23 – அகரநதி
“ஹலோ… அகன் எப்படி இருக்க?”, நதியாள்.
“ஹலோ…. ஹூ இஸ் திஸ்?”, எதிர்முனையில்.
“இஸ் திஸ் அகரன்ஸ் போன்?”, நதியாள் குழப்பத்துடன் கேட்டாள்.
“எஸ்… இட்ஸ் அகரன்ஸ் நம்பர். ஹூ ஆர் யூ?”, எதிர்முனையில்.
“ஐ ம் நதியாள் . ஐ வான்ட் டூ ஸ்பீக் வித் அகரன். இஸ் ஹீ தேர்?”.
“யா….. ஒன் மினிட்…”, என நதியாளிடம் கூறிவிட்டு,” அகர் சம்படி கால்ஸ் யூ”, என அகரனை அழைத்தது அந்த குரல்.
“தேங்க்யூ டியர்”,எனக் கூறி அகரன் தன் மொபைலைப் பெற்றான்.
“ஹலோ”, அகரன்.
“யார் அவ? உன் மொபைல் எடுக்கறா?”, நதியாளின் குரலில் பொறாமை இருந்ததோ என யோசிக்க வைத்தது.
“அது என் க்ளைண்ட் மைரா. மீட்டிங் முடிஞ்சி லன்ச்காக வந்து இருக்கோம் நதிமா. எப்படி இருக்க? எக்ஸாம் எப்படி பண்ண?”, அகரன்.
“ஹான்.. பைன். நான் எப்ப… ஐ மீன் நாங்க எப்ப வந்து கம்பெனில ஜாயின் பண்றது?”, நதியாள் தடுமாறியபடிக் கேட்டாள்.
“நான் சரண் கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்றேன். அதுவரை ஜாலியா இருங்க. ஓகே அப்பறம் பேசறேன் மைரா எனக்காக வையிட் பண்ணிட்டு இருக்கா. பாய்”, என நதியாளின் பதிலுக்காக காத்திராமல் வைத்துவிட்டான் அகரன்.
இந்த பக்கம் நதியாளுக்கு கோபம் தலைக்கு ஏறிக்கொண்டு இருந்தது.
“என்ன அவசரம் இப்படி கால் கட் பண்ணிட்டு போற அளவுக்கு? நான் எத்தனை நாள் கழிச்சி பேசறேன் அந்த சந்தோஷம் கூட அவன்கிட்ட இல்லை.. அந்த மோராவோ மைராவோ அவ வையிட் பண்றான்னு ஓடறான்.என்ன நினைச்சிட்டு இருக்கான் இவன்?”, என மனதிற்குள் அவனை அர்ச்சித்துக்கொண்டு இருந்தாள் நதி.
“அப்படி என்ன அவ அவ்வளவு முக்கியமா? டியர்னு கூப்பிடறான். நம்மல கூட அப்படி கூப்பிடறது இல்லை. அவ யாருன்னு பாத்தே ஆகணும். உடனே கிளம்பணும்”, என யோசித்துவிட்டு சரணுக்கு அழைத்தாள்.
“ஹாய் வாலு…எப்படி பண்ண எக்ஸாம் எல்லாம்?”,சரண்.
“அகன் எந்த ஹோட்டல் போய் இருக்கான்?”, நதியாள்.
“ஏன்? அவன் க்ளைண்ட் கூட ******** ஹோட்டல் போய் இருக்கான்”, என சரண் கூறியதும் கால் கட் செய்து விட்டு வீட்டை விட்டு வெளியே வந்தாள் நதி.
அப்பொழுது தான் சஞ்சய் உள்ளே வந்து பைக்கை நிறுத்த, அப்படியே வண்டியை ஸ்டார்ட் செய்து சரண் கூறிய ஹோட்டலை நோக்கிச் சென்றாள். பின்னால் திலீப் அமர்ந்து இருந்தான். அவனை இறக்கிவிட கூட அவள் நிற்கத் தயாராயில்லை.
“ஹேய் யாள்.. எங்க இவ்வளவு வேகமா போற?”, திலீப் வண்டியை இறுக்கிப் பிடித்தபடிக் கேட்டான்.
“பேசாம கம்முன்னு வா இல்லை கீழ உருட்டி விட்றுவேன்”, நதியாள்.
