26 – அர்ஜுன நந்தன்
ஆர்யன் உள்ளே உட்கார்ந்து இருப்பதுக் கண்டு ஜான் வெளவெளத்து வந்து நின்றான் அவனருகில்.
“என்ன ஜான் எங்க போன பூவழகிய விட்டுட்டு? பாவம் நீ இல்லாம ரொம்ப போர் அடிச்சதாம்”, ஆர்யன் ஜானை ஆராயும் பார்வையுடன் பார்த்துக் கொண்டே கூறினான்.
“இல்ல பாஸ் சும்மா நடந்துட்டு வந்தேன். அதுவும் இல்லாம இவங்க தூங்கிட்டு தான் இருந்தாங்க நான் நடக்க போனப்ப”, ஜான் பவ்யமாகக் கூறினான்.
“அப்படியா? நான் வந்தப்ப பூவழகி ரூம்ல நடந்துட்டு இருந்தாங்க. லைட் எறியுதுன்னு தான் நானும் உள்ள வந்தேன்”, பூவழகியையும் ஜானையும் பார்த்துக் கொண்டேக் கூறினான் ஆர்யன்.
“தெரியல சார் நைட்ல அவங்க தூங்க போற வரைக்கும் தான் இங்க இருப்பேன் அதுக்கப்பறம் நானும் வெளியே தான் நின்னுட்டு இருப்பேன்”, ஜான்.
“சரி சரி. என்ன பூவழகி தூக்கம் இன்னும் வரலியா ?”, ஆர்யன் பூவழகியைப் பார்த்து வினவினான்.
“இப்ப எல்லோரும் கிளம்பினா நானும் போய் தூங்குவேன் “, பூவழகி கொட்டாவி விட்டு கொண்டுக் கூறினாள்.
“ஜான் சார் கிளம்பினதும் டோர் லாக் பண்ணிக்க. நான் போய் தூங்கறேன். குட் நைட் மிஸ்டர் ஆர்யன்”, எனக் கூறிவிட்டு திரும்பிப் பார்க்காமல் படுக்கையறைக்குச் சென்றாள் பூவழகி.
“சரி ஜான். நானும் போய் தூங்கறேன். மேடம்அ பாத்துக்க”, ஆர்யனும் கிளம்பினான்.
“என்னாச்சி பாஸ் இந்த நேரத்துல வந்துட்டு போறாரு. என்ன நடந்துச்சி? இந்த பொண்ணும் தூங்க போயிரிச்சி .சரி காலைல கேட்டுக்கலாம்”, மனதில் நினைத்த ஜான் அந்த அறைக் கதவை சாற்றிவிட்டு வெளியே அருகில் இருந்த சோபாவில் அமர்ந்தான்.
குட்நைட் கூறிவிட்டு வந்த பூவழகி படபடவென செந்தில் குடுத்து அனுப்பிய லேப்டாப்பை இயக்கினாள். அந்த அறையின் மூலையில் இருந்த அட்டையை கழற்றி எடுத்து விட்டு தன்னிடம் இருந்த கேபிலை அங்கு இருந்த வயர்களில் இணைத்து லேப்டாப்பில் இணையதொடர்பு கிடைத்ததும் தன்னிடம் இருந்த மொபைலையும் கனெக்ட் செய்தாள்.
அங்கிருந்தபடியே தஞ்சையில் இருந்த பரத்திற்கு அழைத்தாள்.
தூங்கி கொண்டு இருந்த பரத் போன் அடிக்கும் சத்தம் கேட்டு எழுந்தான்.
“ஹலோ.. யார் இந்த நேரத்துல?”, பரத்.
“உன் கொள்ளுபாட்டி. ஒழுங்கா மூஞ்ச கழுவிட்டு வந்து நான் சொல்றத உடனே செய்”, யாத்ரா.
“மேடம் நீங்களா? எங்க இருக்கீங்க? எப்படி இருக்கீங்க?”, பரத்.
