17 – அர்ஜுன நந்தன்
அர்ஜுனும் நரேனும் அடுத்து என்ன செய்வதென யோசனையில் இருந்தனர்.
இரவில் அவர்கள் மூவரும் உறங்கவே இல்லை. காலை 6 மணிக்கு எழுந்த பரிதி நரேனின் மனைவியுடன் உரையாடிக் கொண்டே, அவளுக்கு சமையலில் உதவிக் கொண்டு இருந்தாள்.
அதிகாலையில் நந்தன் சற்று கண் அயர்ந்தான். அர்ஜுனும் கை கால்களை சற்றுத் தளர்த்திக் கொண்டு அங்கிருந்த சோபாவில் படுத்தான்.
நரேன் குளித்து தயாராகி வந்து அர்ஜுனையும் நந்தனையும் எழுப்பினான்.
“டேய் எந்திரிங்க டா… சீக்கிரம் அந்த மும்பைகாரனை போய் பாக்கணும்”, நரேன் இருவரையும் தட்டி எழுப்பிக் கொண்டே கூறினான்.
“அய்யய்யோ…..பேய் பேய்…என் கால இழுக்குது காப்பாத்துங்க காப்பாத்துங்க…”, நந்து அலறினான்.
“டேய் நந்து …. என்னாச்சி?”, நரேன்.
“அண்ணா… பேய் என் கால பிடிச்சி இழுக்குது. என்னைய மாடில இருந்து தள்ளிவிட கால இழுத்து தள்ளுது. காப்பாத்துங்க”,கண்ணை மூடிக் கொண்டே உளறினான்.
அர்ஜுன் எழுந்து ஒரு உதை உதைத்தான்.
“எந்திரிடா பரதேசி”, அர்ஜுன்.
அர்ஜுனின் உதையில் சோபாவில் இருந்து கீழே விழுந்தவன் திரு திருவென முழித்தான்.
“என்னடா கெட்ட கனவு கண்டியா? எந்த பேய் உன்ன இழுக்குது?”, நரேன் தீவிரமாக கேட்டான்.
“அது முகம் சரியா தெரியல அண்ணா. எங்கயோ உயரமான பில்டிங்ல இருந்து என் கால பிடிச்சி இழுத்து தள்ளுது”, அவனும் சிறு குழந்தைப் போல முழித்துக் கொண்டே சொன்னான்.
“அந்த ராங்கிய நினைச்சிட்டு தூங்கினியா? அவ தான் பேயா வந்து இருப்பா”, என அர்ஜுன் கூறினான்.
நரேனும், நந்துவும் அர்ஜுனை ஒரு மார்க்கமாகப் பார்த்தனர்.
“அவன் கனவு காணரது இருக்கட்டும், நீ தான் அந்த ராங்கியவே நினைச்சிட்டு இருக்க போல” ,நரேன் துளைக்கும் பார்வையுடன் வினவினான்.
அர்ஜுன் ஒரு நொடி அதிர்ந்து பின் ஏதேதோ கூறிச் சமாளித்தான்.
“அந்த கேஸ் விஷயமாவே யோசிச்சிட்டு இருந்தேன் அதான் அப்படி கேட்டேன் ,வேற ஒன்னுமில்லை”, அர்ஜுன்.
இருவரும் அப்படியா என தலையாட்டிக் கேட்க அர்ஜுன் தயாராகி வருவதாக்க் கூறி அங்கிருந்து சென்றான்.
அனைவரும் தயாராகி சாப்பிட அமர்ந்தனர்.
“பரிதி நீங்க சொல்றபடி பாத்தா அந்த பொண்ண கடத்தி 3 நாள் ஆகுது சரியா?”, நரேன் கேட்டான்.
“ஆமாம் சார். இதுக்கு மேல அமைதியா இருந்தா நிலைமைய சமாளிக்க முடியாதுன்னு தான் கிளம்பி வந்தேன்”, பரிதி.
“உங்களோட பிளான் படி இப்ப கேஸ் நாங்க எடுக்கறோம். ஆனா நிலவரம் என்னனு முழுசா தெரிஞ்சா தான் அடுத்த நடவடிக்கை எடுக்க முடியும்”, அர்ஜுன்.
