5 – அர்ஜுன நந்தன்
5- அர்ஜுன நந்தன் பின் மாலை நேரத்தில் பரிதி தன்னைத் தேடி வரும் காரணம் அறியாமல் யோசனையுடன் காத்திருந்தார் டிஐஜி சர்வேஷ்வரன். மிகவும் நேர்மையானக் காவல்த் துறை அதிகாரி. அதனால் பலப் பிரச்சனைகள் மற்றும் ஊர்மாற்றங்கள், மேலிட பகைகள் என எதிலும் குறையில்லாமல் இன்றும் நேர்மை தவறேன் என வாழ்ந்து வருபவர். தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் பல இடங்களில் பணி செய்தக் காரணத்தால் பல விவரங்கள், பல பெரும் புள்ளிகள் பற்றி அறிந்தவர். சில தகவல்களை இவரிடம் அறியவே வந்துக் கொண்டு இருக்கிறாள் பரிதி. தஞ்சை மாவட்டக் கலெக்டராக அமர்ந்த பின் பரிதியின் நடவடிக்கைகளைக்...