“டேய் அப்பறமா இந்த வெட்டி பேச்சு வச்சிக்கலாம். இப்ப உடனே நான் இருந்த ரூம்க்கு போ. அங்க டிரஸ்ஸிங் டேபில் மிரர் பின்னாடி ஒரு டிவைஸ் இருக்கு. அத எடுத்துட்டு இப்ப நீங்க யூஸ் பண்ணிட்டு இருக்கற சிஸ்டம் மேல வால்ல இருக்கற போர்ட்ல சொருவு. சீக்கிரம்”, யாத்ரா அவசரப்படுத்தினாள்.
அவள் கூறியது போலவே அவளின் ரூமிற்கு சென்றவன் கண்ணாடி பின் இருந்த பென்டிரைவ் போன்ற டிவைஸை எடுத்துக் கொண்டு கீழே கணிணி அறைக்கு வந்தான். வரும்பொழுது பாலாஜியையும் எழுப்பிக் கொண்டு வந்தான்.
“சொல்லுங்க மேடம் அந்த டிவைஸ எடுத்துட்டு சிஸ்டம் ரூம்க்கு வந்துட்டேன் “, பரத் மூச்சு வாங்கிக் கொண்டே கூறினான்.
“யாரு போன்ல?”,பாலாஜி.
“பரத் ஸ்பீக்கர் ல போடு”, யாத்ரா.
“எஸ் மேடம்”,பரத்.
“யாரு அங்க உன்கூட பேசறது?”, யாத்ரா.
“பாலாஜி மேம் ஸ்பெஷல் விங்”, பரத்.
“சரி அந்த போர்ட்ல டிவைஸ் அ போடு”, யாத்ரா.
“போட்டுட்டேன் மேம் உனக்கு ரைட்ல ஒரு மானிட்டர் திரும்பும் பாரு. அது கிட்ட போ”, யாத்ரா.
“மேம் இதுல கீபோர்ட் எதுவும் இல்ல “, பரத்.
“உன்னோட பிங்கர்பிரிண்ட் அந்த மானிட்டர்க்கு ரைட் பாட்டம்ல வை”, யாத்ரா.
“வச்சிட்டேன் மேம்”, பரத்.
“நான் சொல்றத அந்த பாஸ்வேர்ட் பாக்ஸ்ல டைப் பண்ணு”,யாத்ரா.
யாத்ரா சொல்ல சொல்ல பரத் டைப் செய்தான். 14எழுத்துக்கள் டைப் செய்ததும் அந்த கம்ப்யூட்டர் ஓபன் ஆனது.
“பரத் பாலாஜிக்கு இந்த சிஸ்டம் ஹான்டில் பண்ணத் தெரியுமா கேளு”, யாத்ரா.
“கேள்விபட்டு இருக்கேன் ஆனா வர்க் பண்ணது இல்ல”, பாலாஜி.
“நோ பிராப்ளம். டூ வாட் ஐ சே “, யாத்ரா.
யாத்ரா சில பல குறிப்புகள் கூற கூற பாலாஜி அதை இயக்கினான். அவள் கூறியது போலவே அனைத்தும் பதிவிறக்கம் செய்து அதை மூன்று காப்பி எடுத்து கொள்ள கூறினாள். ஒன்றை பரிதியிடமும் மீதி இரண்டை தனித் தனியாக வெவ்வேறு இடத்தில் வைக்கக் கூறினாள்.
“பரத் இந்த டீடைல்ஸ் அ 60:40 உண்மை கம்மியாவும் பொய் அதிகமாவும் ஒரு காப்பி ரெடி பண்ணி கைல வச்சிக்க. நான் சொல்றப்ப அத ஒருத்தனுக்கு அனுப்பனும். புரியுதா?”, யாத்ரா.
“எஸ் மேடம்”, பரத்.
“பாலாஜி நீங்க இந்த சிஸ்டத்தை 24*7 மானிட்டர் பண்ணணும் . நான் அனுப்புறது மிஸ் ஆகாம அந்த சிஸ்டத்துல இருக்கணும். காட் இட்?”, யாத்ரா.
