51 – அகரநதி
51 – அகரநதி அந்த சந்தோஷமான மனநிலையில் அனைவரும் லயித்திருக்க அகரனுக்கு வந்த அழைப்பு அவனை கோபத்தில் முகம் சிவக்க வைத்தது. "அரை மணி நேரத்துல வரேன். அதுவரைக்கும் எவனும் உள்ள வரக்கூடாது பாத்துக்க", எனக் கூறி போனை வைத்துவிட்டு சரணிடம் வெளியே செல்வதாக கூறி ஒரு மணி நேரத்தில் தான் அழைக்கவில்லையென்றால், அவனை முன்னேற்பாட்டுடன் அவ்விடம் வரக்கூறினான் அகரன். நதியாள் இங்கே விஷேசத்தில் நண்பர்களுடன் ஆளவளாவிக்கொண்டிருந்த சமயம் அகரன் அவளிடம் சொல்லாமல் சென்று விட்டான். அகரன் சென்று சிறிது நேரம் கழித்தே அவன் அவ்விடம் இல்லை என்பதை கவனித்தாள் நதி. சரணிடம் கேட்க சிறு...


