81 - ருத்ராதித்யன் தூரத்தில் தெரியும் மலைமுகடுகளை பார்த்தபடி, பறவைகளின் சத்தத்தை உன்னிப்பாக கவனித்துக் கொண்டே அரசகேசரியை அருகே அழைத்தான். “இங்கே பார் நண்பா.. என்னவோ எனக்கும் உனக்கும் பிரிக்கமுடியாத பந்தம் உருவானது போல இருக்கிறது. நமது நாடும், மொழியும், வாழ்வியல் முறைகளும் வேறு வேறாக இருந்தாலும் நீ என் மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறாய். நான் புத்தியில் நினைப்பதை நிஜத்தில் நடத்தி காட்டுகிறாய்.. நமது லட்சியம் பெரிதாக இருக்க வேண்டும். எனக்கு ஏனோ இந்த இயற்கை என்ற விஷயமே பிடிப்பதில்லை.. பல வித்தியாசங்களையும், ஏற்ற தாழ்வுகளையும் இது வைத்துக் கொண்டு நம்மை...
11 - வேரோடும் நிழல்கள் மலை ஏறப் போகலாம் என்று விஷாலியும், கிரிஜாவும் கூறியதும் நீரஜும் அவர்களுடன் அதற்கான முன்னேற்பாடுகள் செய்ய ஏதுவான விவரங்களை தேடத் தொடங்கி ஓர் மலை ஏறும் நிறுவனத்தை தேர்ந்தெடுத்து, அவர்கள் கொடுத்துள்ள இடங்கள் மற்றும் போய் வரும் நாட்கள் போன்றவற்றை பார்த்து விவாதித்துக் கொண்டிருந்தனர். அந்த சமயம் நிழலினி விஷாலிக்கு அலைபேசியில் அழைத்தாள். “விஷா.. எங்க இருக்க? இங்க உன் அம்மா உன்னை சாப்பிட கூப்பிடறாங்க..”“சரி பத்து நிமிஷத்துல வரேன். நீங்க சாப்பிடுங்க..” என நேரம் பார்த்தபடி கூறினாள். “இல்ல நீ வா நம்ம ஒண்ணா சாப்பிடலாம். நான்...
80 - ருத்ராதித்யன் நரசிம்மனும் மகதனும் கிழக்கு பக்கமாக தங்களது பயணத்தைத் தொடர்ந்துக் கொண்டிருந்தனர். வடக்கும், வடக்கிழக்கும் முடிந்து நாட்டினை வலப்பக்கமாக சுற்றும்படியாக இந்த பயணம் இனி தொடரும். கோவிலை வலம் சுற்றுதல் போல நாட்டினை வலம் சுற்றி அரியணையில் ஏறும் வைபவம் இது. இதற்கிடையில் அவர்கள் இருவரும் பல இன்னல்களையும், சவால்களையும், ஆபத்துகளையும் கடந்து இந்த பயணத்தை வெற்றிகரமாக முடிக்கவேண்டும். நரசிம்மனும், மகதனும் நீண்ட நாட்கள் கழித்து ஒன்றாக நேரம் செலவழிப்பது போலவும் இது அமைந்ததால், இருவரும் ஒருவரின் இருப்பை மற்றவர் அனுபவித்துக் கொண்டிருந்தனர். மகதன் விளையாடி வம்பிழுத்தால் நரசிம்மன் கண்டிப்பதும்,...
79 - ருத்ராதித்யன் “கூறுங்கள் வனயட்சி.. பெரியம்மா என்ன மந்திரங்களை கற்றார் ? யார் அவரை கொன்றது ? இந்த விஷயம் மட்டும் ஏன் யாரும் எங்கள் யாரிடமும் கூறுவதில்லை ?பைரவக்காட்டினை பற்றிய வதந்திகள் உண்மை தானா ?”, என யாத்திரை மெல்ல திடமாக ஒவ்வொரு கேள்வியாக கேட்டாள். “நீ இன்னும் உறங்கவில்லையா யாத்திரை ?”, வனயட்சி எதிர் கேள்விக் கேட்டார். “எனது கேள்விகளுக்கான பதில் தான் முதலில் கேட்க விழைகிறேன் யட்சி.. இனியும் காலம் தாழ்த்தாமல் எங்களுக்கு அந்த மர்மத்தினை விளக்கவேண்டும்.. இதோ உங்களின் செல்ல மகள் ஆருத்ராவும் வந்துவிட்டார் …”, என...
78 - ருத்ராதித்யன் இங்கே மகரயாளியுடன் கூட்டப்பாறையின் உள்ளே சென்ற நரசிம்மனை காண்போம் வாருங்கள்... மகதன் நரசிம்மனை கண்ணின் இமையாக பாதுகாத்துக் கொண்டு உள்ளே நடந்தான். வழியில் பல யாளிகள் அவர்களை உண்ணும் ஆவலோடு முன்னே வருவதும், மூத்த யாளியின் சத்தத்தில் ஒதுங்கி நிற்பதுமாக அந்த இடத்தின் மையப்பகுதிக்கு சென்றுச் சேர்ந்தனர். “மகதா ... பார்த்தாயா எத்தனை யாளிகள் இங்கே இருக்கின்றன .. இதில் சிலத்தை நாம் வசப்படுத்தி பழக்கப்படுத்தினாலும் போதும் நமது அத்தனை பொக்கிஷங்களும் மிகப்பெரும் பாதுகாப்பை பெரும். நாமும் நமது வீரர்களை வேறு பணிக்கு அமர்த்தி இன்னமும் நாட்டினை வளமாக்கும் முயற்சியில்...
