16 – அர்ஜுன நந்தன்
“பிளாஸ்பேக் முடிஞ்சிரிச்சி டா தலைய கீழே கொண்டு வா”, பரிதி நந்துவை பார்த்துக் கூறினாள்.
“எங்க முடிஞ்சது? அந்த பூவழகி என்ன ஆனா? யார் கடத்தினா? அந்த மெமரி கார்ட்ல என்ன இருக்கு? இதுல்லாம் சொல்லவே இல்ல”, நந்தன் பரிதியிடம் கேள்விகளாக அடுக்கினான்.
பரிதி அவனை ஒரு பார்வை பார்த்து அர்ஜுனையும் நரேனையும் பார்த்தாள்.
“அந்த மெமரி கார்ட் தான் இதுவா? “, நரேன் தன்னிடம் கொடுத்தக் கவரில் இருந்ததைக் கேட்டான்.
ஆம் என பரிதி தலையசைத்தாள்.
அர்ஜுன் தன் மொபைலில் இருந்த, மும்பைகாரனிடம் இருந்து எடுத்தப் போட்டோக் காட்டி ,” இவ தான் பூவழகியா?” ,எனக் கேட்டான்.
அந்தப் படத்தை பார்த்தவள் “ஆம் “,என மீண்டும் தலையசைத்தாள்.
“அப்ப அந்த பூவழகிய நாங்க தான் கண்டுபிடிக்கணுமா?” நந்தன் கேட்டான்.
அதற்கும் ஆம் என தலையசைத்தாள் பரிதி.
“இந்தா பாருக்கா… எல்லாத்துக்கும் தலைய ஆட்டாத . முழுசா சொல்லு இன்னும் தெரிய வேண்டிய விவரம் இருக்கு எங்களுக்கு”, நந்தன் பரிதியிடம் கேட்டான்.
“இன்னும் என்ன விவரம் உனக்கு வேணும்?”, பரிதி ஆயாசமாகக் கேட்டாள்.
“அவ கடத்தபட்டான்னு உங்களுக்கு எப்படி தெரிஞ்சது? இந்த மெமரி கார்ட் எப்படி உங்ககிட்ட வந்துச்சி? “, நந்து வினவினான்.
“அன்னிக்கி அவ அந்த தகவல்ல பாதி உண்மையும் பொய்யும் கலந்து விவரிச்சி குடுத்துட்டு வீட்டுக்கு வந்ததும், இந்த மெமரி கார்ட்அ என்கிட்ட குடுத்தா. அதுக்கப்புறம் அவள கடத்திட்டதா பரத் தான் சொன்னான். நான் பி.எம் கிட்ட பேச இந்த ஆதாரம் எனக்கு போதுமானதா இருந்தது, அதான் உடனே கிளம்பி இங்க வந்துட்டேன். இரண்டு நாளா உங்கள பாலோ பண்ணி இன்னிக்கு தான் மீட் பண்றேன். இனிமே எடுக்க போற ஆக்சன் உங்களோடது” ,எனக் கூறிவிட்டு அவள் சோபாவில் படுத்துவிட்டாள்.
நரேனும் நந்தனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அர்ஜுனைப் பார்த்தனர்.
அவன் பலத்த மௌனத்தில் இருந்தான். பரிதியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான்.
“டேய் அது நமக்கு அக்கா டா. இப்படி எல்லாம் பாக்க கூடாது”, என நந்தன் அவன் அருகில் வந்து கூறினான்.
“பின்ன அந்த ராங்கிய பாக்கலாமா?”, அர்ஜுன் எதிர்க் கேள்விக் கேட்டான்.
“அடேய் அந்த பொண்ண முதல்ல கண்டுபிடிக்கணும் டா. அதுவும் அது என்னா அராத்து பண்ணும்னு கேட்டல்ல. தேவையா உனக்கு இந்த விபரீத ஆசையெல்லாம்?!”, நந்தன்.
அவன் சொன்னதைக் கேட்டு அர்ஜுன் வாய்விட்டுச் சிரித்தான்.
“ஏன்டா சிரிக்கற?”, நந்து.
“இல்ல அந்த பொண்ண உன்கிட்ட மாட்டிவிட்டா எப்படி இருக்கும்ன்னு யோசிச்சேன், சிரிப்பு வந்துரிச்சி”, கூறி மீண்டும் சிரித்தான் அர்ஜுன்.
