18 – அர்ஜுன நந்தன்
“ஹலோ நான் நந்தன் பேசறேன். செந்தில் தானே பேசறது?”, நந்து.
“ஆமாம். சொல்லுங்க நந்தன் பரிதி சொன்னாங்க , நீங்க கூப்பிடுவீங்கன்னு”, செந்தில்.
“உங்களுக்கு அந்த மும்பைகாரனபத்தி எப்படி தெரிஞ்சது? “, நந்து.
“வெண்பா பரத் கிட்ட சொல்லிவிட்டா அதான் பரிதிக்கு நான் தகவல் அனுப்பினேன்”, செந்தில்.
“அவனுக்கும் யாத்ராவ கடத்தினவங்களுக்கும் சம்பந்தம் இருக்கும்ன்னு சொல்றீங்களா?”, நந்து.
“எனக்கு முழுசா தெரியல ஆனா ஒரு மும்பைகாரன் யாத்ரா போட்டோ வச்சிட்டு இருக்கான்னும் அவன்கிட்ட வேற சில தகவல்களும் இருக்குன்னு வெண்பா சொல்லி இருக்காங்க பரத் கிட்ட”, செந்தில்.
“அவங்களுக்கு எப்படி தெரிஞ்சது? யாரோட ஆள் இவன்?”, நந்து.
“அது தெரியல. வெண்பா இந்த தகவல மட்டும் சொல்லிட்டு கட் பண்ணிட்டாங்க அதுக்கப்பறம் இன்னும் கான்டாக்ட் பண்ண முடியல. வெண்பாவ அல்மோஸ்ட் ஹவுஸ் அரஸ்ட்ல வச்சி இருக்காங்க”, செந்தில்.
“சரி செந்தில். நாங்க இங்க விசாரிச்சிட்டு மறுபடியும் உங்கள கூப்பிடறோம்”, நந்து.
“சரி நந்தன்”, செந்தில்.
“அர்ஜுன் அங்கயும் முழு தகவல் தெரியல. இவன தட்டி தான் தெரிஞ்சிகணும். என்ன பண்ணலாம்?”, நந்து.
“முதல்ல அசோக்-கு கால் பண்ணு. அவனுக்கு நினைவு திரும்பிருச்சா கேளு”, நரேன்.
அர்ஜுன் யோசனையுடன் அமர்ந்து இருந்தான். பரிதியும் தயாராகி வந்தாள்.
“காய்ஸ்….. நான் கிளம்பறேன்”, பரிதி.
“எங்க கிளம்பிட்ட ? இங்க இரு வேலை இருக்கு”, நந்து.
“நான் இங்க வந்து மூனு நாள் ஆச்சி டா. அங்க போகணும் அப்ப தான் அங்க நடக்கறத தெரிஞ்சிக்க முடியும்”, பரிதி.
நந்து ஏதோ பேச வாய் எடுக்கும் முன் அர்ஜுன் அவனை அடக்கினான்.
“விடு நந்து, சகோ சொல்றது சரிதான். அங்க அவங்க இருந்தா தான் நமக்கு பரவால்ல”, அர்ஜுன்.
அதற்குள் பரிதிக்கு ஒரு அழைப்பு வர அதை எடுத்தாள்.
“ சொல்லு ஆதி. என்ன விஷயம்?”, பரிதி.
“…………….”, ஆதிரை.
“அப்படியா? எப்ப பேக்ஸ் வந்துச்சி?”, பரிதி.
“…………..”, ஆதிரை.
“சரி நான் பாத்துக்கறேன். நான் சொன்னத மட்டும் கன்டினியூ பண்ணு. நான் இங்க முடிச்சிட்டு வந்துட்றேன்”, பரிதி.
“சரி மேம்”, ஆதிரை.
“நரேன் சார் எனக்கு வேற முக்கியமான வேலை ஒண்ணு இருக்கு அத பாத்துட்டு தான் ஊருக்கு போகணும். எனக்கு ஒரு கார் மட்டும் குடுங்க”, பரிதி.
