16 – அகரநதி
பூஜைகள் முடிந்து வந்த அனைவரும் அன்னதான கூடத்தில் நடந்துக் கொண்டிருந்தக் கலாட்டாவை சில நொடிகள் நின்றுப் பார்க்க, அங்கு வந்த நதியாள் அங்கிருந்தவர்களைத் தாண்டி முன்னே வந்து அங்கே கலாட்டா செய்துக் கொண்டிருந்த ஒருவனைப் பிடித்துக் கன்னத்தில் ஒரு அடியை விட்டாள்.
அன்னதான கூடத்தில் ஏற்கனவே சாப்பாடு அனைத்தும் தயார் செய்து எடுத்து வைத்திருந்தனர்.
சமையல் செய்தவரில் ஒருவன் தான் சாராயம் குடித்துவிட்டு வந்து அங்கே இருப்பவர்களிடம் தகராறுச் செய்துக் கொண்டு இருந்தான்.
குடித்துவிட்டு தகராறு செய்பவனை வெளியேற்ற முயன்றபோது தான் ஆட்களுக்குள் கைகலப்பு ஏற்பட அந்த சமயம் நதியாள் உள்ளே வந்து அந்த சமையல்காரனை ஓங்கி ஒன்று விட்டாள்.
“என்ன நடக்குது இங்க? குடிச்சி இருக்கியா வரதா?”, நதியாள்.
அடிவாங்கியவன் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு அமைதியாக நின்றான்.
“வாய தொறந்து பதில் சொல்லு. நேத்தே உன்கிட்ட தாத்தா சொன்னாங்க இன்னிக்கு சுத்தபத்தமா இருக்கணும்னு. சமைச்சதும் போய் குடிச்சிட்டு வர அளவுக்கு ஆகிடுச்சா உனக்கு?”, நதியாள்.
“இல்லம்மா…. தாகம் எடுத்தது ஜூஸ் குடிக்கலாம்னு தான் போனேன் ஆனா…..”, எனக் கூறித் தலையைச் சொறிந்தான்.
“அப்படியே சரக்கடிக்க போயிட்ட. இனிமே இங்க நிக்காத. கிளம்பு முதல்ல. இவன வெளியே விட்டுட்டு வாங்க. மத்தவங்க வேலைய ஆரம்பிங்க”, நதியாள் சத்தம் போட மடமடவென வேலைகள் நடந்தேறியது.
“எப்பா….என்னா அடி…. அவனுக்கு கடவாய் பல்லு காணாம போய் இருக்கும் இந்நேரம்”, சரண்.
“ஆமா சரண். யாருமே எதிர்பாக்கல புடிச்சு இப்படி அடிச்சிட்டாங்க. அவனும் பதில் பேசாம போறான். இந்த ஊரு தானே அவன்?”, சக்ரதேவ்.
“அன்னிக்கு உன் கடவாய் பல்ல நான் காப்பாத்தி இருக்கேன் டா மச்சான். இனிமே அவகிட்ட பாத்து வாய்பேசு. எனக்குமே ஒரு நிமிஷம் பக்குனு ஆகிரிச்சி டா”, அகரன்.
“நீ வாய மூடு டா அகர். தேவ் அவன் பக்கத்து ஊரு. சமையல் வேலைன்னா அவன தான் நாங்க கூப்பிடுவோம். வயசு முப்பத்தி ஐஞ்சு தான் இருக்கும். பரம்பரை பரம்பரையா இந்த தொழில் தான் பண்றாங்க. இவனுக்கு மட்டும் குடிபழக்கம் வந்துரிச்சி போல. கோவில்ல இப்படி பண்ணா யாரா இருந்தாலும் கோவம் வரும் தான்”, சரண்.
“பெரிசுங்க வாய் பேசாம கம்முன்னு இருக்காங்க”, அகரன்.
“அதான் தெர்ல மச்சான்”, சரண்.
“டேய் சரணா…. இங்க வாங்க…அங்க என்ன பண்றீங்க மூனு பேரும். வந்து பரிமாறுங்க”, நதியாள் கத்தவும் மூவரும் வேலையைக் கவனித்தனர்.
“நதி இங்க வா…..என்னடா கண்ணு இப்படி அடிச்சிட்ட வரதன?”, சுந்தரம் தாத்தா.
“பின்ன என்ன தாத்தா. நேத்து அவ்வளவு சொல்லியும் குடிச்சிட்டு வந்து கோவில்ல ரகளை பண்ணிட்டு இருக்கான். அதான் கோவம் வந்துரிச்சி”, நதியாள்.
“அதுக்குன்னு எல்லார் முன்னாடியும் கை நீட்டக்கூடாது டா”, பரமசிவம்.