பதினைந்து நிமிடத்தில் வரவேண்டிய இடத்திற்கு 5 நிமிடத்தில் வந்து சேர்ந்தாள்.
ஹெல்மெட்டை கழற்றி திலீப்பின் தலையில் கவிழ்த்து விட்டு அந்த பிரம்மாண்டமான ஹோட்டலின் உள்ளே சென்று அகரனைத் தேடத் தொடங்கினாள்.
ரெஸ்டாரெண்ட் பகுதியைக் கண்டறிந்து அவள் வேகமாக முன்னே நடக்க, திலீப் ஏதும் புரியாமல் அவளின் பின்னே ஓடினான்.
“ஹேய் யாள்.. நில்லு … பசிக்குதுன்னா இவ்வளவு வேகமா வந்த? நானும் சஞ்சயும் உங்களுக்கு சாப்பாடு வாங்கிட்டு தான் வந்தோம். இப்ப நீ ஏன் இங்க என்னை கூட்டிட்டு வந்த?”, திலீப்.
ரெஸ்டாரெண்டின் உள்ளே சென்றவள் அங்கிருந்தவர்களின் நடுவில் அகரன் தென்படாததுக் கண்டு, அங்கிருந்த பேபரிடம் விசாரித்து அகரன் இருக்கும் அறைக்குச் சென்றாள்.
பெரும் நட்சத்திர ஹோட்டல்களில் பேமிலி டைனிங் ரூம்கள் ஆட்கள் உட்கார எண்ணிக்கை கூடியும் குறைத்தும் தனிமையான சூழலுடன் அமைந்திருக்கும். அதில் தொழில் தொடர்பு சந்திப்பும் பல சமயம் நிகழும். அகரனும் மைராவும் அன்று அந்த பேமிலி டைனிங்கில் அமர்ந்திருந்தனர்.
நதியாள் கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே வரவும், மைரா அகரனின் வாயில் இனிப்பைத் திணிக்கவும் சரியாக இருந்தது. அதைக் கண்ட நதியாள் ( நம்ப சொல்லனுமா புள்ள பொறாமைல பொங்கோ பொங்குன்னு பொங்கிரிச்சி) விழிகளை விரித்தபடி அப்படியே நிற்க திலீப் எட்டிப் பார்த்தான்.
“ஹாய் அகரன் சார்…. எப்படி இருக்கீங்க?”, திலீப் கேட்டுக்கொண்டே நதியாளைக் கடந்து உள்ளே வந்தான்.
“யாள் சார பாக்க தான் இவ்வளவு அவசரமா வந்தியா? லன்ச்சுக்கு வர சொன்னாரா? முன்னயே சொல்லி இருந்தா எல்லாரும் இங்க வந்து இருக்கலாம்ல”, திலீப் பாட்டிற்குப் பேசிக்கொண்டே அகரனின் அருகில் வந்து நின்றான்.
நதியாளைக் கண்ட அகரன் சற்றே பிரம்மித்து தான் போனான். தொலைபேசியில் உரையாடிய சில நிமிடங்களில் அவளைக் காண்போம் என அவன் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. கிட்டதட்ட இருபது நாட்கள் கழித்து அவளைக் காண்கிறான். சற்றே முகத்தில் சோர்வு இருந்தது. உடலும் சற்றே நூலளவு இளைத்தே இருந்ததோ என்று தோன்றியது. ஆனால் அவளின் முகத்திலும் , கண்களிலும் ஏதோ வித்தியாசமாக உணர்ந்தான் அகரன்.
இன்னும் சிறிது நேரம் அவளை ஆழப்பார்த்து இருந்தால் அப்பொழுதே அறிந்திருப்பான் தன்மீதான அவளின் காதலை, ஆனால் விதி மைரா மற்றும் திலீப்பின் உருவில் அவர்களின் மோனநிலையைக் கலைத்தது.
“அகர் யார் இவங்க?”, மைரா.
அவள் கேட்டதும் நதியாள் மைராவைக் கண்டாள். மைரா மெழுகு பொம்மை என அமர்ந்திருந்தாள். வெண்மை நிறம், மெல்லிய தேகம், ஹேர் கலரிங் செய்து அளவாக வெட்டப்பட்ட கூந்தல், அவளின் நிறத்திற்கு கருப்பு கோட்டும் ஸ்கர்டும் அவள் பார்த்துப் பார்த்துச் செதுக்கிய சிலையென எடுத்துக் காட்டியது. நிச்சயம் ஐந்தரை அடிக்கும் அதிகமான உயரத்துடன் யாரையும் தன் வசம் இழுக்கும் அழகியாக இருந்தாள்.