அர்ஜுன் சொன்னதைக் கேட்டு நரேனும் சிரித்தான்.
“உனக்கு ஏன்டா இந்த கொலவெறி? அந்த பொண்ண கடத்துனவன் இந்நேரம் என்னா பாடு படறானோ?” நந்து சொல்ல , அந்தச் சொல்லை மெய்பித்துக் கொண்டு இருந்தாள் நம் கலாட்டா நாயகி.
கடத்துனதுல இருந்து இந்த ராங்கி அங்க என்ன அலப்பறை பண்றான்னு நாமளும் பாக்கலாம் நண்பர்களே…
அவளை கடத்தியவர்களை கண்களில் திமிரும் தெனாவெட்டும் குறையாமல் வாயில் வழிந்த இரத்தத்தை துடைத்துக் கொண்டே பார்த்தாள், இதழில் குறையாதப் புன்னகையுடன்.
பூவழகியை கட்டிவைத்து அடித்தவர்கள் அவளின் திமிர் பார்வையிலும் தெனாவெட்டான சிரிப்பிலும் எரிச்சல் அடைய அவளை அடிக்க நெருங்கினர்.
“ஸ்டாப் திஸ் நான்சென்ஸ் “, என ஒரு குரல் கர்ஜித்தது.
யார்ரா அவன் என அவள் தலையை சாய்த்து பார்த்தாள். “இவன் தான் மெயின் வில்லனா இருக்குமோ? பார்த்தா ரொம்ப யங்கா தெரியறான். சரி நாம நம்ம பர்பாமன்ஸ்அ கன்டினியூ பண்ணலாம்” ,மனதில் சொல்லிக் கொண்டாள்.
அவள் அவனைப் பார்த்த சமயம் அவனும் அவளைப் பார்த்தான். அவளை அளந்தான் என்று தான் சொல்ல வேண்டும். கண்களில் ரசனை வழிய அவளின் தலை முதல் பாதம் வரையில் கண்களைப் படறவிட்டான்.
அந்த இளைஞன் வடநாட்டான் என்பதை முதல் பார்வையிலேயே கண்டு கொள்ளலாம். கோதுமையும் மைதாவும் கலந்த நிறம் 6 அடி 4 அங்குளம் இருப்பான். அதற்கு தகுந்த திடகாத்திரமான உடல். அவன் போட்டு இருந்த கருப்பு நிற சூட் அவனை மேலும் ஆணழகனாய் காட்டியது. தலை முதல் கால் வரையிலும் அவன் அணிந்திருந்தவை ,பணத்தில் குளிப்பவன் என்பதை காட்டியது. ஒரு ரோலிங் சேரில் அவள் முன் அமர்ந்தான்.
“கொன் ஹை தும்? மேரா நாம் ஆர்யன் “, எனக் கை நீட்டினான்.
“கை கட்டி இருக்கு எப்படி கைய குலுக்கறது மிஸ்டர்.ஆர்யன் ”, பூவழகி.
அவள் தமிழில் பேசவும், அவனும் தனக்கு தெரிந்த தமிழில் பேசத் தொடங்கினான்.
“அவள் கட்டை அவுத்து விடு”, ஆர்யன்.
கையையும் கால்களையும் நன்றாகச் சுழற்றி, சற்று நெட்டி முறித்து அவனுக்கு எதிரில் இவளும் ஒரு சேரை இழுத்துப் போட்டு அமர்ந்தாள்.
“முதல்ல நான் குளிச்சிட்டு சாப்பிடனும் ஏற்பாடு பண்ணு. அப்பறம் பேசலாம்”, பூவழகி அவனை நேராய் பார்த்துக் கூறினாள்.
“தும்ஹார நாம் கியா ஹை?”, ஆர்யன் கண்களில் ஆச்சரியம் படறக் கேட்டான்.
“தூக்கிட்டு வந்தவனுங்க சொல்லலியா?”, பூவழகி.
ஆர்யன் திரும்பிப் பார்க்க அங்கிருந்தவர்களில் ஒருவன் “பூவழகி ஜி” என்றான்.