“சாரி பெரியப்பா. கோவத்த அடக்க முடியல. காலைல இருந்து நாம எவ்வளவு சுத்தபத்தமா எல்லாத்தையும் செஞ்சிட்டு இருக்கோம். வரதன் சாப்பிடற நேரத்துல பிரச்சினை பண்ணவும் தான்”, என இழுத்தாள்.
“சரி அப்பறம் போய் வரதன பாத்து பேசிட்டு வந்துடு. தனியா போகாத அகரனயோ சரணயோ கூப்பிட்டு போ”, மாந்தோப்பு தாத்தா.
“சரி தாத்தா”, நதியாள்.
“சரி போய் பரிமாறு. நாங்க தலைகட்டு வசூல் பாத்துட்டு வரோம். சிதம்பரமும் கண்ணனும் தான் அங்க இருக்காங்க”, சுந்தரம்.
“சரி தாத்தா. சாப்பிட எல்லாரையும் அழைச்சிட்டு வந்துடுங்க கொஞ்ச நேரத்துல”, நதியாள் கூறிவிட்டு பரிமாறச் சென்றாள்.
இதை தூரத்தில் இருத்து பார்த்துக் கொண்டிருந்த வினயும், சரிதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“என்ன வினய் இவ்வளவு போல்ட்ஆ இருக்கா ? இப்படி இருந்தா நாம எப்படி அப்ரோச் பண்றது?”, சரிதா.
“கொஞ்சம் கஷ்டம் தான் ஆனா முடியாததுன்னு இல்ல. நம்ம பாட்டிய வச்சி தான் மூவ் பண்ணனும். நீ தேவ் அ கல்யாணம் பண்ணிகிட்டா கொஞ்சம் ஈஸியா மூவ் பண்ணலாம்”, வினய்.
“என்னதான் பண்ண போற? என்ன பிளான்?”,சரிதா.
“நம்ம அப்பன் சொத்த அழிச்சிட்டு போயிட்டான். இப்ப கடன் மட்டும் தான் இருக்கு. நாம இப்ப சிங்கி அடிக்கற நிலைமைல இருக்கோம். வசதியா வாழ சொத்து வேணும். நம்ம மாமாகிட்ட தான் சொத்து இருக்குன்னு பாத்தா இங்க இரண்டு குடும்பத்துகிட்ட இன்னும் அதிகமா இருக்கு போல. அந்த பொண்ணு போட்டு இருந்தது எல்லாமே வைரமும் இரத்தினமும் தான். அத வித்தாலே பல லட்சம் ரூபாய் வரும்”, வினய்.
“அப்ப அந்த அகரன் கிட்ட?”, சரிதா.
“அவன் சொந்தமா கன்ஸ்டரக்ஷன் கம்பெனி நடத்தரானாம். நல்ல வசதி தான். தோப்பு தொரவுன்னு நிறைய இருக்கு. அவனும் கோடி கணக்குல சம்பாதிக்கறான்”, வினய்.
“ம்ம். ஆளும் நல்லா தான் இருக்கான்”, சரிதா.
“ஏன் அவன ரூட் விட போறியா?”, வினய்.
“ஏன், விட்டா என்ன?”, சரிதா.
“அப்ப தேவ்?”, வினய்.
“பாத்துக்கலாம். முதல்ல நாம பாட்டி கூடவே செட்டில் ஆக ஏற்பாடு பண்ணு. அம்மாவையும் கூப்டுக்கலாம். ஆனா அது எதுவும் வாய தொறக்க முடியாத மாதிரி செய்யணும் வினய்”,சரிதா.
“விடு அதுல்லாம் ஜூஜூபி மேட்டர். திருவிழா முடியறதுக்குள்ள பாட்டி கிட்ட டிராமாவ நீ ஆரம்பி”, வினய்.
“சரி. வா போலாம்”, சரிதா.
இருவரும் பேசிவிட்டு கோவில் மண்டபத்தில் மரகதம்மாள் அருகில் சென்று அமர்ந்தனர்.
சக்ரதேவ் ஓடி ஓடி வேலை செய்துக் கொண்டு இருந்தான். அகரனும் சரணும் கூட அவனிடம் சகஜமாக பழக ஆரம்பித்திருந்தனர்.
“பாத்தியா பாட்டி. அத்தான எவ்வளவு வேலை வாங்கறாங்க? பாவம் அத்தான் காலைல இருந்து இன்னும் சாப்பிடவே இல்ல. இதுல அந்த நதியாள் எவ்வளவு அதிகாரமா கூப்பிடறா வேலை வாங்கறா. எனக்கு கஷ்டமா இருக்கு பாட்டி”, என சோகமாக முகத்தை வைத்துக் கொண்டுக் கூறினாள் சரிதா.
