27- அர்ஜுன நந்தன்
ஆர்யன் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பதைக் கண்டதும் அர்ஜுன் மென்னகைப் புரிந்து விட்டு உடை மாற்றி வரச் சென்றான்.
பத்து நிமிடத்தில் வெளியே வந்த அர்ஜுன் அவனுக்கு எதிரில் இருந்த சோபாவில் அவனை விட திமிராகப் பார்வைக் கொண்டு அமர்ந்தான்.
“என் கூட பிரேக் பாஸ்ட் சாப்பிடறியா ஆர்யன் ?”, அர்ஜுன் போனை சுழற்றிக் கொண்டே கேட்டான்.
“நீ டின்னர் தான் என்கூட சாப்பிட ஆசைபடறன்னு நினைச்சேன்”, ஆர்யன் குறையாத திமிருடன் பதில் கேள்விக் கேட்டான்.
“டின்னர் என்ன தினம் மூனு வேளையும் உன்கூட உக்காந்து சாப்பிடலாம் தான் . நீ ஒத்துளைப்பியான்னு தான் தெரியல ஆர்யன் “, ஆர்யனுக்கும் சேர்த்து ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்தான்.
“நானும் உனக்கு அந்த வாய்ப்பு குடுக்கலாம்ன்னு தான் நினைக்கறேன் ஆனா நீ இருப்பியா என்கூட சாப்பிட”, ஆர்யன்.
“ஏன் இல்லாம நீயே ரெடியா இருக்கறப்ப எப்படியும் வருவேன் சாப்பிட. ஏன் பொண்ணுங்க கூட மட்டும் தான் சாப்பிடுவியா ஆர்யன்? யாரோ அப்பாவி பொண்ண கடத்தி வச்சிட்டு ராஜ உபச்சாரம் குடுத்துட்டு இருக்க”, அர்ஜுன்.
(யாத்ரா அப்பாவி பொண்ணா? அர்ஜுன் இது உனக்கே அதிகம்ன்னு தோணல? பாருங்க மக்களே அவ அப்பாவியாம்)
“நான் கடத்திட்டு வந்தா ராஜ உபச்சாரம் மட்டுமில்ல சொர்க்கவாசல் உபசாரமும் நடக்கும்?”, ஆர்யன் ஆழம் காண முற்பட்டான்.
“இந்த தடவை சொர்க்க வாசல் இன்னும் திறக்காம இருக்கிறது புதுசா இருக்கு . பொண்ணு ரொம்ப சூப்பரா என்ன?”, கண்ணடித்து வினவினான் அர்ஜுன்.
“ஏய்… ஒழுங்க பேசு. உனக்கு தேவை இல்லாதத கிளறாத”, ஆர்யன் கோபத்தை அடக்கிக் கொண்டுக் கூறினான்.
“ஹாஹா… நீயாச்சி அந்த பொண்ணாச்சி… எனக்கு வேற வேல இருக்கு அத ஏன் நான் கிளறனும்?”, அர்ஜுனும் நூல் விட்டுப் பேசினான்.
“புதுசா இருக்கு அர்ஜுன் உன்ன பாக்க”, ஆர்யன்.
“ஏன்?”, அர்ஜுன்.
“வழக்கமா உன் கை தான் பேசும். இப்ப வாய்ல நூல் விட்டு பாக்கற”, ஆர்யன் கண்களை சுருக்கி கூர்மையானப் பார்வையுடன் வினவினான்.
“நீயும் தான் புதுசா பேசற ஆர்யன். இன்னேரம் உன் கன் தான் பேசி இருக்கும் நீயும் என்னை ஆழம் பாக்கற”, அர்ஜுன்.
அந்த சமயம் உள்ளே வந்த வைட்டர் டிபனை டைனிங் டேபிலில் பரப்பினான்.
அர்ஜுன் ஆர்யனையும் அழைத்துக் கொண்டு வந்து அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான்.
“ம்ம்…. நல்ல டேஸ்ட் ஆர்யன். நல்ல செப் தான் போல”, அர்ஜுன்.