நரேன் அவன் மனைவியின் காரை அவளிடம் கேட்டபின் பரிதிக்குச் சாவியை கொடுத்தான்.
“நீங்க ஹாஸ்பிடலுக்கு போயிட்டு சொல்லுங்க . என் வேலை முடிஞ்சா நானும் அங்க வரேன்”, பரிதி.
“யக்கா சொல்லிட்டு போ. நீ பாட்டுக்கு பேசிட்டு கிளம்புற. என்ன ஏதுன்னு சொல்லு”, நந்து.
“வேலைய முடிச்சிட்டு வந்து சொல்றேன் டா. பாய் இளா. பாய் நரேன் . வரேன்டா என் செல்லமே “, என நந்துவின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளிவிட்டு போனாள் பரிதி.
அசோக்கிடம் இருந்து கால் வர மூவரும் அந்த மும்பைகாரனைக் காணச் சென்றனர்.
அங்கே ஹாஸ்பிட்டலில் அவனை ஸ்பெஷல் வார்டில் வைத்து இருந்தான் அசோக். அங்கே தான் எப்பொழுதும் இவர்களின் விசாரணையும் நடைபெறும்.
அர்ஜுன் உள்ளே வந்து ஓரமாக அமர்ந்து விட்டான். நரேனும் நந்துவும் மட்டும் அவனருகில் சென்று அமர்ந்தனர்.
“என்னடா எப்படி இருக்க? உனக்கு ஆயுசு கெட்டி தான் போல . இன்னும் உயிரோட தான் இருக்க”, நந்து கிண்டலடித்தான்.
“இப்ப சொல்ற விஷயத்துல தான் டா அது முடிவு ஆகும். என்ன அர்ஜுன்?”, நரேன்.
அவனும் அமைதியாக நரேனை பார்த்துவிட்டு அவனைப் பார்த்தான்.
“பாத்து அடிங்க பா. விஷயத்த வாங்கிட்டு கொல்லுங்க. கொன்னுட்டு இவன் உயிர கொண்டு வா-ன்னு என் உயிர எடுக்காதீங்க பா” , அர்ஜுனையும் நந்துவையும் பார்த்துக் கூறிவிட்டு வெளியே சென்றான் அசோக்.
அசோக் வெளியே சென்றதும் நரேன் விசாரிக்க ஆரம்பித்தான்.
(நம் புரிதலுக்காக தமிழில் உரையாடல் நடக்கும் அந்த மும்பைகாரனுடன்)
“யார் நீ”, நரேன்.
“உன்ன யார் அனுப்பினா?”, நந்து.
“சொல்லிட்டா உன்ன உயிரோட விட்டுடறோம்”, நரேன்.
“உயிரோட இருக்கணுமா வேணாமான்னு நீயே முடிவு பண்ணிக்க. நாங்க கேக்கறப்பவே சொல்லிட்டா உனக்கு நல்லது. அவன் வந்தா நீ சொல்லணும்ன்னு நினைச்சாலும் உன் உடம்புல உயிர் இருக்காது”, அர்ஜுனைக் காட்டிக் கூறினான் நந்து.
அவன் அமைதியாக அமர்ந்து இருந்தான். இவர்கள் கூறுவதும் உண்மை தானே அர்ஜுனை விட்டால் இரண்டே அடியில் கொன்றுவிடுவான். அவன் முழுபலத்துடன் இருக்கும்போதே ஒரே அடியில் கீழே தள்ளி பிடித்தவன் அர்ஜுன் தான்.
“உங்கள திசை திருப்ப தான் என்ன தற்காலிகமா மாட்டிக்க சொன்னாங்க. கூடவே அந்த பொண்ணு போட்டோ மட்டும் உங்க கைக்கு கிடைக்கற மாதிரி வச்சிக்க சொன்னாங்க”, மும்பைகாரன்.