“வாட்? பூஅகி? “, ஆர்யன்.
“நல்ல பேர ஏண்டா சாவடிக்கற? பூவழகி தட் மீன்ஸ் பியூட்டி ஆப் பிளவர்”, பூவழகி.
“நான் பியூட்டி ன்னு கூப்பிடறேன். யூ ஆர் லுக்கிங் சோ பியூட்டிபுல் “, என மென்னகை செய்தான்.
அவளுக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து தரச் சொல்லி அங்கிருந்து சென்றான். செல்லும் முன் ,” உன்னை சாயந்திரம் சந்திக்கிறேன். நீ வித்தியாசமான பொண்ணா இருக்க. இன்டிரஸ்டிங்”.
“போடா மைதா மாவு. நான் சாப்டு தூங்க போறேன்”,என கூறிவிட்டு அந்த கூட்டத்தின் தலைவி போல அவள் முன்னே சென்றாள் கைகளை ஆட்டியபடி.
அந்த கட்டிடம் சுமார் 20 தளங்களை கொண்டிருக்கும் . அதில் இவளுக்கு 10வது தளத்தில் ஒரு அறை கொடுக்கப்பட்டது.
அந்த அறையில் இல்லாத வசதிகளே இல்லை என்று தான் கூற வேண்டும். 7 ஸ்டார் ஹோட்டல் போல இருந்தது.
“வாவ். கடத்தினா இப்படி ஒரு ரூம் குடுப்பாங்கன்னு தெரிஞ்சா நான் ஓடி டைம் வேஸ்ட் பண்ணி இருக்க மாட்டேன்ல. டேய் சொட்டை ஏன்டா நீ இத சொல்லல?”, அங்கிருந்த அடியாட்களின் தலைவனைப் பார்த்துக் கேட்டாள்.
“எனக்கே தெரியாது அப்பறம் எப்படி நான் உனக்கு சொல்ல?” , அவனும் தமிழில் தெளிவாக பேசினான்.
“நல்லா தமிழ் பேசற. உன் பேரு என்ன? எந்த ஊரு?”, பூவழகி கேட்டாள்.
“ஐ ம் ஜான். சென்னை “, வெறுப்புடன் பதிலுரைத்தான்.
“பரவால்ல. நீ தான் இவனுங்களுக்கு ஹெட் ஆ?”, பூவழகி ஆழம் பார்க்க ஆரம்பித்தாள்.
“இல்ல. உன்ன கடத்திட்டு வர சொன்னப்ப எனக்கு தான் தமிழ் தெரியும்னு அனுப்பினாங்க”, ஜான்.
“ஏன் கடுப்பா இருக்க? “, பூவழகி.
“ஒன்னுமில்ல. இந்த ரூம் நீ யூஸ் பண்ணிக்கலாம். எதாவது வேணும்னா இந்த பட்டன் பிரஸ் பண்ணு ஆளுங்க வருவாங்க. தப்பிக்க டிரை பண்ணாத”, ஜான்.
“இந்த ரூம் விட்டு நான் ஏன் தப்பிக்க போறேன் ஜான். எனக்கு நல்ல சாப்பாடு வேணும். நம்ம ஊரு சாப்பாடு. ஆமா இது எந்த ஊரு?”, பூவழகி.
“அதெல்லாம் சொல்ல முடியாது. குடுக்கறத சாப்பிடு”,எனச் சொல்லி வெளியே சென்றுவிட்டான்.
அவள் அறைக்கு இணையத் தொடர்பு இருக்கிறதா எனப் பார்த்தாள். அந்த தளத்திலேயே வைபை தடை செய்யப்பட்டு இருக்கிறது போலும்.பக்கத்து அறைகளில் கூட இருப்பதாகத் தெரியவில்லை.
ஆளை கூப்பிடும் பட்டனை அழுத்தினாள்.
ஜான் உள்ளே வந்து ,” என்ன வேணும்?”.
“எனக்கு போட்டுக்க டிரஸ் வேணும். உன் பாஸ்அ கூப்பிடு”, பூவழகி.
அந்த சமயம் ஜானுக்கு அழைப்பு வர எடுத்தவன்,” ஷி ஸ் ஆஸ்கிங் மோர் பாஸ். டிரஸ் வெரைட்டி புட் “.