10 - வேரோடும் நிழல்கள் “எப்படி சொல்ல வைப்பீங்க?” விஷாலி கேட்டாள். “தெரியல. ஆனா அவ மனசார என்னை நேசிச்சி கல்யாணம் பண்ணிக்குவா.. அதுக்கு எல்லா வகைலையும் நான் முயற்சி எடுப்பேன்.”“அவ உங்க முகத்தையே பாக்கமாட்டா அப்படி இருக்கறப்போ எப்படி அவள காதலிக்க வைப்பீங்க?” விஷாலி காட்டத்துடன் கேட்டாள். “எம்மா.. ஏன்மா உனக்கு உன் ஃப்ரெண்ட் வாழ்க்கை மேல அக்கறை இல்லயா?” பார்த்திபன் கேட்டான். “இருக்கு அதனால் தான் இவ்ளோ பொறுமையா நான் பேசிட்டு இருக்கேன். சொல்லுங்க மிஸ்டர். நீரஜ் எப்படி அவள சம்மதிக்க வைப்பீங்க?” என விஷாலி மெல்ல அவன் அருகே வந்தாள். நீரஜ் என்ன...
77 - ருத்ராதித்யன் “தங்களுக்கு பரிட்சயம் தேவையில்லை என்று புரிகிறது. ஆனால் வனயட்சி இப்படியொரு முகம் கொண்டிருக்கிறார் என்று இன்று தான் நான் அறிகிறேன்.. நான் சிங்கத்துரியன் பற்றி கூறும்பொழுது கூட தாங்கள் தெரிந்ததாய் கூறவில்லையே தமையா ?”, ஆருத்ரா கேட்டாள். “இவரின் ஓவியம் நமது தலைமை வைத்தியசாலையில் இருக்கிறது ருத்ரா... அங்கே பார்த்திருக்கிறேன்.. வனயட்சி எனும் பெயர் பலரும் கொண்டிருக்கிறார்கள் என்பதால் நான் எதுவும் கேட்கவில்லை. நேரில் கண்டதும் தான் தெரிந்தது அவர் தான் இவரென... இவர் மகாராணியாரின் நெருங்கிய தோழியும் அல்லவா ?”, எனக் கூறி மெல்ல சிரித்தான். “அதனால் தான்...
9 - வேரோடும் நிழல்கள் “எனக்கு புரியல. கொஞ்சம் புரியரமாதிரி சொல்றீங்களா டாக்டர்?” என நீரஜ் கேட்டான். “இது சின்ன வயசுல ஏற்பட்ட மனவழுத்தம்னால உண்டாகற ஒரு மனசஞ்சலம். அவங்க உடம்புலையும், மனசுலையும் அதோட தாக்கம் அப்படியே தங்கிடறதால அவங்களோட இயல்பு பாதிக்கப்படும். அந்த பாதிப்பு தான் இது..”“மனோவியாதி அஹ் ?” பார்த்திபன் கேட்டான். “பார்த்தி..” என நீரஜும், கிரிஜாவும் ஒன்றாக அவனை முறைத்தனர். “இது மனபாதிப்பு தான். சின்ன வயசுல அவங்க அப்பா அம்மா இவங்க கண்முன்னாடி போட்ட சண்டைங்க தான் இவங்களுக்குள்ள அழுத்தமா தங்கிடிச்சி. தவிர ஒரே பொண்ணா போனதால இவங்களுக்கு ஏற்கனவே...
76 - ருத்ராதித்யன் “மகதா .. ““உர்ர் ர் ர் ர் ர் ர் ர் ர் ர்ர்... “, என உருமியபடி மகதன் நரசிம்மனின் முன்னே நின்றான். “இருட்டினில் ஜொலித்த மஞ்சள் விழிகள் மெல்ல வெளிச்சத்தில் வந்தன. அதன் நீளமும், அகலமும், உயரமும் கண்ட நரசிம்மன் மனம் சந்தோஷத்தில் துள்ளியது. “கண்டுவிட்டேன் .. மகதா .. கண்டுவிட்டேன் ... “, என மகதனைத் தாண்டி முன்னே சென்றவனை மகதன் தடுத்து தன் பின்னே நிற்கவைத்தான். மகதனின் செயலை உள்வாங்கியபடி நரசிம்மனும் பின்னால் நின்று எதிரே வந்த மூப்பினைக் கொண்ட மகரயாளியைக் கண்டான். அதன் பின்னே...
மீன் ரோஸ்ட் தேவையான பொருட்கள்: மீன் துண்டுகள் - 1 கிலோதூள் உப்பு - 1 ½ டீ. ஸ்பூன் மிளகாய் தூள் - 3 ½ டீ. ஸ்பூன்எண்ணெய் - தேவைக்கேற்ப.. செய்முறை : மெல்லிய துண்டுகளாக மீனை வெட்டி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். மீனை தயிர் மற்றும் கல் உப்பு போட்டு கழுவினால் அந்த நாற்றம் முழுதாக மறைந்து, சாப்பிடும் போது கவுச்சிவாடை வராது. முதலில் உப்பு, மிளகாய் தூள் இரண்டையும் கொஞ்சமாக நீர் சேர்த்து கெட்டியாக கலக்கிக் கொள்ளவும். மீன் துண்டினில் எல்லா பக்கமும் நன்றா தடவிக் கொள்ளவும். மசாலா தடவிய...
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….