17 – அகரநதி
17 – அகரநதி காதலில் விழுந்த அகரன் முதல் முறையாக நதியாளின் முன்நெற்றியிலும், கன்னத்திலும் இதழ் முத்திரைப் பதித்தான்.அகரனின் செயலில் திகைத்து நின்ற நதி என்ன சொல்வதென அறியாது உறைந்து நின்றாள்.அகரனும் அவ்விடம் விட்டு நகராது அங்கேயே அவளின் முகத்தை பார்த்தபடி நிற்க, இப்படியே இன்னும் சில நொடிகள் சென்று இருந்தாலும் என்ன நடந்து இருக்குமோ?நல்லவேலை சரண் சத்தம்போட்டு அவர்களின் நிலையைக் கலைத்து," யாள்...உன்ன பாக்க வரதன் வந்து இருக்கான். போய் பேசு.. நான் ஜுவல்ஸ் எடுத்துட்டு வரேன். டேய் அகர் தேவுக்கு உன் டிரஸ் குடு. சேஞ்ச் பண்ணணுமாம்". நதி சற்றுக்...