“யாரு”, நரேன்.
“தற்காலிகமான்னா? கொஞ்ச நாள்ல யாரு உன்ன வெளியே எடுக்க வருவாங்க?”, நந்து.
“டாப் கிரிமினல் லாயர் வருவாங்க. யாரு அனுப்புவான்னு எனக்கு தெரியாது. என்ன அனுப்பினது யாருன்னும் எனக்கு முழுசா தெரியாது”, மும்பைகாரன்.
நரேனும் நந்துவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
மேலே சொல் என நரேன் கையசைத்தான்.
“அந்த பென்டிரைவ் பாக்கெட்அ முழுங்க சொல்லிட்டாங்க. நீங்க வெளியே விட்டப்பறம் லாயர் சொல்ற ஆளுகிட்ட குடுக்க சொன்னாங்க”, மும்பைகாரன்.
“சரி யார் இதல்லாம் உன்கிட்ட பண்ண சொன்னது”, நந்து.
“ஹோம் மினிஸ்டர் சன் இஷான் சௌத்ரி”, மும்பைகாரன்.
யாரும் அதிர்ச்சி அடையவில்லை ஏற்கனவே பெரிய இடத்து ஆட்கள் தான் காரணமாக இருப்பர் என யூகித்து இருந்தனர்.
அர்ஜுன் இப்பொழுது எழுந்து அருகில் வந்து அங்கிருந்த சேரில் அமர்ந்து அவனை பார்த்தான்.
“எவ்வளவு பணம் வாங்கின?”, அர்ஜுன்.
முகத்தில் உணர்ச்சியை காட்டாமல் அமர்ந்து இருந்தான் அவன்.
“50 கோடி”.
“உன்ன மாதிரி எத்தனை பேர்கிட்ட பேசி இருக்காங்க?”, அர்ஜுன்.
“மும்பைல இருக்கிற டாப் கில்லர்ஸ் எல்லாரையும் கூப்பிட்டு இருக்கிறதா தகவல் வந்தது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியாது”, மும்பைகாரன்.
“நேரடியா இஷான் உன்கிட்ட பேசினானா?”, அர்ஜுன்.
“ஆமா. பாதி பணம் தான் குடுத்தாங்க. மீதி நான் வெளியே வந்து அவங்க சொல்றத செஞ்சப்பறம்னு டீல்”, மும்பைகாரன்.
அசோக் போட்டுவிட்டு சென்ற ஊசி நன்றாக வேலை செய்ய இன்னும் சில நொடிகள் மட்டுமே அவன் பதில் சொல்லும் வாய்ப்பு இருந்தது.
“அந்த பொண்ணு இப்ப எங்க இருக்கு?”, நரேன்.
“தமிழ்நாட்ல தான்”, கூறியதும் அவன் மயங்கிவிட்டான்.
அசோக் உள்ளே வர அவனுக்கு மீண்டும் ஒரு ஊசி போடப்பட்டது.
“எந்திரிக்க இன்னும் 2 மணிநேரம் ஆகும். அப்பறம் வந்து வெரிபை பண்ணிக்கோங்க”, என்று கூறினான் அசோக்.
“பசங்கள நம்ம இடத்துக்கு வர சொல்லு”, அர்ஜுன்.
“சொல்லிட்டேன். நாம போறப்ப அங்க இருப்பாங்க”,நந்து.
“நமக்கு இன்னும் எத்தனை பேர் தேவை படுவாங்க நந்து”, நரேன்.
“நாம செந்தில் கிட்டயும் பரத்கிட்டயும் தெரிஞ்சிக்க வேண்டியது நிறைய இருக்கு. பரிதி கிட்டயும் இன்னும் சில விஷயம் தெரிஞ்சிகணும். நிறைய பிக் சாட்ஸ் இதுல இருக்காங்க போல. ஜாக்கிரதையா தான் ஹான்டில் பண்ணணும்”, நந்து.