“எஸ் மேம். எனிதிங் எல்ஸ் டு ஆர்டர் ?”, பாலாஜி.
“எனக்கு பெப்பர் நண்டு பிரை , ஆட்டுக்கால் பாயா, ஆப்பம் அப்பறம் பிஸ் பிரை இருந்தா போதும்”, யாத்ரா சிரிக்காமல் கூற பாலாஜி திரு திருவென முழித்தான்.
“ஜோக்ஸ் அபார்ட். டூ த டாஸ்க் . கால் யூ லேடர்”, யாத்ரா கூறித் தொடர்பைத் துண்டித்தாள்.
“ஸ்ஸ்ஸ்ப்பாபாபா… எதுக்கு இந்த நேரத்துல இந்த மைதா மாவு இங்க வந்துட்டு போகுது? நாம யாருன்னு கண்டுபிடிச்சிரிச்சோ? ஜான் நம்ம கூட இருந்தான். இவன் ஏன் இங்க வந்தான் சொல்லாம. என் பர்மிஷன் கூட வாங்காம வந்து பாத்துட்டு போறான் நடுராத்திரில. எதுவோ சரியில்லை. பெரிய தலைய மீட் பண்றவரைக்கும் இங்க தங்களாம்ன்னு பாத்தா விடமாட்டானுங்க போலவே?!”, மனதில் பேசிக்கொண்டு அனைத்தையும் எடுத்து பேக் செய்து படுக்கைக்கு அந்த பக்கம் இருந்த அட்டையை மெல்ல கழட்டி எடுத்து அதனுள் லேப்டாப் சகிதத்தை வைத்தாள்.
பூவழகி அறையில் இருந்து வந்த ஆர்யன் அங்கிருந்த பொருட்களை துவம்சம் செய்து கொண்டு இருந்தான்.
“அந்த அர்ஜுன் எதுக்கு இங்க வந்து இருக்கான். அவன் கூட வ்நது இருக்கறது யாரு? அவனுக்கும் பூவழகிக்கும் சம்பந்தம் இருக்குமா?”, என மனதில் பலதையும் எண்ணி கோபத்தில் அனைத்தையும் உடைத்துக் கொண்டு இருந்தான்.
அந்த சமயம் உள்ளே வந்த வைபவ் ஆர்யனை சமாதானம் செய்ய வந்தான். அவனையும் ஆர்யன் தள்ளிவிட அவனும் கீழே விழுந்து பின் ஆர்யனின் கோபம் சற்று மட்டுபடும்வரை ஒதுங்கி நின்றான்.
“வைபவ் அந்த நரேன் டீம் என்ன பண்றாங்க எங்க இருக்காங்கன்னு எனக்கு உடனே தெரியனும்”, ஆர்யன்.
“எஸ் பாஸ்”, என கூறி ஹோம் மினிஸ்டர் மகனை அழைத்தான் வைபவ்.
“இஷான் சார் எங்க பாஸ் பேசணுமாம்”, வைபவ்.
“என்ன இஷான் நடக்குது அங்க? நரேன் டீம் எங்க இருக்காங்க என்ன பண்றாங்க? “, ஆர்யன் கோபத்தில் கத்தினான்.
“அவன நிஷாந்த் கம்பனி கேஸ்ல தான் அலைய விட்டுட்டு இருக்கேன் ஆர்யன். ஏன்?”, இஷான்.
“அந்த அர்ஜுன் இங்க சுத்திட்டு இருக்கான். இன்னிக்கு சாயந்திரம் என் ஹோட்டல்ல பாத்தேன். அவன்கூட ஒருத்தன் புதுசா வந்து இருக்கான்”, ஆர்யன்.
“என்ன சொல்ற? நரேன் டீம் தான் இங்க கேஸ பாலோ பண்ணிட்டு இருக்காங்க. அர்ஜுன் சும்மா கூட அங்க வந்து இருக்கலாம்”, இஷான் சமாளிக்க முயன்றான்.
