5- அர்ஜுன நந்தன்
பின் மாலை நேரத்தில் பரிதி தன்னைத் தேடி வரும் காரணம் அறியாமல் யோசனையுடன் காத்திருந்தார் டிஐஜி சர்வேஷ்வரன்.
மிகவும் நேர்மையானக் காவல்த் துறை அதிகாரி. அதனால் பலப் பிரச்சனைகள் மற்றும் ஊர்மாற்றங்கள், மேலிட பகைகள் என எதிலும் குறையில்லாமல் இன்றும் நேர்மை தவறேன் என வாழ்ந்து வருபவர்.
தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் பல இடங்களில் பணி செய்தக் காரணத்தால் பல விவரங்கள், பல பெரும் புள்ளிகள் பற்றி அறிந்தவர். சில தகவல்களை இவரிடம் அறியவே வந்துக் கொண்டு இருக்கிறாள் பரிதி.
தஞ்சை மாவட்டக் கலெக்டராக அமர்ந்த பின் பரிதியின் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார் சர்வேஷ்வரன். ஆதலால் முக்கியக் காரணமின்றித் தன்னைத் தேடி வரமாட்டாள் என ஊகித்திருந்தார்.
இல்லத்தின் வாசலில் கார் வந்ததும் சர்வேஷ்வரன் வரவேற்கச் சென்றார்.
டிஐஜி,” வாங்க மேடம். சொல்லி இருந்தா நானே உங்கள பாக்க ஆபிஸ் வந்து இருப்பேன்.“
பரிதி ,” ஏன் நான் வரக்கூடாதா டிஐஜி சார். இதுவரைக்கும் உங்கள மட்டும் தான் பாத்து இருக்கேன், உங்க பேமிலியையும் மீட் பண்ணலாம்னு வந்தேன்”.
டிஐஜி,” தாராளமா நீங்க வரலாம் மேடம். இவங்க என் மனைவி. நல்லா காப்பி போடுவாங்க போடச் சொல்லலாமா ? “
அவர் மனைவியும் பரிதியை வரவேற்று, பின் காப்பி தயாரிக்கச் சென்றுவிட்டார். பரிதியும் சிரித்து வரவேற்பை ஏற்றுக் கொண்டாள்.
பரிதி ,” உங்க பசங்க யாரும் இங்க இல்லியா ?”
டிஐஜி ,” பையன் ஒன்னு பொண்ணு ஒன்னு. ரெண்டு பேரும் வெளிநாட்ல வேலைல இருக்காங்க. அவங்க இஷ்டப்படி கொஞ்ச நாள் சுத்திட்டு வரதா சொன்னாங்க, சரினு அனுப்பி வச்சிட்டேன். செலவு செய்ய காசு கேட்க கூடாதுனு சொல்லிட்டதால வேலைக்கு போய் சுத்திட்டு இருக்காங்க”
பரிதி ,” ஹாஹா நல்ல ஸ்கீம் ஆ இருக்கு இது. நல்ல புத்திசாலிங்கதான். “
காப்பி குடித்துவிட்டு டிஐஜி “ என்ன விஷயம் மேடம் ?”.
பரிதி ,” மேடம் வேணாம் அங்கிள் பரிதி-னே கூப்பிடுங்க.”
டிஐஜி, ” சரி சொல்லுமா. இந்த நேரத்துல என்னை பாக்கற அளவுக்கு என்ன முக்கியமான விஷயம்?”
பரிதி ,” ஒரு சிலரோட டீடைல்ஸ் வேணும் அங்கிள். உங்களுக்கு நல்லா அவங்களப் பத்தி தெரியும்னு தான் கேட்க வந்தேன்”
டிஐஜி,” யார பத்தி ?”
பரிதி ,” காவியா ஜூவல்லர்ஸ் ஓனர் திரு.சந்திரகேசவன், சித்திரகலா கிரானைட்ஸ் ஓனர் திரு.சந்தனபாண்டியன், Ex.மினிஸ்டர் திரு. சேரலாதன்.”
டிஐஜி சிரித்து கொண்டே,” என்ன விஷயமா இவங்கள பத்தி விசாரிக்கறனு தெரிஞ்சிக்கலாமா பரிதி !?”
பரிதி,” இன்னிக்கு கும்பகோணத்துல ஒரு கோயிலுக்கு போனேன். அங்க சந்தேகபட்றமாதிரி சிலர் வேலை செஞ்சிட்டு இருந்தாங்க. தொல்பொருள் ஆராய்ச்சி துறைல இருந்து வந்ததா பொய்யான லெட்டர்ல. உடனே எல்லாரையும் அரெஸ்ட் பண்ணிட்டேன். ஆனா.. “.
டிஐஜி,” ஆனா ….?”