“நான் இருக்கறத சொல்லிட்டேன். ஸ்பாட் டீடைல்ஸ் , மத்த விஷயமெல்லாம் நீங்க நேர்ல தான் பாத்து தெரிஞ்சிக்கணும் நாகார்ஜுன இளஞ்செழியன். அதுமட்டுமில்ல எங்க யாத்ராவ சேப்அ எங்க கிட்ட கொண்டு வந்து சேக்கணும். அவ அங்க இருந்த நாட்கள்ல நிறைய விஷயம் செஞ்சிட்டு போய் இருக்கா, இந்த கேஸ்அ ப்ரோசீட் பண்ண. செந்திலும் பரத்தும் இன்னும் அங்க இருந்து தகவல் சேகரிசிட்டு தான் இருக்காங்க. நானும் அங்க என்னால ஆகறத செய்வேன். இங்கிருந்து நீங்க எத்தனை பேர் வருவீங்க? எப்ப யாத்ராவ கண்டுபிடிப்பீங்க?”, பரிதி.
“இருக்கா… நீ பாட்டுக்கு அடுக்கி கிட்டே போற. ஒன்னு ஒன்னா செய்யலாம்”, நந்து.
“நீ பொறுமையா ஒன்னு ஒன்னா செய்யற அளவுக்கு நமக்கு டைம் இருக்கான்னு தெரியாது . எவ்வளவு சீக்கிரம் யாத்ராவ கண்டுபிடிக்கறமோ அவ்வளவு நமக்கு நல்லது. அங்க இருந்தாலும் அவ அவளோட வேலைய பாத்துட்டு தான் இருப்பா. எந்த டைம் நாம என்ட்ரி போட்டாலும் செய்ய வேண்டியத சொல்லுவா . அவ சொல்றத செஞ்சாலே இந்த கேஸ் ஈஸியா முடிஞ்சிரும்”, பரிதி.
“அப்பறம் எதுக்கு நாங்க? அந்த ராங்கியே எல்லாத்தையும் பண்ணட்டும். அவ சொல்றத மட்டும்லா எங்கனால செய்ய முடியாது”, நந்து சற்றுக் கோபத்துடன் கூறினான்.
“அவ சொல்றத மட்டும் செய்ய சொல்லல டா. அவ சொல்றதையும் காதுல வாங்கினா போதும்”,பரிதி.
“முதல்ல அவள கண்டுபிடிக்களாம். அப்பறம் இந்த சண்டைய வச்சிக்கலாம்”, நரேன்.
“பரிதிக்கா…. அந்த பூவழகி வேணும்னே தானே அவங்க கிட்ட மாட்டினா?”, அர்ஜுன் யோசனையாக வினவினான்.
“அந்த சந்தேகம் எனக்கும் இருக்கு இளா. ஆனா அவள கடத்திட்டாங்க. அவள காப்பாத்தணும். இந்த கேஸூம் சீக்கிரம் முடிக்கணும்”, பரிதி.
“நாங்க நேத்து காலைல பிடிச்ச மும்பைகாரன பத்தி உங்களுக்கு எப்படி தெரிஞ்சது? அவனுக்கும் பூவழகிய கடத்தினவங்களுக்கும் எதாவது சம்பந்தம் இருக்குமா?”, அர்ஜுன்.
“அவனபத்தி செந்தில் தான் எனக்கு தகவல் சொன்னாரு . அது அவர் கிட்ட தான் கேக்கணும்”, பரிதி.
“சரி செந்தில், பரத் நம்பர் எனக்கு அனுப்புங்க. டிஐஜி கிட்ட அந்த பொண்ணு கடத்தப்பட்ட நாளும் அதுக்கு முதல் நாள் ஊருக்குள்ள வந்த வண்டிங்க மற்றும் அடுத்த நாள் வரைக்கும் அந்த ஊர விட்டு போன வண்டி நம்பர் எல்லாத்தையும் நோட் பண்ணி குடுக்க சொல்லுங்க. சஸ்பெக்ட் பண்ற ஆளுங்கள கஸ்டடில எடுக்க சொல்லுங்க. வேற ஒரு பொண்ண காணோம்ன்னு கேஸ் பைல் பண்ணி இந்த ஆக்சன்ஸ் உடனே எடுக்க சொல்லுங்க”, அர்ஜுன்.
பரிதியும் அர்ஜுன் கூறியதைச் செய்யச் சென்றாள்.
“என்ன ஐடியாடா வச்சி இருக்க?”, நந்து வினவினான்.