“என்னை சமாளிக்க பதில் சொல்லாத இஷான். வந்தவனுங்க நான் ரெடி பண்ற டின்னர் செட்க்கு வர இன்வைட் இருக்கான்னு இங்க தங்கி இருக்கற எல்லா கெஸ்ட்ஸ் கிட்டயும் பத்தி வச்சிட்டு இருக்காங்க. இது எல்லாம் சகஜமா நடக்கல. ஏதோ பிளான் போட்டு நடக்குது. எனக்கு அங்க யார் யார் இருக்கா யார் எல்லாம் அந்த கேஸ டீல் பண்றாங்கன்னு புல் டீடைல்ஸ் மார்னிங் வேணும்”, ஆர்யன்.
“சரி ஆர்யன். அந்த பொண்ணு விஷயமா வந்து இருக்காங்களான்னு ஒரு பக்கம் பாரு”, இஷான்.
“இல்ல. அந்த பொண்ணு எப்பயும் போல தான் இருக்கு. நாளைக்கு நைட் அப்பா வந்துடுவாரு அப்ப விசாரிக்கறப்ப தெரியும் விஷயம்”, ஆர்யன்.
பின் வைபவ்விடம் பூவழகிக்கு பாதுகாப்பு அதிகரிக்க கூறிவிட்டு அவள் தூங்கும் நேரம் தவிர ஜானை அவள் அருகிலேயே இருக்கச் சொல்லிக் கட்டளையிட்டுச் சென்றான்.
வைபவ் ஜானை அழைத்து விஷயத்தைக் கூறிக் காலையில் தன்னை வந்து பார்க்கும்படி கூறினான்.
காலையில் ஜான் பூவழகியைக் காணச் சென்றான். அங்கே அவள் தூங்கிக் கொண்டு இருந்தாள்.
“பூவழகி எந்திரி விடிஞ்சிரிச்சி”, ஜான்.
“இன்னும் கொஞ்ச நேரம் ஜான் ப்ளீஸ்..”,தூக்கத்தில் உளறினாள் பூவழகி.
“நடக்கறது தெரியாம இன்னும் தூங்கிட்டு இருக்க நீ. ஏதோ சந்தேகம் வந்து தான் ஆர்யன் நேத்து வந்துட்டு போனான். உன்ன விட்டு நகர கூடாதுன்னு ஆர்டர் போட்டு உனக்கு செக்யூரிட்டி டபுள் பண்ணிடாங்க”, என அவள் காதில் விழும்படி மெதுவாய் கூறினான்.
“சரி செந்தில இப்பவே இங்க இருந்து கிளம்ப சொல்லு. ரெண்டு போன் அவனுங்க கிட்ட வாங்கிக்க”, பூவழகி தூங்கிக் கொண்டே கூறினாள்.
“இப்பவே போய் சொல்றேன்”, ஜான் கிளம்ப எத்தனித்தான்.
“லூசு. அவனுங்க உன்னயும் சந்தேகபட ஸ்டார்ட் பண்ணிட்டாங்க. நீ போகாத. வேற யாராவது அனுப்பு”, பூவழகி.
“என்னையுமா?”, எச்சிலை விழுங்கயபடிக் கேட்டான் ஜான்.
“ஆமா. கம்முன்னு இங்க என்கூட உக்காரு நல்லா சாப்டு ரெஸ்ட் எடுத்துக்கலாம்”, என கூறிக் குளிக்கச் சென்றாள்.
ஜானும் டிவி இருக்கும் அறையில் வந்து சோபாவில் அமர்ந்தான். அந்த சமயம் வைபவ் அவனை அழைக்க எழுந்து சென்றான்.
“குட் மார்னிங்க சார்”, ஜான்.
“மார்னிங் ஜான். அந்த பொண்ணு என்ன பண்ணுது?”, வைபவ்.
“இப்ப தான் எழுப்பிவிட்டேன் குளிக்க போய் இருக்கு”, ஜான்.
“மேடம்க்கு திருப்பள்ளிஎழுச்சி பாடினா தான் எந்திரிப்பாங்களா? “, கடுப்பாகக் கேட்டான்.