இருவரும் துப்பாக்கியும் கையுமாக பார்வையில் ஒருவரை ஒருவர் ஆழம் பார்த்துக் கொண்டே தனக்கு தேவையான விஷயத்தைக் கறக்க முயன்றனர். சுற்றி நின்றவர்களோ எந்த சமயம் என்ன நடக்கும் எனப் படபடப்புடன் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நின்றனர்.
சாப்பிட்டு முடித்து கை கழுவிய ஆர்யன் , “இன்னிக்கு நைட் டின்னர்க்கு நீயும் வா அர்ஜுன்”.
“கண்டிப்பா ஆர்யன். நீயே நேரடியா வந்து கூப்பிடறப்ப மிஸ் பண்ணமாட்டேன்” மர்மமாகப் புன்னகைத்துக் கொண்டுக் கூறினான் அர்ஜுன்.
அங்கிருந்து கிளம்பிய ஆர்யன் நேராக தன் அலுவலக அறைக்கு வந்து நைட் டின்னர்க்கு வேண்டிய ஏற்பாடுகளை கூறிவிட்டு வைபவ்விடம் அர்ஜுனையும் கண்காணிக்க ஆட்களை அதிகபடுத்தக் கூறினான்.
நேற்று இரவு அர்ஜுனை கண்ட ஆர்யன் அவரசத்தில் கிளம்பிவிட்டான். அவன் சென்ற வேலை முடிந்தபின் தான் அர்ஜுன் யார் என்பதையும் நரேனின் டீம் என்பதையும் அறிந்து கொண்டான். தனக்கு தெரியாமல் ஏதோ நடக்கிறது என்பதை உணர்ந்த ஆர்யன் அப்பொழுதே கிளம்பி ஹோட்டல் வந்தான்.
அவன் பூவழகி அறைக்கு வருவதற்கும் அவள் செந்தில் குடுத்த லேப்டாப்பை மறைத்து வைத்து விட்டு ஹாலிற்கு வந்து கதவின் தாழ்பாளை திறப்பதற்கும் சரியாக இருந்தது.
அந்நேரத்தில் அவனைக் கண்ட பூவழகி வழக்கம் போல திமிருடனும் அலச்சியத்துடனும் பேச அவளின் முகத்தில் தன்னை தொலைத்த சமயம் ஜான் உள்ளே வந்தான்.
அவர்கள் மீதும் சந்தேகம் தோன்ற அவர்களை கண்காணிக்க வைபவிடம் கூறிவிட்டு பூவழகியின் பாதுகாப்பையும் இரட்டிப்பாக்கினான்.
அப்பொழுதே அர்ஜுனையும் கண்காணிக்க ஆட்களை ஏவியவன் செந்தில் வெளிறேவும் இவன் உள்ளே வந்தான்.
செந்திலை பின்தொடர முடியாது போகவே ஆத்திரம் கொண்டு அவனறையில் சில பல பொருட்களைத் துவம்சம் செய்துவிட்டு அர்ஜுனைக் காண வந்தான்.
இருவரும் முதல்முறை சந்தித்துக் கொண்ட போதும் ஒருவரை ஒருவர் நன்றாகவே புரிந்திருந்தனர் என்பது அவர்களின் உரையாடலில் நாம் அறிந்தோம் .
இப்ப அப்படியே தஞ்சைக்கு பறந்துட்டு வரலாம் வாங்க நண்பர்களே…
விடிஞ்சி விடியரதுக்கு முன்ன பரத் பரிதிக்கு போன் பண்ணான்.
“ஹலோ மேடம் . யாத்ரா மேடம் நைட் கால் பண்ணாங்க”,பரத்.
“சரி நேர்ல வரேன் பேசிக்கலாம்”, கூறிப் போனை வைத்துவிட்டாள் பரிதி.
“என்ன இது உடனே இப்படி வச்சிட்டாங்க?!” பரத் தனக்குத் தானே பேசிக் கொண்டு வந்தான்.
“என்ன தம்பி தனியா பேசிட்டு வர? உன் லவ்வர் கூட சண்டையா? நான் வேணா பாலாஜிய சமாதானம் பண்ண அனுப்பவா?”, நந்து காப்பியைக் குடித்துக் கொண்டே கேட்டான்.