“ஆமாம் பாட்டி. நான் கூட பாத்தேன். சரியான திமிர் பிடிச்சவ. அன்னதானம் பண்ற இடத்துல அத்தனை பேர் முன்னாடியும் ஒரு ஆம்பளைய கைநீட்டி அடிக்கறா. எவ்வளவு அகங்காரம் இருக்கணும். இதுல்லாம் இங்க யாரும் தட்டி கேக்க மாட்டாங்களா?”,வினய்.
“அடிச்சாளா? யார அடிச்சா?”, மரகதம்மாள்.
“அங்க சமையல் செஞ்சவர தான். ஆங்…அதோ அங்க தூண் பின்னாடி நிக்கறாரே அவர தான். பாக்கவே பாவமா போச்சு. அத்தனை பேர் முன்னாடி எவ்வளவு பெரிய அவமானம்”, சரிதா.
“வரதனயா? அவன் நல்லவனாச்சே..அவன ஏன் அடிச்சா?”, மரகதம்மாள்.
“தெரியல பாட்டி. ஏதோ சண்டை நடக்குதுன்னு தான் நாங்க போய் பாத்தோம். அங்க அவ இவர அடிச்சிட்டு இருந்தா”, வினய்.
“அவளுக்கு தைரியம் ஜாஸ்தி தான். வச்சிக்கறேன் ஒரு நாள்”, மரகதம்மாள் வாய்க்குள் முனகிக் கொண்டார்.
“என்ன மரகதம். இன்னும் சாப்பிடலியா? வா சாப்பிட போலாம்”, சரோஜாதேவி.
“இல்லக்கா… வீட்டுக்கு போய் சாப்பிட்டுக்கறேன்”, மரகதம்மாள்.
“என்ன பேசற நீ? எங்கள எல்லாம் கோவில்ல தான் சாப்பிடணும்னு சொல்லி இழுத்துட்டு போவ. இப்ப இப்படி சொல்ற. எந்திரி வா போய் சாப்பிடலாம். புள்ளைங்க நமக்கு பரிமாறிட்டு தான் சாப்பிடுவோம்னு அடமா நிக்கறாங்க”, சரோஜாதேவி அவரை எழுப்பி இழுத்துக்கொண்டுச் சென்றார்.
“சே.. கிழவி.. தூபம் போடறப்ப வந்து கெடுத்துட்டா”, சரிதா.
“விடு. வீட்டுக்கு போய் பாத்துக்கலாம். அம்மா எங்க?”, வினய்.
“தெர்ல. அத்தை கூட தான் இருந்தது”, சரிதா அலட்சியமாகக் கூறினாள்.
“சரி வா நாமலும் சாப்பிட போலாம்”, வினய்.
“இங்கயா? தரைல உக்காந்து எல்லாம் என்னால சாப்பிட முடியாது வினய். வீட்டுக்கு போலாம் இல்லையா ஹோட்டல் போலாம்”, சரிதா.
“இன்னிக்கு சாப்பிடு அப்பதான் உன்னபத்தி அத்தை மாமா கிட்ட கொஞ்சம் பில்டப் குடுத்து தேவ்க்கு கட்டிவைக்க முடியும்”, வினய்.
“நிச்சயமா தேவ் அ தான் கட்டிக்கணுமா வினய்? அகரன் அவனவிட பெட்டர் சாய்ஸ். சொத்தும் நிறைய இருக்கு. பாக்கவும் சூப்பரா இருக்கான்”, சரிதா.
“இருக்கறத விட்டுட்டு பறக்கறதுக்கு ஆசபட்டு மொத்தமா கீழ விழக்கூடாது”, வினய்.
“அதுல்லாம் ஒன்னும் ஆகாது. தேவ்க்கு தெரியாம அகரன டிரை பண்ணி பாக்கறேன். அவனபத்தி புல் டீடைல்ஸ் எனக்கு குடு”, சரிதா.
“அவன் மடிவான்னு எனக்கு தோணல”, வினய்.
“நீ மட்டும் நதியாள கரெக்ட் பண்ண பாக்கறல்ல”, சரிதா.
“அவ பொண்ணு. ஈஸியா எதுலயாவது மடக்கிடலாம். இவன அப்படி பண்ண முடியுமா உன்னால?”,வினய்.
“டிரை பண்ணலாம். கிடச்சா நமக்கு லாபம் தானே. அப்படி வர்க்அவுட் ஆகலன்னா தேவ்அ கட்டிக்கறேன்”, சரிதா.
“சரி வா. போய் டிராமா போடுவோம்”, வினய்.
வினயும் சரிதாவும் அன்னதான மண்டபத்திற்கு வந்து சரோஜாதேவி பாட்டி அருகில் அமர்ந்தனர்.
இது நேரம் வரை பரிமாறிக்கொண்டு இருந்தவர்களை அமரவைத்து நதியாள், அகரன்,சரண் மற்றும் சக்ரதேவ் பரிமாறினர்.