“இப்போதிக்கு ஒரு ஐடியாவும் இல்ல. லாஜிக்கா சில விஷயம் யோசிச்சி செஞ்சா எதாவது ஐடியா கிடைக்கும்”, யோசனையுடன் கூறினான் அர்ஜுன்.
“அந்த பொண்ணு வேணும்ன்னு தான் போய் மாட்டி இருக்கான்னு சொல்றியா டா?”,நரேன்.
“ஆமா அண்ணா. அவ இந்த கேஸ்ல யாரு மைன் பர்ஸன்னு கண்டுபிடிக்க தான் போய் இருக்கா. அவ கண்டுபிடிக்கறப்ப நாம வெளியே செய்ய வேண்டியத செஞ்சா ஆடோமெடிக்கா இந்த கேஸ் ஒரு முடிவுக்கு வரும். ரொம்ப தைரியமான பொண்ணு தான். உயிருக்கு உத்திரவாதம் இல்லன்னு தெரிஞ்சி தான் போய் இருக்கா. அவளயும் நாம காப்பாத்தணும்”, அர்ஜுன்.
“அவள காப்பாத்தறது இல்ல அவகிட்ட இருந்து அந்த கிரிமினல்ஸ்அ காப்பாத்தணும்னு சொல்லு “, நந்து கூறிவிட்டு சிரித்தான்.
நரேனும் அர்ஜுனும் கூட மென்னகைப் புரிந்தனர் அவனின் கேலியில்.
அவன் கூறியதைப் போலவே நம் பூவழகி அங்கிருந்தவர்களை எல்லாம் ஒரு வழி செய்துக் கொண்டு இருந்தாள். சற்று அங்கேயும் போய் பாத்துட்டு வரலாம்.
அவள் கடத்தப்பட்டு 2 நாட்களும் அவளின் தேவை பட்டியல் நீண்டுக் கொண்டே இருந்தது.
அனைத்தையும் குடுக்கச் சொன்ன ஆர்யன் அவளுக்கு எலக்ட்ரானிக் பொருட்களை குடுக்காது தவிர்த்தான்.
அவளும் விடாது இது வேண்டும் அது வேண்டும் என்று கூறிக் கொண்டே இருந்தாள். கைக்கு ஏதேனும் கிடைத்தால் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளத் தயாராக இருந்தாள். ஆனால் அங்கிருந்து தப்பும் முயற்சியை மட்டும் அவள் எடுக்கவே இல்லை.
அந்த அறையிலேயே நன்றாக உண்டு உறங்கி சுகமாகவே காலத்தை கழித்தாள்.
அவளை அன்று மாலையில் சந்திப்பதாக கூறிய ஆர்யன் கூட அவளை இரண்டு நாட்களாய் சந்திக்க வரவில்லை ஆனால் அவளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டது.
ஜானும் அவள் கேட்டதை வாங்கிக் கொடுத்து வந்தான் சலித்துக் கொண்டு. வைபவ் அவள் செய்யும் அனாவசியமான செலவுகளைக் கண்டு கோபத்தில் கொதித்துக் கொண்டு இருந்தான்.
தன் பெரிய முதலாளியிடம் எப்பொழுது திட்டு வாங்கப் போகிறோம் என எண்ணி கொண்டே பயந்திருந்தான்.
மூன்றாம் நாள் காலை ஆர்யன் அவளைச் சந்திக்க வந்தான்.
அந்த சமயம் தான் அவள் சாப்பிட்டு கொண்டு இருந்தாள்.
ஆர்யனை கண்டதும்,”வாங்க மிஸ்டர் ஆர்யன் சாப்பிடலாம்”, என்று அழைத்தாள் சிரித்த முகத்துடன்.
அவளின் சிரிப்பை கண்டவன் வியப்படைந்து ,” கடத்திட்டு வந்தவன் கிட்ட சிரிச்சிட்டே சாப்பிட கூப்பிடற . இந்த இரண்டு நாள் நீ ரொம்ப நல்லா என்ஜாய் பண்ணினதா ஜான் சொன்னான்”.
“சாப்பிடறப்ப யார் வந்தாலும் சாப்பிட கூப்பிடறது எங்க பண்பாடு . ஆமா ஆர்யன் நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் டிவி பாக்கறதுன்னு நல்லா போச்சி. நான் கேக்கறத மெனக்கெட்டு கொண்டு வந்து தரீங்க. உங்களுக்கு என்ன வேணும்? ஏன் கடத்தினீங்க?”, பூவழகி.