“ஏன் சார் என் லவ் மேலயே குறியா இருக்கீங்க?”, பரத்.
“இந்த குரூப்ல நீ மட்டும் தான் டா லவ் பண்ற ” , நந்து.
“அப்படின்னா சேத்து வைக்க ஏற்பாடு பண்ணுங்க சார். பிரிக்கறதுலயே நீங்க குறியா இருக்கீங்க”, பரத்.
“நான் எப்படா பிரிச்சிவிட்டேன்? பாலாஜிய சமாதானம் பண்ண அனுப்பறதா தானே சொன்னேன் . அப்ப பாலாஜி போனா உன் லவ்வ பிரிச்சிருவான்ன்னு சொல்றியா?”, நந்து.
“ஏன் சார் என்னை இழுக்கறீங்க?”, பாலாஜி.
“இந்த நியாயத்த நீயே கேளு பாலாஜி. நீ அவன் லவ்வ பிரிச்சிருவன்னு அவன் சொல்றான். அப்படியாடா பண்ணுவ?”, நந்து பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான்.
“சார் இங்க வந்த வேலைய பாக்கலாம் . அப்பறம் அரட்டை அடிக்கலாம்”, பாலாஜி.
“அப்ப நான் வேல பாக்காம வெட்டியா இருக்கேன்னு சொல்றியா?”, நந்து கையைச் சுழற்றி விட்டுக் கொண்டுக் கேட்டான்.
“அய்யய்யோ சார். என்ன விட்ருங்க. இந்த விளையாட்டுக்கு நான் வரல”, பாலாஜி அலறினான்.
“அப்ப பரத் அப்படி சொல்றான்னு சொல்றியா?”, நந்து.
“போதும் சார் விளையாட்டு. நைட் ஒரு கால் வந்தது”, பரத்.
“நான் யார் மேலயும் கால் போடல டா”, நந்து.
“சார் எனக்கு போன் கால் வந்தது”, பரத்.
“ஓ உன் லவ்வர் அ? என்ன சொன்னாங்க? உங்க காதல இராத்திரி பகலா போன்ல வளக்கறீங்க”, நந்து.
“லூசா சார் நீங்க? ஒரு விஷயத்த முழுசா சொல்லவிடறீங்களா நீங்க?”, பரத் எரிச்சலை அடக்கியபடி பேசினான்.
“என்னடா பொசுக்குன்னு அண்ணன லூசுன்னு சொல்லிட்ட?”, நந்து.
“முகேஷ் நந்தன்அ லூசுன்னு சொல்ல யாருக்கும் தைரியம் வராதே” , ஒரு புது குரல் வாயிற்படியில் இருந்து ஒலித்தது.
“யார் அங்கே?!”, நந்து.
“சிரஞ்ஜீவ் நெடுமாறன்”.
“நெடுமாறன் சேரலாதன் பையன் தானு?”, பாலாஜி பரத் காதை கடித்தான்.
“ஆமா நானும் சேரலாதன் பையன் தான்”, சிரஞ்ஜீவ் .
“டேய் என்னடா வில்லனே இங்க வரான். இதுல்லாம் பிளாஸ்பேக்ல சொல்லவே இல்ல”, நந்து.
“போதும் டா நீ சீன் போட்றது. வா உள்ள “, பரிதி அவனை அதட்டி அழைத்து வந்தாள்.
“மேடம் இவர்?”, பரத்.
“சேரலாதன் பையன் ஆனா என்னோட பிரண்ட்”, பரிதி.
“யாத்ராவுக்கும் தான்”, சிரஞ்ஜீவ் சிரித்துக் கொண்டே கூறினான்.
“எப்படி மேம்?”;, பரத்.
“நல்லா ஒரு டீ கொண்டு வந்தா குடிச்சிட்டே பேசலாம்”, சிரஞ்ஜீவ்.
” இப்ப ஒத்துக்கறேன் நீங்க யாத்ரா மேடம் பிரண்ட்-ன்னு “,பரத் கிண்டலடித்து விட்டு டீ கொண்டு வரச் சென்றான்.
