஏற்பட்டிருக்கும் ஈர்ப்போ, தடுமாற்றமோ வெளியே தெரியக்கூடாது முக்கியமாக நதியாளுக்கு. தெரிந்தால் அவள் எப்படி அதை எடுத்துக்கொள்வாளோ என்கிற குழப்பம் கலந்த பயம்.
நதியாளின் மேல் ஏற்பட்டிருக்கும் எண்ணத்தை முதலில் தான் சுய அலசல் செய்து, இதே ஈர்ப்பும் தடுமாற்றம் கலந்த அன்பும் நீடித்தால் தான் அந்த உணர்விற்கு பெயர் கொடுக்க முடியும் என தீர்மானித்திருந்தான். இப்பொழுது இவளின் கேள்விக்கு என்ன பதில் கொடுப்பான் அவன்? பரிதாபத்திற்குறியது தான் அவன் நிலை.
“என்ன நதிமா சொல்றது?”, அகரன் சற்றுத் தடுமாறிச் சமாளித்தான்.
“எப்படி உன்கூட லைப்லாங் இருப்பேன்னு சொல்லு?”, நதியாள்.
“எனக்கு தெரியல டா நீயே சொல்லு”, அகரன்.
“இரண்டு பேரும் நான் கீழ பேசினத கவனிச்சீங்களா இல்லையா?”, நதியாள் சற்றுக் கோபம் கலந்த குரலில் வினவினாள்.
“நீ என்கிட்டயா பேசின அவன்கிட்ட தானே பேசின?!”, சரண் கோபமாகக் கேட்டான்.
“நீ என்ன ஆப்ரிக்காலயா இருந்த? ரூம்ல ஐஞ்சு அடி தூரத்துல தானே உக்காந்து இருந்த”, நதியாள் சற்றுக் கூடிய கோபத்துடன் கூறினாள்.
“சரி விஷயத்த சொல்லு முதல்ல”, சரண்.
“என் இன்டர்ன்ஷிப் அகன் கம்பெனில தான் பண்ணப்போறேன்.. அப்படியே அவன் கம்பெனிலயே ஜாப்லயும் ஜாயின் பண்ணப்போறேன்”, அகரனின் கழுத்தைக் கட்டியபடிக் கூறி முடித்தாள்.
அகரனும் சரணும் வெவ்வேறு மனநிலையில் மீண்டும் உறைந்து நின்றனர்.
அகரனுக்கோ தலைக்கால் புரியாத சந்தோஷம். நதியை அருகிலேயே எப்பொழுதும் வைத்துப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். சரணுக்கோ இவள் கம்பெனிக்கு வந்தாள் தான் செய்யும் சேட்டையில் இருந்து போடும் சரக்கு வரை தெரிந்து வைத்துக் கொண்டு கண்டிப்பாக மிரட்டியே தன் காரியத்தைச் சாதித்துக் கொள்வாள் என்கிற பயம்.
“என்னடா இரண்டு பேரும் எப்ப பாரு உறைஞ்சு போறீங்க?”, என இருவரின் முதுகிலும் தட்டினாள்.
“அதுலாம் முடியாது உனக்கு யாரு இப்ப பர்மிஷன் குடுத்தா இன்டர்ன்ஷிப் பண்ண? அதுவும் இல்லாம ஜாப்லாம் … உனக்கு சான்ஸே இல்ல”, சரண்.
“ஏன் முடியாது? எனக்கு ஜாப் குடுக்கணுமா முடியாதான்னு அகன் தான் முடிவு பண்ணணும் நீ இல்ல”, நதியாள் சற்றுக் குரலை உயர்த்தியே கூறினாள்.
“டேய் மச்சான்…. வேணாம்டா… இவள கம்பெனிக்குள்ள விட்ட நம்ம மானம் பறந்துடும். ஊருக்குள்ள நல்ல பையன்னு இப்பதான் நான் இமேஜ் கிரியேட் பண்ணி இருக்கேன். இவ ஒரு செகண்ட்ல அத உடச்சிருவா டா. வேணாம் டா மச்சான். முடியாதுன்னு சொல்லுடா”, சரண் அகரனின் காதில் ஓதிக்கொண்டு அல்ல அல்ல கெஞ்சிக்கொண்டு இருந்தான்.
