வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..
இது தான் பதிப்பகம் போட்ட முதல் புத்தகம். இந்த கதை அழகிய சங்கமம் போட்டில , வித்தியாசமான கதை கரு பிரிவுல தேர்ந்து எடுக்க பட்ட கதை. ஸ்ரீகலா மேடம் தளத்துல போன தீபாவளில ஆரம்பிச்சி நாலு மாசம் நடந்த போட்டில நானும் கலந்துகிட்டேன்.
பெருசா இந்த கதை எல்லாரையும் சென்று சேரல தான், ஆனா படிச்ச அத்தனை பேருக்கும் இதுல இருந்து ஏதோ ஒரு ஒரு விஷயம் பிடிச்சி இருந்ததுன்னு அவங்க குடுத்தா விமர்சனம் ல புரிஞ்சது. “காதல் இல்லாத கதை” இது தான் முதல் விஷயம்.
இரண்டாவது இது நிகழ்வு சார்ந்த கதை. ஒரு நிகழ்வுக்காக எல்லாரையும் ஒரே புள்ளில கொண்டு வந்து நிறுத்தும்.
ஒரு வித்தியாசமான முயற்சி இதுல நான் செஞ்சி இருக்கேன்.. மர்மம், ஆன்மீகம், விறுவிறுப்பு, சாகசம் எல்லாமே கலந்த ஒரு கலவையா இது இருக்கும்.
இது இப்போ ஸ்ரீகலா பதிப்பகம் வெளியிட்டு இருக்காங்க..
அந்த கதையின் சில துளிகள் :
“என்னப்பா சொல்றீங்க…. அக்கா இருக்க இடத்த இவ எப்படி கண்டுபிடிக்க முடியும்?”, பாலாவும் புரியாமல் கேட்டாள்.
“வல்லகி தெருமுனைல உட்கார்ந்திருந்த இடத்துல தான் அரசி குண்டடிப்பட்டு கிடந்தா… அந்த இடத்துல வச்சி தான் நாச்சியாவ கடத்தி இருக்காங்க….”, தமிழோவியன்.
“ஆனா…. அப்பா…. அக்கா இப்ப எங்க இருக்காங்க ன்னு அவளால எப்படி சொல்ல முடியும்?”, பாலா.
“முடியும். இன்னும் கொஞ்சம் பயிற்சி எடுத்து அவ மனச ஒருமுகப்படுத்தி காத்தோட பேசணும்,பழகணும், உறவாடணும்….”, ஒவ்வொரு வார்த்தையிலும் அழுத்தம் கூட்டி உரைத்தார்.
“அது எப்படிப்பா நான் பண்ண முடியும்?”, வல்லகி.
“உன் உடம்புல ஏற்பட்டிருக்கற மாற்றங்கள் உன்னால முடியும்னு சொல்லுது செல்லம்மா…. சாப்பிடு…நமக்கு நிறைய வேலை இருக்கு…. தர்மதீரன் கொஞ்ச நேரத்துல வந்துடுவாரு… இன்னும் ஒரு சிலர நாம போய் சந்திக்கணும்… “, என யோசனையில் ஆழ்ந்தபடியே பேசினார்.
“பல உயிரைக் காவு வாங்கி பிறந்தவன், வளர்ந்தவன்…. இப்போது மற்ற உயிர் காக்க, இன்னுயிர் இழுத்துவைக்க போராடுகிறான்…. ஐயனே ஈசா….”,என ஆகாயத்தைப் பார்த்துக் கையெடுத்து கும்பிட்டுவிட்டு, இடைக்கச்சையில் இருந்த மூலிகை எடுத்து காயத்தில் பிழிந்துவிட இரத்த கசிவு சில நொடிகளில் நின்றது.
“நாகேஷ்வரா….. இந்தா இதை நாளுக்கு நான்கு வேலை சிறுசங்கு அளவு வாயில் புகட்டு…. வேறெந்த ஆகாரமும் வேண்டாம். கண்விழித்த பின் இளஞ்சூட்டில் மஞ்சள் மிளகு பூண்டு சேர்த்து பாலில் நன்றாக காய்ச்சி வடிகட்டி குடித்தபின் மற்ற உணவு எடுக்கலாம். பத்து தினங்களில் கண் விழிப்பான். உடலில் உள்ள விஷம் முறிந்தபின் எழுந்து அமர்வான்”, என ஒருக் குடுவையை அவனிடம் கொடுத்து விட்டு விவரம் கூறினார்.
“உங்களுக்கு என் பேரு?”, என தயங்கித் தயங்கிக் கேட்டான்.
“அறிவேன்… விரைந்து நாச்சியாவின் இல்லத்தில் இவனை சேர்த்திடு. அவர்கள் பார்த்துக்கொள்வர்”, எனக் கூறிவிட்டு நிற்காமல் வேகமாக நடந்துச் சென்று மரங்களுக்குப் பின்னே மறைந்துப் போனார்.
இந்த கதையை முழுசா படிக்கணுமா ?
இந்த கதை படிச்சிட்டு உங்க கருத்துக்களை மறக்காம சொல்லுங்க..
Buy this book at :