“என்ன டீ கேட்டதுக்கே இப்படி சொல்றாங்க”, சிரஞ்ஜீவ்.
“யாத்ரா பண்ண அலப்பறை அப்படி”, பரிதி சிரித்துக் கொண்டே கூறினாள்.
“யக்கா… சார் பத்தி சொல்லு முதல்ல”, நந்து பரிதியை சுரண்டினான்.
“இரு டா சொல்றேன். இன்னொருத்தனும் வரனும்”, பரிதி.
“அது யாரு?”, நந்து.
“நான் தான் கஜேந்திர நெடுமாறன்”, என மீண்டும் ஒரு குரல் வாயிற்படியில் இருந்து கேட்டது.
“இது யாரு?”,நந்து.
“சேரலாதனோட இரண்டு பசங்களும் இவனுங்க தான்”, பரிதி அவனையும் அழைத்து தன் அருகில் அமர வைத்துக் கொண்டாள்.
“சூப்பர். அவங்க அப்பா கேஸ்அ க்ளோஸ் பண்ண அவங்களயே கூட்டு சேக்கறீங்க”, நந்து தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்தான்.
“ஹாஹாஹா….. சார் நல்லா காமெடி பண்றாரு டா மாறா”, சிரஞ்ஜீவ்.
(கஜேந்திர நெடுமாறன் நம்ம பழைய நெடுமாறன், சிரஞ்ஜீவ் நெடுமாறன் புது வரவு அவன சிரஞ்ஜீவ் ன்னு நியாபகம் வச்சிகோங்க நண்பர்களே)
“ஆமா ஆனா சிரிப்பு தான் வரல”, முகத்தைக் கடுப்பாக வைத்துக் கொண்டு பதில் கூறினான் நெடுமாறன்.
“அட… முகத்தை நல்லா தான் வைக்கறது”, சிரஞ்ஜீவ்.
“வந்த விஷயத்த முதல்ல பேசலாம்”, நெடுமாறன்.
“பரத் வரட்டும் டீ சாப்டுட்டு பேசலாம்”, பரிதி.
“நீ பேசாத பரிதி. உன் மேல செம கோவத்துல இருக்கேன்”, நெடுமாறன்.
“நான் என்னடா பண்ணேன்?” பரிதி முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டுக் கேட்டாள்.
“அவள எதுக்கு நீ என் அப்பன்கிட்ட வேலைக்கு அனுப்பின?”, நெடுமாறன்.
“நானா போன்னு சொல்லல டா. எல்லாத்தையும் செஞ்சிட்டு தான் என்கிட்ட சொல்றா அவ”, பரிதி.
“சமாளிக்காத. அவ செய்றது உனக்கு தான் தெரியும். ரெண்டு பேரும் சேர்ந்து தான் இப்படி செஞ்சிங்க”, நெடுமாறன்.
“நான் தகவல் தான் வேணும்னு சொன்னேன் அவ தான் உங்க ஆள மடக்கி அவன வச்சி அங்க வந்தா. நான் சொல்லி அவ கேட்டா தானு?”, பரிதி.
இருவருக்கும் விவாதம் நடந்துக் கொண்டு இருக்கும் சமயம் பரத் டீ கொண்டு வந்தான்.
சிரஞ்ஜீவ் ஒரு கப்பை எடுத்து டீயை உறிஞ்சியபடி அவர்களின் விவாதத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
நந்து அவனருகில் வந்து, “ஜி , அவங்க சண்டை போட்டுட்டு இருக்காங்க நீங்க இப்படி டீய குடிச்சிட்டு இருக்கீங்க?”.
“நீங்க வேணா போய் சமாதானம் செஞ்சி பாருங்க”, சிரஞ்ஜீவ்.
“உங்க பிரதர் இவ்ளோ போர்ஸ்ஆ இருக்காரு அடிச்சிற மாட்டாரே”, நந்து.
“அவன் வாய் பேசறத விட கையும் காலும் தான் அதிகம் பேசும்”, சிரஞ்ஜீவ்.