“அம்மாடி யாள்… இங்க பாரு சாப்பாடு கொண்டு வா”, மீனாட்சி.
“வரேன் பாட்டி. அகன் நீ அந்த ரசம் எடுத்துட்டு வா”, நதியாள்.
நதியாள் முன்னே வர அவளுக்கு பின் அகரன் வர இருவரையும் இணைத்து பார்த்தப் பெரியவர்கள் கண்களும் மனமும் நிறைந்து போனது. இருவரும் ஏறத்தாழ ஒரே நிறத்தில் உடை அணிந்து இருந்தது இன்னும் அவர்களை மட்டும் தனி ஜோடியாகக் காட்டியது.
“செல்லம்மா….”, பரமசிவம்.
“என்னங்க?”, செல்லம்மாள்.
“அகரனையும் நதியாளையும் ஜோடியா பார்க்கவே சந்தோஷமா இருக்கு. ஜோசியர் என்ன சொல்வாரோ தெர்ல”, பரமசிவம்.
“எல்லாம் நல்லவிதமா தான் சொல்வாங்க. புள்ளைங்க இரண்டும் இன்னிக்கு கோவில்ல அத்தனை வேலையும் இழுத்து போட்டு செஞ்சத பாத்தேன். நம்ம சாமி இவங்களுக்கு ஏற்கனவே முடிச்சி போட்டுட்டாருன்னு தான் தோணுதுங்க”, செல்லம்மாள்.
“எல்லாம் சரியா நடந்தா சந்தோஷம் தான் செல்லம்மா. நான் கூட கண்ணன கேக்காம என் சம்மதம் சொன்னது மனசுல உருத்திச்சு, அவன சங்கடத்தில நிறுத்தி அவன் விருப்பத்த கேட்டுட்டோமோன்னு. எல்லாம் நல்லா படியா நடந்தா நம்ம சாமிக்கு வெள்ளில க்ரீடம் செய்யறேன்னு வேண்டிகிட்டேன்”,பரமசிவம்.
“அதுல்லாம் தம்பி ஒன்னும் நினைச்சிக்க மாட்டாங்க. நீங்க சாப்பிடுங்க. அடுத்து நாளைக்கு ஐயனார் விஷேசம் ஏற்பாடு பாக்கணும்ல”, செல்லம்மாள்.
“ஆமா. சரி சாப்பிடு. சாயந்திரம் ஜோசியர பாக்க போலாம்னு சுந்தரம் மாமா சொன்னாங்க. அதுக்குள்ள வேலைய முடிக்கணும்”, பரமசிவம் கூறிவிட்டு வேகமாகச் சாப்பிட்டார்.
“பெரியப்பா இருங்க பாயாசம் கொண்டு வரேன்”, நதியாள்.
“போதும் யாள் குட்டி”, பரமசிவம்.
“டேய் சரணா… அப்பாவ கவனிக்காம அங்க யார்கிட்ட கடலை போட்டுட்டு இருக்க?”, நதியாள்.
“அடியே…. இங்க பாட்டிக்கு நான் ரசம் ஊத்திட்டு இருக்கேன் நீ எனக்கு விஷம் வைக்க ஏற்பாடு பண்றியா?”, சரண்.
“டேய்… என்ன பேச்சு இது? வீட்டுக்கு வா உன்ன பேசிக்கறேன்”, பரமசிவம்.
“அப்பா… ஒன்னும் இல்லப்பா…. நான் சும்மா…”, எனக் குரலே எழும்பாமல் கூறினான் சரண்.
“விடுங்க பெரியப்பா… நீங்க பாயாசம் சாப்பிடுங்க. பெரியம்மா நீங்களும்”, நதியாள் இலையில் பாயாசத்தை ஊற்றினாள்.
“போதும் குட்டி. நீங்க உக்காருங்க நான் பரிமாறுறேன்”, என செல்லம்மாள் கைகழுவி எழுந்தார்.
“சரி பெரியம்மா ….அகன் எல்லாரும் சாப்பிட்டாங்களா?”, நதியாள்.
“அல்மோஸ்ட் எல்லாரும் சாப்டுட்டாங்க நதிமா. நாம சாப்பிடலாம்”, அகரன்.
“அப்பாடா இப்பவாது வாய தொறந்து சொன்னியே”, சரண் முதலில் இலையை போட்டு அமர்ந்தான்.
“டேய் எரும.. உனக்கு மட்டும் போட்டுகிட்ட. எங்களுக்கு?”, நதியாள்.
“எடுத்து போட்டுகோங்க. எனக்கு பசில உயிர் போகுது”, சரண்.
“அவ்வளவு பசியா சரண்?”, சக்தேவ்.
“சாரி தேவ். சாப்பிட்ட அப்பறம் பேசலாம். பர்ஸ்ட் சாப்பிடுங்க அப்பறம் வேற எதாவலு சொல்லி பால் பழம் தான்னு சொல்லிடபோறாங்க”, எனச் சாப்பிட ஆரம்பித்தான் சரண்.