“ஆர்யன் சார் தான் அவங்க சொல்றத பண்ண சொன்னாரு. அந்த பொண்ணு காலைல எழுப்பறதுல இருந்து நைட் பால் குடிச்சிட்டு தூங்கற வரைக்கும் நான் தான் பக்கத்தில் இருக்கேன் சார்”, ஜான்.
“விட்டா தொட்டில் கட்டி தாலாட்டு பாடி தூங்க வைப்ப போல”, நக்கலாக வினவினான் வைபவ்.
“சரி இன்னிக்கு நைட் டின்னர்க்கு ஒழுங்கா வர சொல்லு. பெரிய பாஸ் வராரு.ஒழுங்கா பேசணும் அவர்கிட்ட சொல்லி வை”, வைபவ்.
“ஓகே சார். நான் வீடு வரைக்கும் போயிட்டு வரட்டுமா சார்?”, ஜான்.
“இப்ப எதுக்கு?”, வைபவ்.
“வீட்டுக்கு போய் 5 நாள் ஆகுது. போய் என்னோட டிரஸ் எடுத்துட்டு வந்துடறேன். இது நம்ம ஆளுங்களோட டிரஸ்”, ஜான்.
“சரி அந்த பொண்ணு சாப்பிட்டப்பறம் ரூம் லாக் பண்ணிட்டு போயிட்டு ஒன் ஹவர்ல வந்துடு”, வைபவ்.
“தேங்க்யூ சார்”, ஜான் கூறிவிட்டு அறைக்கு வந்தான்.
அப்பொழுது குளித்துவிட்டு வந்த பூவழகி,” என்ன ஜான் டிபன் ரெடியா?”.
“எவ்வளவு பிரச்சினை நடக்குதுன்னு சொல்றேன் நீ சாப்பிடுறதுலயே இருக்க”, எனக் கோபமாகச் சலித்துக் கொண்டான் ஜான்.
“ஈஸி ஜான். டென்சன் ஆகறதால ஒரு யூஸ்ம் இல்ல. ரிலாக்ஸ்அ சாப்பிட்டு யோசிக்கலாம். கூல்”, பூவழகி.
பின் உணவு வர அதை இருவரும் அமர்ந்து சாப்பிட்டனர். அன்று பூவழகி கூறியதிலிருந்து ஜானும் அவளுடனேயே உணவருந்துகிறான்.
“சூப்பர் டிபன் ஜான். இன்னிக்கு சமைச்சது வேற ஆள் போல”, பூவழகி ருசி மாறி இருப்பதைச் சுட்டிக்காட்டிக் கூறினாள்.
“ஆமா பூவழகி. இந்த டேஸ்ட் புதுசா தான் இருக்கு. நல்லா இருக்கு”, ஜான்.
“ம்ம்..”, பூவழகி.
“சரி நான் போயிட்டு ஒன் ஹவர்ல வந்துடறேன். ஜாக்கிரதையா இரு”, ஜான்.
“நான் சொன்னதும் செஞ்சிட்டு வா”, பூவழகி.
“சரி பாத்து இரு”, ஜான் வெளியே அறையைப் பூட்டிக் கொண்டு அங்கே 6 பேரை காவலுக்கு நிறுத்திவிட்டுச் சென்றான்.
“நேராக ரிசப்சன் சென்றவன் அங்கு வைத்திருந்த தன் இல்ல சாவியை எடுத்துக்கொண்டு திரும்பும் சமயம் ரிசப்சன் மேனேஜர் அருகில் வந்தார்.
“ஜான் சார் 12த் ப்ளோர்ல இந்த ரூம்ல ஒரு பிராப்ளம்ன்னு கூப்பிடுறாங்க கொஞ்சம் போய் பாக்கறீங்களா. ரிசப்ஸனிஸ்ட் யாரும் இன்னும் வரல. நானும் இல்லன்னா பாஸ் திட்டுவாரு”, ரிசப்சன் மேனேஜர்.
“சரி ரூம் நம்பர் சொல்லுங்க செக் பண்ணிட்டு போறேன்”, ஜான்.