“அந்த லெட்டர்ல ரிபர் பண்ணி சைன் போட்டு இருந்தது மினிஸ்டர் சேரலாலன். ஆளுங்க சித்திரகலா கிரானைட்ஸ் லேபர்ஸ். அப்பப்ப காவியா ஜூவல்லர்ஸ் ஓனர் வந்து இவங்கள பாத்து வேணும்கிறத செய்யச் சொல்லி பணம் குடுத்துட்டு போய் இருக்காரு.”
டிஐஜி யோசனையுடன் அமர்ந்திருந்தார்.
டிஐஜி ,” சேரலாதன் , சந்தனபாண்டியன் சரி. இதுல சந்திரகேசவன் ஏன் வரனும்? “
பரிதி ,” அதுக்காக தான் உங்கள தேடி வந்தேன் அங்கிள் “.
டிஐஜி,” கொஞ்சம் இரு மா” .
அலமாரியில் ஏதோ தேடி எடுத்து வந்து பரிதியிடம் கொடுத்தார்.
பரிதி பிரித்து படித்து பார்த்தாள். சந்தனபாண்டியன் மற்றும் சேரலாதன் பற்றிய முழு விவரங்களும் இருந்தது. அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் , லீகல் மற்றும் இல்லீகல் கான்டாக்ட்ஸ் , அவர்கள் மேல் நிலுவையில் உள்ள கேஸ் முதற்கொண்டு.
பரிதி,” இவ்ளோ டீடைல்ஸ் வச்சி இருக்கீங்க ஏன் இன்னும் அரெஸ்ட் பண்ணல ?“.
டிஐஜி,” நான் டிஐஜி ஆகி 2 வருஷம் ஆகுது. ஆனாலும் இவங்கள நிரந்தரமா தண்டனைக் குடுத்து உள்ளப் போட முடியல. எப்படியாவது கடைசி நிமிஷத்துல தப்பிச்சிட்டே இருக்காங்க. சேரலாதனுக்கு இன்னிக்கும் கட்சில செல்வாக்கு இருக்கு, அதனாலயே தப்பிச்சிடறான். சந்தனபாண்டியன் ஒரு தாதா, சுத்தி இருக்கற 3 டிஸ்ட்ரிக்ட்ல அவன் சொல்றது தான் நியாயம். எங்க டிபார்ட்மெண்ட்லயே நிறைய கைகூலிங்க அவனுக்கு இருக்காங்க. சோ விஷயம் எவ்ளோ கான்பிடன்சியல்ஆ வச்சாலும் அவனுக்கு போயிறுது அவனும் எஸ்கேப் ஆகிடறான்” .
“அந்த வயலூர் மர்டர் கேஸ்ல மட்டும் 2 தடவ ஸ்பெஷல் டீம் ரெடி பண்ணி எவிடன்ஸ் கலெக்ட் பண்ணி கோர்ட்ல ஒப்படைச்சோம். ஈஸியா நான் ஊர்லயே இல்லனு சொல்லி வெளிய வந்துட்டான். அதுக்கப்புறம் இன்னிக்கு வரை ஜாலியா தான் அவன் சுத்திட்டு இருக்கான். “
பரிதி,” அப்ப நான் உங்கள பாக்க வந்தது சரிதான். முழுசா தெரிஞ்சிக்காம கை வைக்க கூடாது . கரெக்ட் தானே அங்கிள்?”
டிஐஜி ,” ஹாஹா சரி தான். இப்ப நான் என்ன பண்ணனும் சொல்லு ?”
பரிதி ,” இன்னிக்கு அரெஸ்ட் பண்ண 15 பேர்ல ஒருத்தன மட்டும் உங்க பர்ஸனல் கஸ்டடில வச்சிருங்க. மத்த பசங்கள தேடி அவங்க வந்தா அப்ப பேசிக்கலாம். இது நமக்குள்ள மட்டும் இருக்கட்டும். இந்த கேஸ் விஷயமா நிறைய இன்னும் கண்டுபிடிக்கணும் .எல்லாத்தையும் தெரிஞ்சிகிட்டு அவனுங்கள என்ன பண்றதுனு முடிவு பண்ணிக்கலாம் “.
சில உத்தரவுகள் அங்கிருந்த படியே டிஐஜி தனக்கு கீழ் உள்ளவரிடம் கூற, அடுத்து என்ன செய்வதென யோசிக்க ஆரம்பித்தாள் பரிதி.
பரிதி ,” அங்கிள் உங்க டிபார்ட்மெண்ட்க்கு தெரியாத டிடெக்டீவ் யாராவது உங்களுக்கு தெரியுமா? “
டிஐஜி,” தெரியும் மா ஆனா எதுக்கு? “
பரிதி ,” இன்னும் அவங்கள க்ளோஸா வாச் பண்ணணும் அங்கிள். சந்திரகேசவன் ஏன் இதுல இன்ட்ரெஸ்ட் காட்றாருனு தெரியனும். வேற ஏதோ பெரிய விஷயம் இருக்கு அத கண்டுபிடிக்கணும். “
டிஐஜி,” அது சரி நீ கலெக்டர் தானே? இன்டெலிஜென்ஸ் ஆளுங்க மாதிரி பேசிட்டு இருக்க !?”.