“இது திலீப். ஷி இஸ் மை ஸ்வீட் ஹார்ட் நதி. வா நதிமா”, அகரன் உள்ளே அழைத்தான்.
“ஸ்வீட் ஹார்ட் ஆ?”, மைரா நதியாளை அளந்தபடிக் கேட்டாள்.
“எஸ். சின்ன வயசுல ஸ்கூல்ல என் கூடவே இருப்பா. ரொம்பவே லவ்விங். சேட்டையும் அதிகம். இப்ப இன்டீரியர் பைனல் இயர் பண்ணிட்டு இருக்கா. பிராஜெக்ட் எங்க கம்பெனில தான் பண்ணப்போறா. இவர் திலீப் நதியோட பிரண்ட். ஆல்சோ சரணோட சிஸ்டர்”, என அறிமுகப்படுத்தி வைத்தான்.
“இஸ் இட்… சரண் சொல்லவே இல்ல தங்கச்சி இருக்கானு. அவன்கிட்ட அப்பறம் பேசிக்கறேன். ஹாய் நதி ஹாய் திலீப்”, மைரா.
“ஹாய் “, எனப் பொத்தாம் பொதுவாக கூறிவிட்டு அகரனின் அருகில் சேரை இழுத்துப் போட்டு அமர்ந்தாள் நதி.
“சரண் ஏன் வரல?”, நதியாள்.
“அவனுக்கு கொஞ்சம் வேலை இருந்தது வரலன்னு சொல்லிட்டான். நீ என்ன சாப்பிடற? திலீப் உனக்கு?”, அகரன்.
“எனக்கு நீ சாப்பிடறதே ஆர்டர் பண்ணு அகன்”, நதியாள்.
“இது அவ்வளவா நல்லா இல்ல மிஸ் நதி. யூ கேன் ஆர்டர் சம்அதர் புட்”, மைரா அகரனின் தட்டில் இருந்ததை எடுத்து சாப்பிட்டுப் பார்த்துவிட்டுக் கூறினாள்.
“கால் மீ நதியாள். அகன் ஆ…”, என வாயை திறந்தாள் நதி.
அகரனும் தன் கைகளால் அவளுக்கு உணவை ஊட்டினான். இதைக் கண்ட மைரா உள்ளுக்குள் புகைந்தாள்.
“எனக்கு பிடிச்சி இருக்கு மிஸஸ்.மைரா. அகன் கையால டேஸ்ட் அதிகமா இருக்கு”, நதியாள்.
“ஐ ம் மிஸ் மைரா. ஐ ம் சிங்கிள்”, மைரா கண்களில் சிவப்பேறக் கூறினாள்.
“ஹோ…. அகன பேர் சொல்லி கூப்பிட்டீங்க அதான் மேரீடோன்னு நினைச்சேன்”, நதியாள்.
“யூ டூ காலிங் ஹிம் பை ஹிஸ் நேம். சோ டு யூ டூ?”, என மைரா திமிராகப் புரூவத்தை உயர்த்தி வினவினாள்.
“ஹீ இஸ் மை அகன். ஐ கால் ஹிம் வித் ஸ்பெஷல் நேம் மிஸ்.மைரா”, நதியாள்.
“ஓகே ஓகே ரிலாக்ஸ் கேர்ல்ஸ்”, அகரன்.
நதியாளையும் அகரனையும் மாறி மாறி பார்த்துவிட்டு மைரா ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தாள்.
பின் திடீரென ,”டியர் ஐ ஹேவ் டு கோ நவ். ஐ கால் யூ அட் நைட். பாய்”,என அகரனை அணைத்துவிட்டு அங்கிருந்துக் கிளம்பினாள்.
“என்னாச்சி டியர்?”,அகரன்.
“எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு இன்னும் ஒன் ஹவர்ல. ஐ ஹேவ் டு கோ. நைட் கூப்பிடறேன்”, எனக் கூறிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டாள் மைரா.
