27 – அகரநதி
வளர்பிறை நிலவை இரசித்தபடி நின்றிருந்த நதியாளை அகரன் கண்ணிலும் இதயத்திலும் நிறைத்துக் கொண்டான்.
முகில் மறைத்த நிலவின் ஒளியில் நதியாளும் அகரனும் காதல் சிற்பங்கள் ஊடலில் லயித்திருப்பதைப் போல நின்றிருந்தனர்.
உண்மையில் ஊடல் தானோ இருவருக்கும்?
“என்னாச்சி நதி? ஏன் அமைதியா இருக்க?”, அகரன் நதியை தோள் திருப்பிக் கேட்டான்.
“என்னை கல்யாணம் பண்ணிக்கறியா அகன்?”, நதியாள் அவனின் கண் பார்த்துக் கேட்டாள்.
அவளின் கேள்வி நிஜம் தானா? இல்லை கனவா?
அகரன் திகைத்து அவளைப் பார்த்தான்.
“நான் நிஜமா தான் கேக்கறேன் அகன். என்னை கல்யாணம் பண்ணிக்கறியா?”, நதியாள் அதே கேள்வியை மீண்டும் கேட்டாள்.
“ஏன் இந்த திடீர் கேள்வின்னு தெரிஞ்சிக்கலாமா நதியாள்?”, அகரன்.
“உன்னை யாரும் என்கிட்ட இருந்து பிரிச்சிடுவாங்களோன்னு பயமா இருக்கு அகன். அன்னிக்கு மைரா, இன்னிக்கு இந்த சரிதா… யார் பார்வையும் சரியில்லை. அவங்க உன்ன அப்படி பாக்கறத என்னால சகிச்சிக்க முடியல. கோவமா வருது. உன்னை எப்படி அவங்க அப்படி பாக்கலாம்னு அவங்க மேலயும் உன்மேலயும்……”, நதியாள்.
“என் மேல என்ன கோவம் உனக்கு?”, அகரன்.
“அவங்க பாக்கற மாதிரி நீ ஏன் உட்கார்ந்து இருக்க? உன்ன யாரும் சைட் அடிக்க கூடாது”, நதியாள்.
“ஏன்? யார் என்னை சைட் அடிச்சா உனக்கு என்ன?”, அகரன் சற்றே குரலில் கடுமை கூட்டிக் கேட்டான்.
“எனக்கு பிடிக்கல”, நதியாள்.
“ஏன் பிடிக்கல? காரணம்?”, அகரனின் குரலில் அழுத்தம் கூடி இருந்தது.
“அதுல்லாம் எனக்கு தெரியாது. உன்னை யாரும் அப்படி பாக்கக்கூடாது. நீயும் யாரையும் அப்படி பாக்கக்கூடாது. என்கூடவே தான் நீ இருக்கணும்”, நதியாள் சிறுகுழந்தையைப் போலக் கூறினாள்.
“எப்படி பாக்கக்கூடாது?”, அகரன்.
“ம்ச்ச்…. “, நதியாள் சலித்துக் கொண்டாள்.
“காரணம் தெரியாம உன் கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியாது”, அகரன்.
“நீ எப்பவும் என்கூடவே இருக்கணும். எனக்கு பக்கத்துலயே இருக்கணும். யாரும் உன்னை முழுங்கற மாதிரி பாக்கறத என்னால அலோ பண்ணமுடியாது”, நதியாள்.
“அப்ப உன் மனசுல எனக்கான இடம் என்ன?”, அகரன் மதியம் கேட்டக் கேள்வியை மீண்டும் கேட்டான்.
நதியாளுக்கு தான் பதில் சொல்ல முடியவில்லை. தன் மனமே இன்னும் தனக்கு சரியாக புரியவில்லை இதில் இதற்கு என்ன பதில் சொல்ல?
