10 – மீள்நுழை நெஞ்சே
10 - மீள்நுழை நெஞ்சே துவாரகா அப்படி சொன்னதும் அவளின் மனதில் இருக்கும் வேதனையை நன்றாகப் புரிந்துக் கொள்ள முடிந்தது. இத்தனை வலிகளும் உள்ளுக்குள்ளே வைத்துக்கொண்டு வெளியே அவள் சகஜமாக இருக்க முடியாமல் தடுமாறும் காரணமும் புரிய ஆரம்பித்தது. “இல்ல ராகா.. உன் விருப்பம்ன்னு சொல்ல சொன்னாரு..”, என அவளின் முகம் பார்த்தபடிக் கூறினார் அன்பரசி. வன்சோகம் இழைந்த மென்னகை அவளிடம் இருந்து வெளிவந்தது. அவளுக்கு நன்றாகத் தெரியும்.. அங்கே நடக்கும் பிரச்சனைகளும், அங்கிருப்பவர்களின் எண்ணமும். அதில் சிறிது தனக்கு ஆசுவாசம் கொடுக்க எண்ணும் ஜீவன்கள் தனது பெற்றவர்கள் தான். ஆனால் அவர்களையும் சூழ்நிலைக்...