“ஓகே . டேக் கேர் டியர். பாய்”, அகரன் எழுந்து நின்று அவளை வழியனுப்பி வைத்தான்.
“யாள் பிரியாணி சூப்பரா இருக்கு. பசங்களுக்கு வாங்கிட்டு போலாமா?”, திலீப்.
“திங்கறதுலயே இரு. எரும எரும. எதுக்கு வந்தோம் நீ என்ன பண்ணிட்டு இருக்க?”, என நதியாள் அவனை மொத்தினாள்.
“நான் எங்க வந்தேன்? நீ தான் என்னை இறங்கவிடாம இழுத்துட்டு வந்த அவ்வளவு வேகமா. எனக்கு உயிரே இல்லை இங்க இறங்கற வரைக்கும்”, திலீப் தலையைத் தேய்த்தபடி பதிலளித்தான்.
“வாய மூடு. எதாவது பேசின கொன்னுடுவேன். திண்ணிபண்டாரம் “, என மீண்டும் அடித்தாள்.
“நதி…. நதி… ஏன் அவன அடிக்கற?”, அகரன் அவளின் கைகளைப் பிடித்துத் தடுத்தான்.
“உன்ன அடிக்கணும் ஆனா முடியல அதான் அவன அடிக்கறேன்”, என தனக்குள் முணுமுணுத்தவள் பின் சத்தமாக ,” ஒன்னும் இல்ல கிளம்பறோம்”, என எழுந்தாள்.
“ஹேய்… இப்பதானே வந்த அதுக்குள்ள ஏன் கிளம்பற? சாப்பிடு அப்பறம் போலாம்”, அகரன் அவளை இழுத்து அமரவைத்து சூடாக வேறு உணவை ஆர்டர் செய்தான் (அவளுக்கு பிடிச்ச ஐட்டம்ஸ் தான்).
“சொல்லு. இருபது நாள் உன்னை பாக்கவே இல்ல. எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா?”, அகரன்.
“நிஜமா என்னை மிஸ் பண்ணியா அகன்”, கண்களில் ஆர்வம் பொங்க கேட்டாள் நதி.
“ஆமா. நீயும் சரணும் போடற சண்டையும் தான் ரொம்ப மிஸ் பண்ணேன். நீ நாளைக்கே ஆபீஸ் வந்துடு நதிமா”, அகரன் தனக்குள் இருக்கும் தவிப்பை மறைத்தபடிக் கூறினான்.
“நாங்க சண்டை போட்டா உனக்கு அவ்வளவு என்டர்டெயினிங்கா இருக்கா? இனிமே சண்டை போடமாட்டேன் அவன்கிட்ட”, நதியாள் சிறுகுழந்தைப் போல முகம் திருப்பினாள்.
“அது உங்களால முடியாது பேபி”, அகரன்.
“வை நாட். வீ கேன்”, நதியாள்.
“சரி. இப்ப என்கூட வா. நைட் வரைக்கும் எங்க கூடவே இரு. நீ இன்னிக்கு சண்டையே போடலன்னா நீ என்ன கேட்டாலும் தரேன். டீலா?”, அகரன் சுவாரஸ்யமானப் பார்வையுடன் கேட்டான்.
“சரி டீல். திலீப் நீ பைக் எடுத்துட்டு போயிடு. நைட் நான் வந்திடறேன்”, நதியாள்.
“முதல்ல சாப்பிடு அப்பறம் மத்தது பேசிக்கலாம்”, என அகரன் உண்ண ஆரம்பித்தான்.
“ம்ம்..”,என கூறிவிட்டு மூவரும் எதை எதையோ சலசலத்தபடி உண்டு முடித்துக் கிளம்பினர்.
“திலீப் மீராகிட்ட சொல்லிடு என்னை தேடுவா”, நதியாள்.
“சரி. பாய் சார். பாய் யாள்”,என திலீப் பைக்கைக் கிளப்பிக்கொண்டு சென்றான்.
“நதிமா…. வரப்ப யார் டிரைவ் பண்ணது?”,அகரன்.
“நான் தான்”, நதியாள்.
“எவ்வளவு ஸ்பீட்ல வந்த?”, அகரன் காரை நோக்கி நடந்தபடிக் கேட்டான்.
“தெரியல. மே பீ 100”,நதியாள்.