நதியாள் அமைதியாக நிற்பதைக் கண்டு அகரன்,” என் கேள்விக்கு பதில் சொன்னா தான் உன் கேள்விக்கு என்ன பதில் சொல்றதுன்னு நான் யோசிப்பேன் நதி. நீ எப்படி ? எதனால ? இந்த கேள்வி கேக்கறன்னு எனக்கு புரியல. எனக்கு முதல்ல உன் கேள்விக்கான காரணம் புரிய வை, அப்பறம் நான் பதிலைப் பத்தி யோசிக்கறேன்”, அகரன் தெளிவாகக் கூறினான்.
“சாரி அகன். நான் ஏதோ குழப்பத்துல உன்னை இப்படி கேட்டுட்டேன். குட் நைட்”, என அங்கிருந்து விறுவிறுவென தன்னறைக்குச் சென்றுவிட்டாள்.
அகரன் அவளை பார்த்தபடி இதழில் சிறு புன்னகையைப் படரவிட்டவாறு, தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்து சேர்ந்தான்.
இவர்கள் பேசியதை இருவர் மறைந்திருந்து கேட்டனர்.
சரிதா நேராக நதியின் அறைக்கு வந்து, ” ஏய்… அகரன் எனக்கு தான் சொந்தம். அவரும் நானும் லவ் பண்றோம். கல்யாணமும் பண்ணிக்கப்போறோம். இப்படி அவர்கிட்ட பேச உனக்கு வெக்கமா இல்ல? அவர் பதில் சொல்லாதப்பவே உனக்கு புரியல அவர் மனசுல நீ இல்லைன்னு”, வேகமாகக் கூறி முச்சிறைத்தாள்.
ஸ்டெல்லாவும் மீராவும் சரிதாவின் பின்னால் நின்று அவள் கூறியதைக் கேட்டனர். அவர்கள் இருவருக்கும் அதிர்ச்சிதான் என்றாலும் நதியாள் பதில் கூறாமல் இருப்பது சற்றே யோசிக்க வைத்தது.
முதலில் சரிதா பேசியதை நதியாள் கவனிக்கவில்லை. கடைசியாக கூறிய வார்த்தையில் சுயநினைவுக்கு வந்தவள்,” என்ன சொன்ன இப்ப?”, எனக் கேட்டாள்.
“அவர் மனசுல நீ இல்லன்னு சொன்னேன்”, சரிதா.
அவள் கூறி முடிக்கும்முன் அவளின் உதட்டின் ஓரம் இரத்தம் கசிந்திருத்தது. நம் நதியாள் தான் அவளை அடித்து இருந்தாள்.
“என் அகன் மனசுல நான் இல்லன்னு நீ பாத்தியா?”, நதியாள்.
“அவர நீ கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டப்ப பதில் சொல்லாம இருந்தப்ப உனக்கு புரியலியா?”, சரிதா கன்னத்தில் கை வைத்தபடிக் கூறினாள்.
“நான் கேட்டதுக்கு அவர் பதில் கேள்வி கேட்டாரே அது உனக்கு காதுல விழலியா? உன் மனசுல எனக்கான இடம் என்னன்னு? இதை மதியமே என்கிட்ட கேட்டாரு நான் தான் இன்னும் பதில் சொல்லாம இருக்கேன்”, நதியாள்.
சரிதா அமைதியாக நின்றிருந்தாள்.
“என்ன அமைதியாகிட்ட? இங்க பார் இனிமே என் அகன் பக்கம் உன் கண்ணு திரும்பிச்சி முகத்துல கண்ணு இருக்காது ஓட்டை தான் இருக்கும். நாளைக்கு முதல் பஸ்ல இங்கிருந்து போற இல்லையா இங்கிருந்து கிளம்புற வரைக்கும் அகன் பக்கம் திரும்பாம அப்படியே ஓடிறு. இன்னொரு வாட்டி இப்படி என்கிட்ட திமிறா பேசினா, உனக்கு வாய் இருக்காது. போ”, என நதியாள் உறுமினாள்.