“***** நம்பர் சார்”.
“அட நம்ம ஆளுங்க ரூம். நாமளே நேர்ல சொல்லிட்டு போயிறலாம்” என மனதில் நினைத்தவன் லிப்டில் மீண்டும் மேலே ஏறினான்.
அப்பொழுது லிப்டில் வைபவ்வும் 5ஆம் தளத்தில் ஏறினான்.
“என்ன ஜான் இன்னும் வீட்டுக்கு போல?”, வைபவ்.
“கீழே போனேன் சார் அதுக்குள்ள நம்ம கெஸ்ட் யார் ரூம்லயோ பிராப்ளம்னு ரிசப்சன்ல கம்ப்ளைண்ட் வந்துச்சி. ரிசப்ஸனிஸ்ட் யாரும் வரலன்னு மேனேஜர் அங்க இருக்காரு என்ன அந்த ரூம் பாத்துட்டு போக சொன்னாரு”, ரைம்ஸ் போலக் கூறினான் ஜான்.
“என்னாச்சி ஜான் இப்படி பேசற? அந்த லூசுகிட்ட பேசி பேசி நீயும் இப்படி பேசற. அதிகம் பேச்சு வச்சிக்காத அவகிட்ட. சீக்கிரம் பாத்துட்டு கிளம்பு” ,வைபவ் கூறி வேறு தளத்தில் இறங்கி கொண்டான்.
“ஓகே சார்”, ஜான்.
நேராக அர்ஜுன் இருந்த ரூமிற்கு வந்து காலிங் பெல் அடித்தான்.
“என்ன பிராப்ளம் சார் ரூம்ல?”, ஜான் கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான்.
“பாத் டப்ல ஹாட் வாட்டர் வரல” , அர்ஜுன்.
“ஏன்டா இப்ப ஹாட் வாட்டர்லயே தான் நீ குளிப்பியா?”, செந்தில் கேட்டான்.
“யாத்ரா என்ன சொல்லி அனுப்பினா ஜான்?”, அர்ஜுன்.
“செந்தில் சார உடனே இங்க இருந்து கிளம்பி வேற இடத்துல இருக்க சொன்னா”, ஜான்.
“செக்யூரிட்டி டபுள் ஆகி இருக்கு என்ன பிரச்சினை?”, அர்ஜுன்.
ஜான் நேற்று நடந்தது முதல் இன்று வைபவ் கூறியது வரை ஒப்பித்தான்.
“சரி செந்தில் நீங்க கிளம்புங்க. ஆர்யன் என்ன பாத்துட்டான் “, அர்ஜுன்.
“அப்ப யாத்ரா மேலயும் டவுட் வந்துரிச்சா?” , செந்தில் .
“இப்ப வரை கன்பார்ம் ஆகல ஆனா எப்ப வேணா வரும். கைல கன் எடுத்துக்கங்க. உடனே கிளம்புங்க. தெரு முனைல நின்னு இந்த நம்பரக்கு கால் பண்ணுங்க”, அர்ஜுன் ஒரு நம்பரை செந்திலுக்குக் கொடுத்தான்.
“யாத்ரா எங்கயோ இருக்க சொன்னாலே”,செந்தில்.
“அது இன்னும் ரெடி ஆகல. நைட் 7 மணிக்கு அங்க போயிருங்க அதுவரை வேற இடத்துல இருங்க”, அர்ஜுன் அவசரமாக அங்கிருந்து செந்திலை அனுப்பினான்.
ஜானையும் அங்கிருந்து 10 நிமிடம் கழித்து டப்பில் ஹாட் வாட்டர் வந்தபின் அனுப்பினான்.
குளிக்க உள்ளே சென்றவன் கையில் கன்னையும் எடுத்துக் கொண்டுச் சென்றான்.
ஒரு மணி நேரம் கழித்து குளித்து வெளியில் வரும்பொழுது ஆர்யன் அவன் அறையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி அவனைப் பார்த்துப் புன்னகைப் புரிந்தான்.