“எப்படி தெரியும்? கண்ணுமண்ணு தெரியாம அவ்வளவு வேகமா வந்து இருக்க. நடுவுல யாராவது வந்து இருந்தா என்ன ஆகி இருக்கும். ஏன் இவ்வளவு வேகம்? பதினைந்து நிமிஷத்துல வர இடத்துக்கு ஐந்து நிமிஷத்துல வந்து இருக்க. ஏன் ?”, அகரன்.
“அது…. அது வந்து…. உன்கிட்ட பேச பேச நீ கட் பண்ணிட்ட அதான்”, என நதியாள் தடுமாறினாள்.
“அதுக்குன்னு இவ்வளவு வேகமா வருவியா நதிமா? இனிமே இப்படி பண்ணாத. உனக்கு கார் டிரைவ் பண்ண தெரியுமா?”, அகரன்.
“தெரியாது”, நதியாள் தனிந்தக் குரலில் கூறினாள்.
“ம்ம்.. உட்கார்”, அகரன் முகத்தை இறுக்கமாக வைத்தபடி கூறினான்.
பின் இருவரும் எதையும் பேசவில்லை, அமைதியாகப் பயணத்தைத் தொடர்ந்தனர். அந்த அமைதியில் அகரனின் கோபம் புரிய, நதியாள் மனம் வாடினாள். ஆனால் அவனைக் காணத்தானே வந்தோம் என அவளும் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
ஆபீஸின் உள்ளே வந்ததும் அகரன் தன் அறை நோக்கி சென்றுவிட்டான். எதிரில் வந்த சரண் நதியாளைக் கண்டு அவளை நிறுத்தினான்.
“ஹேய் வாலு. என்ன அகர் கூட வர? எப்படி இருக்க? எக்ஸாம் முடிஞ்சதா?”, சரண்.
“ம்ம்”, நதியாள்.
“என்னாச்சி மேடம்? இவ்வளவு அமைதியா இருக்கறது நதியாள் தானா?”, சரண்.
“அகன் என்மேல கோவமா இருக்கான்”, நதியாள்.
“ஓஓஓ… உன் அமைதிக்கான காரணம் இது தானா? என்னாச்சி? நீ என்ன பண்ண?”, சரண்.
“அவன் என்ன பண்ணான்னு கேக்கமாட்டியா?”, நதியாள்.
“சாதாரணமா அவனுக்கு கோவமே வராது. அவனுக்கு கோவம் வந்து இருக்குன்னா நீ ஏதோ செஞ்சி இருக்க. என்னனு சொல்லு”,சரண்.
“அவன பாக்க ஹோட்டல் போனேன்”, சரண்.
“அவ்வளவு தானா?”, பின்னிருந்து அகரனின் குரல் வந்தது.
“என்னடா பண்ணா இவ?”, சரண்.
“உள்ள வாங்க இரண்டு பேரும்”, அகரன்.
“குட்டி பிசாசே என்ன பண்ணி தொலைச்ச? உன்னால என்னை இப்ப ஏறப்போறான்”, சரண் நதியாளிடம் பதட்டத்துடன் கேட்டான்.
“நான் பாக்கத்தான் போனேன். ஒன்னும் பண்ணல”, நதியாள்.
அகரனின் அறைக்குள் சென்றதும்,
“சரண் நீ மட்டும் உட்கார்”, அகரன்.
நதியாள் முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு உதட்டைப் பிதுக்கி அகரனைப் பார்த்தாள்.
“என்னடா பண்ணா? க்ளைண்ட் கிட்ட எதாவது பிரச்சனை பண்ணிட்டாளா?”, சரண் பதற்றமாகக் கேட்டான்.
“ஏன் உன் பாசமலர் இன்னும் உன்கிட்ட சொல்லலியா?”, அகரன்.
“இல்லடா. உன்ன பாக்க வந்ததா தான் சொன்னா”, சரண்.
“எப்படி வந்தான்னு கேளு”, அகரன்.
“எதுல போன யாள்?”, சரண்.
“பைக்ல”, நதியாள்.
சரண் புரிந்துக் கொண்டுத் தலையை ஆட்டினான். ஏற்கனவே அவள் பைக் எவ்வளவு வேகமாக ஓட்டுவாள் என்பதை அறிந்தவன் தானே.