“வாரே வா….. சூப்பர் யாள்… இவள இப்படி நீ கவனிக்கறது இதுதான் முதல் தடவையா? சாயந்திரம் இவ பேசினதுக்கு எனக்கும் இப்படி ஒன்னு குடுக்கணும்னு தோணிச்சி. இப்ப நீ குடுத்துட்ட. ஓய் போய் ரூம்ல பொத்திட்டு படு. போ”, ஸ்டெல்லா.
“என்ன யாள் இது? “, மீரா.
“எது?”, நதியாள்.
“அகரன் அண்ணாகிட்ட கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டியா?”, மீரா.
நதியாள் அமைதியாக இருந்தாள்.
“பதில் சொல்லு யாள்”, மீரா.
“ஆமா”, நதியாள்.
“அவர நீ லவ் பண்றியா யாள்?”, ஸ்டெல்லா.
“தெரியல ஸ்டெல்”, நதியாள்.
“இப்படி சொன்னா எப்படி? அப்பறம் ஏன் அண்ணாகிட்ட அப்படி கேட்ட?”, மீரா.
“என் அகன் எனக்கு மட்டுமே சொந்தமா இருக்கணும். அதான் கேட்டேன். ஆனா என் மனசுல என்ன இருக்குன்னு எனக்கே புரியல மீரா”, என மீராவின் மடியில் படுத்துக்கொண்டாள் நதி.
“யாள்…. நீ முதல்ல தெளிவாகு. அப்ப தான் எல்லாருக்கும் நல்லது. உங்க லவ்வுக்கு உங்க வீட்ல யாரும் அப்போஸ் பண்ணப் போறது இல்ல தான். ஆனாலும் இந்த மாதிரி சில்வண்டுல்லாம் பிரச்சினை பண்ணவிடாம பாத்துக்கணும். அகரன் சார்கிட்ட முதல்ல மனச விட்டு தெளிவா பேசு”, ஸ்டெல்லா.
“என்னால அகன் முகத்த பாத்து முன்னமாதிரி பேச முடியல ஸ்டெல். தயக்கமா இருக்கு. மனசு படபடன்னு அடிச்சிக்குது. அகன்அ பாக்காமையும் என்னால இருக்க முடியல”, நதியாள்.
“இதுக்கு பதில் உனக்கு தான் தெரியும் யாள். யோசி. அண்ணா கேட்ட கேள்வியோட பதில்ல தான் நீ அண்ணாவ கேட்ட கேள்வியோட பதிலும் இருக்கு. அண்ணாவ பொருத்தவரைக்கும் நீ எப்பவும் ஸ்பெஷல் தான். ஆனா முழுசா உன் மனசு என்னனு புரியாம அண்ணா எந்த பதிலும் சொல்லமாட்டாங்க. அவர் உன்னை லவ் பண்றாரு. இது எங்க எல்லாருக்குமே புரியுது. உனக்கு புரியலியா?”, மீரா நதியின் தலையைக் கோதியபடிக் கேட்டாள்.
“நிஜமா மீரா. அகன் என்னை லவ் பண்றானா?”, கண்கள் மின்னக் கேட்டாள் நதி.
“ஹாஹாஹாஹா…. நல்ல கேள்வி யாள். அத நீ தான் உணரனும். நாங்க சொல்லி நீ தெரிஞ்சிக்கறது நாட் பேர் வி திங். எப்பவும் நீ சொல்வியே மனச அமைதியா வச்சிட்டு யோசின்னு. அத இப்ப நீ தான் செய்யணும் பேபி. குட் நைட். வா மீரா”, ஸ்டெல்லா.
“குட் நைட்”, நதியாள் யோசனையுடன் மெத்தையில் படுத்தாள்.