“நீங்க உக்காருங்க தேவ். அகன் நீயும் உக்காரு. அந்த இலைய எனக்கு போடு . பரிமாறிட்டு நானும் உக்காந்துக்கறேன்”, நதியாள்.
“நீங்க உக்காருங்க நதியாள். நாங்க பரிமாறறோம்”, என வினயும் சரிதாவும் வந்து அவர்களுக்கு பரிமாறினர்.
“சரி பசங்களா. நீங்க பரிமாறுங்க நான் கோவில்ல அடுத்த வேலை பாக்க போகணும்”, என செல்லம்மாள் கோவிலுக்குள் சென்றார்.
” உங்க பேரு?”,எனக் கேட்டபடி நதியாள் அகரனின் அருகில் அமர்ந்து கொண்டாள்.
“நான் சரிதா. தேவ்வோட கஸின். இவன் வினய் என் அண்ணன்”, என அறிமுகம் படுத்திக் கொண்டாள்.
“ஓ… சரி சரி. எனக்கு போதும். தேங்க்ஸ்”, நதியாள்.
“நதிமா. இந்தா ஸ்வீட்”, என அகரன் நதிக்கு ஊட்ட அவளும் அவனுக்கு ஊட்டினாள்.
அதை பார்த்த சரிதாவிற்கு கோபம் பற்றிக் கொண்டு வர, வினய் கண்களால் அமைதியாக இருக்கும்படி சமாதானம் செய்தான்.
“நீங்க என்ன படிக்கறீங்க நதியாள்”, வினய்.
“அவ ஆர்கி இன்டீரியர் டிசைனிங் படிக்கறா மிஸ்டர் வினய்”, அகரன்.
“ஓ.. பைன். நான் ஆட்டோமொபைல்ஸ் படிச்சி இருக்கேன். அப்ராட்ல மாஸ்டர்ஸ் படிக்க டிரை பண்ணிட்டு இருக்கேன்”, வினய்.
“ஆமாமாம். ரொம்ப நாளா டிரை பண்றான். இல்ல வினய்”, சக்ரதேவ் உள்புகுந்தான்.
“உனக்கு எப்பவும் விளையாட்டு தான் தேவ். உனக்கு என்ன வேணும்? சரு தேவுக்கு மோர் குடு”, வினய்.
“அப்பாடா… இப்ப தான் நிறைவா இருக்கு. அகன் கொஞ்ச நேரம் வீட்டுல இருந்துட்டு வரலாமா?”, நதியாள் கைகழுவிக்கொண்டு வந்து கேட்டாள்.
அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு வந்தனர்.
“மச்சான் நானும் நதியும் வீட்டுக்கு போயிட்டு வரோம். நீயும் தேவும் இங்க சாப்பாடு எவ்வளவு இருக்குன்னு பாத்துட்டு இராத்திரிக்கு சமைக்க சொல்லிடு”, அகரன்.
“சரி மச்சான். வரப்ப என் ஹெட்செட் எடுத்துட்டு வந்துடு உன் ரூம்ல தான் வச்சிட்டு வந்தேன்”,சரண்.
“சரி. வரோம் தேவ்”, என அங்கிருந்து கிளம்பினர்.
அவர்கள் கிளம்பியதும் சரணும் தேவும் சாப்பாடு செய்யும் அறைக்கு செல்ல , வினயும் சரிதாவும் உள்ளுக்குள் பொங்கியபடி இருந்தனர்.
“என்ன வினய் அவங்க இரண்டு பேரும் லவ் பண்றாங்களோ?”, சரிதா.
“தெரியல சரு. பப்ளிக்கா ஊட்டி விட்டுக்கறாங்க. பெரியவங்களும் ஒன்னும் சொல்லல. எல்லாரும் அவங்கள ஒன்னாவே சுத்தறத பாத்தும் சந்தோஷம் தான் படறாங்க”, வினய்.
“யார்கிட்ட கேட்டா விஷயம் தெரியும்?”, சரிதா.
“அதோ போறானே அவன கேட்டா தெரியும்னு நினைக்கறேன். ஆனா அவனும் வாய தொறந்து சொன்னாதான் இல்லைன்னா நடக்கறத அப்சர்வ் பண்ணிட்டு தான் முடிவுக்கு வரணும்”, வினய்.
“நான் பேச்சு குடுத்து பாக்கட்டா?”, சரிதா.
“வேணாம். கூடவே தேவ் இருக்கான். நானே வேற யார்கிட்டயாவது விசாரிக்கறேன்”, என வினய் கூற அங்கிருந்து நகர்ந்தனர் இருவரும்.
அகரனும் நதியும் கோவிலை விட்டு சற்று தூரம் வந்ததும் திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது.