அர்ஜுன் அமைதியாக அவர்கள் உரையாடுவதைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
“என்னடா அமைதியா இருக்க?”, நரேன்.
“இவன் நம்மகிட்ட சொன்னதுல பாதி பொய் பாதி நிஜம்”, அர்ஜுன்.
“எப்படி டா. நாம தான் இங்க வரதுக்கு முன்னயே அவனுக்கு இன்ஜெக்சன் போட சொல்லிட்டோமே. அவனே அவன கட்டுபடுத்த முடியாது அப்பறம் எப்படி பொய் சொல்ல முடியும்?”, நந்து.
“முடியும். இவனுக்கு அந்த டெக்னிக் சொல்லி குடுத்து தான் நம்மகிட்ட அனுப்பி இருக்காங்க”, அர்ஜுன்.
அசோக் அந்த சமயம் அங்கே வர அவனை அழைத்தான் நந்து.
“அசோக் ****** இன்ஜெக்சன் போட்ட அப்பறம் அவனால பொய் சொல்ல முடியுமா?”, நந்து.
“முடியுமே. மெடிடேசன்ல ஒரு சில டெக்னிக்ஸ் இருக்கு அத யூஸ் பண்ணா பாதிக்கு மேல அவங்க உண்மைய மாத்தி சொல்ல முடியும்”, அசோக்.
நரேன் நந்துவை பார்த்தான். நந்து அர்ஜுனை பார்த்தான்.
“இவனுக்கும் அந்த டெக்னிக் தெரியும்ன்னு நீ நினைக்கறியா டா?”, நந்து கேட்டான் அசோக்கிடம்.
“வாய்ப்பு இருக்கலாம். பிகாஸ் ஹி ஸ் எ கில்லர். கான்சென்ட்ரேசன் அதிகமா வச்சி வேலைய பாக்கறவனுங்க. தெரிஞ்சி இருக்க வாய்ப்பு இருக்கு. புதுசா சொல்லி குடுத்தாலும் சீக்கிரம் கத்துப்பாங்க, அந்த தகுதி இவனுக்கும் இருக்கு “, மும்பைகாரனை சுட்டி காட்டினான் அசோக்.
“அப்ப எப்படி தான் உண்மைய தெரிஞ்சிக்கறது?”, நரேன்.
“இவனுக்கு முழு நினைவு இருக்கறப்ப என்ன சொல்றான்னு கேப்போம். இப்ப நம்ம கைக்கு கிடைச்சத வச்சி என்ன பண்ணலாம்ன்னு பாக்கலாம்”, அர்ஜுன்.
அவன் நினைவு திரும்பியதும் அழைக்கச் சொல்லிக் கூறி, அங்கிருந்து அசோக்கிடம் கூறிவிட்டு புறப்பட்டு அவர்களின் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
பாலாஜி, முகில், கதிர், சரண் நால்வரும் அவர்களுக்காக முன்பே வந்து காத்து இருந்தனர்.
“குட் மார்னிங் பாஸ்”, அனைவரும் கூறி தங்களின் தலைமையிடம் இருந்து வரும் உத்திரவுகளுக்காக காத்திருந்தனர்.
“பாய்ஸ்… நாம கொஞ்ச நாள் ரெஸ்ட் இல்லாம வேலை பாக்க வேண்டிய சூழல் இப்ப வந்து இருக்கு. வெளி ஊருக்கு போகணும்”, நரேன் கூறினான்.
“பண்ணலாம் பாஸ். நாங்க ரெடி”, எனக் கோரசாகக் கூறினர்.
“உயிருக்கு உத்திரவாதம் இல்ல. பயப்படறவங்க இப்பவே சொல்லிடுங்க”, நந்து.
“இந்த வேலைல சேர்றப்பவே உயிர் பயத்த பத்தி கவலை படாம தான் வந்தோம் பாஸ். இப்ப மட்டும் புதுசா என்ன சொல்றீங்க?”, முகில் கேட்டான்.