“நான் அகன லவ் பண்றேனா? ஏன் அகன யாரும் பாத்தா எனக்கு கோவம் வருது? ஏன் பொறாமை வருது? அவன் மதியம் கேட்டப்ப ஏன் என்னால பதில் சொல்ல முடியல? அவன் முத்தம் குடுத்தப்ப ஏன் ப்ரீஸ் ஆகி நின்னேன்? அவன் கண்ண பாத்து ஏன் அப்படியே உறைந்து நிக்கறேன்? அவன ஏன் இரசிக்கறேன்? அவனுக்கும் எனக்கும் நடுவுல ஏன் யாரும் வரக்கூடாதுன்னு சொல்றேன்?”, இப்படி இப்படியாக பல கேள்விகள் நதியாள் தன்னைத்தானே கேட்டபடிப் படுத்திருந்தாள்.
இவங்க பேசிட்டு இருந்தத பாத்த இன்னொரு ஆள் நம்ம தேவ்….
அகரன் அறைக்கு வந்ததும் பின்னால் வந்த தேவ்,” அகர்… டூ நதியாள் லவ்ஸ் யூ?”,எனக் கேட்டான்.
“எஸ் “, அகரன்.
“அப்பறம் ஏன் அவ கேட்டதுக்கு பதில் சொல்லாம வந்த?”, தேவ்.
“அவ மனசு அவளுக்கு இன்னும் புரியல. அவ என்னை லவ் பண்றத உணரணும். அதுக்கப்பறம் தான் இத கேக்கணும்”, அகரன்.
“இது எப்படா நடந்துச்சு?”, சரண்.
“அவ உன்ன லவ் பண்ணாமயா கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேப்பா?”, தேவ்.
“என்ன என் தங்கச்சியா இப்படி கேட்டா?”, சரண் அதிர்ச்சியுடன் கேட்டான்.
“ஆமா மச்சான். உன் தங்கச்சி தான் கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டா”, அகரன் சிரித்தபடிக் கூறினான்.
“நீ என்ன சொன்ன?”, சரண்.
“அவ மனசுல இவனுக்கான இடம் என்னனு திருப்பி கேள்வி கேக்கறான் டா”, தேவ்.
“என்னடா குழப்பற?”, சரண்.
“இங்க பாருங்க . நதியாள் என்னை லவ் பண்றா அதனால தான் இப்படி கேட்டா …. பட் அவ லவ் பண்றத அவளே இன்னும் உணரல, அதான் அவள அந்த கேள்வி கேட்டேன். அவ யோசிச்சி அவளோட காதல உணர்ந்து வந்து கேட்டா அடுத்த நிமிஷம் கல்யாணம் பண்ணிப்பேன்”, அகரன்.
“இரண்டுக்கும் என்னடா வித்தியாசம்? கல்யாணம் பண்ணிக்கலாமான்னா லவ் பண்றேன்னு சொல்றது தானே ?”, சரண்.
“இல்ல மச்சான். அவளுக்கு என்மேல லவ் இருக்கு. அதனால தான் நான் யாரோ ஒரு பொண்ணு கூட நேத்து லன்ஞ்ல இருக்கேன்னு தெரிஞ்சதும் அவ்வளவு வேகமா வந்தா. மைரா கூட நான் ப்ரீயா பழகறத கூட அவளால பொறுத்துக்க முடியல. அது பொசசீவ்னெஸ். அந்த பொசசீவ்னெஸ் எதனால வந்துச்சி ன்னு நதிக்கு புரியணும். அதுக்காக தான் அப்படி கேட்டேன். உங்களுக்குப் புரியுதா?”, அகரன்.
” என் தங்கச்சிய எப்ப கல்யாணம் பண்ணிப்ப?”, சரண்.
“கல்யாணம் உடனேலாம் முடியாது மச்சான். நாங்க கொஞ்ச நாள் லவ் பண்ணணும். அதுக்கப்பறம் தான் கல்யாணம் பத்தி யோசிக்கணும்”, அகரன்.
“ரியலி ஐ ம் சோ ஹேப்பி அகர். நதி நம்ம பேமலிலயே இருப்பா எப்பவும். சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க அகர். நதிய ரொம்ப காக்க வைக்காத”, தேவ்.