சீக்கிரம் சென்று விடலாம் என நினைத்தவர்கள் வேகமாக நடக்க மழை வலுக்கவும் முழுதாய் நனைந்தனர்.
“அகன் மழை ரொம்ப வலுவா இருக்கு. எங்கயாவது நின்னுட்டு போலாமா?”, நதியாள்.
“சரி நிக்கற மாதிரி இடம் வந்தா நிக்கலாம்”,அகரன்.
ஒதுங்க இடம் இருக்கும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டமாக நின்று இருக்க இவர்கள் அடுத்த இடத்தை பார்க்கலாம் என நடந்தனர்.
இருவரும் நடக்க பக்கத்தில் இருப்பது கூட தெரியவில்லை. அதனால் நனைந்தபடியே வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
“ப்பா… செம மழை… இன்னும் கொஞ்ச நேரம் நனைஞ்சி இருக்கலாம்”, நதியாள்.
“இப்ப மட்டும் கம்மியாவா நனைஞ்சு இருக்கோம். பாரு எல்லாமே ஈரமாகிடிச்சி”, என அகரன் வேஷ்டியை பிழிந்து விட்டு மடித்து கட்டியபடி கூறினான்.
“ஆமா… பட்டு சேரி வேற… கலர் போகும்ல”,என தன் உடையை கீழோடு வைத்து ஈரத்தை பிழிந்தாள் நதி.
அவள் குணிந்த பொழுது அவளின் இடை தெரிய அதை கண்ட அகரன் தடுமாறத் தொடங்கினான்.
சற்றே சதை பிடித்து இருத்தாலும் மடிப்பில்லாமல் இருந்த இடையும், காலையில் அவன் அணிவித்த சங்கிலியும் மழையின் ஈரமும் அவளின் இடையழகும் , அவனின் கண்களை அசையவிடாமல் அடித்துவிட்டது.
வெண்மையும் மஞ்சளும் கலந்த அவளின் நிறம் இப்பொழுது மழையில் நனைந்ததும், முகத்தில் ஒப்பனை ஏதுமின்றியே அவளின் அதீத அழகையும் வனப்பையும் பன்மடங்கு கூட்டி காட்டிட அகரன் தன் மனதிற்குள் தவித்துக் கொண்டு இருந்தான்.
“ஆண்டவா…. எனக்கு ஏன் இந்த சோதனை? எதுவும் நடக்கறதுக்குள்ள சீக்கிரம் நாம ரூமுக்கு ஓடிறனும்”, என மனதிற்குள் பேசியவன் எதுவும் அவளிடம் கூறாமல் தன் அறைக்குச் சென்றான்.
“எங்க அகன காணோம்?”, என தன்னருகில் நின்றவனைப் பற்றி யோசித்தபடி கீழே அறைகளை திறக்க முயன்று முடியாமல் போக தூண் அருகில் கிடந்த அம்மா கொண்டு வந்த பையை எடுத்து கொண்டு அவனின் அறைக்குச் சென்றாள் நதி.
மேலே வந்தவன் பெருமூச்சு விட்டு தன்னை சமன்படுத்திக் கொண்டு இருத்தான். பின் தன் உடையைக் கலைந்து துண்டை கட்டிய சமயம் நதியாள் அவனின் அறைக்கு வந்தாள்.
கதவை மூட மறந்தவன் வழக்கம் போல தன் உடையை மாற்றிக்கொண்டு இருந்தான். அந்த சமயம் நதியும் குரல் கொடுக்காமல் உள்ளே வர அப்படியே ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றுவிட்டாள்.
அவன் துண்டுடன் நிற்பதை கண்டு ,” அச்சோ… சாரி அகன்… குரல் கொடுக்காம உள்ள வந்துட்டேன்”,நதியாள் திரும்பி நின்று கொண்டுக் கூறினாள்.
“ஹான்…. பரவால்ல. என்ன வேணும் நதி?”,அகரன்.
“இல்ல கீழ ரூம் எல்லாமே லாக் பண்ணி இருக்கு. அதான் இங்க டிரஸ் சேஞ்ச் பண்ணலாம்னு வந்தேன்”, நதியாள்.
“அப்படியா… சரி பத்து நிமிஷம் வையிட் பண்ணு நான் டிரஸ் மாத்திட்டு வரேன்”, அகரன் தன் உடையை எடுத்துக் கொண்டு குளியலறையில் புகுந்துக் கொண்டான்.
நதியாள் அவன் அறையை சுற்றி வந்து கொண்டிருந்தாள். அகரன் புத்தகப்பிரியன் போல அத்தனை புத்தகங்களை வாங்கி வைத்து இருந்தான். நதிக்கும் புத்தகங்கள் மீது பிரியம் அதிகம். தமிழ் சரித்திர நாவல்கள் என்றால் மிகவும் இஷ்டம். அகரனும் நிறைய வைத்து இருந்தான்.