“15 நிமிஷம் ஆகற இடத்துக்கு 5 நிமிஷத்துல என்னை தேடி டைனிங்கிட்ட நிக்கறா டா. எதுக்கு இவ்வளவு வேகமா வரணும்?”, அகரன்.
“உன்ன பாக்கத்தான்”, நதியாள்.
“அதுக்கு பொறுமையா வரலாம்ல. நடுவுல எதாவது அசம்பாவிதம் நடந்திருந்தா என்ன ஆகி இருக்கும் இப்ப?”, அகரன்.
“இன்னேரம் சங்கூதி மூனாம் நாள் பால் ஊத்தி இருப்பீங்க. அவ்வளவு தான்”, நதியாள் சிரித்தபடிக் கூற அகரன் அவளை அறைந்திருந்தான்.
நதியாள் தன் கன்னத்தில் ஏற்பட்ட எரிச்சலை உணர்ந்து பின் தான் அறை வாங்கியதையே உணர்ந்தாள்.
“டேய் ஏன்டா அடிச்ச?”, சரண் அதிர்ச்சியில் கேட்டான்.
“சரண். அவள இங்கிருந்து போகச் சொல்லு. என் கண் முன்னாடி நின்னா நான் மனுசனா இருக்கமாட்டேன்”, எனத் திரும்பிக் கொண்டான் அகரன்.
“அவ சின்ன பொண்ணுடா. விளையாட்டுக்கு சொல்லிட்டா”, சரண்.
“அவள கூட்டிட்டு போ. என் கண் முன்னாடி வந்தா நடக்கறதே வேற”, அகரன் உறுமியபடி கூறினான்.
“நீ வா யாள்”, சரண் நதியை அழைத்துச் சென்றான்.
“அகன். சாரி. உன்ன பாக்கணும்னு வேகம் அதான் அவ்வளவு வேகமா வந்தேன்”, நதியாள் அழுகையை அடக்கியபடிக் கூறினாள்.
“நீ வா அவன்கிட்ட அப்பறம் பேசிக்கலாம்”, என சரண் நதியை இழுத்துச் சென்று தன் காரில் அமர்த்தினான்.
“அகன் ஏன் இவ்வளவு கோவப்படறான்?”, நதியாள்.
“நீ சொன்ன வார்த்தைக்கு நானே உன்ன அடிச்சி இருப்பேன். விளையாட்டு அதிகமா இருக்கு உனக்கு”, என மனதில் நினைத்துவிட்டு,”ஒன்னுமில்ல டா. பிஸ்னஸ் டென்சன் போல. நீ தப்பா எடுத்துக்காத. எங்க கன்னத்தை காட்டு”, சரண்.
விரல் பதியவில்லை ஆனால் நன்றாக சிவந்திருந்தது நதியின் கன்னம். நிச்சயமாக எரிச்சல் அதிகம் இருக்கும் நதி அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள்.
“வா உன்ன வீட்ல டிராப் பண்ணிடறேன். நாளைக்கு இருந்து ஆபீஸ் வந்துடுங்க எல்லாரும். கேன்டீன்ல லன்ச்சுக்கு சொல்லிக்கலாம். சார்ப் 9.00 இங்க இருக்கணும்”, சரண் பேசியபடி வீட்டை வந்தடைந்தான்.
“வந்திடறோம்”, நதியாள் இறங்க சரண் அவளின் கையை பிடித்தான்,” அகரன நாளைக்கு சமாதானம் பண்ணிக்கலாம். கன்னத்துல கொஞ்சம் ஐஸ் வை எரிச்சல் குறையும் . சாரி டா அவன தப்பா எடுத்துக்காத”,சரண் வருத்தத்துடன் கூறினான்.
தங்களது அனைவர் வீட்டிலும் இளவரசி என வலம் வருபவளை அகரன் அடித்தது கோபம் தான் என்றாலும், அவள் அறியாமல் பேசிய வார்த்தையின் வலி தான் அவனையும் அறியாமல் கையோங்க வைத்தது என்பதையும் புரிந்துக் கொண்டு நதியாளிடம் தன் நண்பனுக்காக மன்னிப்பு வேண்டினான் சரண்.
“என் அகனுக்கு எல்லா உரிமையும் இருக்கு. நீ எங்களுக்கு நடுவுல வராத டா சரணா”, என உள்ளே சென்றாள் நதி.