“தேவ் நீ இன்னும் நதியாள்அ சரியா புரிஞ்சிக்கலன்னு நினைக்கறேன். அவ இவன காக்க வைக்காம இருந்தா போதும் எங்களுக்கு”, சரண் சிரித்தபடிக் கூற மூவரும் ஏதேதோ பேசியபடி உறங்கிவிட்டனர்.
அடுத்த நாள் காலைப் பொழுது விடிய நதியாள் ஒருவழியாகத் தன் மனதை உணர்ந்திருந்தாள்.
அதனாலேயே எப்பொழுதும் இருக்கும் பொலிவு இரண்டு மடங்காக அதிகரித்து இருந்தது.
எழுந்தவள் வழக்கமாக செய்யும் உடற்பயிற்சியை முடித்துவிட்டு, குளித்து வந்து எந்த உடை அணிவதென யோசித்துக்கொண்டு இருந்தாள்.
அப்பொழுது உள்ளே வந்த மீரா,” ஏய்… கதவை லாக் பண்ணமாட்ட? இப்படியா நிப்ப டவலோட? வீட்ல கெஸ்ட் இருக்காங்கல்ல”, எனக் கூறிக் கதவை லாக் செய்தாள்.
“மீரு.. எனக்கு ஒரு நல்ல டிரஸ் சாய்ஸ் சொல்லேன்”, நதியாள்.
நதியாள் முகத்தில் இருந்த தெளிவும், பொலிவும் மீராவுக்கு ஏதோ உணர்த்த ஹேங்கரில் தொங்கிக்கொண்டு இருந்தவற்றில் மைல்ட் க்ரீன் டாப்பும் ,நேவி புளூ ஜீனும் எடுத்துக் கொடுத்தாள்.
“சூப்பர்வ் சாய்ஸ் மீரு. இரு ரெடி ஆகிட்டு வரேன். கீழ போலாம். என்ன டிபன்?”, நதியாள் மறைவிற்குச் சென்று உடையணிந்தபடிக் கேட்டாள்.
“பூரி, பொங்கல், வடை”, மீரா.
“ஓகே. தாத்தாக்கு அதிகம் ஆயில் சேக்கக்கூடாது. அவருக்கு மட்டும் தோசை ஆர் இட்லி வைக்கச்சொல்லு. பூரி ஒன்னு இரண்டு வச்சா போதும். பொங்கலும் கம்மியா வைக்கலாம்”, நதியாள்.
“சரி. நான் முன்ன போறேன். நீ கிளம்பி வா”, மீரா.
“ஓகே”, எனக் கூறி மிதமான ஒப்பனையுடன் மிகவும் எளிமையாகத் தயாராகி கீழே வந்தாள் நதி.
அவள் படியிறங்கி வருவதற்கும் அகரன் அறையில் இருந்து வெளியில் வருவதற்கும் சரியாக இருந்தது. அவனும் அன்று பிஸ்தா க்ரீன் சர்ட் அணிந்து இருந்தான். தோராயமாக இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்து இருந்தனர்.
அகரனும் நதியும் ஒருவரை ஒருவர் கண்களால் இரசித்தபடி நகர்ந்தனர்.
நதியாளின் பின்னே வந்த சரிதா இந்த காட்சியைக் கண்டு எரிச்சல் பட்டுக்கொண்டு அமைதியாக அவர்களை கடந்து சோபாவில் சென்று அமர்ந்தாள்.
“தேவ்… எப்ப கிளம்பறோம்?”, சரிதா தேவ்விடம் கேட்டாள்.
“இன்னிக்கு வேலை முடிஞ்சா கிளம்பிடலாம் சரிதா”, என்று கூறியபடி அவளைக் கண்டவன்,” என்னாச்சி உதடு வீங்கி இருக்கு? காயமும் ஆகி இருக்கு? “, எனக் கேட்டான்.