“ம்ம்… இதுல்லாம் ஒரு தடவை வாங்கி படிக்கணும். லைப்ரரி வைக்கற அளவுக்கு இருக்கு புக்ஸ்”,நதியாள் தனக்குத் தானே பேசிக்கொண்டாள்.
ஐந்தே நிமிடத்தில் தயாராகி வந்தவன் நதியாள் தன் அறையை பார்த்துக் கொண்டு இருப்பதைக் கண்டு அப்படியே அவளை பார்வையால் தொடர்ந்தபடி இருந்தான்.
தன் மனதிற்கு நெருக்கமானவள், தன் மனதை ஆள்பவள். தன் அறையில் புடவைக் கட்டிக் கொண்டு மனையாள் போல வலம் வருவதை இரசித்துக்கொண்டு இருந்தான்.
“ஹம்ம்…. எப்ப நாம லவ்வ சொல்லி அவ எப்ப ஒத்துகிட்டு இரண்டு பேரும் லவ் பண்ணி ரொமான்ஸ் பண்றது? எப்ப கல்யாணம் பண்றது? இப்படியே இவ பக்கத்துல இருந்தா கன்ட்ரோல் மிஸ் ஆகுது. இனிமே இவள புடவை கட்ட விடக்கூடாது. கம்பெனிக்கு வந்தா புடவை கூடவே கூடாதுன்னு சொல்லிடனும். அகரா உனக்கு வந்த சோதனைய பாத்தியா. நீ அவள லவ் பண்ற அவளும் உன்ன லவ் பண்றா ஆனா அது சைல்ட் லவ். அவள எப்ப வயசுக்கு தகுந்தாமாதிரி மாத்தி எப்ப லவ் பண்ண வச்சு எப்ப….ம்ஹ்ம்ம்… அறுபதாம் கல்யாணம் தான் நடக்கும் போல. சும்மா சொல்லக்கூடாது நம்மாளு செம அழகு தான்”, அகரன் மனதிற்குள் இவையனைத்தும் பேசிக்கொண்டான்.
“வந்துட்டியா அகன். ஒரு ஹெல்ப். இந்த பின் மட்டும் கலட்டி விடு ப்ளீஸ்.. எனக்கு எட்டல ,அம்மா அத்தை யாருமே இல்லை”,நதியாள் தன் ப்ளவுஸின் பின்னால் இருந்த பின்னை கலட்டச் சொன்னாள்.
“அய்யோ… இவ வேற நேரம் காலம் தெரியாம. அகரா. சீக்கிரம் ரூமவிட்டு ஓடிரு”, எனத் தனக்குள்ளே கூறிக்கொண்டு பின்னை கழட்டிக் கொடுத்துவிட்டு நிற்காமல் அறையை விட்டு வெளியே வந்துவிட்டான்.
“அகன்.. எனக்கு குளிக்கணும். உன் சோப் யூஸ் பண்ணிக்கறேன். குடிக்க கொஞ்சம் சுடுதண்ணி மட்டும் நான் குளிச்சிட்டு வந்தப்பறம் வச்சிக்குடு”, எனக் கூறி குளியலறையில் புகுந்தாள்.
“சரி நதி. டோர் லாக் பண்ணிக்கோ. நான் கீழ இருக்கேன்”, அகரன்.
வெண்ணீரில் குளித்ததும் உடல்வலியும்,குளிரின் நடுக்கமும் குறைந்தது. வெளியே வந்து டெனிம் புளூ ஜீன்ஸ் டார்க் க்ரீன் டாப்ஸ் அணிந்து தலைமுடியை காய வைத்தாள். சற்று உலர்ந்ததும் நடுவில் சிறியதாக பின்னல் போட்டு தலைமுடியை விரித்து விட்டாள்.கழுத்தில் சிறியதாய் ஒரு வைர பென்டன்ட் ,காதில் வைரத்தோடும் கைகளில் ஒரு காப்பு விரல்களில் இரண்டு மோதிரம் மட்டும் அணிந்து மற்ற நகைகளை எல்லாம் பெட்டியில் போட்டு அகரனின் கபோர்டில் வைத்துப் பூட்டினாள்.
முக ஒப்பனை ஏதுமின்றி கீழே வந்தவளை அகரன் இமைக்க மறந்து பார்த்து கொண்டு இருந்தான். ¾ ஸ்லீவ் டாப்பில், ப்ரீ ஹேர் ஸ்டைலில் நெற்றியில் பொட்டுக் கூட வைக்காமல் சற்று முன்பே மலர்ந்த ரோஜாவைப்போல இருந்தாள் நதி.
