செல்வராணி
வாசகருடன் சில நிமிடங்கள் .. 1. பெயர்- செல்வராணி 2. படிப்பு- ஏ எல் எனப்படும் மேல் நிலைப்பள்ளி (இலங்கை). 3. தொழில் / வேலை - இல்லத்தரசி 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? நினைவு தெரிந்த நாட்களில் இருந்து வாசிக்கறேன் . படக்கதையில் இருந்து அம்புலிமாமாவில் ஆரம்பித்தது. 5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பை நாடுவீர்கள்? நேரம் காலமே இல்லை. இப்போது சற்று குறைத்திருக்கிறேன். கண்ணுக்கு ஓய்வு தேவை என்பதால். 6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? கணினி வழியிலா? தற்சமயம் கணினி தான். புத்தகங்களும் படிப்பதுண்டு. 7. ஒரு வருடத்தில் எத்தனை புத்தகங்கள் வாங்குவீர்கள்? எத்தனை புத்தகங்களை படிப்பீர்கள் ? வீட்டில் யாரும் அதிகம் படிப்பதில்லை. இடவசதியில்லை என்பதால் அதிகம் வாங்குவதில்லை. நூலகத்தில் சென்று எடுப்பதும் உண்டு. 8.Ebook/Paperback புத்தகம் எதில் உங்களின் வாசிப்பு முழுமை பெறுவதாக உணர்கிறீர்கள்? கால மாறுதலுக்கு ஏற்ப கணிணிக்கு மாறிவிட்டேன். புத்தகத்துக்கு ஈடு எதுவும் இல்லை என்பதே உண்மை. 9....