“அது… “, சரிதா இழுக்க , ” கதவுல இடிச்சிட்டு இருந்திருப்பாங்க தேவ் சார். ஆயில்ன்மென்ட் போட்டா சரி ஆகிடும். சரிதா மேம் உங்களுக்கு வேணுமா ஆயில்ன்மென்ட்?”, ஸ்டெல்லா நக்கலாகக் கேட்டாள்.
“வேணாம். என்கிட்ட இருக்கு “, சரிதா அவசரமாக நதியாளைப் பார்த்துக் கூறினாள்.
“மச்சான்….”, திலீப்.
“சொல்லு மச்சான்…”, சஞ்சய்.
“நேத்துல்லாம் அந்த பொண்ணு வெறப்பா இருந்தது. இன்னிக்கு நதியாள பாத்துட்டு பம்புது. என்ன நடந்து இருக்கும்?”, திலீப்.
“விருந்தாளிய நல்லா யாள் கவனிச்சி இருப்பான்னு நினைக்கறேன் மச்சான்..”, சஞ்சய்.
“இருக்கலாம்.. இருக்கலாம்… அது பார்வை நேத்து அகரன் சார விட்டு நகரல , இப்ப அவர் எதிர்லயே உக்காந்து இருக்காரு தலை தூக்கி பாக்க மாட்டேங்குது”, திலீப்.
“இத நீ எப்ப கவனிச்ச?”, சஞ்சய்.
“நம்ம யாள் நேத்து பீச்ல இருந்து வீட்டுக்குள்ள வந்தப்ப இவள பாத்து தான் அப்படி கோவப்பட்டு நின்னா… அதுக்கப்பறமும் கவனிச்சேன் மச்சான். நீ?”, திலீப்.
“நான் சார் கூட மீட்டிங் போனேன்ல அங்க கவனிச்சேன்”, சஞ்சய்.
“ஓஓஓ… அப்ப யாள் பலமா தான் கவனிச்சி இருப்பா அந்த பொண்ண”, திலீப்.
“கககபோ”, சஞ்சய் கூறிவிட்டுச் சிரித்தான்.
“சரி வா சாப்பிடலாம் பசிக்குது”, திலீப்.
“பெரியவங்க எல்லாம் சாப்பிட்டப்பறம் தான் நாம சாப்பிடணும் மச்சான்”, சஞ்சய்.
“முதல்ல சின்ன குழந்தை தான் சாப்பிடணும், உனக்கு யாரும் சொல்லிக்குடுக்கலியா மச்சான்?”, திலீப்.
“நானும் இப்ப உன்ன யாள் ஸ்டைல்ல கவனிக்கலாம்னு நினைக்கறேன். நீ என்ன நினைக்கற?”, சஞ்சய்.
“ஓகே விடு. நான் தாத்தாவ கூட்டிட்டு வரேன். நீ மத்த இரண்டு பேரையும் கூட்டிட்டு வா”, திலீப் கூறிவிட்டு தாத்தா இருந்த அறைக்குள் சென்றான்.
“இவன திருத்தவே முடியாது”, என தலையில் அடித்தபடி சஞ்சய் சிதம்பரத்தையும் , பரமசிவத்தையும் அழைக்கச் சென்றான்.
“அப்பா…. வாங்க சாப்பிடலாம்”, சஞ்சய்.
“வரோம் பா… உனக்கு எந்த ஊரு?”, சிதம்பரம்.
“நான் திருச்சி பக்கம் பா. அப்பா அம்மா அங்க விவசாயம் பண்ணிட்டு இருக்காங்க”, சஞ்சய்.
“நல்லது. எத்தனை மணிக்கு நீங்க கிளம்பனும் ஆபீஸுக்கு?”, பரமசிவம்.
“இன்னிக்கு உங்க கூட இருக்கச்சொல்லி அகரன் சார் சொல்லிட்டாரு. எங்க போகணும்னு சொல்லுங்கப்பா . போலாம்”, சஞ்சய்.