“இந்த பொண்ணுங்கள புரிஞ்சிக்கவே முடியாது போலவே. அவன் அடிச்சதுக்கு நான் சாரி கேட்டா எங்களுக்கு நடுவுல வராதன்னு என்னை திட்டிட்டு போறா. அவன் அங்க என்ன பண்றானோ நைட் என்ன பண்ணுவானோ தெர்லயே”, என சரண் புலம்பிக்கொண்டே அலுவலகம் வந்து சேர்ந்தான்.
சரண் அலுவலகத்திற்கு வந்து பார்த்தபோது அகரன் அறைக்குள் இருந்த சாய்வான சோபாவில் படுத்திருந்தான்.
“என்னடா டிராப் பண்ணிட்டியா?”, அகரன்.
“ம்ம். ஏன்டா அடிச்ச? சின்ன பொண்ணு. இப்ப காலேஜ்ல இந்த பேச்சு எல்லாம் சகஜம் தானே. அழுகைய அடக்கிட்டு போறா. கன்னம் நல்லா சிவந்துரிச்சி”, சரண்.
“இல்ல மச்சான். அவகூட எப்படி எல்லாம் வாழனும்னு நான் கனவு கண்டுட்டு இருக்கேன்.. அவ அசால்டா சொன்னதும் என்னையே அறியாம அடிச்சிட்டேன். என் கண்மணிக்கு வலிக்கும்ல”, அகரன்.
“அடிச்சிட்டு என்ன கேட்டா. போய் அவளையே கேளு. ஆனா இது தான் முதலும் கடைசியும் இனிமே என் தங்கச்சிய கைநீட்டினா அவளோட அண்ணனா தான் நான் நடந்துப்பேன்”, சரண் எச்சரிக்கைக் குரலில் கூறினான்.
“சாரி டா மச்சான். இப்ப அடிச்சதுக்கே எனக்கு மனசு கஷ்டமா இருக்கு. அவகிட்ட சாரி கேக்கணும் தான் பட் அவ பேசினத உணரனும் அதுவரைக்கும் பேசமாட்டேன்”, அகரன்.
“ஏன்டா இந்த காதல் வந்துட்டா இப்படி தான் சின்னபுள்ளத்தனமா நடந்துக்க தோணுமா? எவ்வளவு மெசூர்டா பேசற நீயே இப்படி பேசற?”, சரண்.
“காதலிச்சா தான்டா நான் படற அவஸ்தை உனக்கு தெரியும். அவள நெருங்கவும் முடியாம, விலகவும் முடியாம தவிக்கறேன். இதுல அவளுக்கு என்மேல காதல் இருக்கான்னு கூட எனக்கு இன்னும் தெரியல. அத தெரிஞ்சிக்கலாம்னு தான் அவள உன்கூட இன்னிக்கு சண்டை போடாம இருந்தா என்ன கேட்டாலும் தரேன்னு டீல் பேசி கூட்டிட்டு வந்தேன். நைட் வரைக்கும் நம்ம கூடவே இருப்பான்னு. லாஸ்டா எல்லாமே சொதப்பிட்டேன்”, அகரன்.
“விடு. நாளைக்கு இருந்து ஆபீஸ் வர சொல்லிட்டேன். இனிமே காலைல இருந்து சாயந்திரம் வரை நம்ம கண் பார்வைல தான் இருப்பா. இப்ப நீ வேலைய பாரு. அந்த மெழுகு பொம்மை டிசைன்ஸ் கேட்டு இருக்கு. இன்னும் ஒரு மாசத்துல முடிவு பண்ணா தான் எல்லாத்தையும் வாங்க முடியும். ஓஎம்ஆர்ல தான் சைட்ங்கிறதால பொருள கொண்டு வரது எல்லாம் ஈஸி தான். டிசைன ரெடி பண்ணு”, சரண்.
“மச்சான். இந்த இன்டீரியர் டிசைன்ஸ் எல்லாம் நதிய பண்ண சொல்லு”, அகரன்.
“டேய் அவ படிச்சிட்டு இருக்கா. இவ்வளவு பெரிய பிராஜெக்ட்க்கு பண்ணமுடியுமா அவளால?”, சரண்.