அது அவன் காதுல விழுந்தா தானே சரண் அவன பாரு நீ பக்கத்துல நிக்கறது கூட தெரியாம கனவு காண ஆரம்பிச்சிட்டான்… பாவம் பயபுள்ள தனியா பொலம்பிட்டு இருக்கு..😅😅😅😅
“ம்ம்”, அகரன்.
“இப்ப சொல்லுடா முடியாதுன்னு.என் மச்சான் டா நீ”, என சரண் கூறி அகரனின் முதுகில் தட்ட ,” நதிமா என்ன கோர்ஸ்டா படிக்கற?”, அகரன் கேட்டான்.
“ஆர்கிடெக்சுரல் இன்டீரியர் டிசைனிங்”, நதியாள்.
“சூப்பர்டா. நீ காலேஜ் எக்ஸாம் முடிச்சிட்டு நம்ம கம்பெனிக்கு வந்துடு. உன் பிரண்ட்ஸ் இருந்தாலும் கூட்டிட்டு வா, இன்டர்ன்ஷிப் நம்ம கம்பெனில பண்ணிக்கலாம். கோர்ஸ் முடிஞ்சு பர்பாமன்ஸ் பாத்து இன்னும் சில டெஸ்ட் வச்சி ரெக்ரூட் பண்ணிக்கறேன். ஓகே வா?”, அகரன்.
“டபுள் ஓகே அகன்”,எனக் கூறி அவனின் கழுத்தை கட்டிக்கொண்டாள்.
“டேய் சரணா… பாத்தியா…. என் அகன் எப்பவும் என் பக்கம் தான்”, நதியாள்.
சரண் அதிர்ச்சியில் அப்படியே சிலையாகிவிட்டான்.
“அம்மாடி நதி”, கீழிருந்து மீனாட்சி பாட்டி குரல் கொடுத்தார்.
“வரேன் பாட்டி”, நதியாளும் குரல் கொடுத்தாள்.
“எல்லாரையும் கீழ கூட்டிட்டு வாம்மா”, மீனாட்சி.
“சரி பாட்டி”, நதியாள் அகரனிடம் சைகை செய்துவிட்டு படிகளில் கீழே குதித்து குதித்து இறங்கிச் சென்றாள்.
அதைக் கண்டு இரசித்தவன் பின் சரணிடம் அசைவு இல்லாததைக் கண்டு உலுக்கினான்.
“டேய் என்னடா? இப்படி நிக்கற? வா கீழ போலாம்”, அகரன் அவன் கைபிடித்து இழுத்தான்.
“ஏன்டா இப்படி பண்ண?உன்கிட்ட எவ்வளவு சொன்னேன் இப்படி பண்ணிட்டியே டா”, சரண்.
“நான் என்னடா பண்ணேன்?”, அகரன் புரியாமல் வினவினான்.
“அவள ஏன்டா நம்ம கம்பெனிக்கு வரச்சொன்ன? நான் தான் வேண்டாம்னு சொன்னேன்ல”, சரண் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டான்.
“எப்ப மச்சான் சொன்ன? படிப்பு விஷயம் அதான்டா வரச்சொன்னேன், அதுல உனக்கு என்ன பிரச்சினை?”,அகரன் புரியாமல் கேட்டான்.
“ஏன்டா உன் காதுல அவ்வளவு நேரம் மந்திரம் ஜபிக்கற மாதிரி சொன்னேனே ஒன்னுமே காதுல விழலியா?”, சரண்.
“இல்ல மச்சான். சரி விடு அதுல உனக்கும் ஒரு நல்லது இருக்கு?”,அகரன்.
“அவள உள்ள விட்டப்பறம் எப்படி நல்லது நடக்கும்?”, சரண்.
“அவ பிரண்ட்ஸையும் வர சொல்லி இருக்கேன்”, அகரன் கூறி சிரித்தான்.
“அப்ப ரீனாவும் வருவாளா?”, பல்லைக் காட்டியபடிக் கேட்டான் சரண்.
“ஆமா. ஆனா நதிய தாண்டி அவள கரெக்ட் பண்றது உன் சாமர்த்தியம்”, அகரன்.
“அதுல்லாம் அசால்டா பண்ணிடுவேன் மச்சான்”, சரண்.
“ஹான்? பாக்கறேன் எப்படி பண்றன்னு”, அகரன் ஒரு புருவம் உயர்த்திக் கூறினான்.