“உனக்கு ஒன்னும் சிரமம் இல்லையே?”, சிதம்பரம்.
“அதுல்லாம் ஒன்னுமில்லப்பா. வாங்க கீழ போலாமா?”, சஞ்சய்.
“வரோம் பா”, என இருவரும் கீழே வந்தனர்.
“தாத்தா… தாத்தா…. ரெடி ஆகிட்டீங்களா?”, திலீப்.
” நான் ரெடி. உங்க ஆபீஸ்ல பொண்ணுங்க எல்லாம் நல்லா இருக்குமா?”, என தன் மேலங்கியை சரி செய்தவாறு கேட்டார் சுந்தரம் தாத்தா.
“தாத்தா….. “, திலீப் அதிர்ச்சியுடன் கேட்டான்.
“சொல்லு தம்பி. இந்த டிரஸ் நல்லா இருக்கா? இப்படி வந்தா தான் நாலு பொண்ணுங்கள பாக்க முடியும். ஊருல என் பொண்டாட்டி கூடவே இருப்பா, அந்த பக்கம் இந்த பக்கம் திரும்ப விடமாட்ட”, சுந்தரம் தாத்தா.
“பயங்கரமான ஆளு தான் தாத்தா நீங்க…. வாங்க நம்ம ஆபீஸ்ல இல்லைன்னாலும் சாப்பிங் மால் தியேட்டர்னு போலாம். லீவோட பணமும் சாருங்க கிட்ட குடுக்கச்சொல்லுங்க. நான் உங்கள எல்லா இடத்துக்கும் கூட்டிட்டு போறேன்”, திலீப்.
“டேய்…..”, நதியாளும் சரணும் நின்றிருந்தனர்.
“யாள்… சரண் சார்.. வாங்க வாங்க… எப்ப வந்தீங்க?”, திலீப்.
“நீ சாப்பிங் மால்னு ஆரம்பிக்கறப்பவே வந்துட்டோம் தம்பி. அவர் கூட போனா நீ தான் தர்ம அடி வாங்குவ. பாத்துக்க”, சரண்.
“தாத்தா…..”, திலீப்.
“விட்றா…. நதி கண்ணு நாம இன்னிக்கு எங்க போறோம்?”, சுந்தரம் தாத்தா.
“நாம இன்னிக்கு ஆபீஸ் போயிட்டு மதியம் மேல ஊர் சுத்தி பாக்க போகலாம் தாத்தா. இன்னிக்கு காலைல மட்டும் ஆபீஸ்ல சைட் அடிங்க”, நதியாள் கூறியபடி அவரை அழைத்துச் சென்றாள்.
“ஊருல பாட்டிகிட்ட போட்டு குடுக்கறேன் இருங்க”, சரண்.
“சொல்லிக்கோ… என் பேத்தி இருக்கா டா என்னை காப்பாத்த”, சுந்தரம் தாத்தா.
“அவ தானே…. அவ ஆள எவளாவது பாத்தா உங்கள கழட்டி விட்றுவா ஜாக்கிரதை”, சரண் சுந்தரம் தாத்தாவின் காதில் கிசுகிசுத்தான்.
“தம்பி திலீப் நீ முன்ன போ. நான் வரேன். நதி நீயும் போய் எடுத்து வைடா”, சுந்தரம் அவர்களை அனுப்பிவிட்டு சரணிடம் திரும்பி, “என்னாச்சி?”, எனக் கேட்டார் சுந்தரம் தாத்தா.
“நேத்து உங்க பேத்தி உங்க பேரன்கிட்ட கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டு இருக்கா”, சரண்.
“நிஜமாவா சொல்ற?”, சுந்தரம் தாத்தா ஆச்சரியமாகக் கேட்டார்.
“ஆமா. உங்க பேரன் அவள திருப்பி கேள்வி கேட்டுட்டு வந்துட்டான்”, சரண்.