“நாம எல்லாரும் இப்ப டிபார்ட்மெண்ட்ல இருந்து மறஞ்சி தான் வேலை செய்ய போறோம். ஹைலி கான்பிடன்சியல். இதுல நிறைய பிக் சாட்ஸ் தான் சம்பந்தப்பட்டு இருக்கறமாதிரி இருக்கு. ரொம்பவே ரிஸ்க்”, நந்து.
“ரிஸ்க்ல தானே சார் த்ரில் இருக்கும். நாங்க ரெடி. வேலைய சொன்னா செய்ய ஆரம்பிச்சுறுவோம்”, கதிர்.
அவர்களிடம் உறுதியை கண்ட அர்ஜுன் மனதில் அவர்களை நினைத்துப் பெருமைக் கொண்டான்.
“பாலாஜி, முகில் ரெண்டு பேரும் இப்பவே தஞ்சாவூர் கிளம்புங்க. அங்க ரீச் ஆனதும் கால் பண்ணுங்க ஒருத்தர் வந்து உங்கள கூட்டிட்டு போவார்”, அர்ஜுன்.
சரி என கூறினர் இருவரும்.
“சரண். நீ இங்கயே இருந்து நாங்க கேக்கற டீடைல்ஸ் அனுப்பனும். உனக்கு தனி ரூம் நம்ம ஆபிஸ் கான்பிடன்சியல் ஏரியால அலாட் பண்ணி தருவோம்”, அர்ஜுன்.
“ஓகே சார்”, சரண்.
“கதிர் நீங்க இங்க ஒரு சிலர பாலோ பண்ணிட்டு தகவல் சேகரிச்சிட்டு நான் சொல்றப்ப கிளம்பி வாங்க”, அர்ஜுன்.
“ஓகே சார் “, கதிர்.
கதிரை தனியே அழைத்து அர்ஜுன் அவன் காதில் எதையோ கூறினான்.
“செஞ்சிட்டு கால் பண்ணுங்க”, அர்ஜுன்.
சரியெனக் கூறி அவன் வெளியே சென்றான்.
கதிர் சென்றதும் பாலாஜியிடமும், முகிலிடமும் ஒரு சில தகவல்களைக் கூறி அங்கிருந்து அவர்களைக் கிளம்பச் சொன்னான்.
தேவைபட்ட கன் புல்லட்ஸ் அனைத்தும் பழங்கள் வரும் பாக்கெட் போல தயார் செய்து அவர்களுடன் அனுப்ப ஏற்பாடு செய்தான்.
சரணை தலைமை அலுவலகம் நரேனுடன் அனுப்பி வைத்தான்.
“எல்லாரையும் அனுப்பிட்ட. நாம என்ன பண்றது?”, நந்து.
அசோக் கால் பண்ணதும் ஹாஸ்பிடல் போலாம். அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுதே கால் வந்தது.
“சொல்லுடா”, நந்து.
“………..”, அசோக்.
“என்னடா சொல்ற? நாங்க உடனே வரோம்”, நந்து.
இருவரும் அசோக்கின் ஹாஸ்பிடலுக்கு விரைந்தனர்.
அங்கே மும்பைகாரன் உடலில் வெட்டுகாயத்துடன் படுத்துக் கிடந்தான். அறை முழுதும் அலங்கோலமாகக் காட்சியளித்தது.
“என்னாச்சி டா?” , நந்து மறுபடியும் கேட்டான்.
“யாரோ 5 பேர் வந்து இவன வெட்ட பாத்தாங்க. அப்ப தான் இவனுக்கு மயக்கம் தெளிஞ்சது. இவன் அவனுங்ககிட்ட இருந்து தப்பிக்க ரூம்குள்ளயே ஓடினான். அப்பயும் வயித்துல வெட்டு பட்டுரிச்சி. நாங்க வந்ததும் அவனுங்க ஓடிடானுங்க டா”, முழுதாகக் கூறி முடித்தான் அசோக்.