“கிவ் ஹெர் வாட் ஷி வான்ட்ஸ். பட் டோன்ட் லெட் ஹெர் எஸ்கேப். டிரீட் ஹெர் ரெஸ்பெக்டிவ்லி”, ஆர்யன்.
“ஓகே பாஸ்”, ஜான்.
“உனக்கு என்ன என்ன வேணும்னு சொல்லு. நீ கேக்கறதக் குடுக்கச் சொல்லி பாஸ் சொல்லி இருக்காரு”, அவளை பார்த்து கூறினான்.
“ஒரு பேப்பர் பென் எடுத்து நோட் பண்ணிக்க ஜான்”, பூவழகி கால் மேல் கால் போட்டு அமர்ந்து கூறினாள்.
“ஆடை முதல் சோப்பு சீப்பு ஹேர்ஆயில். இரவு உடை , லீவிஸ் ஜீன்ஸ் டாப்ஸ் , பேஸ் கிரீம், பாடி லோசன் என லிஸ்ட் நீண்டது. அப்பறம் சாப்பாடு நான் கேக்கற மாதிரி வரணும். அதையும் சொல்றேன் எழுதிக்க. தினமும் மீன் இருக்கணும். அப்பறம் சிக்கன் மட்டன் நண்டு பிரான் கனவான்னு எல்லாத்தையும் குடுக்கணும். ஒரு வேலைக்கு குறஞ்சது 5 ஐட்டம் சாப்பிட இருக்கணும். நம்ம ஊரு சமையலா இருக்கணும். கண்ட சாஸ்ல ஊத்தக் கூடாது. நடுவுல கீரை கேப்பேன் அதுவும் தரணும். இன்னும் 2 மணிநேரத்துல சாப்பாடு முதற்கொண்டு நான் கேட்டது எல்லாம் என் ரூம்ல இருக்கணும். சீக்கிரம் போயிட்டு வா”, உடலை தளர்த்திக் கொண்டுப் படுத்தவள், பின் எழுந்து குளியலறைச் சென்றாள்.
ஜான் வாயடைத்து நின்றான். “என்ன பொண்ணு இவ? கடத்திட்டு வந்து இருக்கோம் இவ என்னடான்னா அப்பன் வீட்ல ஆர்டர் போடற மாதிரி லிஸ்ட் போட்றா. இவ்வளவு சாப்பிட்டா என்ன ஆகுறது? பாவம் இவள கட்டறவன்” ,தலையில் அடித்துக் கொண்டு சென்றுவிட்டான்.
அவள் நன்றாக உடல் வலியும் அலுப்பும் தீர குளித்து அங்கிருந்த நைட் கோட் அணிந்து வெளியே வந்தாள்.
ஹாலில் இவள் கேட்ட அனைத்தும் அதே பிரான்ட்இல் இருந்தது. சிரித்து கொண்டே புளூ ஜீன்ஸ்ம் கருப்பு டாப்ஸ்ம் அணிந்தாள்.
“பிட்டிங் கரெக்ட் ஆ இருக்கு. கொல்லைல போறவனுங்க கண்ணுலயே அளவு டேப் வச்சி இருப்பானுங்க போல” கூறிக் கொண்டேத் தயாரானாள்.
படுக்கையறை விட்டு வெளியே வந்தவள் பால்கனிக்குச் சென்றாள். இவள் இருக்கும் அறை கட்டிடத்தின் பின்புறம் போல அழகிய தோட்டம் இருந்தது. கீழே சிலர் வேலை செய்து கொண்டு இருந்தனர். அவர்கள் தமிழில் உரையாடியது இவள் காதில் விழுந்தது.
“பரவால்ல இன்னும் நாடு கடத்தல போல நம்மல. எந்த ஊரா இருக்கும் இது? தெரியாமயா போயிர போகுது. பாத்துக்கலாம் விடு”, தனக்குத் தானே பேசிக் கொண்டு ஹாலிற்கு வந்தாள்.
அங்கிருந்த ரெக்ளைனர் சோபாவில் அமர்ந்து டிவியை ஆன் செய்தாள். செய்தி சேனல் ஓடியது. சேனல்களை மாற்றிக் கொண்டு வந்தவள், காமெடிச் சேனலை வைத்துவிட்டு பார்த்துச் சிரித்துக் கொண்டு இருந்தாள்.