“என்ன கேள்வி?”, சுந்தரம் தாத்தா.
“அவ மனசுல இவனுக்கான இடம் என்னனு… ஏன்டா இப்படி கேட்டன்னு கேட்டா வியாக்கியானம் பேசறான். நீங்களே கேளுங்க அவன. சீக்கிரம் நாம கல்யாண வேலைய ஆரம்பிக்கலாம்”, சரண்.
“அவங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் ஒரு வருஷம் கழிச்சி தான் பண்ணணும்னு ஜோசியர் சொல்லிட்டாரு டா. நிச்சயம் மட்டும் உடனே பண்ணிக்கலாம்”, சுந்தரம்.
“இது எப்ப நடந்துச்சு?”, சரண் அதிர்ச்சியுடன் கேட்டான்.
“திருவிழால தான். நாங்க எல்லாரும் போனமே. இவங்க ஜாதகம் பாக்கத்தான் போனோம்”, சுந்தரம்.
“அப்ப மொத்த குடும்பமும் ஒரு முடிவோடத்தான் இருக்கீங்க. கடைசில நான் தான் அவுட்டா?”, சரண்.
“அவங்க மனசுல ஆசை இருந்தா பண்ணலாம்னு பெத்தவங்க இரண்டு பேரும் சொல்லிட்டாங்க டா. நதி படிப்பு முடியட்டும் அப்பறம் கேக்கலாம்னு இருந்தோம். இப்ப நல்ல விஷயத்த நேத்து வந்ததுல இருந்து பாக்கறேன் கேக்கறேன். உடனே இத மீனு கிட்ட சொல்லனும் போன எடு”, சுந்தரம்.
“அப்பறம் சொல்லலாம். இன்னும் உங்க பேத்தி அவன்கிட்ட பதில் சொல்லல. அது என்னனு பாத்துட்டு நீங்க உங்க மீனுகிட்ட சொல்லிக்கோங்க. வாங்க போலாம்”, சரண்.
“அவ மனசுல இல்லாமையா இப்படி ஒரு கேள்வி கேட்டு இருக்கா. என் பேரனும் பேத்தியும் தான் ஜோடி நான் முடிவு பண்ணிட்டேன். ஊருக்கு போனதும் நிச்சய வேலைய ஆரம்பிக்கப் போறேன்”, சுந்தரம் தாத்தா குஷியாகக் கூறினார்.
“எல்லா குடும்பத்துலயும் லவ் பண்ணா வெட்டு குத்து நடக்கும் .நம்ம குடும்பத்துல தான் நிச்சயம் பண்ண ஏற்பாடு நடக்குது. என்ன குடும்பம்டா இது? ஆனா நமக்கு மட்டும் ஒன்னும் செட் ஆக மாட்டேங்குது”, சரண் புலம்பியபடி டைனிங் டேபிலுக்கு வந்தான்.
அகரனும் நதியாளும் ஒருவரை ஒருவர் அறியாமல் கள்ளத்தனமாகப் பார்த்தபடி சாப்பிட அமர்ந்தனர்.
பின் அனைவரும் சாப்பிட்டுவிட்டு ஆபீஸ் கிளம்ப, சஞ்சய் சிதம்பரம் மற்றும் பரமசிவத்துடன் அவர்கள் பார்க்க விரும்பும் மிஷினரி க்ஷோ ரூம்களுக்கு அழைத்துச் சென்றான்.
அகரனுக்கு முன் அறைக்குள் நுழைந்த நதியாள் அகரனை எதிர்நோக்கிக் காத்திருந்தாள்.
நதியாள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி இருக்க, ஆபீஸை ஒருமுறை பார்த்தபடி, ஆட்கள் செய்யும் வேலையைக் கவனித்துவிட்டு தன்னறைக்கு வந்தான் அகரன்.
நுழைந்தவன் சற்றே தடுமாறினான் நதியாளின்…….