“சரி முயற்சி பண்ணி பாப்போம்”, நந்து.
“இரண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இருங்க பரத் வந்துட்டான்”, நந்து.
அவன் கூறியது இருவருக்கும் காதில் விழவே இல்லை என்பது போல விவாதம் தொடர்ந்துக் கொண்டு இருந்தது.
“நீ கவனமா இருந்து இருந்தா அவ இன்னேரம் அங்க கஷ்டபட்டுட்டு இருக்க மாட்டா”, நெடுமாறன்.
“டேய் நான் தான் சொல்றேன்ல அவ வேணும்னு போய் மாட்டினா நான் என்னடா பண்ணுவேன்?”, பரிதி.
“நீ தான் போகவிட்ட”,நெடுமாறன்.
“வளந்து கெட்டவனே .நான் சொல்றது புரியுதா இல்லியா உனக்கு?”, பரிதி .
“எனக்கு என் யாத்ரா உடனே இங்க வரணும். எந்த ஆபத்தும் இல்லாம”, நெடுமாறன்.
“என்ன உன் யாத்ரா வா? அப்ப அது உன் லவ்வரா ?”, நந்து அதிர்ச்சியில் கத்தினான்.
அதைக் கேட்ட நெடுமாறன் ,” நான்சென்ஸ் ஷி ஸ் மை கிட்”.
“உங்கள பாத்தா அவ்ளோ வயசான மாதிரி தெரியலயே “, நந்து.
“என் யாத்ரான்னு சொன்னா நாங்க லவ்வர்ஸ்ஆ தான் இருக்கனுமா?”, நெடுமாறன்.
“அப்படிதான் நாங்க கேள்விபட்டு இருக்கோம்”, நந்து.
“அவ என் தேவதை. என்னை எனக்கு மீட்டு குடுத்தவ. என் குழந்தை என் சந்தோஷம்”, நெடுமாறன் யாத்ராவின் நினைவில் பேசிக் கொண்டே சென்றான்.
“இந்த டையலாக் மட்டும் நல்லா பேசுடா குடுக்கற வேலை எதையும் முழுசா செஞ்சிடாத?”, யாத்ராவின் குரல் போனில் இருந்து வந்தது.
இவர்கள் சண்டையிடும் சமயம் பரத்திற்கு யாத்ரா கால் செய்தாள் அவள் அங்கே உரையாடும் சத்தத்தை கேட்டு ஸ்பீக்கரில் போடச் சொல்லி பதில் கூறினாள்.
“யாத்ரா மா எப்படி இருக்க?”, நெடுமாறன்.
“நீ இப்ப சென்டிமென்ட் சீன் போடாம சொல்றத மட்டும் செய். ஊருக்கு வந்து உன்ன கவனிச்சிக்கறேன். பரிதி டார்லிங் நான் மேக்ஸிமம் இன்னிக்கு இல்லன்னா நாளைக்கு இங்க இருந்து கிளம்பிடுவேன். பரத்கிட்ட உனக்கு ஒரு பைல் குடுக்கச் சொல்லி இருக்கேன், அத பாத்துட்டு எத எத நீ வேணுமோ அத மட்டும் கம்மிட்டிக்கு குடு என்கொய்ரி வந்தா மட்டும்”, யாத்ரா.
“மிஸ்டர் முகேஷ் நந்தன் கோவில் சுரங்க பாதைய பத்தி தெரிஞ்ச அசிஸ்டண்ட்அ சீக்கிரம் கண்டுபிடிங்க. அவன வச்சி தான் நிறைய வேலை இருக்கு”.
“ஹாய் சிரஞ்ஜீவ் பேபி… எப்படி இருக்க? வெல்கம் பேக் டு க்ரைம். நீ இங்க இருந்து செந்திலயும் ஜானையும் பத்திரமா தஞ்சைக்குக் கொண்டு போகணும். இப்பவே கிளம்பி இங்க வந்துடு. உனக்கு வேணும்கறத பண்ணிக்க”.
“பரத் வெண்பா வீட்டுக்குள்ள போக எதாவது ஏற்பாடு பண்ணு. நாம நெக்ஸ்ட் மூவ் அங்க இருந்து தான் பண்ணணும்”.