“சரி வா கீழ போலாம் . அப்பவே மீனு பாட்டி கூப்டாங்க. எதாவது ஸ்பெஷலா செஞ்சி இருப்பாங்க. போய் சாப்டலாம் நான் காலைல இருந்து சாப்பிடல”, சரண் பேசிக்கொண்டே படிகளில் இறங்கினான்.
“ஆனாலும் உனக்கு தைரியம் ஜாஸ்தி தாண்டா மச்சான்”, சிரித்துக்கொண்டே கூறினான் அகரன்.
“என்னைவிட உனக்கு தான் ஜாஸ்தியா இருக்கு மச்சான். நீ அந்த ராட்சசிய பாக்கற பார்வையே சரியில்லை. என்ன விஷயம்?”,சரண் இப்பொழுது ஒரு புருவம் உயர்த்தி வினவினான்.
“அப்படில்லாம் ஒன்னும் இல்ல மச்சான். பாத்து ரொம்ப வருஷம் ஆச்சில்ல அதான்…..”, அகரன் இழுத்தான்.
“சரி சரி. பாத்து ஜாக்கிரதையா நடந்துக்க. விதின்னு ஒன்னு இருக்கு அது எப்படி இருக்கோ பாக்கலாம்”, சரண்.
“மச்சான் எனக்கு நீ சப்போர்ட் பண்ணமாட்டியா டா?”, அகரன்.
“நான் உனக்கு பண்றது இருக்கட்டும். நீ எனக்கு ரீனாவ கரெக்ட் பண்ண ஹெல்ப் பண்ணு”, சரண்.
“அடேய் என்னடா? அதுல்லாம் உன் சாமர்த்தியம் வீட்ல பேசி ஓகே பண்றதுக்கு வேணா ஹெல்ப் பண்ணுவேன்”, அகரன்.
“இது போதும் மச்சான் எனக்கு”, சரண் சிரித்துக் கொண்டே படியிறங்கினான்.
அவர்களுக்கு முன் கீழே வந்த நதி நேராக சமையற்கட்டிற்குள் சென்றாள். அங்கே திலகவதி இவளுக்கு பிடித்த வகைகளை சமைத்து கொண்டு இருப்பதைக் கண்டு குஷியாகி அவரிடம் நலம் விசாரித்தாள்.
“திலாத்தை…. என்ன பண்ணிட்டு இருக்கீங்க?”, நதியாள் அவரின் கழுத்தைக் கட்டிக் கொண்டுக் கேட்டாள்.
“வாடா நதிமா. உனக்கு பிடிச்ச டிஷ் எல்லாம் சமைச்சிட்டு இருக்கேன் டா. பாட்டி உனக்காக இளநீரும், நுங்கும் கொண்டு வந்து இருக்காங்க சாப்பிடு. சமையல் ரெடியானதும் சாப்டலாம்”, திலகவதி.
“அத்தை …..எத்தனை வருஷம் கழிச்சி வந்து இருக்கேன் இப்பக்கூட என்கூட பேசாம சமையல்ல மூழ்கிட்டா எப்படி?”, நதியாள் சிணுங்கியபடி முகத்தைச் சுருக்கினாள்.
“அடடா…..என் ராஜாத்திக்கு ஏன் முகம் சுருங்குது? சமையல் முடிச்சிட்டா உன்கூட தான் மதியம் புல்லா. உன்கிட்ட நிறைய பேசணும்”,திலகவதி.
“சரித்தை. நானும் ஹெல்ப் பண்றேன். சொல்லுங்க என்ன பண்ணட்டும்?”, நதியாள்.
“இப்ப ஒன்னும் நீ பண்ணவேணாம். போய் பாட்டி குடுக்கறத சாப்பிடு. அவங்க கூட பேசிட்டு இரு. இல்லைன்னா அகரன கூட்டிகிட்டு வயலுக்கு போயிட்டு வா. தாத்தா அங்க தான் போய் இருக்காங்க மாங்கா தோப்பு பக்கத்துல”, திலகவதி.
“குட் ஐடியா அத்தை. சரி நான் போயிட்டு வரேன். நீங்க மதியம் புல்லா என்கூட தான் டைம் ஸ்பெண்ட் பண்ணணும் மறந்துடாதீங்க”, எனக் கூறியபடி ஓடினாள்.