பரிதி ,” அங்கிள் கண்ணு முன்னாடி ஏதோ தப்பா நடக்குது. என்னனு முழுசா தெரியல அந்த க்யூரியாசிட்டி பெருசா இருக்கு. இது நான் அதிகாரம் பண்ற ஏரியா தப்பு நடக்கறத வேடிக்கை பாத்துட்டு இருக்க முடியாது. தப்ப கண்டுபிடிப்போம் “.
டிஐஜி மனதில் மெச்சிக் கொண்டு ,”நீ சொல்றத செய்ய நான் ரெடி டிபார்ட்மெண்ட்ல தெரிய வேணாம். தனியா ஆளுங்கள ரெடி பண்றேன் ”, எனக் கூறினார்.
பரிதி ,” சரி அங்கிள் இந்த கேஸ் விஷயமா பேசறதா இருந்தா என்னோட இந்த நம்பர்க்கு கூப்பிடுங்க.”
நம்பரை எழுதிக் கொடுத்தாள்.
டிஐஜி,” நாளைக்கு ஆள ரெடி பண்ணிட்டு கூப்பிடுறேன் பரிதி.”
பரிதி ,” சரி அங்கிள் நாளைக்கு மீட் பண்ணலாம் பாய் “.
டிஐஜியிடம் விடைபெற்றுக் கொண்டு நேராக வீட்டிற்குச் சென்றாள். அங்கே அவளின் பி.ஏ ஆதிரை காத்திருந்தாள் .
பரிதி ,” ஆதி இந்த பைல்ல இருக்கறத சாப்ட் காப்பி ஆ கன்வெர்ட் பண்ணிட்டு இதுக்கு முன்ன காப்பி பண்ண டிவைஸஸ்ல சேத்துடு”
ஆதிரை,” மேம் உங்ககிட்ட ஒன்னு கேக்கலாமா?”
“கேளு”, பரிதி.
“என்ன பிளான்ல இதெல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க? இது போலிஸ் டிபார்ட்மெண்ட் பாக்க வேண்டிய வேலை……..”, ஆதிரை.
பரிதியின் பார்வையில் பேச்சைப் பாதியில் நிறுத்தினாள் ஆதிரை.
“எது என் வேலைனு தெரியாமத்தான் நான் வேலை பாத்துட்டு இருக்கேனா? எல்லா டிபார்ட்மெண்ட்ம் என் கன்ட்ரோல்ல இருக்கு நாளைக்குப் பிரச்சினைனு வந்தா யாரு ஆக்க்ஷன் எடுப்பா? இது வெறும் மக்கள் பிரச்சினையா இல்லாம மதப் பிரச்சினையா மாறினா ஊர் எப்படி இருக்கும் தெரியுமா? இன்னிக்கும் சில ஈத்தர பசங்க மதத்த வச்சு தான் அரசியல் பண்ணிட்டு இருக்கானுங்க. அதுக்கு இடம் கொடுக்கச் சொல்றியா என்ன? “, பரிதி.
பரிதியின் கோபத்தில் வாய் அடைத்து நின்றவள் பின் ஏதும் பேசாமல் அவள் சொன்ன வேலையை முடித்தாள்.
ஆதிரை சென்றபின் தன் அலைபேசியில் யாருடனோ உரையாடிவிட்டு ஒரு முடிவுடன் அடுத்த நாளின் விடியலை எதிர்நோக்கிக் காத்திருந்தாள்.
விடியும் முன்னே எழுப்பியது பரிதியின் கைப்பேசி.
டிஐஜி,” உடனே நீ கிளம்பி வரமுடியுமா பரிதி?”
பரிதி ,” எங்க வரனும் அங்கிள்? “
டிஐஜி,” ஊருக்கு வெளிய 1கி.மீல ஒரு பில்டிங் இருக்கு, அங்க வாமா” .
பரிதி அவசரமாக கிளம்பி அங்கே சென்றாள். டிஐஜி அந்த கட்டிடத்தின் வாசலில் காத்திருந்தார்.
“என்ன விஷயம் அங்கிள்? ஏன் இங்க இந்த நேரத்துல வர சொன்னீங்க? “, பரிதி.
“உள்ள வா பரிதி.”
அங்கே அவன் செத்து கிடந்தான்.
தொல்பொருள் ஆய்வு நடத்தியக் கூட்டத்தின் தலைவன் வாயில் நுரை தள்ள செத்துக் கிடந்தான்.