“எதுக்கு கடத்தினோம்ன்னு உனக்கு தெரியாதா? என்கிட்ட ரொம்ப ஆக்ட் பண்ணாத பியூட்டி. ஐ ம் நாட் தட் மச் குட் பர்ஸன்”,சிரிப்பில் பயமுறுத்தினான்.
“ஹாஹாஹா…. நான் ஏன் நடிக்கணும்? நான் எங்க இருக்கேன்னு கூட எனக்கு தெரியல . நான் எதாவது பணக்கார வீட்டு பொண்ணுன்னு நினைச்சி கடத்தி இருந்தா உங்களுக்கு தான் நஷ்டம். ஐ ம் ஆர்பன். சொத்தும் இல்ல சொந்தமும் இல்ல”, பூவழகி.
ஆர்யன் விநோதமாக அவளை பார்த்தான்,” சொத்து இல்லன்னு சொல்ற. நீ கேக்கற எல்லாமே ஹை கிளாஸ் ஆளுங்க யூஸ் பண்றது. பிரான்டட் டிரஸ் மத்த திங்ஸ், புட் எல்லாமே. டோன்ட் டிரை டு மேக் மீ இடியட்”.
“என்ன ஆர்யன் ? இந்த பிரான்ட்ஸ் எல்லாம் இப்ப கேசுவல் ஆகிரிச்சி. ஆஃபர்ல எங்கள மாதிரி ஆளுங்களும் வாங்கி யூஸ் பண்றோம். ரொம்ப நாள் தாங்குதுல. தவிர புட்ல நான் எல்லாத்தையும் விரும்பி சாப்பிடுவேன். ஒரு சில டிஷ்லாம் ஜான் சொன்னது எது நல்லா இருக்கும்னு கேட்டப்ப சொன்னான். இந்த சாஸ் ஊத்தி பண்ற ஐட்டம்லா எனக்கு பிடிக்கல. எங்க தமிழ்நாடு ஸ்டைல் தான் எனக்கு எப்பவும் பிடிக்கும்”, பூவழகி.
“சரி நீ யார்? உனக்கு எப்படி மிலிட்டரி கோடிங் தெரியும்?”, ஆர்யன் பார்வையை கூறாக்கி வினவினான்.
“என்னது மிலிட்டரி கோடிங்கா? அத நான் பாத்ததே இல்ல. நான் சாப்ட்வேர் என்ஜினியர் சோ கம்ப்யூட்டர் கோடிங் தான் தெரியும். நம்ம நாட்ல தான் என்ஜினியர்க்கு வேலை கிடைக்கறது இல்லையே அதான் சேரலாதன் சார் கிட்ட வேலைக்கு சேந்தேன். அங்க ஒரு கோடிங் குடுத்தாங்க எனக்கு தெரிஞ்சத விவரிச்சேன்”, பூவழகி.
அவள் கூற்றில் பொய் இருப்பதாக அவனுக்கு தெரியவில்லை அதே சமயம் உண்மை என்றும் தோன்றவில்லை.
அவளை ஆழமாக பார்த்தான்.
அவளும் முகத்தில் மெல்லிய புன்னகை படறவிட்டு ஏதும் அறியா பிள்ளையென முகத்தை வைத்துக் கொண்டாள்.
மனதில் அவளின் நடவடிக்கைகளைக் குறித்துக் கொண்டு,” சீக்கிரம் மறுபடியும் பார்க்கலாம் பியூட்டி”,எனக் கூறிச் சென்றான்.
நேராக தன் அறைக்குச் சென்றவன் அவள் தங்கி இருக்கும் அறையில் பொருத்தி இருந்த கேமிராக்களை அவள் வந்த நொடியிலிருந்து ஆராயக் கூறினான்.
அவளின் எந்த ஒரு சிறிய நடவடிக்கை நடமாட்டம் அனைத்தும் கவனித்தான். ஆனால் ஏதும் பயனுள்ளதாகப் பிடிபடவில்லை.
அந்த சமயம் அவனுக்கு ஒரு போன் கால் வர ,”டெல் மீ”.
“…………….”.
“இஸ் இட் ட்ரூ? எல்லா தகவலும் உண்மை தானா?”,ஆர்யன்.
“……………”.
“டேமிட்” என கூறி சுவற்றை குத்தினான்.
அவன டென்சன் பண்ணது வேற யாரும் இல்லைங்க நம்ம படை தான்…