“டிரை பண்ணட்டும் டா. நாம தான் இருக்கோமே பாத்துக்கலாம். அவங்க ஆறு பேரையும் பிரிச்சிவிட்டு வேலை குடு. ஒன்னா இருந்தா ஒரு வேலையும் பண்ணமாட்டாங்க ஆளுங்களையும் செய்ய விடமாட்டாங்க”, அகரன்.
“சரி. அவள உன் பக்கத்துல உக்கார வைக்க பிளான் போட்டுட்ட. நீ நடந்து…”, சரண் கூறிவிட்டு வெளியே வந்து மற்ற வேலைகளை ஆட்களிடம் மும்முறப்படுத்தினான்.
“ஏன் நதிமா இப்படி பேசின? சாரி. வலிக்குதா. உன் அகன் இனிமே உன்னை அடிக்கவே மாட்டேன். உம்மா “, என தன் மொபைல் ஸ்க்ரீனைப் பார்த்து பேசி முத்தம் கொடுத்துக்கொண்டு இருந்தான்.
(நல்ல ஹீரோ டா நீ. ஏற்கனவே ரொமான்ஸ் இல்லைன்னு என்னை திட்டிட்டு இருக்காங்க நீ மொபைல்லயே கொஞ்சிட்டு இருந்தா எப்படா அடுத்த கட்டத்துக்கு போறது? )
அங்க நதிய இறக்கிவிட்டுட்டு அப்படியே வந்துட்டோம். வாங்க போய் பாக்கலாம்….
“ஏய் என்னாச்சி முகம் வாடி இருக்கு? அகரன் அண்ணாவ தானே பாக்க போன?”, மீரா.
“ஆமா”, நதியாள்.
“ஏன் கன்னம் சிவந்து இருக்கு? கண்ணும் கலங்கி இருக்கு”, மீரா.
“அகன் என்னை…. அகன் திட்டிட்டான்”, நதியாள் அகரன் அடித்ததை கூறாமல் மறைத்தாள்.
“ஏன்? அந்த அண்ணாக்கு உன்மேல கோவமே வராதே. நீ என்ன பண்ண?”, மீரா.
“எல்லாரும் இப்படியே கேளுங்க. நான் பைக்ல கொஞ்சம் வேகமா போனேன் அதுக்கு”, நதியாள் சலித்தபடிக் கூறினாள்.
“கொஞ்ச வேகம் …நீ? நம்பிட்டேன். வாங்கு இப்படி திட்டினாவாது நீ வேகத்தை குறைக்கறியான்னு பாக்கறேன். நானும் எத்தனை வருஷமா சொல்லிட்டு இருக்கேன் கேக்கறியா. அண்ணவே இப்ப சொல்றாங்க இப்ப என்ன பண்ணுவ?”, மீரா.
“குறைச்சிக்கறேன். போதுமா. நாளைக்கு ஆபீஸுக்கு வரச்சொல்லிட்டாங்க. எல்லார் கிட்டயும் சொல்லிடு. நான் தூங்கறேன்”, எனப் படுத்துக்கொண்டாள் நதி.
“ம்ம்.. சரி சீக்கிரம் ரெடி ஆகி போலாம். அங்க போய் அண்ணவோட கோவத்தை குறை. அவர் சொல்றத கரெக்டா பண்ணு. அண்ணா கோவம் போயிடும்”, மீரா.
மீரா சொன்னதைக் கேட்டதும் டக்கென ஒரு யோசனை தோன்ற, தனது லேப்டாப் மற்றும் பேப்பர் பென்சிலை எடுத்து வரைய ஆரம்பித்தாள்.
“ஹேய் தூங்கறேன்னு சொன்ன?”, மீரா நதி வரைவதைப் பார்த்துக் கேட்டாள்.
“அப்பறம் தூங்கிக்கறேன். தேங்க்யூ டார்லிங்”, என அவளை அருகில் அழைத்து அவளது கன்னத்தில் முத்தமிட்டாள் நதி.
(வெளங்கிடும் இரண்டும் இப்படியே இருக்குதுங்க)
பின் அடுத்தநாள் அனைவரும் தயாராகி காலை 8.00 மணிக்கு அலுவலக வளாகத்தில் இருந்தனர்.
நதியாள் முகத்திலும், உள்ளத்திலும் புதுவிதமான உணர்வுடனும், உற்சாகத்துடனும் அலுவலகத்தில் தன் காலை எடுத்து வைத்தாள்.