“ஓடாத நதிமா. பாத்து போடா”, திலகவதி ,” இன்னும் அப்படியே தான் இருக்கா கால் ஒரு இடத்துல நிக்கமாட்டேங்குது”, என மனதில் நினைத்தபடி தன் வேலையைத் தொடர்ந்தார்.
“ஹாய் மீனா….. எனக்காக என்ன வச்சி இருக்க குடுக்க?”, நதியாள் பின்னிருந்துக் கட்டிக்கொண்டுக் கேட்டாள்.
“என் தங்கம்….உனக்கு என்ன வேணும் சொல்லு. உனக்கு இல்லாததா?”, என அவளின் கன்னம் வழித்து முத்தமிட்டவர், அவளை முன்னே தன்னருகில் அமரவைத்துக் கொண்டார்.
“இப்படி பட்டுன்னு கேட்டா நான் என்ன கேக்கறது? சரி யோசிச்சி கேக்கறேன் அப்ப நீ முடியாதுன்னு சொல்லக்கூடாது”, நதியாள்.
“சரி டி . இந்தா நுங்கு உனக்கு புடிக்குமே. நீ வச்ச மரத்தோட நுங்கு”,மீனாட்சி ஒரு தட்டில் இருந்ததை எடுத்துக் கொடுத்தார்.
“ஐஐஐ…. நான் வச்ச மரத்தோட நுங்கா? பாக்கவே ஜெல்லி மாதிரி சூப்பரா இருக்கு இப்பவே எச்சில் ஊருது”, என எடுத்து வாயில் வைத்தாள் நதி.
“ஹேய் அந்த தோல எடுத்துட்டு சாப்பிடு. அப்படியே திங்காத மாடு மாதிரி”, சரண் கூறிக்கொண்டே வந்தான்.
“அடேய் வாய மூடு டா. புள்ள திங்கறப்ப தடங்கல் சொல்லிட்டு”,மீனாட்சி சரணை அதட்டினார்.
“நீ இரு மீனா. அடேய் சரணா…. நுங்க தோலோட தான் சாப்டணும். அத முதல்ல நீ தெரிஞ்சிக்க. வெறும் இனிப்போட மட்டும் சாப்டகூடாது. இந்த தோல் சாப்டா தான் நல்லது. இத மட்டும் இல்ல உருளைகிழங்குல மாம்பழம்ல இருந்து சில பொருள் தோலோட சேர்த்து தான் சாப்டணும். அத முதல்ல நீ தெரிஞ்சிக்க. நீ எருமை மாதிரி வளர்ந்துட்டு என்னை மாடுங்காத”, நதியாள்.
“அப்படி சொல்லுடி என் ராசாத்தி”,என நெட்டி முறித்தார் மீனாட்சி.
“போதும் போதும் உடனே அவள கொஞ்சாதீங்க. ஏன் மீனு உனக்கு எத்தனை தடவை நான் வெத்தலைல இருந்து சுருட்டு வரைக்கும் வாங்கி குடுத்து இருக்கேன். உனக்கு என்மேல பாசமே இல்லையா”, சரண் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டுக் கேட்டான்.
“அந்த மனுசனுக்கு சுருட்ட வாங்கி குடுத்தது நீ தானா? அம்மாடி திலகா அந்த உருட்டு கட்டைய கொண்டு வா இந்தா சிக்கிட்டான் எடுபட்ட பய”, என அவனின் சட்டையைப் பற்றிக்கொண்டு உள்ளே குரல் கொடுத்தார்.
“அய்யய்யோ… ஒலறிட்டேனே. டேய் மச்சான் காப்பாத்து டா”, என அகரனிடம் கொஞ்சினான்.
“எத்தனை தடவை சொல்றது அவருக்கு சுருட்டு வாங்கிதராதன்னு. வாங்கு அப்பத்தான் நீ திருந்துவ”, அகரன்.
“அடேய்…. இந்தா என் தங்கச்சி என்னை காப்பாத்துவா… யாள் குட்டி அண்ணன காப்பாத்து டா”, நதியைப் பார்த்துக் கொஞ்சினான் சரண்.
“எதுக்கு? என் சுந்தாக்கு உடம்புக்கு முடியாம போனா நீயா வந்து சரி பண்ணுவ? மீனா நான் விறகுகட்டைய எடுத்துட்டு வரேன் நல்லா சாத்து. ஆறு மாசத்துக்கு இவன் எந்திரிக்க கூடாது”, எனக் கூறி பின்பக்கம் ஓடினாள் நதி.
