2 – அர்ஜுன நந்தன்
நந்தன், பாலாஜி, முகில், கதிர், சரண் இவர்கள் ஐவரும் தான் அர்ஜுனின் முக்கியப் படை நபர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தனித் திறமை பெற்றவர்கள்.
பாலாஜியும், சரணும் புது கம்ப்யூட்டர் தொழில் நுட்பங்கள் அனைத்தும் எப்போதும் விரல் நுனியில் வைத்திருப்பவர்கள்.
முகிலும், கதிரும் மனிதர்களைக் கண்காணிப்பது மட்டுமின்றி தகவல் சேகரிப்பதில் வல்லவர்கள்.
அர்ஜுனும், நந்தனும் சிறுவயது முதல் நெருங்கிய நண்பர்கள். சமபலம் பெற்றவர்கள் புத்தியிலும் உடலிலும். அவர்கள் என்ன நினைக்கிறார்கள், என்ன செய்வார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.
“சரண் அந்த பாக்கெட்ல என்ன இருக்குனு பாருங்க,” முகில்.
சரண் கையுரை அணிந்து கொண்டு அதை பிரித்துப் பார்க்க அதில் ஒரு மெமரி கார்டு மற்றும் ஒரு கைரேகை லேயர் இருந்தது.
சரண் அந்த பென்டிரைவின் பயோமெட்ரிக் பகுதியில் கைரேகை லேயர் வைத்து அழுத்தப் பென்டிரைவ் போல்டர் ஓபன் ஆனது.
அதில் தமிழ்நாட்டின் முக்கிய புள்ளிகளின் சொத்து விவரம் மற்றும் இன்னபிற அரசியல் தகவல்கள் இருந்தது.
அதை கண்ட அர்ஜுன், நந்தனிடம் இவர்கள் பற்றிய விவரங்களைச் சரிபார்த்து தனியே ஒரு பட்டியலை தயாரிக்கச் சொன்னான்.
“நந்து வேற டிவைஸ்ல இத காப்பி பண்ணி வை . இது ரொம்ப முக்கியம் மிஸ் ஆக கூடாது. டேக் அட் சீக்ரெட் சேம்பர்”, அர்ஜுன்.
“மயங்கி இருக்குற இவன ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டு ஒருத்தர பாதுகாப்புக்கு அங்கயே இருக்கச் சொல்லு. இவன் முக்கியம். தப்பி வெளியே போனா பொணமா தான் போகனும் புரியுதா?”
அர்ஜுன் சொல்லி கொண்டே பின்வழியே போக யாரும் அவனை கவனிக்கவில்லை.
பாலாஜி, “அவன் எப்ப மயங்கினான் முகில்?
“அத கூட கவனிக்காம தான் நீ வேலை பண்ணிட்டு இருக்கியா ராசா ?”, நந்து.
“சார் சொன்னத தானே பண்ணிட்டு இருந்தேன் நந்து சார்” , பாலாஜி.
சரணும், கதிரும் சிரித்தனர். “இங்க சார் சொல்றத மட்டுமில்ல எல்லா பக்கமும் கண் காதுனு வச்சிக்கணும். லேப்டாப்அ மட்டும் வாய பொளந்துட்டு பார்க்க கூடாது”, முகில்.
போகப் போக உங்கள மாறி பழகிருவான் முன்னாடி யாரோ வரமாதிரி இருக்கு அங்க பாருங்க டா.
முகில், “சரி இவன எந்த ஹாஸ்பிடல் தூக்கிட்டு போறது பாஸ்” , என பேசி கொண்டே அர்ஜுன் நின்ற இடத்தை பார்க்க, அவனை காணாமல் நந்துவை கேட்க திரும்பவும் முன்னே ஒருவர் உயர் அதிகாரினு நினைக்கிறேன் சல்யூட் வைக்கறாங்க அத்தனை பயலும்.
“எதுக்குடா ஹாஸ்பிட்டலுக்கு, நேரா போஸ்ட்மார்டம்க்கு கொண்டு போங்க. உங்ககிட்ட அவன பிடிச்சிட்டு வரச் சொன்னா ஏன்டா இப்படி அடிச்சு தொங்க விட்டு இருக்கீங்க”, திட்டிகிட்டே இல்லீங்க புலம்பிகிட்டே வராரு நம்ம நரேன்.