அர்ஜுன் மும்பைகாரன் அருகில் சென்று ,” யார் உன்ன கொல்ல வந்தாங்க?” .
“அந்த நிஷாந்த் சர்மா ஆளுங்க தான்”, வலியிலும் கோபத்திலும் கூறினான்.
“எந்த நிஷாந்த் சர்மா?”, அர்ஜுன்.
“விகேஎஸ் குரூப் ஆப் கம்பனீஸ் ஓனர்”, மும்பைகாரன்.
நந்துவும் அர்ஜுனும் தலையசைத்துக் கொண்டனர்.
“அவங்க ஏன் உன்ன கொல்ல வராங்க?”,நந்து.
மும்பைகாரன் ஒரு நிமிடம் தயங்கி “அவன் தான்
பணம் குடுத்து என்ன அனுப்பி அந்த பொண்ண தூக்க சொன்னான்”.
“யார் அந்த பொண்ணு?”,நந்து.
“தெரியாது. ஆனா அந்த பொண்ணுக்கு ஏதோ சீக்ரெட் தெரியும்ன்னு தூக்கிட்டு வர சொன்னாங்க”,மும்பைகாரன்.
“சரி நீ என்ன பண்ணலாம்னு இருக்க?”,நந்நு.
“என்ன விட்ட அவனுங்க கிட்ட போய் என் பணத்த வாங்குவேன்”, மும்பைகாரன்.
“சரியான ஆளு தான்டா இவன். என்ன பண்ணலாம்?”, நந்து.
அர்ஜுன் வெளியே அழைத்து வந்து,“முன்ன விட்டு பின்ன தான் பிடிக்கணும்”.
“யார இவன் பின்ன அனுப்ப?”,நந்து.
“அந்த காலேஜ் பையன் சக்திய அனுப்பு. இந்த கேஸ் முடியற வரைக்கும் அவன் தேவை”, அர்ஜுன்.
“சரி”, நந்து சக்தியை அழைத்து விஷயத்தைக் கூறி அந்த மும்பைகாரனிடம் சென்றான்.
“நீ போலாம்”,நந்து.
“ஒரு நாள் இருந்துட்டு போறேன் சார்”,மும்பைகாரன்.
சரியென கூறி நார்மல் வார்டில் மாற்றச் சொன்னான்.
மீண்டும் அவனுக்கு மயக்க ஊசி போடப்பட்டு அவனிடம் இருந்து எடுத்த பென்டிரைவ் மற்றும் பிங்கர்பிரிண்ட்டின் நகலை அவனின் வயிற்றில் செலுத்தப்பட்டு நடந்த அனைத்தும் மறக்கவும் செய்யப்பட்டது.
அந்த மும்பைகாரன் கண்விழித்து அருகில் இருந்த நர்ஸிடம் ,”நான் இங்க எப்ப வந்தேன்?”.
“ இரண்டு நாளா அடிபட்டு மயக்கத்துல இருந்த. இப்ப தான் முழிக்கற”, கூறிவிட்டு டாக்டரை அழைக்கச் சென்றுவிட்டாள்.
வேறோரு டாக்டர் வந்து பரிசோதித்து காயம் ஆற சில மருந்துகள் எழுதி தந்துவிட்டு சென்றார். அவனுக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. பின் அன்று மாலையே அங்கிருந்து சென்றான்.
அவன் நேராக சென்று நின்றது இஷான் சௌத்ரி இல்லத்தில் தான். அவனைக் கண்ட இஷான் சந்தேகித்து அருகில் அழைத்து விசாரித்தான்.
இன்னொரு பக்கம் பரிதி தஞ்சாவூரிலேயே இன்னும் 2 ஆண்டுகள் பணியாற்ற உத்திரவு கடிதம் பெற்றுக் கொண்டச் செய்தியும் வந்தது.
இஷான் இதை தான் ஆர்யனிடம் கூறி அவனும் கோவப்பட்டது.