“அடிபாதகத்தி…. என்னை காப்பாத்த யாருமே இல்லையா?”,என சரண் கத்தினான்.
“என்னடா சத்தம்? யார்கிட்ட இருந்து உன்ன காப்பாத்தணும்?”,என கேட்டபடி சிதம்பரம் வெளியே வந்தார்.
“மாமா….என் தெய்வமே….. பாட்டிகிட்ட இருந்து காப்பாத்துங்க மாமா. பாட்டியும் பேத்தியும் சேர்ந்து என்னை கொல்ல திட்டம் போடறாங்க”, சரண் அவரிடம் மன்றாடினான்.
“நீ என்ன பண்ண ? அத சொல்லு முதல்ல?”,என பஞ்சாயத்துக்களில் பேசும் தோரணையில் கேட்டார்.
“போயும் போயும் இவர நம்பினேன் பாரு. இவரு ஆலமரத்துக்கு கீழ பஞ்சாயத்து கூட்டி தான் தீர்ப்பு சொல்லுவாரு போலவே. அதுக்கு இவங்க கிட்டவே அடி வாங்கிக்கலாம் கொஞ்சம் பாவம் பாப்பாங்க அடிவாங்கறப்ப கத்தினா”, என முணுமுணுத்தான் சரண்.
“ஒன்னும் இல்ல மாமா. இந்த வருஷம் ஆடல் பாடல் நிகழ்ச்சி இருக்கா மாமா?”, சரண்.
“உன் அப்பா கிட்ட கேட்டு சொல்றேன் மாப்பிள்ளை. அவர் சரின்னு சொன்னா வச்சிடைலாம். இல்லைன்னா நீ கேட்டன்னு சொல்லி வைக்க சொல்றேன். சந்தோஷம் தானே”, சிதம்பரம் சிரித்தபடி கேட்டார்.
“எனக்கு வள்ளி தெய்வானை முருகன் நாடகம் போட்டாலே போதும் மாமா. இதையெல்லாம் ஏன் அப்பா வரைக்கும் கொண்டு போயிகிட்டு. நீங்க பஞ்சாயத்துக்கு கிளம்புங்க நேரமாச்சி. அதோ உங்க குள்ளநரி கூட்டம் வந்துடிச்சி”,என பின்னால் வந்தவர்களை பார்த்துக் கூறினான் சரண்.
“உன் அப்பா ஏன் இன்னும் உன்னை பொறட்டி எடுக்கறாருன்னு இப்பதானே தெரியுது. பாத்து மாப்பிள்ளை அடி வாங்கறப்ப சூதானமா இருந்துக்க”, என சிதம்பரம் சிரித்துக்கொண்டே கூறிச்சென்றார்.
“குடும்பமே என்னை வச்சி செய்யுதே.. ஆண்டவா எனக்கு ஏன் இந்த சோதனை?”, சரண்.
“போதும் டா உன் நாடகம். இத சாப்பிட்டு நதிய கூட்டிகிட்டு வயலுக்கும் மாந்தோப்புக்கும் போயிட்டு வாங்க”, எனத் திலகவதி வந்து இளநீர் அனைவருக்கும் தம்ளரில் கொடுத்துவிட்டுச் சென்றார்.
“நான் வீட்டுக்கு போறேன். இவனே அவள இழுத்துட்டு போகட்டும்”, என கூறி நுங்கை வாயில் வைத்துக் கொண்டு எழுந்தான்.
“டேய் சரணா நீ வரலியா?”, எனக் கேட்டபடி நதி வந்து நின்றாள்.
“நான் வரல”, சரண்.
நதியாள் மொபைல் எடுத்து ,”பெரியப்பா”, என ஆரம்பிக்க,” வரேன் வந்து தொலையறேன்”, என சரண் கூறி அமர்ந்தான்.
“குட் பாய். வள்ளியக்கா அந்த தண்ணி பாட்டில இவன்கிட்ட குடுங்க அவன் தூக்கிட்டு வரட்டும்”,எனக் கூறி மீனாட்சி பாட்டி பக்கம் உட்கார்ந்தாள் நதி.
“ஙேஙே…”,என முழித்தான் சரண்.