நரேன் திவாகரன் நம்ம டீம் லீட். இவர்தான் நம்ம மகராசனுங்க பண்ற தப்புக்கு எல்லாம் மேல் எடத்துல வாங்கி கட்டிக்குவாரு.
அர்ஜுன் க்கு சீனியர் ஆபீஸர். அவனுக்கு ஆர்டர் போட்ற ஒரே மனுசன். இவனும் நல்ல புள்ளையா சொல்றத தான் செய்றேன்னு சொல்லிகிட்டே ஆளப் புடிச்சிட்டு வராம பொணமாத் தான் கொண்டு போவான். அவ்வளவு நல்லவனுங்க நம்ம டீம்.
நந்து எஸ்கேப் ஆக பார்க்கறப்ப நம்ம பாலாஜி நரேன்கிட்ட இழுத்து விட்டுட்டான்.
பாலாஜிய முறைச்சுகிட்டே நரேன் முன்ன போய் நிக்கறான் நம்ம நந்து.
“என்னடா செஞ்சி வச்சி இருக்கீங்க இவன” , நரேன்.
“விசாரிச்சோம் பாஸ்”
“உங்கள அவன பிடிச்சிட்டு தான் வர சொன்னேன்”
“பிடிக்கறப்ப ஓட பாத்தான் அதான் நாலு அடி அடிச்சோம் பாஸ்”
“எங்க டா அவன்?”
“யாரு பாஸ் ?”
“உன்கூடவே இருப்பானே உன்னோட உயிர் நண்பன் “
“அவன் இங்க தான் இருக்கான் பாஸ் “, என கூறிக்கொண்டு அர்ஜுன் இருந்த இடத்தில் பார்க்க அவன் அங்கில்லை.
“கூப்பிடு அவன “, நரேன்.
படுபாவி இந்த தடவையும் தனியா சிக்க வச்சிட்டு போய்ட்டான் இப்ப என்ன சொல்லி சமாளிக்க. உயிரோட வறுத்து எடுப்பாரே இவரு என்னய. முணுமுணுத்து கொண்டு திரும்பவும், நரேன் கண்களால் எரித்து கொண்டு இருந்தான்.
நந்து முகிலை பார்க்க, நரேனை சமாளிக்க முன் வந்தான்.
“சார் அர்ஜுன் சார்க்கு ஒரு கால் வந்தது அதான் அந்தப் பக்கம் போனாரு”, முகில்.
“யார் கால் பண்ணாங்கனு தெரியுமா”?
“இல்ல சார் அவர் கால் வந்ததும் வெளியே போய்டார் “
“அப்ப நான் கால் பண்ணதும் வெளியே போய்ட்டான் அப்படித் தானே நந்து?”
“அய்யய்யோ பாஸ் அவன் வேணும்னே எங்கள சிக்கவச்சிட்டு போய்டான் ஒரு மணி நேரம் டைம் குடுங்க அவன் எங்க இருந்தாலும் கொண்டு வந்து உங்க முன்னாடி நிறுத்தறேன்”, நந்து.
“நீயும் ஓடிட்டா யாரு பாடிய டிஸ்போஸ் பண்றது? “, நரேன்.
“பாஸ் அவன் இன்னும் சாகல பாருங்க கண்ணுமுழி அசையுது”, நந்து.
“காமெடி பண்றியா டா?”, நரேன்.
“இல்ல சமாளிச்சிட்டு இருக்கேன். இல்ல இல்ல எந்த டாக்டர்ற கூப்பிடுறதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்”, நந்து.
“உங்களுக்குனு ஒரு அடிமைய வச்சி இருக்கீங்களே அவன்கிட்டயே கொண்டு போங்க. சாயந்திரமா அர்ஜுன கூட்டிகிட்டு என் வீட்டுக்கு வந்து சேரு”, என சொல்லி விட்டு நரேன் சென்று விட்டான்.