“மேடம் அதான் நெடுமாறன் சார் அங்க இருக்காருல அவர வச்சே போகலாம்ல” , பரத்.
“அவன் தான் சேரலாதன் கிட்ட சண்டை போட்டுட்டு வெளிய வந்துட்டான்ல. அவன நம்பினா வேலைக்கு ஆகாது”, யாத்ரா.
“யாத்ரா மா.. நான் வேணும்னு செய்யல”, நெடுமாறன்.
“எதுவும் பேசாத கம்முன்னு இருந்துக்க. நீ இப்ப எங்க இருக்கியோ அங்கயே போய் இரு. நானே வந்து உன்ன பாக்கறேன். பரிதி டார்லிங் இவனுங்க ரெண்டு பேரும் வெளியவே இருக்கட்டும் இங்க கூட்டிட்டு வராத இனிமே”, யாத்ரா.
“சரி. அர்ஜுன பத்திரமா கூட்டிட்டு வந்துடு”, பரிதி.
“கூட்டிட்டு மட்டும் வரட்டுமா இல்ல தள்ளிட்டு வரட்டுமா டார்லிங்?”, யாத்ரா.
“ஹே ரௌடி. ஒழுங்கா ஊர் வந்து சேரு” ,பரிதி சிரித்துக் கொண்டேக் கூறினாள்.
“சரி அப்பறம் பேசறேன். ஹலோ பாலாஜி நீங்க சிஸ்டத்த விட்டு நகரவே கூடாது நான் அங்க வர வரைக்கும். நியாபகம் இருக்குல்ல?”, யாத்ரா.
“எஸ் மேம்” பாலாஜி.
“அப்ப அங்க போங்க இவங்ககிட்ட என்ன வெட்டி அரட்டை வேண்டி கிடக்கு. பாய் ஆல்”, யாத்ரா கூறி லைன் கட்டானது.
“ராங்கி… என்ன பேச்சு பேசறா?”, நந்து கூறினான்.
” என் யாத்ராமாவ என்னடா சொன்ன?” ,கை முஷ்டியை இறுக்கிக் கொண்டே நெருங்கினான் நெடுமாறன்.
“அட அங்க போடா. அவ அங்க ஒக்காந்துட்டு நமக்கு ஆர்டர் போட்டுட்டு இருக்கா. இதுல அவ அங்க கஷ்டம் படுறாளாம். வந்துட்டான் என்கிட்ட சண்டைபோட…”, பரிதி அவனைத் தள்ளிவிட்டாள்.
“இனிமே பீம்பாய் இருக்கறப்ப வாய தொறக்ககூடாது போலவே”, முனுமுனுத்தான் நந்து.
“கரெக்ட் தான் நந்து. நானும் இருக்கறப்ப யாத்ராவ எதுவும் சொல்லாதீங்க. அப்பறம் பின்விளைவுகளுக்கு நானும் பொறுப்பு இல்ல”, சிரஞ்ஜீவ்.
“அட போங்கடா”, நந்து.
“சலிச்சிக்காத. அந்த அசிஸ்டண்ட்அ கண்டுபிடி. பரத் அந்த பைல் குடு நான் கிளம்பறேன்”, பரிதி.
“ஓகே பாய்”, நந்து டாட்டா காட்டினான் பரிதிக்கு.
இவன் அடிவாங்காம அடங்கமாட்டான் போல மக்களே….
அங்கே செந்தில் கதிருடன் சென்று சேர வேண்டிய இடத்தில் சேர்ந்து தன் வேலையை தொடங்கினான். சிரஞ்ஜீவ்வும் அந்த சமயம் அங்கே போய் சேர்ந்து விட மூவரும் கலந்துகொண்டுப் பணிகளைப் பிரித்துக் கொண்டனர்.
இன்னொரு பக்கம் அர்ஜுனும் யாத்ராவும் டின்னர்க்காக ஆவலுடன் காத்திருந்தனர் தத்தமது ஏற்பாடுகளை முடித்துவிட்டு…..