“வாவ்… ஏலக்காய் டீ…. ம்ம்ம்…. செம வாசனை அகன். உனக்கு டீ கூட போடத்தெரியுமா?”,என அவன் கையில் வைத்திருந்த கப்பை வாங்கி பருகத்தொடங்கினாள் நதி.
“அது நான் குடிச்சது நதி”, அகரன் ஒருமாதிரி கிறங்கிய குரலில் கூறினான்.
“பரவால்ல. உனக்கு ஒன்னும் வியாதி இல்லையே… உனக்கு வேற போட்டுக்கோ. செம டேஸ்டா இருக்கு அகன். வேற என்ன என்ன செய்யத் தெரியும் உனக்கு?”, கேட்டபடி சமையற்கட்டின் திட்டில் அமர்ந்தாள் நதி.
“ஓரளவு வெஞ், நான்வெஞ் எல்லாம் செய்வேன். காலேஜ்ல வெளில ரூம் எடுத்து தங்கினப்ப பசங்காளா சேர்ந்து சமைப்போம். இப்ப எப்பவாது ப்ரீ டைம்ல நானும் சரணும் சமைப்போம். அன்னைக்கு சமைக்கறவங்களுக்கு சம்பளத்தோட லீவ் குடுத்து அனுப்பிடுவோம்”,அகரன்.
“இஸ் இட். அப்ப ஒரு நாள் நான் வரேன் எனக்கு சமைச்சி குடு அகன்”, நதியாள்.
“அப்ப கூட நீ சமைக்கமாட்டியா?”, எனக் கேட்டபடி சரண் உள்ளே வர தேவும் உடன் வந்தான்.
“நான் ஏன் சமைக்கணும். இன்ட்ரஸ்ட் இருக்கறவங்க சமைக்கட்டும். நான் சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்றேன்”, நதியாள்.
“ஹாஹா … இது கரெக்ட் தான் நதியாள்”,தேவ்.
“தேங்க்யூ தேவ். அகன் டீ போட்டுட்டியா?”, நதியாள்.
“இதோ… மச்சான் எல்லாரும் எடுத்துக்கோங்க வரேன்”, அகரன் கூறிவிட்டு தன் அறைக்குச் சென்றான்.
“அப்பா அம்மா அத்தை மாமாலாம் எங்க சரணா?”, நதியாள்.
“தெர்ல எங்கள வீட்டுக்கு போக சொல்லிட்டாங்க. அவங்க எங்கயோ போய் இருக்காங்க போல. நைட் கோவிலுக்கு போகணும். அதுவரை ரெஸ்ட் தான். தேவ் வீட்ல தனியா தான் இருக்கணும்னு சொன்னான் அதான் கூடவே கூட்டிட்டு வந்துட்டேன்”, என சரண் டீயை பருகினான்.
“நாமலும் இங்கயே இருக்கணுமா இல்ல நம்ம வீட்டுக்கு போகணுமா?”,நதியாள்.
“இங்க தான் இருக்க சொன்னாங்க. இந்தா பாட்டி ரூம் சாவி. சித்தி உன் ஜுவல்ஸ் அங்க வைக்க சொன்னாங்க”, என சாவியை கொடுத்தான்.
“அச்சச்சோ…. ஜுவல்ஸ் எல்லாம் மேலயே வச்சிட்டு வந்துட்டேன். இருங்க எடுத்துட்டு வரேன்”, என அகனின் அறைக்கு சென்றாள் நதி.
அந்த சமயம் அகரன் அறையை சாற்றிவிட்டு திரும்பவும், பின்னே பார்த்துக் கொண்டு வந்த நதியாள் அவன் மேல் மோதி விழும் சமயம் அவளின் இடைபற்றி விழாமல் பிடித்தான்.
இருவரும் தங்களை மறந்து பார்த்துக் கொண்டு இருக்க அகரன் அவளிடம்,” நதி தப்பா எடுத்துக்காத”, என கூறிவிட்டு முதலில் அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டான்.
அகரன் காலையில் இருந்து அவளை நெருங்கவும் முடியாமல் பிரியவும் முடியாமல் தவித்துக் கொண்டு இருக்க, இப்பொழுது அவளே தன் கையில் விழவும் அவள் கண்களில் தொலைந்தவன் எதையும் சிந்திக்காமல் மனம் கூறியதைச் செயல்படுத்தினான்.
நதியாள் அதிர்ந்து அவனைப் பார்க்க அவளின் இருபக்க கன்னத்திலும் தன் இதழால் அழுந்த முத்தமிட்ட பிறகு அவளை நேராக நிற்க வைத்தான்.
அவனின் இதழ் ஸ்பரிசத்தில் நதியாள் ஸ்தம்பித்து நிற்க, அகரன் காதலனாய் அவளை முத்தமிட்டதில் மகிழ்ச்சிக் கடலில் நீந்திக்கொண்டு இருந்தான்.