பாலாஜி , “நந்து சார், அர்ஜுன் சார் ஏன் நரேன் சார் வரப்ப சொல்லாம போனாரு? “
நந்து பாலாஜியை அருகில் அழைத்து, ” நீ ஏன் இன்னும் பச்சபுள்ளையாவே இருக்க ? உன்ன யாரு இந்த டீம்ல போட்டா?”
பாலாஜி, “அர்ஜுன் சார் தான் போன வாரம் அவர் டீம்க்கு வரச்சொல்லி ஆர்டர் குடுத்தாரு ”
நந்து, “அப்ப உனக்கு தனி விருந்து இருக்குடா. பாவம் யார் பெத்த புள்ளையோ இம்புட்டு அப்பாவியா இருக்குது”
“முகில் அந்த டாக்டர்க்கு கால் பண்ணிட்டியா?” , நந்து.
“பண்ணிட்டேன் சார் 20 நிமிசத்தில வரேன்னு சொன்னாரு” , முகில்.
அசோக் MBBS.,MS.,MD., (UK) ரொம்ப பேமஸ் டாக்டர் . இவரோட ஹாஸ்பிட்டலுக்கு நிறைய பிரான்ஞ்ச் நிறைய ஊர்ல இருக்கு. இவர் தான் அந்த அடிமை.
அசோக், “ஹாய் பிரண்ட்ஸ் இன்னிக்கு யார கொன்னுட்டு இருக்கீங்க?”
சரண், “வாங்க டாக்டர், இவன் தான் இன்னும் உயிரோட இருக்கானானு பாருங்க”.
முகில், “உங்க அசிஸ்டண்ட் வரலியா டாக்டர்?”
அசோக், “போன தடவை ஒருத்தன் கையும் காலும் மாத்தி போட்டு கட்டி வச்சீங்களே அத பாத்துட்டு போனவன் தான் இன்னும் வரல, என்னடா பண்றீங்க அப்படி? ஆக்ஸிடென்ட்ல செத்துட்டான்னு ரிப்போர்ட் குடுக்க சொல்றீங்க அதுக்கு தகுந்தாமாதிரி அடிச்சா என்ன?”
நந்து, “இவன் பொளைப்பானா இல்லியா அத சொல்லு மொதல்ல”
“வாடா நல்லவனே, எங்க இன்னொருத்தன் ?”
“அவன் ஓடிட்டான், நான் மாட்டிட்டேன்” நந்து முகத்தை உற்றென்று வைத்துக்கொண்டு.
“இது வழக்கமா நடக்கறது தானே அப்பறம் என்ன?”, அசோக்.
“அதுக்கு நான் மட்டும் தான் அவர் கண்ணுக்கு தெரியறனா? இவனுங்களும் தான் இருக்கானுங்க. என்னை மட்டும் வறுத்து எடுக்கறாரு”, நந்து.
“விட்றா நீ இளாவ காப்பாத்தி பழகிட்ட , இவனுங்க இன்னும் உன்ன காப்பாத்தி பழகல”, அசோக்.
“சரி விஷயத்துக்கு வா, இவன் எப்ப கண்ணு முழிப்பான்?”, நந்து.
“இன்னும் ஒரு நாள் ஆகும் டா. அடி பலமா இருக்கு பட் பெருசா பாதிப்பு இல்ல. நான் இவன ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போறேன் வழக்கமா போட்ற ரூம்ல வைக்கறேன். நாளைக்கு சாயந்திரமா வாங்க”, அசோக்.
நந்து, “சரண், பாலாஜி பென்டிரைவ் சேஃப் பண்ணிட்டு இன்னும் 2 காப்பி எடுத்து வைங்க. முகில் அர்ஜுன் சொன்னத செஞ்சிட்டு தனி லிஸ்ட் ரெடி பண்ணிடுங்க. கதிர் இவன பத்தின தகவல், இவன் மேல எத்தனை கேஸ் இருக்கு, யாரோட கையாள்னு கண்டு பிடிச்சு சொல்லுங்க. எமர்ஜென்ஸினா உடனே கால் பண்ணுங்க. பை”, நந்து.
Nice