உள்ளே வந்த ஜான் இவள் அமர்ந்து இருக்கும் நிலையை கண்டு சற்று எரிச்சல் கொண்டான். “உன்ன கடத்திட்டு வந்து இருக்கோம் . நீ அந்த நெனப்பு இல்லாம ஜாலியா இருக்க”.
“அத நெனைச்சா மட்டும் என்ன ஆக போகுது ஜான்? கிடைக்கறத சந்தோஷமா அனுபவிக்கணும் எப்பவும். இப்ப நீயே யோசி என்னால இந்த மாதிரி ஒரு ஹோட்டல்ல ரூம் போட்டு தங்க முடியுமா? எவ்வளவு வசதி. கேக்கறது நான் இருக்கற இடத்துக்கு வருது. நான் சொல்றத செய்ய நீயும் இருக்க. இத விட ஒரு மனுசனுக்கு என்ன வேணும்?”, பூவழகி.
“அதுவும் சரி தான். இந்த மாதிரி ஹோட்டல்ல ரூம் ஒரு நாளைக்கு பல ஆயிரம். அனுபவி. நீ சாப்பிட கொண்டு வந்துட்டேன் சாப்பிடு “ ,அவனறியாமல் வாய் கொடுத்து விஷயத்தை அறிந்தாள்.
“வா ஜான் நீயும் சாப்பிடு”, பூவழகி டைனிங் டேபிளில் அமர்ந்து அவனையும் அழைத்தாள்.
“இல்ல நீ சாப்பிடு நான் வெளியே இருக்கேன்”, ஜான்.
“நான் சொல்றத செய்யணும்னு உன் பாஸ் சொல்லி இருக்காரு. இப்ப நீயும் உக்காந்து சாப்பிடு”, பூவழகி.
அவன் பதில் பேசும் முன் அவனை இன்னொருவன் அழைத்தான்.அவள் அறையைப் பூட்டி அங்கே நான்கு பேரை நிற்க வைத்துவிட்டு தன் பாஸைப் பார்க்கச் சென்றான்.
“என்ன ஜான் இது? இவ்வளவு பெரிய பில் வந்து இருக்கு?” ஆர்யனின் உதவியாளன் வைபவ் கேட்டான்.
“அந்த பொண்ணு கேக்கறத குடுக்கச் சொல்லி பாஸ் தான் சொன்னாரு சார். அவ கேட்டு வாங்கின பில் இது”, ஜான்.
“4 லட்சம் பில் வந்து இருக்கு. அவள கடத்திட்டு வந்து இருக்கோம் அந்த பயம் அவகிட்ட இல்ல”, வைபவ்.
“அத நானும் கேட்டா கிடைக்கறப்ப அனுபவின்னு டயலாக் பேசறா சார்” , ஜான்.
அந்த சமயம் உள்ளே வந்த ஆர்யன் ,” வாட் வைபவ்? வாட்ஸ் த பிராப்ளம்?”.
“நாம கடத்திட்டு வந்த பொண்ணு தான் பிராப்ளம் பாஸ். வந்த ஒரே நாள்ல எவ்வளவு செலவு செஞ்சி இருக்கா பாருங்க “ என பில்லை நீட்டினான்.
“ஹாஹா…. வெரி பெகூளியர் கேரக்டர். விடு இதுல்லாம் ஒன்னுமில்ல. என் செலவுல போடு, வேற என்ன பிராப்ளம் பண்றா இன்னும்?”, ஆர்யன்.
“ஒரு வேளைக்கு 5 ஐட்டம் சாப்பிட வேணுமாம். அவ கேக்கறது தான் வேணும்னு சொல்றா”, வைபவ்.
“இந்த காலத்துல பொண்ணுங்க சாப்பிடறதே இல்லை. இவ சாப்பிடறா. நல்ல விஷயம் தான். அவ கேக்கறத செஞ்சி குடுங்க. நான் அப்பா கிட்ட பேசிக்கறேன்”, ஆர்யன் கூறிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டான்.
கணினியில் அவள் படத்தைப் பார்த்தவன் இன்டிரஸ்டிங் கேர்ள் என மென்னகைப் புரிந்தான்…